‘தமிழ்த்தேரின்’ அடுத்தத் தலைப்பு: – வணக்கம்
மாசி 29, 2048 / 13.03.2017க்குள் உங்கள் படைப்புகள் வந்து சேரட்டும்!
செந்தமிழர் சீர்மரபில் வந்தசொல் வணக்கம்!
எந்தவொரு அறிமுகமும் தருமின்பச்சொல் வணக்கம்!
அன்றுதொட்டு அகம்குளிர மலரும்சொல் வணக்கம்!
மங்கலமாய் அமைந்தவொரு அன்புச்சொல் வணக்கம்!
வேறுபாடுகள் சிறிதுமின்றி விளையும்சொல் வணக்கம்!
வேற்றுமையிலும் ஒற்றுமையை ஊன்றும்சொல் வணக்கம்!
தானென்ற அகந்தையை அகற்றும்சொல் வணக்கம்!
தன்னைப்போல் பிறரையெண்ணும் சொல் வணக்கம்!
வாழும் உயிர் அத்தனையும் வரவேற்கும் வணக்கம்!
ஏழையென்றும் செல்வரென்றும் பார்க்காது வணக்கம்!
படைத்தவனின் கருணையெண்ணி பணிவுடனே வணக்கம்!
பார்முழுதும் சூரியனின் கதிரொளியே வணக்கம்!
இருகரங்கள் குவிந்தபடி இணைகின்ற வணக்கம்!
இதயம்தனை ஏந்திநிற்கும் எழில்வடிவம் வணக்கம்!
ஒருசொல்தான் உச்சரித்தால் உள்ளம்மலரும் வணக்கம்!
ஒன்றுபடும் சிந்தனையின் முதல்தொடக்கம் வணக்கம்!
என்றுபல எண்ணங்கள் என்னுள்ளே முகிழ்க்கும்
வண்ணங்கள் காட்டுகின்ற வரவேற்பில் வணக்கம்!
தாய் வணக்கம்! தமிழ் வணக்கம்! இறைவணக்கம்! இன்னும்பல
முதல்வணக்கம் தமிழுக்கென்று தமிழ்த்தேர் முழக்கம்!!
உங்கள் படைப்புகள்
மாசி 29, 2048 /13.03.2017க்குள் வந்துசேர வேண்டிய மின்வரிகள்:
superstarzia@gmail.com
kaviri2017@gmail.com
tamilther.dubai@gmail.com
[மேல்விவரங்களுக்கு மேலே குறிப்பிட்ட மின்வரிகள் ஒன்றில் தொடர்பு கொண்டு தெளிவு பெறுக.]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக