anna nuulagam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
anna nuulagam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 நவம்பர், 2011

நூலகம் மூடல் : நம் மனப்போக்கு எப்படி?- க.ப.அறவாணன்






காவல் நிலையம் இருப்பது, அப்பகுதியில் குற்றவாளிகள் இருப்பதற்கு அடையாளம். மருத்துவமனைகள் இருப்பது, அப்பகுதியில் நோயாளிகள் இருப்பதன் அடையாளம். நூலகங்கள் இருப்பது, அவ்விடம் புத்தக ஆர்வலர்கள் இருப்பதன் அடையாளம். இவற்றுள் ஆரோக்கியமான அடையாளம், நூலகங்கள்தான்.

ஒரு பெரும் நூலகத்தை இடம் மாற்றி, அப்பெரு நூலகம் இருந்த இடத்தில் மருத்துவமனையைக் கொண்டு வருவது சரியான செயலா? சில மாதங்களுக்கு முன், செம்மொழிக்காக அமைக்கப்பட்ட பழைய சட்டசபை நூலகம் மூடப்பெற்று, இடம் மாற்றப்பட்டது.கிரேக்க மாவீரர் அலெக்சாண்டர் படை எடுத்தபோது, தீப்ஸ் என்ற நாட்டை வென்றார். அப்படை எடுப்பு நடக்கும் போது, அந்நாட்டில் கிரேக்க கவிஞர் பிண்டார் என்பவருடைய இல்லம் இருந்தது. கிரேக்க வீரர்கள், நகரையே நாசப்படுத்திக் கொண்டிருந்தனர். அது கவிஞரது இல்லம் என்று, மகா அலெக்சாண்டரிடம் சொன்னவுடன், "அந்த அறிவாளியின் இல்லத்தைத் தீண்டாதீர்கள்' எனத் தடுத்து ஆணை போட்டார். தமிழக வரலாற்றில், பகை அரசர்களால் சோழ நாட்டின் ஒரு பகுதி வெல்லப்பட்டபோது, அவ்வூரில் இருந்த ஓர் இல்லம், உருத்திரங்கண்ணன் என்ற புலவனுடையது என்று சுட்டிக்காட்டப்பட்டது. "அப்புலவனின் இல்லத்தை ஒன்றும் செய்து விடாதீர்கள்' என்று அரசன் ஆணையிட்டான்.

பல்லவர் காலத்திலும், சோழர் காலத்திலும், பாண்டியர் காலத்திலும் நம் மன்னர்களால் கட்டப்பட்ட பெரிய கோவில்களில், நூலகம் வைத்துப் பராமரிக்கப்பட்டது. அந்நூலகத்தில் சமஸ்கிருதத்திலும், தமிழிலும் எழுதப்பட்ட நம்முடைய இதிகாசங்களும், காப்பியங்களும், தேவார, திருவாசகங்களும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்களும், ஓலைச்சுவடிகளில் கைவலிக்க எழுத்தாணியால் எழுதப்பட்டு, பத்திரப்படுத்தப்பட்டிருந்தன. அக்காலத்து அரசர்களும், செல்வந்தர்களும், பழைய ஓலைச்சுவடிகளை, புதிய ஓலைச்சுவடிகளில் எழுதி, பத்திரப்படுத்துவதற்காக நன்கொடைகள் வழங்கினர்.அந்நன்கொடைகள், "சாத்திர தானம்' என்று அழைக்கப்பட்டன. ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்ட இடம், சரஸ்வதி பண்டாரம் எனப் பெயர் சூட்டப்பட்டது. முதல் மனைவியின் மகள், இரண்டாம் மனைவியின் மகன் என, இருவருக்கும் இடையே நடந்த சகோதரச் சண்டையால், தமிழகம், டில்லி இஸ்லாமியருக்குச் சரணாக்கப்பட்டு, அதன் விளைவாக, மாலிக்காபூர் என்ற இஸ்லாமியத் தளபதி, தமிழகத்தின் மேல், 14ம் நூற்றாண்டில் படையெடுத்து வந்தான். தமிழகத்தையே நிர்மூலப்படுத்தினான். கண்ணில் பட்ட கோவில்களை எல்லாம், அடித்து நொறுக்கினான்.ராமேஸ்வரம், திருநெல்வேலி, மதுரை, ஸ்ரீரங்கம், சிதம்பரம் முதலான இடங்களில் இருந்த பெரும் கோவில்கள், மாலிக்காபூர் எனும் இஸ்லாமியப் படைத்தளபதியால் மண்மேடாக்கப்பட்டன. ஆனால், அவன் செய்த ஒரு நல்ல காரியம், "கோவில்களில் பத்திரப்படுத்தப்பட்ட சரஸ்வதி பண்டாரத்திற்கு, எந்தவித ஊறும் செய்யக் கூடாது' என ஆணையிட்டான்.

இந்நிலையில், இந்தியாவிலேயே மிகச் சிறந்த நூலகமாகக் கருதப்படும் ஒரு பெரும் நூலகம் மூடப்பட்டு மருத்துவமனையாக்கப்படுவது, வரவேற்கத்தக்கதா என அனைவரும் சிந்திக்க வேண்டும். அவ்வாணையை, மறுபரிசீலனை செய்வது தான் அறிவு தர்மம்.இந்திய நூலகத்தின் வரலாறு, மிகத் தொன்மை வாய்ந்தது. புகழ் பெற்ற அரசர் அக்பர் காலத்தில், அவராலேயே ஒரு நூலகம் மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது. நாளந்தா பல்கலைக் கழகத்தில் அழகான நூலகம் நிர்வகிக்கப்பட்டது. தர்மபாலன் பிறந்த காஞ்சிபுரத்தில், புத்த சமயம் சார்ந்த நூலகம் இருந்தது. தமிழை வளர்ப்பதில் முன்னணியில் இருந்த பாண்டியர், முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று அமைத்து, நூல் அரங்கேற்றத்தை முறைப்படுத்தி இருந்தனர்.தஞ்சாவூரை மகாராஷ்டிர சரபோஜி மன்னர்கள் ஆண்டபோது, உலகிலேயே புகழ் பெற்ற பழமை வாழ்ந்த சமஸ்கிருத ஓலைச் சுவடிகளையும், தமிழ் ஓலைச் சுவடிகளையும் பெற்று, பத்திரப்படுத்தி வைப்பதற்காகவே சரஸ்வதி மஹால் நூலகம் அமைக்கப்பட்டது.தமிழகத்தில், 1925க்குப் பிறகு நூலக உணர்வும், எண்ணங்களும் மிகுதியாக வெளிப்படத் தொடங்கின. 1928 ஜனவரி, 30ல், கிருஷ்ணசாமி அய்யர் என்பவரின் தலைமையில், சென்னை மாகாணத்தில், நூலக இயக்கத்தைப் பரப்ப, சென்னைப் புத்தகாலய சங்கம் அமைக்கப்பட்டது. இதற்குக் காரணமாக இருந்தவர், அறிஞர் எஸ்.ஆர்.ரங்கநாதன் ஆவார். இச்சங்கம், தன் சீரிய செயல்பாட்டால், மக்களுக்கு பல நூலக நன்மைகளைச் செய்தது.

உள்ளாட்சிகள், 1948ல், சொத்து வரி மற்றும் வீட்டு வரியின் மீது, ஒரு ரூபாய்க்கு, 3 காசுகள் நூலக வரி பெற வழி வகுத்தது. பின், 1972ல் அது, 5 காசாக உயர்த்தப்பட்டது. 1993 முதல் அது, 10 காசுகளாக உயர்ந்தது. இதன் வழி, தமிழ்நாடு பொது நூலகத் துறைக்கு, ஒவ்வொரு ஆண்டும் கோடி, கோடியாக வருவாய் வருகிறது. இப்பணம் முற்றுமாக, நூல்கள் வாங்குவதற்குப் பயன்படுத்தப்படுவது இல்லை. மிகக் குறைந்த சதவீதத் தொகையே, நூல்கள் வாங்கப் பயன்படுத்தப்படுகிறது. எஞ்சியத் தொகை, நூலக ஊழியர்களுக்காகவும், நூலகக் கட்டட வாடகைக்காகவும், செலவழிக்கப்படுகிறது.இந்நிலையில் தான், நூலகத்திற்கு என, சொந்தமாக ஒரு கட்டடம், 172 கோடியில் கட்டப்பட்டது. தற்போது, இதுவும் பறிபோகிறது.இந்தியாவில் நூலகத் துறையில் பணியாற்றி, பல்கலைக் கழக நூலகப் போராசிரியராகவும் இருந்த, எஸ்.ஆர்.ரங்கநாதன், "கோலன் பகுக்கும் முறை' என, நூல் அடுக்கு முறையை முதன் முதல் வகுத்துக் காட்டினார். தமிழகத்தில், நூலகங்கள், வெள்ளைக்கார அரசாட்சியிலேயே தொடங்கி, சுதந்திரம் பெற்ற பின், ஒரு பேரியக்கமாக வளர்ந்தது. தமிழகத்தில் பொதுமக்கள் அனைவரும் சென்று பயில, வாய்ப்பாக பொது நூலகங்கள் அமைக்கப்பட்டன.

இந்தியாவில் புத்தகங்களை வெளியிடுவதிலும், ஆயிரக்கணக்கில் விற்பனை செய்வதிலும் கேரளாவும், மேற்கு வங்கமும் முன்னிடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் புத்தகம் வாங்கும் பழக்கம், போதிய அளவு வளர்ச்சி பெறவில்லை. வாசிக்கும் பழக்கமும் போதிய அளவு வளர்ச்சி பெறவில்லை. இவை இரண்டையும் வளர்த்தெடுக்கும் பொறுப்பு நம் அரசுக்கும், சமுதாயத்திற்கும் தலையாயக் கடமை.

அதற்கு ஒரு பெரும் வழி, பொது நூலகங்களை விரிவுபடுத்துவது, வசதிப்படுத்துவது. அதற்குச் சரியான எடுத்துக்காட்டு, சென்னையில் புகழ்பெற்ற அண்ணாசாலையில் நாம், நம் மக்களின் மனப்போக்குக்கு தக, திரைப்பட அரங்கைக் கட்டினோம். அதை, "ஏசி' ஆக்கினோம். அதற்கு நேர் எதிரில் அமெரிக்க தூதரகம் ஒரு நூலகத்தைக் கட்டியது. அதை முழுதும், "ஏசி' ஆக்கியது. நம் மனப்போக்குக்கு இதைவிட வேறு சான்று காட்டத் தேவையில்லை.


மேலும் பொது செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
2011-11-17 03:41:42 IST Report Abuse
அதிமுக ஜெயித்ததே தமிழகத்துக்கு நடக்கும் ஏழரை சனியின் அறிகுறிதான் அதான் ஒரே அழிவா இருக்கு. இந்த ஆறு மாசத்துல மக்களுக்கு என்ன நல்லது நடந்தது ? ஒண்ணுமே இல்ல , படிச்சவங்க ஆட்சிக்கு வந்தா படிப்போட அருமை தெரியும் அரசியல வியாபாரமா நினைச்சு வந்தவங்களுக்கு நல்ல திட்டம் எதுவும் வெச்சுருக்க மாட்டாங்க

Rajamanickam Appavu - Nagapattinam ,இந்தியா
2011-11-17 02:41:31 IST Report Abuse
மிகச்சரியாக சொன்னீர்கள், இக்கருத்து ஆட்சியாளர்களின் செவிகளுக்கு சென்றடைய வேண்டும்.

வியாழன், 16 செப்டம்பர், 2010

சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை: முதல்வர் அறிவிப்பு
First Published : 16 Sep 2010 12:07:00 AM IST

Last Updated : 16 Sep 2010 03:04:23 AM IST
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டடத்தை திறந்துவைக்கிறார் முதல்வர் கருணாநிதி. உடன் தலைமைச் செயலாளர் எஸ்.மாலதி, நிதியமைச்சர்
சென்னை, செப். 15: சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.சென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 180 கோடியில் அமைக்கப்பட்டுள்ள உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை புதன்கிழமை திறந்து வைத்து அவர் பேசியது:பெரியார், அண்ணா, பாரதிதாசன் போன்ற தலைவர்களின் பெயரில் வீதிகள்தோறும், கிராமங்கள்தோறும் வாசக சாலைகள் அமைத்து இயக்கத்தின் கருத்துக்களைப் பரப்பியவர்கள் நாங்கள். அந்த வழிமுறையில் அண்ணாவின் பெயரில் நூலகம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி, அதனை இன்று செயல்படுத்தியுள்ளோம்.1940-களில் குண்டலகேசி என்ற தமிழ் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு ஓரங்க நாடகம் ஒன்றை எழுதி திருச்சி வானொலி நிலையத்துக்கு அனுப்பி வைத்தேன். ஆனால், அந்த நாடகம் வெளியிடப்படவும் இல்லை, திரும்பி வரவும் இல்லை.  திரும்பி வந்திருந்தால் நிம்மதி அடைந்திருப்பேன்.  அதன்பிறகு பிரபல இயக்குநர் சேலம் டி.ஆர். சுந்தரம் முயற்சியில் அந்த நாடகம் மந்திரிகுமாரி என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. எம்.ஜி.ஆர். நடித்த இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. திருச்சி வானொலி நிலையத்தில் குப்பை கூடைக்கு அனுப்பப்பட்ட கதைதான் இப்படி வசூலை அள்ளித் தந்தது. நமது இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர்களை அலட்சியப்படுத்தும் நிறுவனமாக வானொலி இருந்தது என்பதற்காக இதனைக் குறிப்பிடுகிறேன்.1948-ல் வீட்டுக்கு ஒரு புத்தகச் சாலை என்ற தலைப்பில் வானொலியில் அண்ணா பேசினார். உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்ததாக புத்தகச்சாலைக்கு இடம் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் பேசினார். ஒவ்வொரு நகரத்திலும், மாவட்டத் தலைநகரங்களிலும் புத்தகச் சாலை இருக்க வேண்டும் என்ற அவரது கொள்கையின் அடிப்படையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இது அண்ணாவின் கனவு நிறைவேறிய காட்சி என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.அடையாறு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக சென்றபோதுகூட துழாவி, துழாவி தலையணைக்கு கீழேயிருந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டுதான் சென்றார். அறுவைச் சிகிச்சை முடிந்து ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொன்னபோதும் அவர் புத்தகம் படித்துக் கொண்டுதான் இருந்தார். அந்த அளவுக்கு புத்தகத்திலேயே இறுதிநாள் வரை ஆழந்திருந்தார். அவர் படிக்காத நேரம் இல்லை. இரவு 12 மணிக்கு கூட அவரைப் பார்க்கச் சென்றால் புத்தகமும் கையுமாகத்தான் இருப்பார். அதனால்தான் இந்த நூலகத்தில் புத்தகமும் கையுமாக இருக்கும் அண்ணாவின் சிலை வைக்கப்பட்டுள்ளது.சத்துணவில் 5 நாள்களுக்கு முட்டை: மாணவர்களுக்கு சத்துணவு அளிக்கும் திட்டம் எம்.ஜி.ஆர். ஆட்சியில் தொடங்கப்பட்டது. திமுக ஆட்சியில் 3-6-1989 முதல் 2 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள், மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டது. 2006-ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 முதல் வாரம் இரண்டு முட்டைகள் வழங்கப்பட்டன. 15-7-2007 முதல் வாரம் மூன்று முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அண்ணா நூற்றாண்டு விழா நினைவாக பள்ளிக் கூடம் நடைபெறும் 5 நாள்களிலும் இனி முட்டை வழங்கப்படும்.துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: அரசு அலுவலகங்கள், அரசு சார்புடைய நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் தினக்கூலி அடிப்படையில் அல்லது தொகுப்பூதியத்தில் பணிபுரியும் துப்பரவுத் தொழிலாளர்கள் இப்போது ரூ. 1,000 முதல் ரூ. 1,500 வரை ஊதியம் பெறுகின்றனர். அவர்களில் 3 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு இனி மாதம் ரூ. 1,300 - ரூ. 3,000 என்ற ஊதிய விகிதத்தில், அகவிலைப்படியுடன் சேர்த்து தொடக்க நிலையில் மாதம் ரூ. 2,320 கிடைக்கும் வகையில் ஊதியம் உயர்த்தப்படும். அவ்வப்போது வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வும், 3 சதவீத கூடுதல் ஊதியப்படியும் பெறும் தகுதியினையும் இவர்கள் பெறுவார்கள். இந்த அறிவிப்புகள் உடனடியாகச் செயல்படுத்தப்படும்.இந்த நூலகத்தை நம்முடைய நூலகமாகக் கருதி தூய்மையாகப் பாதுகாக்க வேண்டும். இந்த நூலகத்துக்கு வருபவர்களுக்கு பஸ் கட்டணத்தை ஓரளவுக்குக் குறைக்கலாமா என்ற கருத்தும் அரசிடம் உள்ளது என்றார் முதல்வர் கருணாநிதி.நிதி அமைச்சர் க. அன்பழகன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் எஸ். மாலதி, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஆ. ராசா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

நூலகத் திறப்பிற்கும் முட்டை அளிப்பிற்கும் பாராட்டுகள். பள்ளிகளில் காலையும் சத்துணவு வழங்க வேண்டும். மாலை பால், சிற்றுண்டி எதுவும் வழங்கப்பட வேண்டும். மூன்று வேளையும் சாதி, பண வேறுபாடின்றி அனைத்து மாணாக்கர்களுக்கும் உணவு தரமானதாக வழங்கி வசதியானவர்களிடம் கட்டணம் பெற்றுக் கொள்ள ‌வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/16/2010 3:12:00 AM
என்னையா இது கூத்து ! வாரத்துக்கு ஐந்து முட்டை போடும் காசில்....இரண்டு முட்டை ஒரு வாழைப் பழம் ஒரு ஆரஞ்சுப் பழம் ஒரு மாம்பழம் அல்லது ஒரு ஆப்பிள் என்று கொடுத்தால் அதுதான் சரியான சத்துணவு ! இதை விடுத்து முட்டை உற்பத்தியாளர்களிடம் வேண்டும் அளவு கமிசன் கறந்து கொண்டு இந்த திட்டத்தை அமல் படுத்துவது மக்களுக்கு நன்றாகவே தெரிகிறது ! இப்படியே உன்னை விட்டால் மக்கள் எல்லோருக்கும் இலவச முட்டை போட்டு காசை சுருட்டிக் கொண்டு போய் விடுவாய் ! கொள்ளையடிக்கிற காசை எப்படியய்யா எங்க கொண்டுபோய் பதுக்குற ! சும்மா சொல்லப் புடாது..பிடி படாமல் ஊழல் செய்யும் திருக்குவளை தீயசக்தியாம் கருணாநிதிக்கு நோபெல் பரிசு கொடுக்க வேண்டும் ! @ rajasji
By rajasji
9/16/2010 12:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
வாரம் ஐந்து முட்டைகள்: முதல்வர் உத்தரவு
16.09 அன்று இச்செய்தி பதிவாகியிருக்கும் பொழுது மீண்டும் ஏன் பதிவு செய்ய வேண்டும். அதில் நான், நூலகத் திறப்பிற்கும் முட்டை அளிப்பிற்கும் பாராட்டுகள். பள்ளிகளில் காலையும் சத்துணவு வழங்க வேண்டும். மாலை பால், சிற்றுண்டி எதுவும் வழங்கப்பட வேண்டும். மூன்று வேளையும் சாதி, பண வேறுபாடின்றி அனைத்து மாணாக்கர்களுக்கும் உணவு தரமானதாக வழங்கி வசதியானவர்களிடம் கட்டணம் பெற்றுக் கொள்ள வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் By Ilakkuvanar Thiruvalluvan 9/16/2010 3:12:00 AM எனப் பாராட்டியதை எடுப்பதற்காகவா? இவ்வாறு பல செய்திகளில் புதிய பதிவும் பழைய கருத்துகள் எடுப்பும் நிகழ்வதைத் தடுக்க‌ வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/18/2010 1:38:00 PM