comunist லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
comunist லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 மே, 2012

I am the real comunist: Alex Paul

நான்தான் உண்மையான கம்யூனிஸ்ட்:
 கடத்தப்பட்ட சுக்மா கலெக்டர் பேச்சு


திருநெல்வேலி: சுக்மா மாவட்ட மக்களை நிர்க்கதியாகவிட்டு விடாமல் அங்கு தொடர்ந்து பணியாற்றுவேன் என கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் தெரிவித்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் நேற்று நெல்லை மாவட்டத்தில் தமது சொந்த ஊருக்குவந்தார். காலையில் ரயிலில் வந்தவர், தமது கிராமமான சமாதானபுரத்திற்கு சென்று உறவினர்களை சந்தித்தார். மாலையில் பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் அவர் பேசியதாவது: நான் கடத்தப்பட்டபோது எனக்காக குரல் கொடுத்த நெல்லை மாவட்டத்து மக்களை நினைக்கும்போது நெகிழ்வாக உள்ளது. நான் ஆறு ஆண்டுகள் அங்கு பணியாற்றியுள்ளேன். அப்போதெல்லாம் பத்திரிகை, மீடியாவின் வெளிச்சத்தில் இருந்து தப்பித்திருக்கிறேன். தற்போது அதற்கெல்லாம் சேர்த்து தெரிய ஆரம்பித்துள்ளேன். இருப்பினும் நான்மேற்கொண்ட மக்கள் பணிக்காக நான் தெரிந்துகொண்டால் மகிழ்ச்சியடைவேன். கடத்தப்பட்ட கலெக்டர் என்ற அடையாளம் எனக்கு தேவையில்லை. சுக்மாவிற்கு முன்னதாக இன்னொரு மாவட்டத்தில் பணியாற்றியபோது அங்கு சுயஉதவி பெண்கள் குழுக்களுக்காக பணியாற்றியுள்ளேன்.

நான் கடத்தப்பட்ட சுக்மா மாவட்டம் மட்டுமல்லாது பக்கத்து மாவட்டங்களிலும் மக்கள் என்னை விடுவிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அந்த அளவு மக்கள் என் மீது அன்பு வைத்திருந்தார்கள். அரசியல்வாதிகள் கடத்தப்பட்டபோதெல்லாம் மக்களிடம் ஏற்படாத எழுச்சி நான் கடத்தப்பட்டபோதும் இன்னொரு கலெக்டர் கிருஷ்ணா கடத்தப்பட்டபோதும் மட்டுமே இத்தகைய எழுச்சி ஏற்பட்டது. சத்தீஸ்கர் மாநிலத்தில் தமிழர்களான பாரதிதாசன், பிரசன்னா, அன்பழகன், ஆர்.பிரசன்னா உள்பட ஐந்து பேர் கலெக்டர்களாக உள்ளோம். நேர்மையுடனும், உள்ளத்திடத்தோடும் பணியாற்றுவதில் தமிழர்களுக்கு நிகர் எவரும் இல்லை என்பதை புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

என்னை கடத்தியதும் கம்யூனிஸ்ட்கள்,மீட்க உதவியதும் கம்யூனிஸ்ட்கள்தான் என்றார்கள். நான் சொல்கிறேன்..கடத்தப்பட்ட நானும் கம்யூனிஸ்ட்தான். நான் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட். சக மனிதனின் துக்கம் கண்டு பொங்குகிற, போராடுகின்ற யாருமே கம்யூனிஸ்ட்தான். இதனை செய்தியாளர்கள் பெரிதுபடுத்திவிடவேண்டாம். சத்தீஸ்கரில் இதனை தவறாக புரிந்துகொள்ளக்கூடாது. நான் கடத்தப்பட்டிருந்தபோது, ஏன் கடத்தினோம் என என்னிடம் மாவோயிஸ்ட்கள் மூன்று காரணங்களை தெரிவித்தனர். அங்கு போலீஸ் காவலில் நடந்த ஒரு இறப்பு குறித்தும், முன்பு பணியாற்றிய ஒரு எஸ்.பி.,க்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என கூறியும், அதிகாரிகள் நடத்திய ஒரு கூட்டம் குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்கு நான் தெளிவான பதில் தந்தேன். போலீஸ் காவலில் நடந்த இறப்பிற்கு அதை விட யாரும் செய்யமுடியாதபடி மனித உரிமை ஆணையத்திற்கு தகவல் தெரிவித்து, தன்னிச்சையான டாக்டர்களால் பரிசோதனை செய்தது ஆகியவற்றை தெரிவித்தேன். மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தெளிவான பதில் சொன்னதால் அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை.

சுக்மா மாவட்டம் துவக்கப்பட்டு முதல் கலெக்டராக நியமிக்கப்பட்டிருந்ததால் அடிப்படை பணிகளை மேற்கொள்ளவேண்டியிருந்தது. நான்கு மாதங்களில் 4 ஆயிரத்து 500 பேருக்கு பட்டா வழங்கியுள்ளோம். 9 ஆயிரம் பேருக்கு அந்யோதயா திட்டத்தின் கீழ் உணவு உறுதியளித்துள்ளோம். 7 ஆயிரத்து 500 பேருக்கு வீடுகள் கட்டிதந்துள்ளோம். சவுக்கெடுத்து அடிக்காத குறையாத அதிகாரிகளை வேலை வாங்கி அனைத்து கிராமங்களிலும் ரேஷன் கடைகளை முறைப்படுத்தி வழங்கியுள்ளோம்.இதையெல்லாம் நான் அவர்களிடம் குறிப்பிட்டு என்னை ஏன் கடத்தினீர்கள் என்றேன். நேர்மைத்திறனோடு செயல்பட்டதால் மாவோயிஸ்ட்களின் துப்பாக்கிகளுக்கு மத்தியிலும் நான் பணியாற்றியதை பேசமுடிந்தது. ஒவ்வொருவருக்கும் "அறச்சீற்றம்' இருக்கவேண்டும். இத்தகைய சீற்றம் வயிற்றில் எரிந்துகொண்டேயிருக்கவேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். சத்தீஸ்கரில் எனக்காக போராடிய மக்களை நினைத்து பார்க்கிறேன். அவர்களை நான் நிர்க்கதியாக விட்டு விட விரும்பவில்லை. எனவே நான் அந்த மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன். நான் அரசியலில் இணைவேனா என ஒரு நிருபர் கேட்டார். அத்தகைய எண்ணமில்லை. எனவே அவரிடம் நானே புதிய கட்சி ஆரம்பிக்கப்போகிறேன். ஏதாவது பெயர் இருந்தால் சொல்லுங்கள் என ஜாலியாக சொன்னேன். அந்த அடித்தட்ட மக்களுக்காக நான் தொடர்ந்து கலெக்டராக இருந்துகொண்டே போராடுவேன்.வெளியில் இருந்து அரசாங்கத்தை குறைசொல்வதை விட உள்ளே இருந்துகொண்டு பணியாற்றுவதுதான் சிறந்தது இவ்வாறு அலெக்ஸ்பால் மேனன் பேசினார்.

புதன், 11 மே, 2011

Who help sirlanka ?

ஈழத்தமிழர் படுகொலைகளுக்கான காரணங்களைச் சரியாகச் சொல்லி உள்ளார். இனி நாம் செய்ய வேண்டிய வேலை, எப்பாடுபட்டாவது கூட்டுக் கொலைகாரர்களை அரசியல் உலகில் இருந்தே அகற்ற வேண்டும். தமிழ் ஈழத்திற்கு உலக ஏற்பை வாங்கித்தர வேண்டும்.  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்  / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

பற்றி எரிந்த இலங்கைக்கு பெட்ரோல் கொடுத்தது யார்?- எஸ்.ஆர்.சேகர் -
கருத்துகள் (5)   கருத்தை பதிவு செய்ய  
அருமை
பிடிச்சுருக்கு
பரவாயில்லையே

"இனி ஒரு துப்பாக்கி தோட்டா, இந்திய மீனவர்கள் மீது பாயுமானால், இலங்கைக்கான அனைத்து பொருளாதார உதவிகளையும் உடனடியாக நிறுத்துவோம்' என எச்சரித்தார். விளைவு, வாஜ்பாய் பிரதமராக இருந்த வரை, தமிழக மீனவர்களை தொட்டு பார்க்கும் தைரியம், இலங்கை கடற்படைக்கு இல்லாமல் இருந்தது.சோனியா பதவியேற்றது முதல், தமிழர்களை ஒழிக்கும் ராஜபக்ஷேவிற்கு, வலதுகரமாக விளங்கி வருகிறார். தமிழர்களையும், தமிழகத்தையும் அவமதிக்கும் வண்ணமாக, இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு, ராஜபக்ஷேவை, சிறப்பு விருந்தினராக அழைத்தார். இதையே மீண்டும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலும் தொடர்ந்தார்.இலங்கை அதிபரின் சகோதரர், கோத்தபய ராஜபக்ஷே தலைமையிலான குழு, இந்திய ராணுவ உதவியையும், ஆலோசனையையும் பெற, ஐந்து முறை இந்தியா வந்து சென்றிருக்கின்றனர். 2006ல், ஐந்து எம்-17 ஹெலிகாப்டர்கள் இலங்கை விமானப் படைக்கு ரகசியமாக இந்தியா அனுப்பியது. அதில், இலங்கை விமானப்படை சின்னம் பொறித்து உபயோகிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த செயல்பாட்டின் காரணமாக, தமிழர்கள் என்றால், கிள்ளுக் கீரைகள் என, ராஜபக்ஷேவிற்கு உற்சாகம் பிறந்தது. காங்கிரஸ், ராஜபக்ஷேவிற்கு கொடுத்த ஊக்கம், ஊட்டம், தமிழர்களை நிராதரவாக்கியது. இப்படிப்பட்ட காங்கிரஸ், எந்த முகத்தோடு ராஜபக்ஷேவை எதிர்த்து தங்கபாலு தலைமையில், இப்போது போராட்டம் நடத்தியது என்பது தான் புரியாத புதிர்.இலங்கை தமிழருக்கு ஆதரவாக, களம் இறங்கியதாக காட்டி கொண்டவர்களில் கம்யூனிஸ்ட்களும் அடங்குவர். தமிழகத்தில் அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களும், வீதியில் வந்து போராடியதும், "தமிழர்கள் மீது' அவர்களுக்கு இருந்த மாசில்லா பற்றின் அடையாளம் என்பதாக தான் நாம் நினைக்கலாம்.ஆனால், ஊடுருவி பார்த்தால், உண்மை வேறுவிதமாக உள்ளது. இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க, முதன்முதலாக அதிகமாக ஆயுதங்களை சப்ளை செய்தது கம்யூனிஸ்ட் சீனா தான். ஏப்ரல், 2007ல், 25 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ தளவாடங்களை, ஆயுதங்களை சீனா, இலங்கைக்கு விற்பனை செய்தது. இரண்டெடுத்தால், ஒன்று இலவசம் போல, இதை வாங்கியதற்காக, ஆறு எப்-17 ரக, சண்டை ஜெட் விமானங்களை இலவசமாக கொடுத்தது.

இந்த ஆயுதங்களால் கொல்லப்பட்ட, எல்.டி.டி.இ.,யினரை விட, அப்பாவி தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகம். நேபாளத்தில் பிரசாந்தா தலைமையிலான கம்யூனிஸ்ட்கள் ஆட்சி ஏற்க, ஆலோசனை கூற, இங்கிருந்து கம்யூனிஸ்ட்கள் சென்றனர். ஒவ்வொரு முறை நடக்கும் இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டிற்கு, ரஷ்யாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் பிரதிநிதிகள் வருகின்றனர். அங்கு நடைபெறும் மாநாடுகளுக்கும் இந்திய கம்யூனிஸ்ட்கள் போகின்றனர்.இப்படி உலக கம்யூனிஸ்ட்களோடு கொஞ்சி குலாவும் இந்திய கம்யூனிஸ்ட்கள், சீனா, ஆயுதங்களை இலங்கைக்கு விற்கும் போது ஏன் கண்டிக்கவில்லை, அதிர்ச்சி அடையவில்லை, ஏன் ஒரு அறிக்கை கூட கொடுக்கவில்லை. இதுதான் கம்யூனிஸ்ட்களின் தமிழர் பாசமா?

வியாழன், 23 ஜூலை, 2009

இடைத்தேர்தல்: பங்கேற்பதா? புறக்கணிப்பதா?
- கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று முடிவு



சென்னை, ஜூலை 21: தமிழகத்தில் நடைபெற உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பங்கேற்பதா அல்லது புறக்கணிப்பதா என்பது குறித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் புதன்கிழமை முடிவெடுக்கும் என தெரிகிறது.இளையான்குடி, தொண்டாமுத்தூர், கம்பம், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது."ஆளும் கட்சியினர் முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் மூலம் வெற்றி பெறத் திட்டமிட்டுள்ளனர். அவற்றை தடுத்து, நியாயமான தேர்தலை நடத்தும் சூழலில் தேர்தல் ஆணையம் இல்லை' என்றுக்கூறி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. திங்கள்கிழமை அறிவித்தது.அ.தி.மு.க.வைத் தொடர்ந்து ம.தி.மு.க.வும் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பை வெளியிட்டது. தேர்தலில் பங்கேற்க வேண்டாம் என பா.ம.க.வும் முடிவு செய்துள்ளது.கம்யூனிஸ்ட்டுகளின் நிலை என்ன? இந்த சூழலில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் என்ன முடிவை எடுக்கும் என்பது பரவலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர். சென்னையிலுள்ள மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் என். வரதராஜன், தா. பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.இரு கட்சிகளும் மாநில செயற்குழுக் கூட்டங்களை தனித்தனியாக கூட்டி விவாதிப்பது எனவும், பின்னர் மீண்டும் இரு கட்சி தலைவர்களும் கூடி, கூட்டாக முடிவு எடுப்பது என்றும் செவ்வாய்க்கிழமை கூட்டத்தில் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.மாநில செயற்குழுக் கூட்டம்: இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது. அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுவும் புதன்கிழமை கூடுகிறது.இந்தக் கூட்டங்களுக்குப் பின், புதன்கிழமை மாலை இரு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் சந்தித்துப் பேசுவார்கள் எனவும், அதன் பின் இடைத்தேர்தலில் பங்கேற்பது பற்றிய முடிவு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
கருத்துக்கள்

ஆளுங்கட்சிக்கு அடுத்த நிலையிலுள்ள எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணிப்பதால் திமுக தேர்தல் பரப்புரைக்கு அந்தந்த தொகுதியைச் சேரந்த அமைச்சர்களைத் தவிர வேறு அமைச்சர்களையோ முதல்வரையோ துணை முதல்வரையோ அனுப்பக் கூடாது. வாக்காளர்கள் புறப் பாதிப்பு எதுவமின்றி நடுநிலையுடன் சிந்தித்து வாக்களிக்கும் களமாக இடைத்தேர்தல்களை மாற்ற வேண்டும். இவ்வாறான நல்ல சூழலை அமைக்க முன் வருமா?

- இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/23/2009 4:05:00 AM