Last Updated :

கொழும்பு, பிப். 5: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரில், அந்த இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கொல்லப்படுவதற்கு, அந்த நாட்டின் விஜயபாகு தரைப்படைப் பிரிவு பெரும் பங்காற்றியதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவின் புதுக்குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரின் போது பிரபாகரன், அவரது மனைவி மதிவதனி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மறைந்திருந்த இடத்தை விஜயபாகு தரைப்படைப் பிரிவு வீரர்கள் சுற்றிவளைத்துத் தாக்கினர். இதில் பிரபாகரன் உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் கூறுகிறது. இலங்கை ராணுவத்தில் விஜயபாகு படைப் பிரிவு மிகவும் இளைய படைப் பிரிவாகும். இந்தப் படைப் பிரிவுக்கு இலங்கையை ஆண்ட விஜயபாகு மன்னரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்டப் போரில் இந்தப் படைப் பிரிவினர் மிகவும் திறமையாகவும், துணிச்சலாகவும் செயல்பட்டதாகவும் இலங்கை ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படைப் பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு, இலங்கை ராணுவ தலைமைத் தளபதி ஜகத் ஜயசூரியா தலைமையில், வடகிழக்கு மாகாணத்தில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் கடந்த வாரம் பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில், வன்னிப் பகுதி ராணுவத் தளபதியாக ஜயசூரியா செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படைப் பிரிவில் இடம் பெற்றுள்ள ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஒவ்வொருவரையும் பாராட்டி, கெüரவித்தார் ஜயசூரியா என ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விழாவையொட்டி, விஜயபாகு படைப் பிரிவின் நிர்வாக அலுவலகக் கட்டடத்தையும் ஜயசூரியா திறந்து வைத்தார்.
By Ilakkuvanar Thiruvalluvan
2/7/2010 5:32:00 AM
By THAMIL MANI
2/7/2010 2:31:00 AM
By ramaya
2/7/2010 12:02:00 AM
By GS
2/6/2010 2:05:00 PM
By நவீன் சென்னை
2/6/2010 9:53:00 AM
By Mani
2/6/2010 9:03:00 AM
By Tamil
2/6/2010 5:43:00 AM
By Maran
2/6/2010 3:31:00 AM
By Ilakkuvanar Thiruvalluvan
2/6/2010 3:18:00 AM
By Thiru
2/6/2010 12:46:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்