encounter லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
encounter லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 29 ஜூலை, 2013

நான்காண்டுகளில் 555 போலிச் சூழடைப்புக் கொலைகள்

நான்காண்டுகளில் 555 போலி "என்கவுன்டர்'கள்

புதுடில்லி:கடந்த, 2009ம் ஆண்டிலிருந்து, 2013 வரை, நாடு முழுவதும், 555 போலி என்கவுன்டர்கள் நடைபெற்றுள்ளதாக, புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.

போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்கும் குற்றவாளிகள் மற்றும் குற்றவாளிகளை கைது செய்யப் போகும் போது, அவர்களுடன் ஏற்படும் சண்டையின் போது, கொல்லப்படும் குற்றவாளிகள் மீது போலீசார் மேற்கொள்ளும் நடவடிக்கை, "என்கவுன்டர்' என அழைக்கப்படுகிறது.ஆனால், உண்மையான காரணங்கள் இல்லாமல், தவறான நோக்கத்தில், குற்றவாளிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொல்வதை, போலி என்கவுன்டர் என, பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில், கடந்த நான்காண்டுகளில், நாடு முழுவதும், 555 போலி என்கவுன்டர்கள், போலீசாரால் நிகழ்த்தப்பட்டுள்ளதாக, தேசிய மனித உரிமை கமிஷனுக்கு கிடைத்த புகார்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவற்றில், அதிகப்படியாக, உத்தர பிரதேசத்தில் மட்டும், 138 என்கவுன்டர்கள் நடந்துள்ளன. இரண்டாவது இடத்தை பெற்றுள்ள மணிப்பூர் மாநிலத்தில், 62 என்கவுன்டர்கள் நிகழ்ந்துள்ளன. மேலும், அசாமில் 52, மேற்கு வங்கத்தில் 35, ஜார்க்கண்டில் 30, சத்தீஸ்கரில் 29 என்கவுன்டர்கள் நடந்துள்ளன.சந்தேகத்திற்கு இடமான என்கவுன்டர்களில், 201 வழக்குகளில், 11.43 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க, தேசிய மனித உரிமை கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

high court judge should inquire the encounter

உயர் நீதிமன்ற நீதிபதி விசாரிக்க வேண்டும்: மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தல்

First Published : 24 Feb 2012 01:40:30 AM IST

Last Updated : 24 Feb 2012 02:40:23 AM IST

சென்னை, பிப்.23: வங்கிக் கொள்ளையர்களை போலீஸார் சுட்டுக் கொன்ற சம்பவம் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மேலும் இந்தச் சம்பவத்துக்கு அவர்கள் கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.மனித உரிமை ஆர்வலர் அ. மார்க்ஸ்:வங்கிக் கொள்ளையர்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்த என்கவுன்ட்டர் தேவையற்றது. சுட்டுக் கொல்லும் அளவுக்கு அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. முடிந்தவரை போலீஸôர் அவர்களைச் சுற்றிவளைத்து கைது செய்ய முயற்சி செய்திருக்கலாம். கைது செய்திருந்தால் அவர்களோடு தொடர்புடைய கூட்டாளிகளையும் கூண்டோடு பிடித்திருக்க முடியும்.ஒருவர் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனைகளுக்குரிய தவறுகளை செய்தால் மட்டுமே அவர்களைச் சுடலாம், அதுவும் தற்காப்புக்காக மட்டுமே சுட முடியும் என சட்டம் கூறுகிறது.தற்காப்புக்காக சுட்டோம் என போலீஸôர் கூறினாலும், இந்திய தண்டனைச் சட்டத்தின்படி சம்பவத்தில் தொடர்புடைய போலீஸôர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர்கள் நீதிமன்றத்தில் தற்காப்பு நோக்கத்துக்காக மட்டுமே சுட நேர்ந்தது என நிரூபிக்கும்பட்சத்தில் மட்டுமே அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.மேலும் இந்த என்கவுன்ட்டர் சம்பவத்தை விசாரிக்க மாஜிஸ்திரேட்டு விசாரணை போதாது. பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.வழக்குரைஞர் புகழேந்தி: இந்த என்கவுன்ட்டர் சம்பவம் குறித்து போலீஸôர் கூறுவதை நம்ப முடியவில்லை. என்கவுன்ட்டர் நடைபெற்ற இடம் மிகவும் குறுகலான குடியிருப்புக்குள் அமைந்துள்ளது. இந்த இடத்தில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றிருந்தால் அதிக எண்ணிக்கையிலான போலீஸôர் காயப்பட்டிருக்கக் கூடும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. தமிழகத்தில் போலி என்கவுன்ட்டர் சம்பவங்கள் நடைபெறுவது அதிகமாகிவிட்டது. குறிப்பாக இந்த என்கவுன்ட்டர் சம்பவத்தின் உண்மை நிலையை அறிய சிபிஐ விசாரணை அமைக்க வேண்டும். மக்கள் கண்காணிப்பகம் இயக்குநர் ஹென்றி டிபென்: "இந்தச் சம்பவம் முழுவதும் காவல்துறையால் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகமாகும். முறையாக விசாரணை செய்து கைது செய்ய வேண்டிய கொள்ளையர்களை, போலீஸôர் சுட்டுக் கொலை செய்திருக்கின்றனர். 5 பேரை 14 போலீஸôர் கைது செய்ய முடியாத அளவுக்கு காவல்துறை பலவீனமாக இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள், ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.நாட்டின் ஜனநாயகம் நல்ல முறையில் இருக்க, காவல்துறை நல்ல முறையில் இயங்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நடத்த வேண்டும்.இச்சம்பவத்துக்கு எதிராக பாதிக்கப்பட்டக் குடும்பம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஆதரவாக அனைத்து மனித உரிமை ஆர்வலர்களும் இருப்போம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, புதிய போலீஸ் சட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்' என்றார் அவர்.

Public praised the police - is it fare?

காவல்துறையைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்.  வீட்டு உரிமையாளர்  கூறியதாக முதலிலும் பக்கத்துவீட்டுப் பெண் கூறியதாகப் பின்னரும் தெரிவித்துள்ளனர். விவரம்அறிந்து செல்பவர்கள் வீட்டிற்கு  வெளியே மறைவாக இருந்து கொள்ளையர்கள் எனக் குற்றம் சாட்டப்படுபவர்கள் வெளியே வரும் பொழுது கைது செய்து முழு உண்மைகளையும் அறிந்திருக்கலாம். அல்லது மாறு வேடங்களில் வீட்டிற்குச் சென்று தகவல்கள் கேட்பதுபோல்  சந்தித்துஉயிருடன் பிடித்திருக்கலாம். இவர்கள் கொள்ளையடித்த நேரடிச் சான்று இல்லை.  இவர்களில் ஒருவர் படத்தை வெளியிட்டு ஐயம்தான் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர் வடநாட்டு மாணவர்களைப் பொறியியல் கல்லூரிகளில் சேர்த்து த் தரகுத் தொகை பெற்றுப் பிழைப்பு நடத்தி உள்ளார். எவ்வாறு இருப்பினும் உயிருடன் பிடிக்கப் பல வாய்ப்பு இருப்பினும்  ஐவரையும் கொன்றதால் வழக்கை விரைந்து முடித்து நற்பெயர் பெற நாடகம் ஆடி இருப்பார்களோ என்ற ஐயப்பாடு பலருக்கு ஏற்படுகிறது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

காவல்துறைக்கு மக்கள் பாராட்டு

First Published : 24 Feb 2012 01:52:49 AM IST


சென்னை, பிப்.23: வங்கிக் கொள்ளையர்களை போலீஸார் சுட்டுக் கொன்றது குறித்து காவல்துறையினருக்கு வேளச்சேரி பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.  சென்னை பெருங்குடி மற்றும் கீழ்க்கட்டளை வங்கிகளில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தவர்களை போலீஸார் வேளச்சேரியில் வியாழக்கிழமை அதிகாலை சுட்டுக் கொன்றனர்.

செவ்வாய், 16 நவம்பர், 2010

கோவைக் காவல்துறையின் கொலை: அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம்
கோவை என்கவுன்டர்: அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு


சென்னை, நவ.15: கோவை என்கவுன்டர் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.கோவையில் சிறுவர்களைக் கடத்தி கொலை செய்த வழக்கில் தொடர்புடைய மோகன்ராஜ் என்கிற மோகனகிருஷ்ணனை என்கவுன்டரில் கொன்றதாக போலீஸôர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.புகழேந்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு டிசம்பர் 12-ம் தேதிக்குள் பதில் மனு அளிக்க வேண்டும். அப்போது, என்கவுன்டர் குறித்த அறிக்கையையும் நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என்றனர். வழக்கு விசாரணையை டிசம்பர் 12-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
கருத்துகள்

பொதுவாகக் கைதிகளை அழைத்துச் செல்வதற்கு என ஒதுக்கப்பட்ட நேரத்தில் இல்லாமல் வைகறையில் அழைத்துச் சென்றது ஏன்? ஊர்தியில் போகும் பொழுது அவன் சுட்டதால் இவர்கள் சுட்டார்கள் என்பது நம்பும் படி இல்லாத வகையில் சுட்டு இறந்த பின் தரைத்தளத்தில் பிணம் உள்ளதே! கண்ணில் சுடப்பட்டது எவ்வாறு? தப்பிச் செல்வதாயின் கால்களிலும் ஆயுதம் இருந்தது எனில். கைகளிலும் சுடலாமே! உடையணிந்துள்ள நிலையில் அழைத்துச் செல்லப்படும் கைதியின் பிணம் அவ்வாறு தோற்றமளிக்கவில்லையே! மற்றொரு கைதியை உடன்அழைத்துச் செல்லாததற்குக் கூறும் காரணம் ஏற்கும்படி இல்லையே! வேறொருவரைத் தப்ப விடுவதற்காக அல்லது கொலையுண்ட சிறாரின் குடும்பத்தாரிடம பணம் வாங்கிக் கொண்டு சுட்டதாகப் பிறர் எண்ணும்படி அமைந்துள்ளதே! இப்படிப் போட்டுத்தள்ளும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்தால்தான் காவல்படுகொலைகள் நிற்கும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/16/2010 5:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

புதன், 10 நவம்பர், 2010

தற்காப்புக்காக எடுத்த நடவடிக்கை: சைலேந்திரபாபு பேட்டி

செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கும் கோவை மாநகரக் காவல் ஆணையர் சி.சைலேந்திரபாபு.
கோவை, நவ. 9: போலீஸôரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால், தற்காப்புக்காகத் திருப்பிச் சுட வேண்டிய நிலை ஏற்பட்டது என்று கோவை மாநகரக் காவல் ஆணையர் சி.சைலேந்திரபாபு கூறினார்.இச்சம்பவம் குறித்து மாநகரக் காவல் ஆணையர் சி.சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் கூறியது: போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட மோகன்ராஜ், மனோகரன் இருவரும் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டனர். கொலை சம்பவம் நடந்த உடுமலைப்பேட்டை பகுதிக்கு விசாரணைக்காக இருவரையும் செவ்வாய்க்கிழமை காலை அழைத்துச் சென்றோம். ஈச்சனாரி ரயில்வே கேட் மூடியிருந்ததால், மாற்று வழியில் அழைத்துச் செல்லப்பட்டனர். காலை 5.30 மணிக்கு வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் வாகனம் சென்றபோது மோகன்ராஜ், எஸ்.ஐ ஜோதியிடம் இருந்த துப்பாக்கியை பறித்துக் கொண்டு வண்டியை கேரளாவிற்கு விடுமாறு மிரட்டியுள்ளான். துப்பாக்கியைப் பறிக்க முயன்ற போலீஸôரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் எஸ்ஐ முத்துமாலைக்கு அடிவயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்தது. எஸ்ஐ ஜோதிக்கு இடது தோள்பட்டையில் குண்டு பாய்ந்துள்ளது. நிலைமை மோசமாவதைக் கண்ட இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, எஸ்ஐ முத்துமாலை இருவரும் தற்காப்பிற்காக மோகன்ராஜை சுட நேர்ந்தது. சப் இன்ஸ்பெக்டர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.
கருத்துகள்

ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துல்ல. விடியும் முன்னரே இருட்டில் குற்றம் சாட்டப்பட்டவரைக் கடத்திக் கொண்டு போவது போல் வெளிய அழைத்துச் செல்ல வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? ஊர்தியில் அமர்ந்திருக்கும் ஒருவனைக் கையிலோ காலிலோ சுடலாமே. மரணத் தண்டனை கொடுக்கும் பொறுப்பு காவல்துறைக்கு இல்லை. அழைத்துச் சென்றவர்கள்., காவல் கண்காணிப்பாளர் வரையிலான மேல் அலுவலர்கள் ஆகியோரை உடனே பணியிடைநீக்கம் செய்ய வேண்டும். இத்தகைய சுற்றி வளைப்புப் படுகொலையை நீதிமன்றங்கள் கண்டித்துள்ளன.இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரே வழி காவல் துறை மீது நடவடிக்கை எடுப்பதுதான். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/10/2010 2:19:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மரணத்தண்டனையே கூடாது என வாதி்ட்டுவரும் இந்நாளில் காவல்துறையின் படுகொலை அறமற்ற செயல். கொடுந் தண்டனைக்குரிய குற்றம் செய்திருந்தாலும் உண்மையிலேயே அவன் தப்ப முயன்றிருந்தால் காலில் சுட்டிருக்க வேண்டியதுதானே. வேறு யாருக்கும் கடத்தலில் தொடர்பு இருந்து அதனை அவன் காவல்துறையில் தெரிவித்து அதனால் கொலை செய்து விட்டார்களோ என ஐயம் உள்ளது. காவல் துறையின் படுகொலைகளை நிறுத்த கொன்ற காவல் படையையும் தொடர்ச்சியான மேல் அலுவலர்களையும் இடை நீக்கம் செய்து விசாரிக்க வேண்டும். அப்பொழுதுதான் காவல் படுகொலைகள் நிற்கும். மேலும் குற்றம் சாட்டப்படுபவர்கள் எல்லாம் குற்றவாளிகள் அல்லர் என்பதையும் மனத்தில் கொள்ள வேண்டும். 2. பண்டார வன்னியனுக்குப் பாராட்டுகள்.