rajini gandh லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
rajini gandh லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 12 செப்டம்பர், 2011

congressmen type two: நீதி கேட்கும் இரண்டாம் வகை காங்கிரசுகாரர்கள்…?

நீதி கேட்கும் இரண்டாம் வகை காங்கிரஸ்காரங்க…?

இன்று சென்னை ஊடகவியலாளர்கள் மத்தியில், இரண்டு காங்கிரச்கார்ர்கள் ஏற்பாட்டில், ராஜீவ்காந்தியுடன் கொல்லப்பட்ட இரண்டு காங்கிரஸ்காரர்களின் “பிள்ளைகளை” கொண்டுவந்து நிறுத்தினார்கள். அவர்களும் “எங்களுக்கு நீதி வேண்டும்” என்று சொல்லிக்கொடுத்த வாய்ப்பாட்டை ” கிளிப்பிள்ளை” போல உச்சரித்தனர். நமது ஊடகவியலாளர்கள் அத்துடன் “திருப்தி” அடையவில்லை. அவர்களிடம் சில கேள்விகளை “தனியாக” கேட்டபோது, “பல விசயங்கள்” வெட்டவெளிச்சமாகி உள்ளன.
அதாவது இத்தனை நாள் அல்லது இத்தனை ஆண்டுகள் “எங்கே போயிருந்தீர்கள்?” என்ற கேள்விக்கு, “பத்தொன்பது” ஆண்டுகளாக “காங்கிரஸ்” தலைமையிடம் “எங்களுக்கு நீதி வேண்டும்” என்று முறையிட்டு வ்ந்தோம்.என்கிறார்கள். அந்த “பலியான” குடும்பங்களுக்கு ” இருபது ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தலைமை ஒரு அரசு வேலை கூட போட்டுக் கொடுக்கவில்லை” என்ற குமுறலை வெளிப்படுத்தினார்கள். வழக்கமாக இதுபோன்ற விபத்துகளில் மரணம் அடைந்தவர் “குடும்பத்திற்கு” அவர்களது “வாரிசுகளுக்கு” அரசு வேலை கொடுத்து, “ஆற்றுப்படுத்தல்”‘ செய்வார்களே? ஏன் இவர்கள் விசயத்தில் செய்யவில்லை?
ராஜீவ் காந்தி கொலையால் “லாபம்” பெற்ற நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, அவ்வாறு “நன்றி” அறிவிக்கும் செயலை செய்ய விரும்பவில்லையா? ராஜீவ் கொலைக்கு காரணமான, அமெரிக்காவும், அவர்களது அடிவருடியான “சுப்பிரமணிய சாமியும், சந்திராசாமியும்” தியாகியாக ஆகிவிட்ட “தமிழ்நாட்டு” காங்கிரச்காரர்களுக்கு, நன்றி தெரிவிக்கும் முகமாக அவர்களது “வாரிசுகளுக்கு” அரசு வேலை தருவதை “தடை”செய்தார்களா?” அல்லது ராஜீவ் கொலைக்கு பின்னாலிருந்து ஏற்பாடு செய்த “காங்கிரஸ் பணிக்’ குழு” வின் அலுவலக செயலாளராக அந்த நேரத்தில் இருந்த ஆந்திராவை சேர்ந்த “கல்யாண ராவ்” என்பவர் ” உடன் சென்ற காங்கிரஸ்காரர்கள் “தியாகிகள்” ஆனதை “பதிவு” செய்ய விரும்பாததால்,அவர்களதுகுடும்பங்களை ”அனாதையாக நடுத்தெருவில் விட்டுவிட்டார்களா?
அல்லது “தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள்” யாரும் ராஜீவ் உடன் “கொல்லப்படவோ” அல்லது “காயம்படவோ” இல்லையே என்ற “கருத்து”‘ மக்கள் மத்தியில் “அம்பலமாகிவிடக்கூடாதே” என்பதற்காக உண்மையில் இறந்த “”’தியாகிகள் பற்றிய செய்தியை “மறக்கடிக்க” அவர்களது “”வாரிசுகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்களா? இறந்த “காங்கி’ர’ஸ்காரர்கள்” குடும்பத்தில் உள்ள வாரிசுகள், ”கோபத்தில்”‘ தலைவர்களைப் பார்த்து, ” நீங்கள் மட்டும் எப்படி தப்பித்தீர்கள்?’ என்று கேட்டுவிடுவார்கள் என்பதற்காக அந்த ” வாரிசுகளை” இத்தினை ஆண்டுகளும் ” கண்டுகொள்ளாமல்” விட்டார்களா? அல்லது அதில் சில ” வாரிசுகள்” அந்த நேரத்திலேயே அப்படி கேள்விகளை கேட்டுவிட்டதால், அவர்களை ” நடுத்தெருவில்” விட்டார்களா?
அப்படியானால் தெருவில் இறங்கி ” மூன்று தமிழர் உயிர்காப்பு ” என்று போராடும் தமிழர்கள், ” ராஜீவ் கொலையில் செத்துப்போனவர் எல்லாம் போலீஸ்காரன். எங்கே போனான் காங்கிரஸ்காரன்?” என்று கேள்வி முழக்கம் எழுப்புகிறார்களே? அதில் உள்ள “சூட்சுமம்” இப்போதுதானே புரிகிறது. அப்படியானால் காங்கிரஸ் கட்சியில் “இரண்டுரகம்” இருக்கிறார்கள். ஒன்று “உயிர் தியாகம் செய்து நடுத்தெருவில் ” நிற்பவர்கள். இரண்டாவது ” சதி செயல் தெரிந்து உயிரை காப்பாற்றிக் கொள்ள” ஓட்டம் பிடித்தவர்கள்.
இதில் இரண்டாவது ரகம்காரர்கள், முதல் ரகம்காரர்களின் ”வாரிசுகளுக்கு” பட்டை நாமம் போட்டுவிட்டு, இப்போது அவர்களை ”தங்கள் துருப்பு சீட்டுகளாக” பயன்படுத்துகிறார்கள். இவையெல்லாமே “அரசியல் காரணங்களுகாக” மூன்று பேர் தூக்கை ”துரிதப்படுததும்” சிதம்பரத்தின் ” சித்து விளையாட்டுகள்”.
– TSS.MANI
Short URL: http://meenakam.com/?p=34816
Share/Bookmark

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

கலைஞர் டி,வி.யில் மிக விரைவில்!

கருத்துக்கள்

சென்னை, ஆக.22: என்னுடைய பேரன் திரைப்படத் துறையில் ஈடுபடக் கூடாதா என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். திரைப்படத் துறையினருக்கு குடியிருப்புகள் கட்ட காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் 96 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்கியது. இந்தக் குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியது: இந்த விழாவுக்கு வரும் நேரத்தில், காலைப் பத்திரிகையில் விகடத் துணுக்கு பார்த்தேன். அதில், கலைஞர் வரலாற்றிலேயே முதல் முறையாக... கலைஞர் கதை வசனத்தில்... கலைஞர் பேரன் தயாரிப்பில்... கலைஞர் பேரன் இயக்கத்தில்... கலைஞர் பேரன் நடித்த... புத்தம் புதிய திரைக்காவியம்... கலைஞர் டி.வி.வியில் மிக விரைவில்! காணத்தவறாதீர்கள் என்று விளம்பரம் போன்ற துணுக்கு. "அடடே...!' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. கலைஞருக்கு மகன் இருக்கக் கூடாதா? பேரன், பேத்தி இருக்கக் கூடாதா? அவர்கள் திரைப்படத்துறையில் ஈடுபடக் கூடாதா? வேறு யாருக்கும் வாரிசு இருந்து அவர்கள் இந்தத் துறையிலே ஈடுபட்டதே கிடையாதா? மகத்தான நடிகர் பிருத்வி ராஜ் கபூரின் மகன் ராஜ் கபூர் நடிகர்
By sinthanaikkiniyan
8/23/2010 4:23:00 AM
ippadi pottu muthalvarai tension akkipputteengale... vimarsanangalaith thangum idayam illaiya? ethaiyum thangum idayam ithaiyum thanga villaiye? intha carton unmaiyil ulla nilamaiyaiye solkirathu.. ithi tension en aka vendum - nakai - suvai - endru punnakaiyudan eduththukkolla vendiyathuthane.. tamil natteiye pangu pottu pirithuk kodukkum alavukku kudumbam valarnthulla valarchi - kazaha valarchi - thane... kudumbathil ovvoruvarum kazha uruppinarthane.. udan pirava udan pirappe... enintha kalakkam - cool down please
By sinthanikkiniyan
8/23/2010 4:20:00 AM
As usual the cartoon is very good. You made that old man to cry. He is not retiring gracefully. Please come up with the cartoon to make him realize that he has to retire gracefully and give way for youngsters. That's good for him, for his party and more over for the people of TN. He is shamelessly wandering on the wheel chair at this age.
By Naveen
8/22/2010 10:05:00 PM
vara vara ungal nadunilai enbathu mari jaya,sasi,natarajan,ilavarasi,dinakaran,sudakaran,venkatesh,ivayellam maranthuvitathay nangal yellam marakkavillai jayavin prachara beerangiyagivitteer sabash
By K.P.JAIN
8/22/2010 9:45:00 PM
You are always super Mr.Mathi Keep on doing good work.
By prabhu
8/22/2010 9:30:00 PM
iththukkuthan kathu kondirinthukingala, innaikku noga vachitingala
By veejya
8/22/2010 9:11:00 PM
"karunanithiyin kudumbam mattumay parkkum" enpathai vittu vitteerkal
By Kuruvi
8/22/2010 8:29:00 PM
What happened you see yourself. You made Kalaignar to weep today. He asks why you have released the cartoon and also says is it wrong for his off-springs to enter film-field. He cites greats like Kapoors, Rajniaknth, Shivaji etc. Hmm.. please go and assuage his feelings and wipe away his tears.
By ASHWIN
8/22/2010 6:32:00 PM
I understand Mr.Vaithialigam's "Vaitherichal".
By Jahir
8/22/2010 5:19:00 PM
Long long ago, so long ago, everbody knows how long ago tamil nadau lost brahmin's domination in tamilnadu, because of dravidan power. So this cartoon is result of such frustration. Everybody knows valaiadi valaiyaga some brahmin's family continue their business in press (newspaper) and some business. While they want to change their business, karunanithi's grandson may change their business
By dravidan
8/22/2010 3:51:00 PM
அடடே.....உலக தலை'ஞர்
By SKY
8/22/2010 2:32:00 PM
fool people.
By popshankar
8/22/2010 1:33:00 PM
The word Artist is a problematic one to Tamilnadu Politics. It just fool people.
By kanagaraj
8/22/2010 1:09:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


என் பேரன் திரைப்படத் துறையில் ஈடுபடக் கூடாதா? முதல்வர் கருணாநிதி கேள்வி


திரைப்படத் துறையினருக்கு வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட (இடமிருந்து) நடிகைகள் ரோஜா, ராதிகா, குஷ்பூ, நடிகர் கார்த்திக், நடி
சென்னை, ஆக.22: என்னுடைய பேரன் திரைப்படத் துறையில் ஈடுபடக் கூடாதா என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.திரைப்படத் துறையினருக்கு குடியிருப்புகள் கட்ட காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் 96 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்கியது. இந்தக் குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டு விழா  சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியது:இந்த விழாவுக்கு வரும் நேரத்தில், காலைப் பத்திரிகையில் விகடத் துணுக்கு பார்த்தேன். அதில், கலைஞர் வரலாற்றிலேயே முதல் முறையாக... கலைஞர் கதை வசனத்தில்... கலைஞர் பேரன் தயாரிப்பில்... கலைஞர் பேரன் இயக்கத்தில்... கலைஞர் பேரன் நடித்த... புத்தம் புதிய திரைக்காவியம்... கலைஞர் டி.வி.வியில் மிக விரைவில்! காணத்தவறாதீர்கள் என்று விளம்பரம் போன்ற துணுக்கு."அடடே...!' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.கலைஞருக்கு மகன் இருக்கக் கூடாதா? பேரன், பேத்தி இருக்கக் கூடாதா? அவர்கள் திரைப்படத்துறையில் ஈடுபடக் கூடாதா? வேறு யாருக்கும் வாரிசு இருந்து அவர்கள் இந்தத் துறையிலே ஈடுபட்டதே கிடையாதா?மகத்தான நடிகர் பிருத்வி ராஜ் கபூரின் மகன் ராஜ் கபூர் நடிகர் இல்லையா? அவரும் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்தானே? ராஜ் கபூரின் தம்பிகள் ஷம்மி கபூர், சசி கபூர், அவருடைய மகன்கள் ரிஷி கபூர், ரணதீப் கபூர் - இந்தக் கபூர்கள் எல்லாம் யார்? ஒரே குடும்பத்தினர் அல்லவா?கலைஞர் வீட்டில் மாத்திரம் உதய நிதி, கலா நிதி, தயா நிதி, அருள் நிதி, அறிவு நிதி என்று வந்தால் அது ஆகாது. இதற்காகப் பெரிய கேலிச் சித்திரம் வரைகிறார்கள் என்றால் நான் அவர்களைக் கோபித்துக்கொள்ளவில்லை. அவர்கள் மீது வருத்தப்படவில்லை. ஆனால், உண்மையை நீங்கள்தான் உணர்ந்துகொள்ள வேண்டும்.பிருதிவிராஜ் கபூரின் பேரன், கொள்ளுப் பேரன், பேத்தி வரை கலைத்துறையில் இருக்கலாம். சிவாஜி கணேசனின் மகன் பிரபு இருக்கலாம். அவரது மகன் துஷ்யந்த் இருக்கலாம். ஆனால், கருணாநிதி மட்டும் இருக்கக் கூடாது.ஏனென்றால், கருணாநிதி செய்கிற ஒரே ஒரு குற்றம் திராவிட இனத்திற்காக அவன் பாடுபட்டுக் கொண்டிருக்கிறான். அதை ஒழிக்க வேண்டும், வீழ்த்த வேண்டும் என்ற குறுகிய நோக்கமே அவர்களுக்கு உள்ளது. அதைத் தவிர வேறு உண்மையான எண்ணமிருந்தால் என் பெயர் ஞாபகத்துக்கு வரும்போது பிருதிவிராஜ் கபூரின் பெயரும் ஞாபகத்துக்கு வந்திருக்க வேண்டும்.அதேபோல், ரஜினிகாந்தின் மருமகனும் நடிப்பதால் அவருடைய பெயரும் ஞாபகத்துக்கு வந்திருக்க வேண்டும். ரஜினி முழுநேர அரசியலில் இல்லாத காரணத்தால், அவரை விட்டு விடுகிறார்கள் என்றார் முதல்வர் கருணாநிதி.
கருத்துக்கள்

துணுக்கைப் படித்ததும் சிரித்துவிட்டு மறந்துவிட வேண்டியதுதானே! ஏன், கலைஞர் அதைப் பொருட்படுத்திப் பேசுகின்றார். கபூரின் குடும்பத்தினர் ஆரியரல்லர். இரசினியின் மருமகன் நடிகனான பின்புதான் மருமகனானார். அவரும் ஆரியரல்லர். பிறகு ஏன், ஆரிய- திராவிட வேறுபாட்டைப் புகுத்த வேண்டும்? திராவிடம் திராவிடம் என்று தமிழ்நாட்டில் மட்டும் சொல்லித் தமிழர்கள் தாழ்ந்தது போதாதா? இன்னும் ஏன் திராவிட இயக்கத்தைக் கட்டிக் காக்க வேண்டும்? ஒரு கருத்தைப் புறக்கணித்தால் மறக்கடிக்கப்படும். பொருட்படுத்தினால் மக்கள் உள்ளத்தில் நிலைத்துவிடும். பாசநோக்கத்தில் பார்ப்பதால் வருகின்ற தீவினையே இது. எனவே, மூன்றாம் மனிதர்போல் படித்து மறந்து விடுங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/23/2010 4:54:00 AM 

இந்தக் கரு்த்தில் என்ன தவறு உள்ளது என்று நீக்கியுள்ளீர்கள்?
By Ilakkuvanar Thiruvalluvan
8/23/2010 7:24:00 PM
 
கொடுமை ..கொடுமை ..இது பெரும் கொடுமை !....இனி ரஜினிகாந்தைப் போல ஒரு சாதாரண பஸ் கண்டக்டர் ..தன திறமையால் முன்னேறி சூப்பர் ஸ்டார் என்று புகழ் பெற முடியாது !..திறமையுள்ள எந்த தமிழ் இளைஞனும் இனி சினிமாதுறையில் வளர வாழ முடியாது !!! நசுக்கப் போகிரானையா தமிழனை ! நசுங்கப் போகிரானையா தமிழன் !!! @ rajasji
By rajasji
8/23/2010 3:02:00 AM
This is another eye wash from MK family!
By srini m
8/23/2010 2:52:00 AM
ayyo ayyo unga peran kollu peran arasiyalukku,sinimakku,t.v.kku,pressukku,medicinukku,cable t.v.kku,innum enna thurai indiavil undo attunai thurakkum ungal varisu mattume varalam poooooodumaaa
By tubukku
8/23/2010 2:36:00 AM
உன் வீட்டுப் பெண்கள் மஞ்சள் அரைத்துக் குளிக்கக் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை !...மக்களின் இரத்தத்தை உறிஞ்சி அதில் குளிப்பது காட்டுமிராண்டித் தனம் என்கிறோம் !!! உன் மகன் நடிப்பதிலோ...உன் மகள் துடிப்பதிலோ... பேரன் அதைப் படம் எடுப்பதிலோ எங்களுக்கு ஆட்சேபனை இல்லை ! மக்கள் வியர்வை சிந்தி உழைத்து ...அரசுக்கு செலுத்திய காசினைக் கொள்ளையடித்து ...அதை வெள்ளைப் பணமாக மாற்ற உன் குடும்பம் ஆடும் நாடகம் அநாகரீகமானது ! கண்டிக்கத்தக்கது !!! @ rajasji
By rajasji
8/23/2010 2:36:00 AM
dai Mad munusamy ??????Mind yours words!!!!!!
By Yesurajan Chettikulam Pannaiyoor
8/23/2010 2:09:00 AM
Dai MK Fraud, problem is why Tax Free for all the tamil junk movies, when they can spend 2 crores just to fly to Malaysia to release a Audio CD,
By SN
8/23/2010 1:45:00 AM
...
By Munusamy
8/23/2010 1:10:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

திங்கள், 15 பிப்ரவரி, 2010

நெருங்கி இருக்கவும் மாட்டேன்;​ விலகி இருக்கவும் மாட்டேன்: ரஜினிகாந்த்



சென்னை, ​​ பிப்.​ 14: முதல்வர் கருணாநிதியிடம் நெருங்கி ​ இருக்கவும் மாட்டேன்;​ விலகி இருக்கவும் மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.சங்கத் தமிழ்ப் பேரவை சார்பாக முதல்வருக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:கடந்த வாரம் திரையுலகம் சார்பாக முதல்வருக்கு நடைபெற்ற பாராட்டுவிழாவின்போது அமைச்சர்கள் ஜெகத்ரட்சகனும் துரைமுருகனும் அடிக்கடி எதைப் பற்றியோ பேசிக்கொண்டிருந்தார்கள்.​ அதற்கான காரணம் இப்போதுதான் தெரிகிறது.திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாவை விட சிறப்பான ஒரு பாராட்டு விழாவை நாம் முதல்வருக்கு நடத்த வேண்டும் என நினைத்திருக்கிறார்கள்."மாயாபஜார்', ​ "ஜெகன்மோகனி' போன்ற படங்களில் வரும் "செட்'களை விட பிரமாண்டமான "செட்' அமைத்து இந்த விழா மேடையைச் சிறப்பித்திருக்கிறார்கள்.நான் பெங்களூருக்கு காரில் செல்லும்போது திருவள்ளுவர் சிலையை ஒரு துணியால் மூடி,​​ திறக்காமல் அப்படியே வைத்திருந்ததை அடிக்கடி பார்த்திருக்கிறேன்.அந்த நிலையை மாற்றி பல முயற்சிகளுக்குப் பிறகு திருவள்ளுவர் சிலையை முதல்வர் கருணாநிதி திறந்துவைத்தார்.அதே சமயம்,​​ கர்நாடகத்தைச் சேர்ந்த சர்வக்ஞருக்கு சென்னையில் சிலை வைக்கவும் முதல்வர் காரணமாக இருந்தார்.16}ம் நூற்றாண்டில் வாழ்ந்த சர்வக்ஞரைப் பற்றிப் படித்தால் அவருடைய எழுத்துகளில் பகுத்தறிவு,​​ ஜாதி மறுப்பு,​​ ஆண்}பெண் எப்படி இருக்க வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்கள் இருப்பதை அறியலாம்.சில இடங்களில் பெரியார் சொல்வதைப் போலவே இருக்கும்.​ அப்படிப்பட்ட புரட்சிகரமான கருத்துகளைப் பரப்பிய சர்வக்ஞருக்கு சிலை வைத்தவர் முதல்வர்.இந்த விழாவைப் பார்க்கும்போது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.​ குதிரைக்கு பயம் தெரியாமல் இருக்க கண்களுக்கு அருகில் துணி கட்டுவார்கள்.​ அதுவும் பயம் அறியாமல் ஓடிக்கொண்டிருக்கும்.திரையுலகம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாக்களில் நாங்கள் முதல்வரை -​ அந்தக் குதிரை போல பயம் அறியாமல் "எங்கள் விழா' என்ற உரிமையுடன் பாராட்டியிருக்கிறோம்.​ ​ஆனால்,​​ இவ்வளவு பெரிய மனிதர்கள் இருக்கும் இதுபோன்ற மேடையில் முதல்வரைப் பாராட்டிப் பேசும்போது ஒரு பயம் வருகிறது.ஜெகத்ரட்சகன் பேசும்போது முதல்வர் வேறு மாநிலத்தில் ​(வங்காளம்)​ பிறந்திருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்கும் என்று குறிப்பிட்டார்.​ கலைஞர் தமிழ்நாட்டில் பிறந்ததுதான் பெருமை.​ இங்கு பிறந்ததால்தான் இன்று மத்திய அரசையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறார்.சில நாள்களுக்கு முன்பு என் மகள் ​(செüந்தர்யா)​ நிச்சயதார்த்த பத்திரிகையை முதல்வருக்குத் தர முடிவெடுத்தோம்.அப்போது என் குடும்பத்தாரிடம் "நீங்கள் போய் பத்திரிகை கொடுங்கள்' என்றேன்.​ "நீங்கள் வரவில்லையா,​​ முதல்வர் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டாரா?' என வீட்டில் கேட்டனர்.​ தவறாக நினைப்பவர்கள் தவறாகத்தான் நினைப்பார்கள்.​ கலைஞர் என்னைத் தவறாக நினைக்க மாட்டார்.​ அவருக்கு என்னைப் பற்றித் தெரியும்.​ கல்யாண பத்திரிகை கொடுக்கும்போது நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.​ அதன்படி என் வீட்டினர் அவருக்கு பத்திரிகை தந்தார்கள்.இதை ஏன் சொல்கிறேன் என்றால் திருவள்ளுவரும் சர்வக்ஞரும் "அரசன் என்பவன் நெருப்பு மாதிரி;​ நெருப்பிடம் நெருங்கவும் கூடாது;​ விலகி இருக்கவும் கூடாது என சொல்லியிருக்கிறார்கள்.​ அதனால் நான் முதல்வரிடம் நெருங்கியும் இருக்க மாட்டேன்;​ விலகியும் இருக்க மாட்டேன்.இதுபோன்ற பாராட்டு விழாக்கள் முதல்வருக்கு எந்த அளவுக்கு சந்தோஷத்தைத் தரும் எனத் தெரியாது.​ அவரே பாராட்டு விழாக்கள் வேண்டாம் என்று சொன்னாலும் யாரும் விடமாட்டேன் என்கிறார்களே!இதுபோன்ற பாராட்டு விழாக்களில் முதல்வர் கலந்துகொள்வதற்கு காரணம்,​​ அதை நடத்துபவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்குதான்.​ அப்படிப்பட்ட முதல்வர் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்றார்.கமல்ஹாசன்இந்த விழாவுக்கு வருவதற்கான அருகதையைப் பற்றி நான் யோசிக்கவில்லை.​ வரவேண்டும் என்ற ஆசை மட்டும்தான் என்னிடம் இருக்கிறது.​ எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இன்று வரை முதல்வர் கருணாநிதியை வியந்து ரசித்துக்கொண்டிருக்கிறேன்.இதே மேடையில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு "அபூர்வ சகோதரர்கள்' படத்தின் வெள்ளி விழா நடைபெற்றது.​ அப்போது அந்தப் படத்தில் நடித்த "அப்பு' வேடத்திலேயே வந்து முதல்வரிடம் பரிசுக் கேடயம் பெற்றேன்.அதைப் பார்த்தவுடன் தான் முதல்வர் என்பதையும் மறந்து "எப்படி இங்கு அப்பு போல வந்தாய்' எனக் கேட்டு ஓர் ஆர்வமுள்ள ரசிகனாக மாறிவிட்டார்.இதற்கு முன்பு திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாவில் சிவாஜி கணேசன் நடித்த ஒரு காட்சி திரையிடப்பட்டது.​ அதைப் பார்த்து குழந்தை போல் அழுதார் முதல்வர்.​ இத்தனை சோதனை,​​ சாதனைக்கு பிறகும் அவருடைய கண்ணீர் வற்றிவிடவில்லை என்பது வியப்பளிக்கிறது.​ முதல்வரின் பெயரில் உள்ள கடைசி இரண்டு எழுத்தில் "நிதி'யும் இருக்கிறது "நதி'யும் இருக்கிறது.​ அந்த அளவுக்குப் பன்முகத்தன்மை கொண்டவர்.தமிழ்ச் சமுதாயம் உள்ளவரை முதல்வர் வாழவேண்டும் என்றார்.மம்முட்டிஞாயிற்றுக்கிழமை ​(பிப்ரவரி 14) உலக காதலர் தினம்.​ தன் வாழ்க்கை முழுவதும் தமிழையே காதலித்த இந்த இனிய தமிழனுக்கு வாழ்த்துகள்.​ தமிழ்,​​ தமிழ்நாடு,​​ மனிதநேயம்,​​ காதல் இவை இருக்கும்வரை முதல்வர் கருணாநிதி நலமாக வாழ வேண்டும் என்றார்.
கருத்துக்கள்

இரசினி நன்றாகவே பேசுகிறார். திருக்குறள் எடுத்துக்காட்டு, இனப்பற்றுடன் சர்வக்ஞர் சிலை திறப்பு, எனப் பலவற்றை மனப் பக்குவத்துடன் பேசுகிறார். அவரே பாராட்டு விழாக்கள் வேண்டாம் என்று சொன்னாலும் யாரும் விடமாட்டேன் என்கிறார்கள் என நகைச்சுவையாகவும் பேசுகிறார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/15/2010 2:37:00 AM

அடப்போங்கப்பா!

By ray
2/15/2010 1:58:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்