திங்கள், 7 அக்டோபர், 2013

பொதுநல மாநாட்டில் பங்கேற்பில்லை: கனடா

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பில்லை: கனடா  த.அ. முடிவு

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று கனட பிரதமர்  ஸ்டீபன் ஹார்பர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய போக்கை கருத்தில் கொண்டே இந்த முடிவை தான் எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தனக்குப் பதிலாக கனடாவின்  சர்வதேச மற்றும்  மனித உரிமைகளுக்கான வெளிவிவகார அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் தீபக் ஒபராய் இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாகாநாட்டில் கலந்து கொள்வார் எனவும் கனடா பிரதமர்  வெளியிட்ட அறிக்கையில்  தெரிவித்தார்.
இலங்கையானது 2013 ஆம் ஆண்டு காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை நடத்துவதற்கு தேர்வு செய்யப்பட்ட போது, இலங்கை  தனது மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்தவும், நல்லிணக்கத்தை நோக்கிச் செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இவ் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் என கனடா நம்பியதாகவும் ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லையெனவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 94864

இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் ஆழ்ந்த கவலை கொள்வதாகவும், சிவில் யுத்தத்தின் போதும் அதன் பின்னருமான மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான தரங்கள் தொடர்பில் இலங்கை பொறுப்பற்று இருப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் முக்கிய நாடான கனடாவின் பிரதமர் பங்கு கொள்ளாமல் புறக்கணிப்பது இலங்கைக்கு மிகப் பெரும் பின்னடைவு என அரசியல் நோக்கர்கள் தெரிவிகின்றனர்
இலங்கையில் இடம்பெறவுள்ள காமன் வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதில்லையென கனேடிய பிரதமர்  ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய போக்கை கருத்தில் கொண்டே இந்த தீர்மானத்தை தான் எடுத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
மேலும் தனக்கு பதிலாக கனடாவின்  சர்வதேச மற்றும்  மனித உரிமைகளுக்கான வெளிவிவகார அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் தீபக் ஒபராய் இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாகாநாட்டில் கலந்துகொள்வார் எனவும் கனேடிய பிரதமர்  வெளியிட்ட அறிக்கையில்  தெரிவித்தார்

இலங்கையானது 2013 ஆம் ஆண்டு பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டை நடத்துவதற்கு தெரிவு செய்யப்பட்ட போது, இலங்கை  தனது மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்தவும், நல்லிணக்கத்தை நோக்கிச் செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இவ் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் என கனடா நம்பியதாகவும் ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லையெனவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் ஆழ்ந்த கவலை கொள்வதாகவும், சிவில் யுத்தத்தின் போதும் அதன் பின்னருமான மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான தரங்கள் தொடர்பில் இலங்கை பொறுப்பற்று இருப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் முக்கிய நாடான கனடாவின் பிரதமர் பங்கு கொள்ளாமல் புறக்கணிப்பது இலங்கைக்கு மிகப் பெரும் பின்னடைவு என அரசியல் நோக்கர்கள் தெரிவிகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக