Nethaji லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Nethaji லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 ஆகஸ்ட், 2012

எப்படி மறப்போம்


உங்களை நாங்கள் எப்படி மறப்போம்....


அச்சமது துச்சமெனத் துணிந்து, துப்பாக்கிக் குண்டுகளுக்கு துவளாமல் முன்நின்று, அயலவர் படைகளை அறவழிப் போராட்டத்தால் வென்று போர்க் களத்தில் குருதி சிந்தி நின்ற போதும், விடுதலையே மூச்சாக, விடுதலையே பேச்சாகக் கொண்டு உழைத்த ஈகியே!...

நாள்தோறும் உங்கள் உடல்கள் வேதனையில் துடித்தாலும், அசைக்க முடியாத உங்கள் உள்ளத்து உறுதியுடன், அயலவர் படைகளைக் கலங்கடித்தவர்தாமே நீங்கள்! உங்களைப் போன்றவர்களின் ஒப்பற்ற உயிர் ஈகத்தால் (தியாகத்தால்), உயிரினும் மேலாய் நீங்கள் கருதிய உங்கள் விடுதலைத் தாகத்தால் பெறப்பட்டதே இந்த விடுதலை!
நீங்கள் பட்ட துயரங்களை, வேதனைகளை எப்படி மறப்போம்! வாழ்நாளெல்லாம் நெருப்பிலே நின்றவர்கள் நீங்கள். இன்றைய மகிழ்ச்சியை எங்களுக்கு வழங்க, நேற்றைக்கு வலியையும், வருத்தத்தையும் சுமந்தவர்தாமே நீங்கள்!

இந்த மக்களுக்காக, இந்திய மண்ணிற்காக வாழ்வைக் காணிக்கையாக்கிய உங்களை எப்படி மறப்போம்!... என்று உணர்ச்சிகரமான உரை படிக்கப்பட்ட மதுரை செளராட்டிர இருபாலர் பள்ளியின் சிறு கூடத்தில் மலர்களால் அணி செய்யப்பட்டிருந்த ஈகி(தியாகி)களின் படங்களில் ஒன்றில் இடம் பெற்றிருந்தார் ஐஎன்.ஏ வீரர் ஈகி வைத்தியலிங்கம்.

கடந்த 10-8-1997ஆம் ஆண்டு, மதுரையில் தினமலர் சார்பில் இந்திய விடுதலைப் பொன் விழா நடத்தப்பட்டபோது, இந்தப் புனிதமான விழாவின் நாயகராக யாரைப் போற்றுவது என்றவுடனேயே அனைவராலும் குறிப்பிடப்பட்ட பெயருக்கு சொந்தக்காரர்தான் ஈகி வைத்தியலிங்கம். கணுக்கால் வரை தூக்கிக் கட்டிய கதர் வேட்டி, கைகளை மூடும் நீண்ட கதர்ச் சிப்பா, கதரின் வெண்மைக்கு நிகரான பெரிய மீசை, உடலில் தளராத வீரம், கண்களில் தலைவர் நேதாசி கற்றுக் கொடுத்த தீரம், சொற்களில் நேர்மை. இவற்றுடன் எனக்கு அறிமுகமான வைத்தியலிங்கம் ஐயா, தினமலர் விழாவிற்கு நேதாசியின் படை வீரனைப் போலச் சீருடையில் வந்திருந்தார். விழாவிற்கு வந்தவர்கள் விழிகளை வியப்பால் உயர்த்தினார்.

அதற்குப் பிறகு அவரோடு பல சந்திப்புகள். ஒவ்வொரு சந்திப்பின்போதும் நேதாசி பற்றிய நூல்களைக் கொடுப்பார். நெகிழ்ச்சியோடு தனது பர்மா, இரங்கூன், பகாங்கு போன்ற இடங்களில் போரிட்ட போர்க்கள நிகழ்ச்சிகளை நினைவு கூர்வார். இந்தத் தலைமுறைக்கு விடுதலைத் தாகம் குறைந்துவிடாது பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மட்டும் சொல்லிக்கொண்டே இருப்பார். ஒரு கட்டத்தில் கூடத் தனது சிக்கல்களையோ தனது குடும்பத்துச் சிக்கல்களையோ பற்றிப் பேசியவர் இல்லை.

மதுரை முனிச்சாலையில் உள்ள அவரது அறையில் எங்கு பார்த்தாலும் நேதாசியின் புகழ்பாடும் நூல்களே நிறைந்து இருக்கும். வந்தவர்களிடம் வஞ்சனையில்லாமல் அந்த நூல்களை வாரியும் கொடுப்பார்.

இப்படி, மதுரை முனிச்சாலைச் சிங்கமாக, ஈகிகளில் ஈடு இணையற்ற தங்கமாக இருந்தவர் கடந்த சில நாட்களுக்கு முன் இறந்து போனார். இவரது இறப்பு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் இவரது வரலாறு சாதாரணமானதில்லை என்பதை உணர்ந்த ‘தேசிய வலிமை’ செய்கிந்த்து சுவாமிநாதன் கடந்த விடுதலைத் திருநாளன்று இவர் படத்தைத் திறந்து வைத்து, இவரது வீர வரலாற்றை நினைவு கூரும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்திருந்தார். அதற்கேற்பப் பாவலர்.சுரா எழுதியிருந்த, ஈகி வைத்தியலிங்கம் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளும் அவரது புகழை அனைவரும் அறிய உதவின. பேசிய பலரும் ஈகி வைத்தியலிங்கம் ஐயா அவர்களை, மதுரை உள்ள அளவு, உள்ளத்தில் நினைவுகள் உள்ள அளவு மறக்கமாட்டோம் என்று கண்கலங்கக் குறிப்பிட்டனர்.

அனைத்தையும் படமாக இருந்தபடிப் பார்த்துக் கொண்டிருந்தார் ஈகி வைத்தியலிங்கம்.
- எல்.முருகராசு, தினமலர்

சனி, 9 ஜூலை, 2011

Singapore president about Bose: போசு பற்றிய புத்தகத்தை வெளியிட்டார் சிங்கப்பூர் அதிபர்

நேதாஜி பற்றிய புத்தகத்தை வெளியிட்டார் சிங்கப்பூர் அதிபர்

First Published : 07 Jul 2011 01:15:42 AM IST


சிங்கப்பூர், ஜூலை 6: இந்தியாவின் மறைந்த சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோûஸப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை சிங்கப்பூர் அதிபர் வெளியிட்டு அவரைப் பற்றி நினைவுகூர்ந்தார்.  ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியரும், நேதாஜியின் உறவினருமான சுகதோ போஸ் எழுதிய நேதாஜியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.  அப்போது அவர் நேதாஜியைப் பற்றி நினைவுகூர்ந்தார். 1940-களில் நேதாஜி ஆற்றிய உரைகள்தான் பிரிட்டிஷார் பற்றிய உண்மையான தோற்றத்தை தனக்கு உணர்த்தியது என்று நாதன் குறிப்பிட்டார். அவரது உரையைக் கேட்ட நாளிலிருந்து இன்று வரை தான் அப்போது எடுத்த நிலைபாட்டையே கடைபிடிப்பதாகவும் அவர் கூறினார்.  மேலும் நேதாஜியின் உரைகளே தனக்கு முதல் அரசியல் பாடமாக அமைந்தது என்று குறிப்பிட்ட நாதன், இந்தியாவில் ஆட்சி புரிந்தபோது பிரிட்டிஷார் கொடூரமாக நடந்து கொண்ட விதம் பற்றி நேதாஜி விவரித்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.  நேதாஜி ஆசியாவைச் சேர்ந்த முக்கியமான தேசியவாதி என்றும், ஒருமுகச் சிந்தனையாளர் என்றும் நாதன் நேதாஜியைப் பற்றிக் குறிப்பிட்டார். இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றின் சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜியின் பங்கு பற்றியும் அவர் விவரித்தார். 1943-ம் ஆண்டு ஜூலை மாதம் சிங்கப்பூர் வந்த நேதாஜி, நாடு கடந்த இந்திய விடுதலைப் போரட்டத்தை அரசியல்ரீதியாக அங்கு வாழும் மக்களிடம் கொண்டு சென்ற விதம் பற்றியும் நினைவுகூர்ந்தார்.  "பேரரசரின் எதிர்ப்பாளர்கள்:சுபாஷ் சந்திர போஸýம், பேரரசுக்கு எதிரான இந்தியப் போராட்டமும்' என்ற 388 பக்கமுள்ள நேதாஜி பற்றிய புத்தகத்தை ஹார்வார்டு பல்கலைக் கழகத்தின் பிரசுரம் வெளியிட்டுள்ளது.  1897-ம் ஆண்டு ஒரிசாவில் பிறந்த நேதாஜி பிரிட்டிஷ் இந்திய குடிமைப் பணித் தேர்வில் தேறினார். பின்னர் தேசப்பற்றினால் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். பிரிட்டிஷாரால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டபோது சாதுர்யமாக தப்பி 1943-ல் சிங்கப்பூர் சென்றார். அங்கு இந்திய தேசிய ராணுவத்தை புனரமைத்து விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்தார். நாடு விடுதலையடைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் 1945-ல் நடந்த விமான விபத்து ஒன்றில் மறைந்தார்.
கருத்துகள்

நேரு குடும்பம் முற்றில்லுமாக நல்ல பல தலைவர்களின் உண்மைகளை மறைத்து விட்டன. சிங்கபூருக்கு நன்றி.
By நசீ, canada
7/7/2011 4:03:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

திங்கள், 24 ஜனவரி, 2011

Birth annivesary of Nethaji Subash chandira bose: இன்று சுபாசு சந்திரபோசு பிறந்த நாள்


பழைய கட்டுரை அவ்வாறே வெளியிடப்பட்டுள்ளது. எனவேதான் இக்கட்டுரையில்  முகர்சி ஆணையம் தன் அறிக்கையை 2005 நவம்பரில் வெளியிடும் என உள்ளது. அந்த ஆணையம்  18.08.1945 அன்று  தேசத்தலைவர் சுபாசு சந்திர போசு இறக்கவில்லை என அறி்க்கை அளித்தது. ஆனால், இந்திய அரசு அந்த அறிக்கையை ஏற்கவல்லை.  பைசியாபாத் நகரில் வாழ்ந்து வந்த  கும்நாமி பாபா என்பவர்தான் போசு எனச் சொல்லப்பட்டது.  அவரது பிறந்த நாள்  போசு  பிறந்த நாளான 23.01. இல் கொண்டாடப்பட்டதாலும், அவர் திரை  மறைவில் இருந்தே காட்சியளித்ததாலும் அவரது  உருவ அமைப்பு, கண்ணாடி முதலானவை போசு அவர்களுடன் ஒத்துப் போனதாலும்  அவரது வீட்டில் போசு குடும்பப் படங்கள் இருந்தமையாலும் அவ்வாறு நம்பப்பட்டது. அவரும்  1985 இல் மறைந்துவிட்டார்.  மேலும் இவ்வாணையத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட சாநவாசு ஆணையமும் கோசுலா ஆணையமும்  போசு இறப்பை உறுதி செய்திருந்தும் அவற்றையும் மத்திய அரசு ஏற்கவில்லை.  இவர் வழியில் நாட்டு விடுதலைக்குப் பாடுபடும் தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள்  விரைவில் வெளிவந்து போராட்டத்தை முன்னின்று நடத்தி வெற்றி காண்பார். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 

இன்று சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள்

329220814Bose
நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (ஜனவரி 23, 1897 – ஆகஸ்டு 18, 1945) இந்திய சுதந்திரப் போடட்டத் தலைவர். இரண்டாம் உலக போர் சமயத்தில் வெளிநாடுகளில் போர் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டிஇந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராக தாக்குதல் நடத்தியவர்.
இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. அவர் ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு சன்னியாசியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆம் வருடம் ஆகஸ்டு 14 முதல் செப்டம்பர் வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போல் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்து வரும் முகர்ஜி கமிஷன், தன் இறுதி அறிக்கையை 2005 நவம்பரில் வெளியிடும் என்று தெரிகிறது.
சுபாஷ் சந்திர போஸ் 1897 ஆம் வருடம் இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில்லுள்ள கட்டாக் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஜானகிநாத் போஸ். போஸ் ராகின்சேவ் காலேஜ் ஸ்கூல் – கட்டாக், ஸ்காடிஷ் சர்ச் ஸ்கூல், கல்கட்டா மற்றும் பிட்ஷ்வில்லியம் காலேஜ் ஆகிய இடங்களில் படித்தார். 1920 இல் இந்திய மக்கள் சேவை படிப்புக்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்ற அவர் இந்தியாவிலேயே நான்காவதாக வந்தார். எனினும் ஏப்ரல் 1891 இல் மதிப்புமிக்க இந்திய மக்கள் சேவையிலிருந்து வெளியேறிய அவர் இந்திய சுதந்திர போரட்டத்தில் பங்கேற்றார்.
}