நிலாச்சோறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிலாச்சோறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஏப்ரல், 2013

சித்திரை முழு நிலவில் "நிலாச்சோறு' :தொடரும் தமிழர்களின் பரம்பரையம்


 


சித்திரை முழு நிலவில் "நிலாச்சோறு' :தொடரும் தமிழர்களின் பரம்பரையம்

காஞ்சிபுரம்:சித்திரை முழுநிலவு நாள் அன்று, நிலா சோறு சாப்பிடும் வழக்கம், இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.தமிழர் பண்பாட்டில், பவுர்ணமிக்கு தனி இடம் உண்டு. சங்க இலக்கியங்களில், பவுர்ணமி அன்று கொண்டாடப்பட்ட விழாக்கள் பற்றிய தனிப் பட்டியலே இருக்கிறது.முழு நிலவை கொண்டாடுவது என்பது உலகம் முழுவதும் இருந்தாலும், தமிழகத்தில் அதற்கு ஒரு நீண்ட வரலாறே உண்டு. குறிப்பாக சித்திரா பவுர்ணமி தினத்தன்று, வீடுகளிலும் கோவில்களிலும் பல்வேறு சிறப்பான சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன.

அன்றைய இரவு பொழுதை, ஆற்றங்கரைகளில், குடும்பத்துடன் கழித்து மகிழும் பழக்கம் தமிழர்களிடையே இருந்து வருகிறது. உலகமயமாதல் போன்றவற்றால் சமூகத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டாலும், இதுபோன்ற பாரம்பரிய பழக்கங்கள் இன்றும் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

ஆற்றங்கரை தோப்புக்கள்...:காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, வேகவதி, செய்யாறு ஆகிய மூன்று ஆறுகள் உள்ளன. இந்த ஆற்றங்கரைகளில், அடர்ந்த, அருமையான தோப்புக்களும் உள்ளன.சித்திரை முழு நிலவு அன்று, சொந்தங்கள் எல்லாம் ஒன்று கூடி, விதம் விதமான உணவுகளை சமைத்து, இந்த ஆற்றங்கரை தோப்புக்களில் அமர்ந்து சாப்பிடுவது வழக்கத்தில் உள்ளது. உறவுகள் எல்லாம் ஒன்று கூடி, குடும்ப விஷயங்களை குதூகலமாக பேசும் அந்த சந்தோஷ நிமிஷங்களை, இன்றும் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் அனுபவிக்க தயங்குவதில்லை. காஞ்சிபுரத்தை அடுத்துள்ள ஐயங்கார் குளம் கிராமத்தில் பிரபல உற்சவமான நடவாவி உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவிற்கு வருவோர் தங்களுக்கு பிடித்தமான உணவினை சமைத்து வந்து, வரதராஜ பெருமாளை தரிசனம் செய்து விட்டு, தாங்கள் எடுத்து வந்த புளியோதரை, சாம்பார் சாதம் உள்ளிட்ட வகை வகையான உணவுகளை நிலவொளியில் உண்டு மகிழ்கின்றனர்.

உறவுகளின் சங்கமம்: ஓரிக்கை, காவாந்தண்டலம், வாலாஜாபாத் உள்ளிட்ட ஆற்றுப்படுகை பகுதிகளிலும் மக்கள் வீடுகளில் சமைத்து வந்து தரை விரிப்பான்கள் விரித்து நிலா சோற்றை உண்டு, கதை பேசி அதிகாலை புறப்பட்டு செல்வதும் நடைமுறையில் உள்ளது.பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகளும் சங்கமிக்கும் இடமாக உள்ள திருமுக்கூடல், பழைய சீவரம், பழவேலி ஆற்றங்கரை சித்திரா பவுர்ணமி நாளில் களை கட்டி இருக்கும்.
மெலிதாக வீசும் தென்றலோடு, நிலவொளியில், ருசியான உணவுகளை உண்டு மகிழ்வதற்காக ஒரு பெரும் கூட்டமே அங்கு வரும். இந்த நாளில், இங்கு, நதிகள் மட்டுமல்லாமல், உறவுகளும் சங்கமமாகி, சந்தோஷப்படுகின்றன.

செவ்வாய், 11 அக்டோபர், 2011

Two special programmes: இரண்டு உரையாடல் நிகழ்ச்சிகள் : நிலாச்சோறு & விழுதுகள்

இரண்டு உரையாடல் நிகழ்ச்சிகள்

நிலாச்சோறு விசேட நிகழ்ச்சி

07.10.2011 வெள்ளிக்கிழமை
பிரித்தானிய நேரம் மாலை 06.00 மணி முதல் 08.30 வரை
இலங்கை-இந்திய நேரம் இரவு 10.30 முதல் 01.00 மணிவரை 

ஆயுத முனையில் புதைக்கப்படும் 
தமிழர் மரபு

நிலம், பொருளாதாரம், கலாச்சாரம் என தமிழர்களின் பாரம்பர்யமான 
அனைத்துச் செல்வாங்களும் வளங்களும் வடகிழக்கில் நிலை கொண்டிருக்கும் 
இலங்கைப் படையினரால்
அனுதினமும் கபளீகரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 
ஈழத்தின் கல்வியாளர்களும் அறிவுஜீவிகளும் 
இந்தச் சூறையாடல்களைப் பற்றி இந்த வார நிலாச்சோறு நிகழச்சியில் 
பகிர்ந்து கொள்கிறார்கள்

பங்குகொள்வோர் :

பேராசிரியர் இரா. சிவச்சந்திரன்.
பேராசிரியர் சிற்றம்பலம் 
கல்வியியலாளர் அநந்தராஜ்
கவிஞர் தீபச்செல்வன்
 
குளோபல் தமிழ் நேயர்களை 
உரையாடலில் பங்கு பெற வருமாறு அழைக்கிறோம்

நிகழ்ச்சித் தயாரிப்பு
நடராஜா குருபரன்-யமுனா ராஜேந்திரன்

-----------------------------------------------------------

விழுதுகள் விசேட நிகழ்ச்சி

08.10.2011 சனிக்கிழமை
பிரித்தானிய நேரம் மாலை 05.00 மணி முதல் 08.30 வரை
இலங்கை-இந்திய நேரம் இரவு 09.30 முதல் 01.00 வரை

சாதீயமும் தமிழ்த் தேசியமும் : 
தலித் இயக்கங்களின் தலைவர்கள் உரையாடுகிறார்கள்

தமிழகத்தின் மூன்று தலித் பேரியக்கங்களான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, 
புதிய தமிழகம் மற்றும் ஆதித்தமிழர் பேரவை என்பன 
ஈழவிடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும், 
ஈழமக்களின் பால் பரிவுள்ள இயக்கங்கள். 
ஈழத்தையும்; தமிழகத்தையும் சேர்ந்த 
மிகச் சிறுபான்மை அரசியல்வாதிகள் 
சாதீயத்திற்கும் தமிழ் தேசியத்திற்கும் இருக்கும் 
உறவையும் முரணையும் இலங்கை அரசுக்கு ஆதரவான 
தமது கொள்கை நிலைப்பாட்டுக்குப் பயன்படுத்துகிறார்கள். 
இச்சூழலில், தலித் இயக்கங்களின் முப்பெரும் தலைவர்கள் 
சாதீயத்திற்கும் தமிழ் தேசியத்திற்குமான 
உறவையும் முரணையும் தமது அனுபவங்களில் இருந்து 
எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதனை 
இந்த வார விழுதுகள் நிகழ்ச்சியினூடே 
நம்முடன் பகிர்ந்து கொள்ள வருகிறார்கள்

கலந்து கொள்வோர் :

தொல். திருமாவளவன்
தலைவர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

டாக்டர். பா.கிருஷ்ணசாமி
தலைவர்
புதிய தமிழகம் கட்சி

அதியமான்
தலைவர்
ஆதித் தமிழர் பேரவை

குளோபல் தமிழ் வானொலி நேயர்களை உரையாடலில் பங்கு பெற வருமாறு அழைக்கிறோம்.

நிகழ்ச்சித் தயாரிப்பு
நடராஜா குருபரன்-யமுனா ராஜேந்திரன்