ஐரோப்பியப் பண்டுவ மருத்துவக்
கழகம்(European Society of Intensive Care Medicine) மரு. சிதம்பரம்
வீரப்பன் அவர்களுக்கு மதிப்புமிகு உறுப்பினர் (Honorary Member) எனும்
விருதை நிகழாண்டு புரட்டாசி 11-15, 2045 / செப். 27 – அக்.1 நாள்களில்
பார்சலோனா நகரில் நிகழ்ந்த 27-ஆம் அனைத்துலக மாநாட்டில், வழங்கியது.
இதுகாறும் பதின்மூவருக்கு மட்டுமே
வழங்கப்பட்டுள்ள இவ்விருது, 4 ஆண்டுகள் கழித்து வழங்கப்பெறுவதும்,
இவ்விருதை வாங்கும் முதல் ஆசியர், இந்தியர், தமிழர் இவர்தாம் என்பதும்
இச்சிறப்பைக்கூட்டுவன.
இக்கழகம் 7000 உறுப்பினர்களைக் கொண்டது;
ஆயினும், பருவநிலை காரணமாக ஏறக்குறைய 1500-பேர்களுக்கு மட்டுமே
கலந்துகொள்ள இசைவு கிட்டியதாக அறிகின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக