அகரமுதல 176, மாசி 21, 2048 / மார்ச்சு 05 , 2017
மாசி 27, 2048 / 11.03.2017 சனி காலை 9.00 மணி,
சென்னைச் செய்தியாளர்கள் சங்கம், சேப்பாக்கம்
ஒன்றரை இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை, போர்க்குற்ற
விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்று வருவதை நீங்கள் அறிவீர்கள்.
இனப்படுகொலை முடிந்து 8 ஆண்டுகள் ஆனபிறகும், பன்னாட்டு நீதிபதிகளைக்
கொண்டு போர்க்குற்றங்களை உசாவுவதாக இலங்கையே ஒப்புக்கொண்டு 18 மாதம்
ஆனபிறகும், அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் இன்றுவரை எடுக்கப்படவில்லை.
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கையையும் எடுக்காத இலங்கை, இப்போது மேலும் 18 மாதகால நீட்டிப்பு பெற முயல்கிறது. இப்படியெல்லாம் இழுத்தடிப்பதன் மூலம், இனப்படுகொலைக்கான நீதியைக் குழிதோண்டிப் புதைத்துவிட வேண்டும் என்பதே இலங்கையின் திட்டம்.
இலங்கையின் இந்தச் சூழ்ச்சியை, ஐநா மனித உரிமைகள் பேரவைக்கும்
அனைத்துத்தேசத்துக்கும் உணர்த்துவதற்காகச் சென்னையில் கையெழுத்து இயக்கம்
ஒன்றை மாசி 27, 2048 / மார்ச்சு11 அன்று நடத்துகிறோம். குற்றவாளி இலங்கைக்குக் கால நீட்டிப்பு தராதே – என்று வலியுறுத்த இருக்கிறோம்.
சென்னை சேப்பாக்கம் அரசினர் தோட்டத்தில் உள்ள ‘சென்னைச்செய்தியாளர்கள்
சங்கத்தில்’ (சென்னை பத்திரிகையாளர் மன்றம் அருகில்) மாசி 27, 2048/
11.03.2017 சனிக்கிழமை காலை சரியாக 9 மணிக்குத் திரு. சத்தியராசு அவர்கள் இந்தக் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கிவைக்கிறார்.
இந்தக் கையெழுத்து இயக்கத்தில், பல்வேறு அரசியல் இயக்கங்களின் தலைவர்கள்,
பெரும்புள்ளிகள், கலைஞர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள்,
பேராசிரியர்கள், மாணவர் சார்பாளர்கள், மகளிர் அமைப்பினர் பங்கேற்கின்றனர்.
உங்களின் பங்கேற்பை எதிர்நோக்கும்
புகழேந்தி தங்கராசு
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக் குழு, சென்னைபுகழேந்தி தங்கராசு
9841906290 / 9840053710 / 9840480273
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக