வெள்ளி, 20 செப்டம்பர், 2013

இளங்குற்றவாளிகள் யார்?



1/2 சிறுவர் அகவை குறித்து நீண்ட நாள்களாகவே கருத்தாடல் நடந்து வருகின்றது. ஆனால், இப்பொழுதும்  குழந்தைத்  தொழிலாளர் (தடுப்பும் ஒழுங்கும்) சட்டம் 1986 பிரிவு 2(2) இன்படி 14 அகவை நிறைவுறாத ஒருவர் குழந்தை எனப்படுவார். [“Child” means a person who has not completed the age of 14 years.] பரத்தமைத் தடுப்புச்சட்டம் 1956 (Immoral Traffic (Prevention) Act, 1956) பிரிவு 2(அ) 16 அகவை நிறைவுறாதவர்களைக் குழந்தை (“Child” means a person who has not completed the age of sixteen years) என்கின்றது. நடைமுறையில் இவ்வாறு சட்டம் இருக்கும் பொழுது இப்போதைய குழப்பம் ஏன்? தேவைஎனில், கற்பழிப்பு வழக்குகளில் தொடர்புடைய யாரும் குழந்தை வரம்பிற்கு வரமாட்டார்கள் என அகவை வரம்பு நீக்கிச் சட்டவிதிச் சேர்க்கை கொண்டுவரலாம். இந்தியாவிலும் சிறுவர் சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாட்டுடன்தான் உள்ளன. எனினும் அமெரிக்க நாட்டுச்சூழல் அடிப்படையில் இந்தியச்  சிறாரின் அகவை வரம்பை வரையறுக்க இயலாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
2/2
சிறாருக்குச் சட்டப்பாதுகாப்பு தருவதுபோல் இளம்பருவத்தினருக்கும் (adolescent) இந்தியச் சட்டம் சிலப் பாதுகாப்பு தருகின்றது. இவர்களையும் சிறையில் அடைக்காமல் சிறைப்பள்ளிகளில் அடைக்க வேண்டும் எனக்  கூறுகின்றது. எனவே, அகவைத்திருத்த உரையாடல்கள் தேவை யற்றவை. மாறாக, குற்றவாய்ய்ப்புச் சூழல்களைக்  குறைப்பதிலும் இளங்குற்றவாளிகள் சீர்திருத்தப் பணிகளிலும் கருத்து செலுத்தித் திருத்தப் பணிகளில் முன்னேற்றம் காண்பதே சரியாக இருக்கும். இளங்குற்றவாளிகள் நீதி மன்றத்தில் (Juvenile Court)  பல்லாண்டுகள் பணியாற்றிய பட்டறிவில் இதனைத் தெரிவிக்கின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


இளங்குற்றவாளிகள் யார்

Comment (5)   ·   print   ·   T+  
இளங்குற்றவாளிகளுக்கான வயது வரம்பு மறுநிர்ணயம் தொடர்பாக இந்தியாவில் குரல்கள் வலுவடையும் இதே காலகட்டத்தில் அமெரிக்காவிலும் இது தொடர்பான விவாதம் பரவலாகிவருகிறது. வித்தியாசம் என்னவென்றால், இந்தியாவில் இளங்குற்றவாளிகளுக்கான வயது வரம்பை 18-லிருந்து 16-ஆகக் குறைக்க வேண்டும் என்றும் அமெரிக்காவில் 16-லிருந்து 18-ஆக உயர்த்த வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கின்றன.
பொதுவாகவே, அமெரிக்காவில் நீதி வழங்கலில் சில நல்ல விஷயங்கள் பின்பற்றப்படுகின்றன. இளம் சிறார்கள் மரண தண்டனைக்கு உரிய குற்றங்களைப் புரிந்திருந்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என்று 2005-ல் அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. தொடர்ந்து, 2012-ல் ‘மில்லர் எதிர் அலபாமா அரசு’ வழக்கில், "குற்றம் எப்படிப்பட்டதாக இருந்தாலும், பரோல் சலுகையற்ற ஆயுள் தண்டனையைக்கூட விதிக்கக் கூடாது" என்று கூறிவிட்டது.
"இளம் குற்றவாளிகள் வயது முதிர்ந்தவர்களைப் போல மனரீதியாகக் குற்றச் சிந்தனையில் ஊறியவர்கள் அல்ல; எதையோ நினைத்து எதையோ செய்துவிடுகிறவர்கள், தாங்கள் செய்யும் செயலின் விளைவுகளை முழுக்கச் சிந்திக்காதவர்கள். எதிர்காலத்தில் அவர்கள் தங்களுடைய செயலுக்கு வருந்தவும் தங்களைத் திருத்திக்கொள்ளவும் கூடும். இள வயதிலேயே அவர்களுடைய கைவிரல் ரேகைகளைப் பதிவுசெய்து, படங்களைக் கோப்பில் சேர்த்து குற்றவாளி முத்திரை குத்திவிட்டால், அவர்கள் மேலும் குற்றச் செயல்களில் ஊறி அந்த வாழ்க்கைக்கே தள்ளப்படுவார்கள்" என்று அந்தத் தீர்ப்புக்குக் காரணம் சொன்னது நீதிமன்றம்.
அமெரிக்காவில், இளங்குற்றவாளிகள் என்று வரையறுப்பதற்கான வயது வரம்பு மாகாணத்துக்கு மாகாணம் மாறுபடுகிறது. ஒருவரை இளம் குற்றவாளி என்று நிர்ணயிக்க அதிகபட்ச வயது நியூயார்க்கிலும் வடக்கு கரோலினாவிலும் 16; வேறு 11 மாகாணங்களில் 17; வாஷிங்டனிலும் 37 மாகாணங்களிலும் 18. நியூயார்க்கில் மட்டும் ஆண்டுதோறும் 16 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்களில் 50,000-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்படுகின்றனர். இளம் வயதினர் குற்றங்களில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூழலில்தான் இப்படியொரு விவாதம் அமெரிக்காவில் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
ஒரு தீர்ப்பளிக்கும் முன் இளம் குற்றவாளிகளின் வயது, குடும்பப் பின்னணி, அவர்களின் உளப்பாங்கு போன்ற 14 அம்சங்களைக் கவனித்து முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் அலபாமா நீதிபதி. சிறாருக்கான தண்டனையைப் பற்றிப் பேசுமுன் அவர்களைக் கொடூரமான குற்றங்களைச் செய்யத் தூண்டும் சமூகச் சூழலைக் கணக்கில் எடுத்துக்கொள்வதுதான் நாகரிக சமூகத்துக்கு அழகு என்கிறார்கள் சமூகவியலாளர்கள்.
அமெரிக்க நியாயம் இந்தியாவுக்கும் பொருந்தும்தானே?
 ++++++++++++++++++++++++++++++++++++

  • கொள்ளுமேடு ரிஃபாயி
    அமெரிக்கா என்ற கண்ணாடி வழியே நம்ம இந்தியாவையும் பார்க்கக் கூடாது.நமக்கென்று ஒரு தொன்மையான கலாச்சாரமும், பாரம்பரியமும் உண்டு.
    about 7 hours ago · Up Vote  (0) ·  Down Vote (0) ·  reply (0)
  • swaminathan ramaseth
    குற்றத்தின் வீரியத்தை பொறுத்தே தண்டனை அளிக்கப்பட வேண்டும். சுற்றுப்புறம், சூழ்நிலை ,வளர்ப்பு வித்தியாசங்கள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். இந்தியாவில் சமீப காலமாக சிறார்கள் என்று கூறப்படும் இள வயதினர்கள் வரம்பு மீறிய செயல்களில் ஈடுபடும்போது நெஞ்சம் பதை பதைக்கிறது சுட்டிக்காட்டினால் எதிரிகளாக எண்ணுகிறார்கள் . வரம்பை தற்போதுள்ளபடியே தொடரலாம்
    about 12 hours ago · Up Vote  (1) ·  Down Vote (0) ·  reply (0)
    கொள்ளுமேடு ரிஃபாயி  Up Voted swaminathan ramaseth\"s comment
  • rameshkumar
    அமெரிக்க கலாச்சாரம் வேறு, இந்திய கலாச்சாரம் வேறு என்ற நிலை மாறி இங்கும் அன்னிய மோகத்தில் உடையில், உணவில் இருந்து வாழ்க்கை முறை வரை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இதில் யாரை இளம் குற்றவாளிகள் என்று சொல்வது. முன்பெல்லாம் 16 வயதில் தெரியவேண்டியது எல்லாம் பத்து முதல் பதிமூன்று வயதுக்கே (போதை பழக்கம் உட்பட) தெரிந்து கொள்கிறார்கள். இதில் யாரை இளங்குற்றவாளிகள் என்று சொல்வது. குற்றங்களுக்கு ஏற்றவாறு தண்டனையை வழங்க வேண்டும். வயதை குறைப்பதற்கோ, கூட்டுவதற்கோ ஒன்றுமில்லை.
    about 18 hours ago · Up Vote (0) ·  Down Vote (0)
  • Vinoth Kanyakumari at Freelancer web designer
    தலையங்கம் சின்னதாகவே முடிந்துவிடுகிறது. இன்னும் விரிவுபடுத்தலாமே.
    about 18 hours ago · Up Vote  (0) ·  Down Vote (0) ·  reply (0)
  • Arun
    இது தவறான ஒப்பீடு. இரு நாடுகளும் கலாச்சாரத்தில் முற்றிலும் வேறானவை. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நியூயார்க் நகரத்தில் வாழும் நான் கவனித்ததை வைத்து சொல்கிறேன். இங்குள்ள இளைஞ்சர்களின் செயல்கள் முற்றிலும் வேறு நிலையில் உள்ளது. பள்ளி சிறுவர்களும் பெண்களுடன் சர்வ சாதாரணமாக பொது இடங்களில் கட்டியணைத்துக்கொண்டு இருப்பர். அது மட்டுமின்றி, பல்வேறு (இந்தியாவில்) வயதிற்கு மீறிய செயலாக கருதப்படும் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். எனவே இந்த ஒப்பீடு தவறானது. இந்தியாவில் சிறுவர்களின் வயது வரம்பு குறைப்பு என்பது கற்பழிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வயதினை பாராமல் குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு தண்டனை வழங்குவது சரியாக இருக்கும். அதை விடுத்து பொதுவாக எல்லா குற்றத்திற்கும் வயதை குறைப்பதோ கூட்டுவதோ சரியான நடவடிக்கையாகாது.
    about 20 hours ago · Up Vote (0) ·  Down Vote (1)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக