தமிழுக்கு அநீதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழுக்கு அநீதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 ஜூலை, 2013

நாமிருக்கும் நாடு நமதில்லை - தமிழில் வாதாடியதால் வழக்குகள் தள்ளுபடி



இந்தி, வங்காளம் முதலான மொழியினர் தங்கள் மாநிலங்களில் தங்கள் மொழிகளில் வாதிட உரிமை இருக்கும் பொழுது தமிழ்நாட்டில் தமிழில் வாதிட மறுக்கப்படுவது அறமற்ற செயலாகும். மத்திய அரசிற்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி வரும் முதல்வர்,  உடனடியாக  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்தியில் மறைமுகக் கூட்டணி வைத்துள்ள தி.மு.க.வும் தலையிட்டு உரிமை பெற்றுத் தர வேண்டும். இத்தகைய போக்கு  நாமிருக்கும் நாடு நமதில்லை என்பதை உணரச் செய்து தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

தமிழில் வாதாடியதால் வழக்குகள் தள்ளுபடி:  உயர்நீதிமன்றம் அதிரடி


மதுரை:இரு வழக்குகளில், மனுதாரர்களின் வழக்கறிஞர், தமிழில் வாதிடுவேன் என்பதை, ஏற்க முடியாத நிலையில், மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

கோவில்பட்டி, ஆயிஷா பானு தாக்கல் செய்த மனுவில், "கணவர் பக்கீர் மைதீன், சவுதி அரேபியாவில், கூலித்தொழிலாளியாக வேலைக்குச் சென்றார். அங்கு பாஸ்போர்ட்டை தொலைத்து, சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிக்கிறார். அவரை மீட்டு, ஒப்படைக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.

கன்னியாகுமரி அடக்கச்சி சுந்தரராஜன், "விளவங்கோடு மிடாலனில் வீடு கட்ட, வரைபட அனுமதி வழங்க, கருங்கல் ஊராட்சி நிர்வாக அலுவலருக்கு உத்தரவிட வேண்டும்' என, மனு செய்தார்.

மனுக்கள், நீதிபதி எஸ்.மணிக்குமார் முன், விசாரணைக்கு வந்தன. மனுதாரர்களின் வழக்கறிஞர் பகவத்சிங், "தமிழில் என் வாதத்தை முன்வைக்க விரும்புகிறேன்' என்றார்.

ஏற்கனவே, சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன, "பெஞ்ச்' ஆங்கிலத்தில் தான் வாதங்களை முன்வைக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளதாக, நீதிபதி கூறி, அந்நகலை பார்வையிடுமாறு வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.

"இல்லை... தமிழில் தான் வாதிடுவேன்' என, வழக்கறிஞர் தெரிவித்ததை தொடர்ந்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட்களில், வழக்காடு மொழியான ஆங்கிலத்தில் தான், வாதங்கள் இருக்க வேண்டும் என, அரசியலமைப்புச் சட்டம், தெளிவாக கூறுகிறது. சுப்ரீம் கோர்ட்டில், ஒரு வழக்கில், ராஜ்நாராயணன், "இந்தியில் தான் வாதிடுவேன்' என்றார். இதை நீதிபதிகள் சில நிமிடங்கள் செவி மடுத்தனர். அட்டார்னி ஜெனரல் தப்தாரி, எதிர்ப்புத் தெரிவித்தார். ராஜ்நாராயணனின் வாதம் புரியவில்லை என, நீதிபதிகளும் எதிர்ப்புத் தெரிவித்தனர்."இந்தியில் பேச அனுமதிக்க முடியாது. ராஜ்நாராயணன் ஆங்கிலத்தில் பேசலாம் அல்லது வழக்கறிஞர் மூலம் வாதிடலாம் அல்லது வாதங்களை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுக்கலாம். ஏனெனில், இக்கோர்ட்டின் வழக்காடு மொழி ஆங்கிலம். ராஜ்நாராயணன் சம்மதம் தெரிவிக்காவிடில், கோர்ட் இவ்வழக்கில் தலையிட முடியாது' என்றனர் நீதிபதிகள்.சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு, இங்கும் பொருந்தும். அரசியலமைப்புச் சட்டமும் இதை வலியுறுத்துகிறது. இவ்வழக்கில், மனுதாரரின் வழக்கறிஞர் கோரிக்கையை, ஏற்க முடியாத நிலையில், கோர்ட் உள்ளது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

புதன், 13 மார்ச், 2013

தமிழகப் பணியாளர் தேர்விலும் தமிழுக்கு அநீதி

இந்தி  அரசின் வழியில் தமிழக அரசும் செல்கிறது. உயரமான மலை, நீளமான ஆறு போன்ற தகவல்களால் பணிக்கு ஒன்றும் பயனில்லை. அடிக்கடி மாறக்கூடிய விவரங்களை அறிவதாலும் பயனில்லை. நல்ல முறையில் எழுதி மக்களுடன்  தொடர்பு கொள்ள மொழியறிவு தேவை. பணியில் சேர்ந்த பின் பணி தொடர்பான துறையறிவு,  பொது அறிவுத் தேர்வில் வெற்றி  பெறுவதைக் கட்டாயமாக்கலாம். எனவே,  அடிப்படைப் பொது அறிவு 50 மதிப்பெண் தமிழறிவு 150 மதிப்பெண் என வினாத்தாள் முறையை மாற்றி அமைக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இ.ஆ.ப.  தேர்வுக்கான மாற்றங்களை த் தொடர்ந்து த.நா.‌ அ.ப.தே. தேர்வின் தமிழ் ப் பாடத்திலும் மாற்றம்




தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப்-1, குரூப்-1ஏ, 1பி, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகள் மற்றும் இதர தொழில்நுட்ப தேர்வுகளுக்கான தமிழ் பாடத்திட்டத்தினை முற்றிலும் மாற்றி அமைத்து புதிய பாடத்திட்டத்தினை டி.என்.பி.எஸ்.சி. தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குரூப் 1 தேர்விற்கான பாடத்திட்டத்தில் மாற்றத்தை டிஎன்பிஎஸ்சி அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து அனைத்து தேர்வுகளுக்கும் 72 பக்க புதிய பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி நேற்று இரவு வெளியிட்டுள்ளது.
எஸ்எஸ்எல்சி தகுதியைக் கொண்டு தேர்வு எழுதும் குரூப்- 4 பணியிடங்கள் மற்றும் விஏஒ தேர்வுகளில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது குரூப் 4 தேர்வில் இதுவரை 100 மதிப்பெண்கள் பொது அறிவு பகுதிக்கும், 100 மதிப்பெண்கள் பொதுத்தமிழுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தன. புதிய பாடத்திட்டத்தின் படி பொது அறிவு, புத்தி கூர்மை, சிந்தித்து விடை அளித்தல் ஆகிய பகுதிகளிலிருந்து 150 வினாக்கள் கேட்கப்படும். இதற்காக 225 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 50 வினாக்கள் மட்டுமே பொதுத்தமிழில் இருந்து கேட்கப்படும். அதற்கு 75 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.  குருப்-2 தேர்விலும் அனைத்து மதிப்பெண்களும் பொது அறிவு பகுதிக்கே ஒதுக்கப்பட்டுள்ளன.
இதுவரை இடம் பெற்று வந்த பொதுத்தமிழ் பகுதி நீக்கப்பட்டதுடன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் வங்கி போட்டித் தேர்வு போன்று புத்தி கூர்மை, சிந்தித்து விடை அளிக்கும் திறன் ஆகிய புதிய பகுதிகளுக்கு கூடுதல் மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, நேர்முகத்தேர்வு, நேர்முகத்தேர்வு அல்லாதது என இரு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. நேர்முகத்தேர்விற்கான பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, பிரதான தேர்வு என இரண்டு தேர்வுகளும். நேர்முகத்தேர்வு இல்லாத பதவிகளுக்கு ஒரு தேர்வு மட்டும் எழுதினால் போதுமானது.  இதுவரை தனியாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ) தேர்வு குரூப்-1 தேர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது. 
ஐ.ஏ.எஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று மாநிலங்களில் பணியில் சேர்பவர்கள் கூட அந்தந்த மாநில மொழிகளில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டத்தில் தமிழ் பாடத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது தேர்வாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புதிய தலைவர்  பொறுப்பேற்பு:
இந்நிலையில்,  இன்று பொறுப்பேற்க உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) புதிய தலைவர் ஏ. நவநீதகிருஷ்ணன் மேலும் சில மாற்றங்களை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.