வியாழன், 10 அக்டோபர், 2013

கனடா பெண் எழுத்தாளர் ஆலிசு மன்றோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

கனடா பெண் எழுத்தாளர் ஆலிசு மன்றோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு
கனடா பெண் எழுத்தாளர் ஆலிஸ் மன்றோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு
ஸ்டாக்ஹோம், அக். 10-

2013-ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் ஆலிஸ் மன்றோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. சிறந்த சிறுகதை தொகுப்பிற்காக இந்த பரிசு வழங்கப்படுகிறது.

ஆலிஸ் மன்றோ 14 சிறுகதை தொகுப்புகளை வழங்கியிருக்கிறார். கடைசியாக 4 சுயசரிதை கதைகளுடன் கூடிய ‘டியர் லைஃப்’ என்ற தொகுப்பை வெளியிட்டார். 82 வயதான ஆலிஸ், கதை எழுதுவதில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டிருப்பதாக இந்த ஆண்டின் துவக்கத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் 13-வது பெண் ஆலிஸ் மன்றோ ஆவார். நோபல் பரிசு தவிர, மூன்று முறை கனடாவின் கவர்னர் ஜெனரல் விருதினையும், 2009ம் ஆண்டு மேன் புக்கர் சர்வதேச பரிசையும் ஆலிஸ் மன்றோ பெற்றிருக்கிறார்.

கடந்த 1901ஆம் ஆண்டு முதல் 2012 வரை 106 பேர் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றுள்ளனர். இவர்களில் 17 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள். ரவீந்திரநாத் தாகூர், ரட்யார்ட் கிப்ளிங், வி.எஸ்.நைபால் ஆகியோர் நோபல் வென்ற இந்தியர்கள் ஆவர். கடந்த ஆண்டு இந்த பரிசு சீனாவின் மோ யானுக்கு வழங்கப்பட்டது.

http://media.dinamani.com/2013/10/09/nobel.jpg/article1826796.ece/alternates/w460/nobel.jpg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக