பட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 ஜூன், 2013

97 அகவையில் பட்டம் பெற்ற முன்னாள் படைஞர்

97 அகவையில் பட்டம் பெற்ற முன்னாள் படைஞர்


நியூயார்க்கு: அமெரிக்காவில் இரண்டாம் உலகப்போர் முன்னாள் வீரர் 80 ஆண்டுகளுக்கு பின்னர் டிப்ளமோ பட்டம் பெற்றது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரின் வடக்கே வாட்டர்டவுண் பகுதியைச் சேர்ந்தவர் பிரரெடரிக் கிரே (97), இவர் கடந்த 1934-ம் ஆண்டு ,வாட்டர் டவுண்பள்ளியில் சேர்ந்தார். ஒரு வருடம் படித்தார்.
எனினும் குடும்ப பிரச்னையால் பள்ளி படிப்பை பாதியில் கைவிட்டார். 1942-ம் ஆண்டு, அமெரிக்க ராணுவத்தின் 24-வது இன்ஃபான்ட்ரி படைப்பிரிவில் ‌பணியில் சேர்ந்தார். இரண்டாம் உலகப்போரில் , முக்கிய பங்காற்றிய கிரே, ஓய்வுபெற்றார்.எனினும் தன்னுடைய ஆசை எப்படியாவது படித்து பட்டம் வாங்கிடவேண்டும் என்பது தான்.
ஓய்வு பெற்ற பின்னர் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தாலும், பாதியில் விட்ட படிப்பை மீண்டும் தொடர்ந்து ஒருவழியாக பட்டம் (டிப்ளமோ) பெற்றார்.நேற்று அப்பள்ளியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அவருக்கு பள்ளி நிர்வாகம் வழங்கி கெளரவித்தது. இது குறித்து பிரரெடரிக் கிரேகூறுகையில், 80 ஆண்டுகளுக்குபின்னர் தனது ஆசை நிறைவேறிவிட்டது என்றார். 97 வயதிலும் இடைவிடாத முயற்சியால் பட்டம் (டிப்ளமோ) பெற்றது பலரையும் அதிசயிக்க வைத்தது

வெள்ளி, 26 அக்டோபர், 2012

"மகாத்மாவுக்குத் "தேசத் தந்தை' பட்டத்தை அளிக்க சட்டத்தில் இடமில்லை'

"மகாத்மாவுக்கு  த் "தேசத் தந்தை' பட்டத்தை அளிக்க சட்டத்தில் இடமில்லை' : மத்திய அரசு

First Published : 25 October 2012 08:10 PM IST
மகாத்மா காந்திக்கு தேசத் தந்தை என்ற பட்டத்தை அளிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னௌவைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா பராஷார், காந்தியைப் பற்றியும், அவரை தேசத் தந்தை என அழைக்கப்படுவதற்கான காரணம் குறித்தும் விவரங்களைத் தருமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு செய்தார். அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில், "மகாத்மா காந்திக்கு அதுபோன்ற பட்டம் எதுவும் வழங்கப்படவில்லை' எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து "மகாத்மாவை தேசத் தந்தை என்று முறைப்படி அறிவிக்க வேண்டும்' என்று வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் ஐஸ்வர்யா கடிதம் எழுதினார்.
பின்னர் தனது கோரிக்கை மனுவின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனக் கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி மனு அளித்தார்.
அந்த மனு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்து உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
மகாத்மா காந்தியை தேசத் தந்தை என குடியரசுத் தலைவர் அறிவிப்பது தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏனெனில், அரசியல் சாசன சட்டம் பிரிவு 18(1)-ன்படி யாருக்கும் எந்தவிதமான பட்டத்தையும் அளிக்க இயலாது. கல்வித் துறை மற்றும் ராணுவத்தைச் சார்ந்தோருக்கு மட்டுமே பட்டங்களை அளிக்க முடியும்'' என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது