birthday லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
birthday லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 ஜனவரி, 2012

Birthday of Colonel Kittu: கிட்டு பிறந்த நாள்

சனவரி 2: கேணல் கிட்டு பிறந்த நாள்

| January 2, 2012 | 0 Comments
குழந்தைகளுக்கு கிட்டு மாமா, தோழர்களுக்கு கிட்டு, இயக்கப்பெயர் வெங்கிட்டு, இயற்பெயர் சதாசிவம் கிருஸ்ணகுமார். கேணல் கிட்டு (ஜனவரி 2, 1961 – ஜனவரி 16, 1993) என அழைக்கப்படும் சதாசிவம் கிருஸ்ணகுமார் தனது பதினெட்டாவது வயதில் 1979 இல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார். வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இராணுவப் பயிற்சி பெற்றார். 1983 ஏப்ரல் 7 இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு யாழ்ப்பாணம், கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல், ஜூலை 23 இல் இராணுவ வாகனங்கள் மீது நடாத்தப்பட்ட திருநெல்வேலிக் கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொண்டார்.
kittaar_with_pet_a1983இன் இறுதிக் காலத்தில் இந்தியாவுக்குப் பயிற்சிக்கெனச் சென்ற இயக்கத்தின் முதற்குழுவில் கிட்டு இடம்பெற்றார். பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 2 இல் நடைபெற்ற குருநகர் இராணுவமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்தினார். இதேநேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 9 இல் வீரச்சாவடைய அவரின் இடத்திற்கு கிட்டு நியமிக்கப்பட்டார். யாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார். 1987 மார்ச் இறுதியில் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்தார். இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்றார் கிட்டு. கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்து வைத்திருந்தது. இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது.
1989 இல் இலங்கை அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டன் சென்றார். பின்னர் லெப். கேணல் குட்டிசிறி உட்பட 10 பேருடன் ‘குவேக்கர்ஸ்’ இன் சமாதானச் செய்தியுடன் சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் தமிழீழம் திரும்புகையில் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து வீரச்சாவடைந்தார்.
******************************************************************
இலண்டன் சந்திரா இரவீந்திரன் அவர்கள் வடித்த கிட்டார் பற்றி வடித்த பா…
( http://manaosai.blogspot.com/2008/01/blog-post.html)
வல்வை மண் தந்த – வீரத்
தமிழ்ப் பொட்டு!
வெல்வோம் நாம் என்று
நல்ல தமிழ் மண் மீட்கத்
துள்ளியெழுந்த தூய புலிவீரன் -
அவன் கிட்டு!
இல்லை என்ற சொல் துறந்து
கால் இல்லை என்று ஆன பின்னும்
தன் பணியை மண் பணியாய்
தன் நெஞ்சில் சுமந்தான் -
தன் நலம் விட்டு!
தலைவனுக்கு ஒரு கையாய்
தமிழ் மண்ணிற்கோ தளபதியாய்
நிலை இழந்த மக்களிற்கு நீதிபதியாய்
கலையுள்ளம் கொண்ட காளை – இவன்
வாழ்ந்த காலமதோ மிக மட்டு!
தாய் மண்ணைத் துறந்தது மட்டுமல்ல
தன் பெண்ணையும் துறந்திங்கு
அந்நிய மண்ணில் அவனிருந்தாலும்
எண்ணியதெல்லாம் ஈழமண் விடிவுதான்!
மண்ணைப் பொன்னாக்க
அவன் செய்த புண்ணியங்கள்
ஆயிரம் ஆயிரம்!
இதயம் பிழியும் இடர்கள் நேர்ந்து -
பன்னிரண்டு ஆண்டுகள்!
நெஞ்சம் மகிழ……..தன் மண் நோக்கிப்
புறப்பட்ட மாவீரன்!
என்ன நினைத்திருப்பான்?
வங்கக் கடலலையும்
வழியனுப்பி வாழ்த்திசைக்க -
இந்தியமோ -
இன்னோர் இழிசெயலை
இருளில் திணித்து விட
நம் வீரர் தமக்காக வாழ்பவரல்லவே!
திண் வீரர் – மண் காக்க -
விண்ணை உடைத்தொருகால்
வீர இடிமுழங்க -
தண்ணென்ற நீரலையில்
தம்மைக் கரைத்தனரே!
விண் வீரன் – கிட்டு
நீ எங்கள் காவிய நாயகன்.
— சந்திரா இரவீந்திரன்
இலண்டன்

திங்கள், 24 ஜனவரி, 2011

Birth annivesary of Nethaji Subash chandira bose: இன்று சுபாசு சந்திரபோசு பிறந்த நாள்


பழைய கட்டுரை அவ்வாறே வெளியிடப்பட்டுள்ளது. எனவேதான் இக்கட்டுரையில்  முகர்சி ஆணையம் தன் அறிக்கையை 2005 நவம்பரில் வெளியிடும் என உள்ளது. அந்த ஆணையம்  18.08.1945 அன்று  தேசத்தலைவர் சுபாசு சந்திர போசு இறக்கவில்லை என அறி்க்கை அளித்தது. ஆனால், இந்திய அரசு அந்த அறிக்கையை ஏற்கவல்லை.  பைசியாபாத் நகரில் வாழ்ந்து வந்த  கும்நாமி பாபா என்பவர்தான் போசு எனச் சொல்லப்பட்டது.  அவரது பிறந்த நாள்  போசு  பிறந்த நாளான 23.01. இல் கொண்டாடப்பட்டதாலும், அவர் திரை  மறைவில் இருந்தே காட்சியளித்ததாலும் அவரது  உருவ அமைப்பு, கண்ணாடி முதலானவை போசு அவர்களுடன் ஒத்துப் போனதாலும்  அவரது வீட்டில் போசு குடும்பப் படங்கள் இருந்தமையாலும் அவ்வாறு நம்பப்பட்டது. அவரும்  1985 இல் மறைந்துவிட்டார்.  மேலும் இவ்வாணையத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட சாநவாசு ஆணையமும் கோசுலா ஆணையமும்  போசு இறப்பை உறுதி செய்திருந்தும் அவற்றையும் மத்திய அரசு ஏற்கவில்லை.  இவர் வழியில் நாட்டு விடுதலைக்குப் பாடுபடும் தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள்  விரைவில் வெளிவந்து போராட்டத்தை முன்னின்று நடத்தி வெற்றி காண்பார். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 

இன்று சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள்

329220814Bose
நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (ஜனவரி 23, 1897 – ஆகஸ்டு 18, 1945) இந்திய சுதந்திரப் போடட்டத் தலைவர். இரண்டாம் உலக போர் சமயத்தில் வெளிநாடுகளில் போர் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டிஇந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராக தாக்குதல் நடத்தியவர்.
இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. அவர் ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு சன்னியாசியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆம் வருடம் ஆகஸ்டு 14 முதல் செப்டம்பர் வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போல் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்து வரும் முகர்ஜி கமிஷன், தன் இறுதி அறிக்கையை 2005 நவம்பரில் வெளியிடும் என்று தெரிகிறது.
சுபாஷ் சந்திர போஸ் 1897 ஆம் வருடம் இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில்லுள்ள கட்டாக் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஜானகிநாத் போஸ். போஸ் ராகின்சேவ் காலேஜ் ஸ்கூல் – கட்டாக், ஸ்காடிஷ் சர்ச் ஸ்கூல், கல்கட்டா மற்றும் பிட்ஷ்வில்லியம் காலேஜ் ஆகிய இடங்களில் படித்தார். 1920 இல் இந்திய மக்கள் சேவை படிப்புக்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்ற அவர் இந்தியாவிலேயே நான்காவதாக வந்தார். எனினும் ஏப்ரல் 1891 இல் மதிப்புமிக்க இந்திய மக்கள் சேவையிலிருந்து வெளியேறிய அவர் இந்திய சுதந்திர போரட்டத்தில் பங்கேற்றார்.
}
 

வியாழன், 3 ஜூன், 2010

இராகுல் காந்தி சென்னை வருகை



சென்னை, ஜூன் 2- காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் ராகுல் காந்தி இன்று திடீரென சென்னை வந்துள்ளார்.

அவர் சென்னை வருவது குறித்து ஏற்கெனவே அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு நிர்வாகியாக உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றின் விழாவில் கலந்துகொள்வதற்காக ராகுல் சென்னை வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கருத்துக்கள்

தங்கபாலுவின் கல்லூரியில் நடைபெறும காங்.முகாம் ஒன்றைப் பார்வையிட இராகுல் வருவார் என்ற செய்திவந்தது; அதன்படி வந்து சென்றுள்ளார். மூத்த அரசியல் தலைவர் , தமிழ்நாட்டின் முதல்வர்பொறுப்பில் ஐந்தாம் முறை வீற்றிருப்பவர்,படைப்பாளி, சோர்விலா உழைப்பாளி அவர்களின் பிறந்த நாளுக்கு முன்னதாக வருகை புரிந்தவர் மரபுகருதிகூட வாழ்த்து தெரிவிக்கவில்லையே! எவ்வளவுதான் கொத்தடிமையாக நடத்தினாலும் திமுக அடிமையாகவே இருக்கும் என்ற எண்ணமா? தாய் உறவு சேய் பகை என்பதான தோற்றம் நமக்கு உணர்த்தும் பாடம் என்ன?உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் சரி.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/3/2010 3:09:00 AM

What is a gay can do in Tamilnadu? Is there any secret gay association intamilnadu? Why Indian people give give preference to a gay ? If any one gay in a rich and politician Indian people respect ; however, if there is gay in a poor family the disrespect. Is it Indian policity or Indian culture? rahul Gandi is a gay he cannot be a straight a man any more.

By Amma
6/3/2010 12:35:00 AM

Is there any gay association meeting going on at Tamilnadu.

By Valli
6/2/2010 7:18:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்