pudhuchery லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
pudhuchery லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 ஜூலை, 2011

Thamizh develop department in Pudhucheri: புதுவையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைக்கப்படும்: முதல்வர் என்.இரங்கசாமி

புதுவை அரசிற்கும் தனித்தமிழ் இயக்கத்திற்கும் பாராட்டுகள். தமிழ்ப்பற்றில்லாத அல்லது தமிழ் அறியாத அயலவர்களை இத்துறைப் பொறுப்பில் நியமிக்காமல் தமிழாய்ந்த தமிழ் உணர்வாளர்களை நியமிக்க வேண்டுகோள். ஆட்சியிலும் கல்வியிலும் வழிபாட்டிலும் ஊடகத்திலும் தமிழே தலைமையிடம் பெற வழிகாணட்டும்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

புதுவையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைக்கப்படும்: 
முதல்வர் என்.ரங்கசாமி

First Published : 04 Jul 2011 12:46:28 AM IST


புதுச்சேரி தனித்தமிழ் இயக்கம் சார்பில் நடந்த சிலப்பதிகார விழாவில் பேசுகிறார் முதல்வர் என்.ரங்கசாமி.
புதுச்சேரி, ஜூலை 3: புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சித்துறை அமைக்கப்படும் என்று முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.  புதுச்சேரியில் தனித்தமிழ் இயக்கம் சார்பில் சிலப்பதிகார விழா அண்மையில் நடந்தது. இதில் முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு பேசியது: தனித்தமிழ் இயக்கத்தின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சித்துறை அமைக்கப்படும். அனைத்துத் துறைகளிலும் தமிழ் ஆட்சி மொழியாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  விழாவில் தனித்தமிழ் இயக்கத் தலைவர் எழுதிய ஆத்திச்சூடி என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை பேராசிரியர் இர.கணபதி வெளியிட, பாவலர் சுந்தரமுருகன் வெற்றுக்கொண்டார். அசோக் ஆனந்து எம்எல்ஏ, பேராசிரியர் நா.இளங்கோ, புலவர்கள் அரிமதி தென்னகன், துரை.மாலிறையன், க.பொ.இளம்வழுதி, இலக்கியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புதன், 2 மார்ச், 2011

T.N. and P. Election on apr.13: தமிழகம், புதுவையில் ஏப்ரல் 13- இல் வாக்குப் பதிவு

சிதம்பரச் சூத்திரத்தைப் பின்பற்றலாம் என எண்ணி, வாக்குப் பதிவிற்கும் எண்ணிக்கைக்கும் இடையே 1 மாத இடைவெளி போலும்! பிற மாநில வாக்குப் பதிவு என்பது போலிக்காரணம். தேவையற்ற திருட்டுத்தனம், வழிப்பறி முதலானவற்றிற்கே வழி வகுக்கும்.
வாக்குப் பதிவு அன்று உள்ளுக்குள் வைக்கப் போகுமஒப்பாரியை வெளிப்படையாக வைக்க 1 மாதம் தேவையல்லவே! 
அன்புடன்
 இலக்குவனார் திருவள்ளுவன்
/தமிழே விழி! தமிழா விழி/



தமிழகம், புதுவையில் ஏப்ரல் 13-ல் வாக்குப் பதிவு

சென்னை, மார்ச் 1: தமிழகம், புதுச்சேரியில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 13-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஒரு மாதத்துக்குப் பிறகு மே 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை மாலையில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால், புதிய திட்டங்கள், அறிவிப்புகளை தமிழகம், புதுச்சேரி அரசுகள் அறிவிக்க முடியாது.  தமிழக சட்டப் பேரவையின் காலம் மே 16-ம் தேதியும், புதுச்சேரி பேரவையின் காலம் மே 28-ம் தேதியும் முடிவடைகின்றன. இதையடுத்து சட்டப் பேரவைத் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.  தேர்தல் தேதிகளை முடிவு செய்வது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையாளர் எஸ்.ஒய்.குரேஷி தலைமையில் தில்லியில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை குரேஷி வெளியிட்டார்.  இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:  தமிழகம், புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ம் தேதி தொடங்குகிறது. வாக்குப் பதிவு ஏப்ரல் 13-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 13-ம் தேதியும் நடைபெறுகின்றன.  புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை: தமிழகத்தில் மொத்தம் 4.59 கோடியும், புதுச்சேரியில் 8 லட்சத்து 5,124 வாக்காளர்களும் உள்ளனர். அவர்களுக்கு புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. புதுச்சேரி மாநிலத்தில் 100 சதவீதமும், தமிழகத்தில் 99.9 சதவீதமும் அடையாள அட்டைகள் அளிக்கப்பட்டுள்ளன.  பாதுகாப்புப் பணிகள்: தேர்தல் பணியில் மத்திய மற்றும் தேர்தல் நடைபெறும் மாநிலத்தைச் சாராத பிற மாநில போலீஸôர் ஈடுபடுத்தப்படுவர்.  மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கைக் காப்பதற்கு போலீஸ் உயரதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்படும். பதற்றமான இடங்களில் நிலைமை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு, தேர்தல் சுதந்திரமாக நடைபெற வழிவகுக்கப்படும்.  தேர்தல் நடைமுறைகளைக் கண்காணிக்க பல்வேறு வகைகளிலான பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர். பொது பார்வையாளர்கள், வேட்பாளர்களின் செலவுகளைக் கண்காணிக்கும் பார்வையாளர்கள், நுண் பார்வையாளர்கள் என மாவட்டம்தோறும் அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.  கேமரா மூலம் கண்காணிப்பு: வேட்புமனு தாக்கல், மனுக்கள் பரிசீலனையில் தொடங்கி அனைத்து நடவடிக்கைளும் விடியோ படம் எடுக்கப்படும். வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், முக்கியமான பொதுக் கூட்டங்கள், தபால் வாக்குகளை அனுப்பும் நடவடிக்கை, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் முதல் கட்ட பரிசோதனை உள்ளிட்ட அனைத்தும் விடியோ மூலம் படம் எடுக்கப்படும்.  பதற்றமானவை என கருதப்படும் வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் டிஜிட்டல் கேமரா மூலம் படம் பிடிக்கப்படும் என்றார் குரேஷி.  ஒரு மாத அவகாசம்: தமிழகத்தில் தேர்தல் பணியில் 2.5 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 54 ஆயிரத்து 19 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்குப் பதிவு தேதிக்கும், வாக்கு எண்ணிக்கை தேதிக்கும் சரியாக ஒரு மாத இடைவெளி உள்ளது. இதுபோன்று வாக்குப் பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே நீண்ட கால இடைவெளி இருப்பது இதுவே முதல் முறை என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.  தேர்தல் அட்டவணை  தமிழகத்தில் 234 தொகுதிகளும், புதுவையில் 30 தொகுதிகளும் உள்ளன. இரு மாநிலங்களிலும் ஒரே கட்டமாக ஒரே நாளில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனு தாக்கல் - மார்ச் 19  மனு தாக்கல் செய்ய கடைசி நாள் - மார்ச் 26  மனுக்கள் பரிசீலனை - மார்ச் 28  மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் - மார்ச் 30  வாக்குப் பதிவு - ஏப்ரல் 13  வாக்கு எண்ணிக்கை - மே 13  


புதன், 6 அக்டோபர், 2010

55 வயதானவர்களுக்கு புதுவையில் ஓய்வூதியம்


புதுச்சேரி,  அக்.  5: புதுச்சேரியில் 55 வயது பூர்த்தியானவர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் நடந்த திட்ட பயனளிப்பு விழாவில் அமைச்சர் மு.கந்தசாமி பேசியது:தற்போது 60 வயதானவர்களுக்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வந்தது. வயதை குறைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 55 வயது அடைந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தோம். அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும்.கடந்த 2006-ம் ஆண்டுக்கு பிறகு நிதி பற்றாக்குறையால் நலத் திட்ட உதவிகள் வழங்க முடியாமல் நிறுத்தப்பட்டது. தற்போது மொத்தமாக அனைத்து பயனாளிகளுக்கும் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இனி நலத் திட்ட உதவிகளை உரிய நேரத்தில் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

புதுச்சேரி அரசிற்குப் பாராட்டுகள். எனினும், இதனை ஓய்வூதியம் என்று சொல்வது பொருந்தாது. நல உதவிகள் என்றே குறிப்பிட்டிருக்கலாம். அல்லது pension என்ற சொல்லையே கையாள வேண்டும் என எண்ணினால் கொடுப்பூதியம் (கொடுவை) என்று சொல்ல வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/6/2010 4:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *