paris tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
paris tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 ஜூலை, 2013

விக்கினேசுவரன் தமிழர்களிடம் மன்னிப்பு கோரவேண்டுகிறது ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு

விக்கினேசுவரன் அவர்களை த் தமிழக த் தமிழர்களிடம் மன்னிப்பு கோரவேண்டுகிறது ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு
July 30, 2013, 12:03 am|views: 322

 சமீபத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ( Hindustan Times.) இற்கு திரு விக்கினேஸ்வரன் அவர்கள் ஒரு பிரத்தியேக பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்த சில விடையங்கள் தமிழ் மக்களை கவலை கொள்ள வைத்துள்ளது. அதனை கீழே குறிப்பிட்டுள்ளோம்.

1.         திரு விக்னேஸ்வரன் கூறுகையில் ஒரு விடையத்தை தெழிவாக கூறியுள்ளார். அது என்னவெனில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தான் தீர்வென்றும் அதனை நாமே தீர்த்துக்கொள்வோம் என்றும் பிறர் தலையீடு தேவையில்லை என்றும், குறிப்பாக தமிழக தலைவர்கள் யாரும் அதில் தலையிட வேண்டாம் என்றும் கூறியுள்ளர். இது இலங்கையின் ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு சொல்லும்  கருத்தின் பாணியில் அமைந்துள்ளது.

2.         நமது தொப்பிள் கொடி உறவான தமிழக தமிழர்கள் எமக்கு விடுதலை வேண்டியும் நீதி வேண்டியும் எவ்வாறெல்லாம் உதவினார்கள். எமக்காக தீக்குழித்து மாண்டு போனவர்கள் எத்தனைபேர், எந்த விதங்களில் போராட முடியுமோ அந்த விதங்களில்; எல்லாம் போராடியவர்கள், தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களே நேரடியாக சட்டசபையில் தமிழீழம் ஒன்றே தமிழர்களுக்கு சரியான தீர்வு, அதனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று தீர்மானத்தனை நிறைவேற்றியவர், அத்துடன் முன்னாள் அமெரிக்கா ராஜாங்க செயலளார் ஹிலாரி அவர்களை சென்னையில் வைத்து சந்தித்து பேசியபோது கூட எமக்கு நீதி கிடைக்க வேண்டும், இனப்படுகொலை செய்தவர்களை கட்டிப்பாக தண்டிக்கவேண்டும், போன்ற விடையத்தை வலியுத்தி கூறியமையும்; அதன் பின்னரான அமெரிக்காவின் தொடர் நடவடிக்கையுமே UNHRC  மூலம் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரவும் அழுத்தத்தினை ஏற்படுத்தவும் உதவியது. இதனை அமெரிக்கா ராஜாங்க உதவிச்  செயலாளர் பிளேக் அவர்கள் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்புடனான சந்தித்த போது கூறியுள்ளார்.

3.         இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற கடுமையான அழுத்தினை தமிழக அரசு மற்;றும் தமிழக கட்சிகள், எல்லாவற்றுக்கும் மேலாக மாணவர்கள் பொமக்கள் என அனைவரும் திரண்டெழுந்து எமக்காக வீதியில் இறங்கிப் போராடியதின் மூலமே அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்திய அரசு ஆதரவு கொடுக்க முன்வந்தது. தமிழகம் தான் எமது பலம.; அதனை அவமானப்படும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமைக்கு முதலில் மன்னிப்பு கோரவேண்டும்.

4          திரு விக்னேஸ்வரன் கொடுத்த பேட்டியில், சிங்களவர்களை முழுமையாக கொண்ட இலங்கை இராணுவத்ததை, குறிப்பாக எமது இனத்தை இலட்சக்கணக்கில் கொன்றொழித்து பெண்களை கற்பழித்து, எமது இனத்தை கருவறுத்த இராணுவம் மற்றும் கடற்படையை எமது இராணுவம், எமது கடற்படை என்று கூறியுள்ளார். இது போரில் பலரை இழந்த எமது மக்களுக்கு மிகுந்த கோபத்தினை ஏற்படுத்தி உள்ளது.

5.         திரு விக்னேஸ்வரன் அவர்கள் கொழும்பில் வளர்ந்துதவர் அங்கேயே நிரந்தரமாக வாழ்பவர். தமிழ் மண்ணின் இருப்பிற்காகவும், மண்ணை மீட்புக்காகவும், மக்களின் உரிமைகளை நிலை நாட்டவும், பல உயர்களை கொடுத்த மக்களின் உணர்வுகளை எப்படி புரிந்து கொள்ள முடியும்?. முதல்வராக முன்னரே சர்ச்சையான தமிழ் மக்களுக்கு எதிரான தன்மை கொண்ட கருத்தை தெருவிக்கும் ஒரு நபர், முதலமைச்சர் ஆகி விட்டால் என்ன ஆகும் என்றே தெரியவில்லை.


எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு திரு விக்னேஸ்வரனின் தெரிவை நீக்கிவிட்டு வடகிழக்கு மாகாணத்தில் இருந்து மண்ணையும் மக்களையும் நேசிக்கக்கூடிய ஒருவரை  முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் எனபதே தமிழ் மக்களின் விருப்பமாக உள்ளது.


 

புதன், 21 டிசம்பர், 2011

Video of 5 Years boys heroism: 5 வயது சிறுவனின் வீர விளையாட்டு

http://www.paristamil.com/tamilnews/news_detail.php?id=15999&v=1895

5 வயது சிறுவனின் வீர விளையாட்டு : அசத்தல் காணொளி இணைப்பு

December 20, 2011, 12:12 pm[views: 1895]     

இன்றைய உலகில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்களாக சிறுவர்களும் தமது பங்களிப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் மிகவும் கடினமான உடற்கலை வீர தீர விளையாட்டில் புகுந்து விளையாடுகின்றார் ஒரு சிறுவர்.

ரஷ்யாவை சேர்ந்த 5 வயதுடைய சிறுவனே இவ் சாசகத்தில் ஈடுபட்டுள்ளார்.

பிஞ்சு உடம்பை இருப்பாக மாற்றும் இச் சிறுவன் மற்றவர்களுக்கு ஓர் எடுத்துக் காட்டு.

இச் சிறுவனின் கடும் முயற்சியை பார்க்குமிடத்து ஒரு சில ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளில் கூட பங்கு பற்றும் சூழ்நிலை காணப்படுகின்றது.

வீர விளையாட்டுக் காட்டும் சிறுவனை காண காணொளியை பாருங்கள்.



கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.




5 வயது சிறுவனின் வீர விளையாட்டு : அசத்தல் காணொளி இணைப்பு
Share/Bookmark

செவ்வாய், 6 டிசம்பர், 2011

unnatural dog



விகாரமான, விசித்திர நாய் : படங்கள் இணைப்பு

December 5, 2011, 1:05 pm[views: 1652]     

இயற்கையின் படைப்பில் என்னதான் ஒரு விந்தை. நினைத்து பார்க்கமுடியாத அளவு சில விடயங்கள் அமைந்து விடும்.

கியூபெக் நகரில் விசித்திரமான நாய் ஒன்று பிறந்துள்ளது.

அதாவது இயற்கைக்கு மாறாக நாயின் உடல் முழுவதும் தேவையற்ற தோலினை கொண்டுள்ளது (மரத் துகள்கள் வடிவில்). இதன் மூலம் குறித்த நாய் அகோரமாக காட்சியளித்தது.

இதனை அறிந்த கியூபெக் விலங்குகள் பாதுகாப்பு சங்கள் குறித்த நாய்க்கு சத்திர சிச்சை மூலம் குணப்படுத்த உத்தரவிட்டது. அதற்கமைய வைத்தியர்களின் முயற்சியின் பயனால், தேவையற்ற கழிவுப் பொருட்கள் நீக்கப்பட்டு நாயினை குணப்படுத்தியுள்ளனர்.

தற்போது குறித்த நாய் மிகவும் அழகுடன் ஆரோக்கியமாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




திங்கள், 5 டிசம்பர், 2011

homage to Bastien : வலிகள் சுமந்தபடி


ரோஜாக்களோடு வலிகள் சுமந்தபடி...

December 5, 2011, 1:40 am[views: 328]     

கடந்த 25 நவம்பர் அன்று தந்தையினால் துணி துவைக்கும் இயந்திரத்தினுள் வைத்துக் கொல்லப்பட்ட Bastien எனும் 3வதுச் சிறுவனுக்காக அவனது பாடசாலை மாணவர்களும் அயலவர்களுமாகச் சேர்ந்து ஒரு அமைதி நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
 200 பேர்களுக்கு மேல் கலந்து கொண்ட இந்த அமைதி நடையும் ஒன்றுகூடலும் Bastien படித்த சிறுவர் பாடசாலையின் பெற்றோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கைகளில் ரோஜாக்களோடும் நெஞ்சங்களில் வலிகளோடும் அந்தக் கூட்டம் வீதியில் வலம் வந்தது. « உன்னை நாங்கள் இழந்து தவிக்கின்றோம் », « உன்னை நாம் மிகவும் விரும்பினோம் », « உன் இழப்பில் நாம் துயரடைகின்றோம் » போன்ற வரிகளைத் தாங்கியபடி அமைதியாக நடந்தனர். அவர்கள் அணிந்திருந்த வெள்ளை உடைகளில் Bastien படம் அச்சிடப்பட்டிருந்தது.

Germigny-l'Evêque  கிராமத்து மக்கள் நடைபயணத்தின் முடிவில் வெள்ளை ரோஜாக்களையும் தமது கவலைகளின் வெளிப்பாட்டையும் Bastien இன் வீட்டின் முன் உள்ள கம்பி மதிலின் மேல் வைத்தனர். அதில் Bastien இன் பெரிய படமும் வைக்கப்பட்டிருந்தது.
அயலவர்களும் சிறுவர்களும் கண்ணீர் வடித்தபடி கொடுமைகளுக்கு  உள்ளாகிக் கொல்லப்பட்ட அந்தச் சிறுவனுக்கு அஞ்சலி செலுத்தினர். கொல்லப்பட்ட சிறுவனின் தாயும் தந்தையும் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.




ரோஜாக்களோடு வலிகள் சுமந்தபடி...