பெண்குழந்தைகள் நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்குழந்தைகள் நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 ஜனவரி, 2019

ஆத்தூர் பேருந்து நிலையத்தில் வினையகத்தின் பெண் குழந்தைகள் நாள்

அகரமுதல

ஆத்தூர் பேருந்து நிலையத்தில்  வினையகத்தின்  பெண் குழந்தைகள் நாள் 
மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) நிறுவனத்தின் மூலம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் தை 10, 2050 /24.01.2019 அன்று ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள்  2019’ கொண்டாடப்பட்டது. அறிவுரைஞர் (PDI) திருமிகு.செயந்தி, வினையகத்(PDI) திட்டப் பணியாளர்கள் இணைந்து பொது மக்கள் மத்தியில் பெண் குழந்தைகளின் முதன்மைபற்றி வலியுறுத்தினர். ‘‘இளம் வயது திருமணத்தைத் தடுக்க வேண்டும். பெண் குழந்தைகள் அனைவருக்கும் சமமான கல்வியறிவு, ஊட்டச்சத்து, நலவாழ்வு உரிமைகள், சட்ட உரிமைகள் கிடைக்க வேண்டும். எனவே, நாம் அனைவரும் “பெண் குழந்தைகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்” என்று கூறினார்.
ஒரே நாளில் பல்வேறு ஊர்களில் ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள்  2019’ கொண்டாடுவதற்கு மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) செயலர் முனைவர் இல.அம்பலவாணன் ஏற்பாடு செய்திருந்தார்.
செய்தி : நேத்திரா
முனைவர் இல.அம்பலவாணன்,
முனைவர் இல.அம்பலவாணன்

ஆத்தூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள்

ஆத்தூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள்
மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) நிறுவனத்தின் மூலம் ஆத்தூர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தை 10, 2050 /24.01.2019 அன்று ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள்  2019’ கொண்டாடப்பட்டது.
 அறிவுரைஞர் (PDI) திருமிகு.செயந்தி  பேசுகையில், “பெண் குழந்தைகள் அனைவருக்கும் சமமான கல்வியறிவு, ஊட்டச்சத்து, நலவாழ்வு உரிமைகள், சட்ட உரிமைகள் கிடைக்கப் போராடுவோம், பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம். நாம் அனைவரும் பெண் குழந்தைகளைப்  போற்றிப் பாதுகாப்போம்” என்று கூறினார்.
ஒரே நாளில் பல்வேறு ஊர்களில் ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள்  2019’ கொண்டாடுவதற்கு மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) செயலர் முனைவர் இல.அம்பலவாணன் ஏற்பாடு செய்திருந்தார்.
செய்தி : நேத்திரா
முனைவர் இல.அம்பலவாணன்
முனைவர் இல.அம்பலவாணன்

புதுப்பாளையத்தில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள்

முனைவர் இல.அம்பலவாணன்
முனைவர் இல.அம்பலவாணன்

புதுப்பாளையத்தில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள்
மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) நிறுவனத்தின் மூலம் புதுப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி (வாழப்பாடி)  வளாகத்தில் தை 10, 2050 /24.01.2019 அன்று ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள்  2019’ கொண்டாடப்பட்டது. அறிவுரைஞர் (PDI) திருமிகு.செயந்தி  பேசுகையில், “பெண் குழந்தைகள் அனைத்துத் துறைகளிலும் பங்கேற்றுச் சாதிக்க வேண்டும். நாம் அனைவரும் பெண் குழந்தைகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்” என்று கூறினார்.
ஒரே நாளில் பல்வேறு ஊர்களில் ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள்  2019’ கொண்டாடுவதற்கு மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) செயலர் முனைவர் இல.அம்பலவாணன் ஏற்பாடு செய்திருந்தார்.
செய்தி : நேத்திரா

திங்கள், 28 ஜனவரி, 2019

கொளத்தூரில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள்

அகரமுதல

கொளத்தூரில் வினையகத்தின் பெண் குழந்தைகள் நாள்
மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) நிறுவனத்தின் மூலம் கொளத்தூர் பேருந்து நிலையத்தில் தை 10, 2050 /24.01.2019 அன்று ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள்  2019’ கொண்டாடப்பட்டது.
 இந்நிகழ்ச்சியில்  அறிவுரைஞர்(PDI) திருமிகு. இரேகா, பெண் குழந்தைகளுக்குச் சமமான கல்வியறிவு, ஊட்டச்சத்து, நலவாழ்வு உரிமைகள், சட்ட உரிமைகள் அனைத்தும் கிடைக்க வேண்டும், ஆண் பெண் வேறுபாடின்றிக் குழந்தைகள் எல்லா துறைகளிலும் முன்னேற்றப்பட வேண்டும் என்றார்.
 நாம் அனைவரும் “பெண் குழந்தையினைப்  போற்றிப் பாதுகாக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
ஒரே நாளில் பல்வேறு ஊர்களில் ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள்  2019’ கொண்டாடுவதற்கு மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) செயலர் முனைவர் இல.அம்பலவாணன் ஏற்பாடு செய்திருந்தார்.
செய்தி : நேத்திரா
முனைவர் இல.அம்பலவாணன்

காடையாம்பட்டியில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள்

அகரமுதல
காடையாம்பட்டியில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள்
மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) நிறுவனத்தின் மூலம் காடையாம்பட்டி நடுநிலைப்பள்ளி, காடையாம்பட்டி பள்ளி வளாகத்தில் தை 10, 2050 /24.01.2019 அன்று ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள்  2019’ கொண்டாடப்பட்டது.
அறிவுரைஞர் (PDI) திருமிகு.இரேகா  பேசுகையில், ‘’ஆணுக்குப் பெண் சமம். எனவே பெண் குழந்தைகள் அனைவருக்கும் சமமான கல்வியறிவு, ஊட்டச்சத்து, நலவாழ்வு உரிமைகள்,  சட்ட உரிமைகள் கிடைக்கப் போராடுவோம். நாம் அனைவரும் பெண் குழந்தையினை போற்றிப் பாதுகாப்போம்” என்று கூறினார்.
ஒரே நாளில் பல்வேறு ஊர்களில் ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள்  2019’ கொண்டாடுவதற்கு மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) செயலர் முனைவர் இல.அம்பலவாணன் ஏற்பாடு செய்திருந்தார்.
செய்தி : நேத்திரா
செயலர் இல.அம்பலவாணன்