fetna லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
fetna லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 9 நவம்பர், 2021

சதுரங்கப் போட்டி, வ.அ.த.ச.

 அகரமுதல




வணக்கம்!

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் வணக்கம் வட அமெரிக்காவின் ஏழு வண்ணப் போட்டிகளோடு சதுரங்கப் போட்டியையும் நடத்த ஆயத்தமாக உள்ளது.

போட்டியில் பங்கு பெற இந்த இணைப்பைச் சொடுக்கவும்.

https://tinyurl.com/VVAChessRegistration

போட்டியின் அனைத்து விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள்களுக்கு இங்கே சொடுக்கவும்.

https://tinyurl.com/VVAChessRules

சதுரங்கப் போட்டியில் பங்கு பெற்று பரிசுகளை வெல்வீர்!

தமிழ் வாழ்க!

 

 



புதன், 20 அக்டோபர், 2021

இலக்கியக் கூட்டம் : எழுத்தாளர் திருமதி. அ. வெண்ணிலா

 




இலக்கியக் கூட்டம் : எழுத்தாளர் திருமதி. அ. வெண்ணிலா

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) தொடர் இலக்கியக் கூட்டங்களை ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகின்றது.

 இந்த மாதம் எழுத்தாளர் திருமதி. அ. வெண்ணிலா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “தேவரடியார்கள் – கலையே வாழ்வாக!” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார்.

 அமெரிக்க நேரம்: ஞாயிற்றுக்கிழமை, ஐப்பசி 07, 2052 /அட்டோபர், 24ஆம் நாள், இரவு 8:30மணி கிழக்கு நேரம் (EDT)

 இந்திய நேரம் IST : திங்கட்கிழமை, ஐப்பசி 08, 2052 /அட்டோபர், 25 ஆம் நாள், காலை 6 மணி 

 

அணுக்கி நேரலை  / Zoom Live

 

https://tinyurl.com/FeTNA2020ik

 

கூட்ட எண்    / Meeting ID : 954 1812 2755

 

எழுத்தாளரும், கவிஞருமான திருமதி. அ. வெண்ணிலா தமிழ்க் குமுகத்தில் இக்காலப் பெண் படைப்பாளிகளில் மிகவும் குறிப்பிடத்தகுந்தவராவார்., திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்த இவர் 1998 இல் தனது முதல் கவிதைத் தொகுப்பாக ‘என் மனசை உன் தூரிகை தொட்டு’ நூலை வெளியிட்டார்.

 தொடர்ந்து பல்வேறு கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், சிறுகதைகளை எழுதியுள்ளார். மதுராந்தகச் சோழனின் (இராசேந்திரச் சோழன்) வாழ்க்கையைக் குறித்து இவர் எழுதியுள்ள

“கங்காபுரம் ” புதினம் தமிழ் மக்களால் மிகவும் பாராட்டப்பட்டது.

 தேவரடியார்கள் குறித்து இவர் எழுதியுள்ள ஆய்வு நூல் தமிழில் மிகவும் குறிப்பிடத்தகுந்த நூல்களில் ஒன்றாகும்.

இவர் கணவர் மு.முருகேசும் புகழ்மிகு கவிஞராவார்.

 சிறப்புரையைத் தொடர்ந்து கேள்வி மறுமொழி நேரமும் இடம்பெறும். தாங்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ள பேரவை இலக்கியக் குழு சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.




சனி, 11 செப்டம்பர், 2021

தமிழ் வளம் காத்த இளங்குமரனார் – நினைவுப் புகழஞ்சலி, 12.09.21

 

அகரமுதல

புலவர் இரா. இளங்குமரனார் (சனவரி 30, 1927 – சூலை 25, 2021) ஒரு தலை சிறந்த தமிழ் அறிஞர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், பின்னர் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பல பணிகளையும் செய்துள்ளார். தமிழ் வழிக் கல்வி, தமிழ் வழித் திருமணம், குறளியக் கருத்துக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். அவரது நினைவஞ்சலி நிகழ்வு,

பேரவையின் சார்பில் ஆவணி 27, 2052 ,  செட்டம்பர் 12, ஞாயிற்று கிழமை மாலை 8:30 கிழக்கு நேரம் நடைபெற உள்ளது.

அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளப் பேரவைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

அணுக்க நேரலை – Zoom Live

https://tinyurl.com/FeTNA2020ik

கூட்ட எண்  /  Meeting ID : 954 1812 2755

 





வியாழன், 19 நவம்பர், 2020

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கியக் கூட்டம்

 அகரமுதல


கார்த்திகை 06, 2051 ***  11/21/2020

இரவு 8:30  கிழக்கு நேரம்

அணுக்கி இணைப்பு / Zoom Link: http://tinyurl.com/fetna2020ik  

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கியக் கூட்டம்

குளிரடிக்கும் சங்கக்காலம்

பாவலர் அறிவுமதி

அன்புடையீர் வணக்கம்

முழு நிலவும் கூதல் காற்றால்

முகிலோடு முகம் புதைக்கும்

குளிர்காலம்!

 

எலும்பை உருக்கும்

குறிஞ்சி நிலக் குளிரதில்

இதமான அனலொடு

அகிலும் சந்தனமும்

மணந்து வரக் குளிர் காயும்

குளிர் காலம்!

 

வாள் போர்க்களம் கண்ட

தலைவன் தலைவியின்

விழிப்போர்க்களம் கண்டு மகிழ

விரைந்து வீடு திரும்பும் குளிர்காலம்!

இயற்கையோடு இணைந்து மக்கள் வாழ்ந்த சங்கக் காலத்தின் குளிர் கால வருணணைகளை யவனரின் கோப்பையில் இட்டுப் பருக அழைக்கிறார் பாவலர் அறிவுமதி அவர்கள். நீங்களும் சுவைக்க வாருங்கள்.

பேரவை இலக்கியக்குழு


வியாழன், 2 ஜூலை, 2020

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி


அகரமுதல

ஆனி 19 – ஆனி 21, 2051 / சூலை 3 -5 , 2020

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை

2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி


நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்க: சொடுக்கவும்

முதல் நாள் வெள்ளிக்கிழமை
ஆனி 19, 2051 / சூலை 3 ,2020
கீழை நேரம் முற்பகல் 5.30-8.30 / பசிப்பிக்கு நேரம் பிற்பகல் 2.30 – 5.30

தொழில் முனைவோர் கூட்டம்
திருக்கறள் ஓதுதல்
சிறப்புச் சொற்பொழிவுகள்
கவியரங்கம்

இரண்டாம் நாள் சனிக்கிழமை
ஆனி 20, 2051 / சூலை 4 ,2020
கீழை நேரம் முற்பகல் 10.30-பிற்பகல் 1.15;  பிற்பகல் 4.00 – முற்பகல் 11.00
பசிபிக்கு நேரம் முற்பகல் 7.30- முற்பகல் 10.15 ; முற்பகல் 1.00 பிற்பகல் 8.00
சிறப்புச் சொற்பொழிவுகள்
இளையோர் கலந்துரையாடல்
திரைக்கலைஞர்கள் நிகழ்ச்சி
பட்டிமன்றம்

மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஆனி 21, 2051 / சூலை 5 ,2020
கீழை நேரம் முற்பகல் 10.00- பிற்பகல் 5.30 /
 பசிபிக்கு நேரம் முற்பகல் 7.00- பிற்பகல் 2.30
மரபுக்கலை
மெல்லிசை
தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகள்
அன்புடன்
சுந்தர் குப்புசுவாமி
தலைவர்
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை