திங்கள், 16 ஏப்ரல், 2012

drama directed by cong.

இராயைராய சோழன் நன்கு சொல்லி உள்ளார். (பெயர் சரிதானா?) தமிழ்நாட்டில் தமிழக மீனவர்கள்பாலும் ஈழத்தமிழர்களின் பேரழிவிற்கு எதிராகவும் பேசிவிட்டு நாடாளுமன்றத்தில்  சிங்களப்போர்க்கொடுமை தொடர்பான தீர்மானம் கொண்டு வர இருந்த பொழுது அதற்கு எதிராகப் பேசிய நடிகை தலைமையில் செல்லும் நாடகக் குழு சிங்கள அரசின் மேற்பார்வையில் இந்திய அரசு இயக்கியபடி ஆடப்போகிறார்கள். இராசபக்சே காட்டிக் கொடுப்பதாக முரண்டு பிடித்தால்  கைப் பாவையாக எதிர்க்கட்சியை ஆளும் கட்சியாக்க இந்திய அரசும் காங்கிரசும் நாடகம் ஆடும். அதன் ஒரு காட்சிதான் நடிகர்கள் பயணம்.  இருப்பினும் சிறிதேனும் மனச்சான்று உள்ள  நா.உ.க்கள்  தமிழ் ஈழ நாட்டிற்கு எதிராகச் சிங்களம் இநதிய உதவியுடன்  இனப்படுகொலை புரிந்ததை உணர வாய்ப்பு உள்ளது.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

 
இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழு புதிய கோரிக்கை: பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்திக்க அனுமதி வேண்டும்
இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழு புதிய கோரிக்கை: பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்திக்க அனுமதி வேண்டும்
புதுடெல்லி, ஏப்.16,
முகாம்களில் அடைக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள். போர் முடிந்ததும் ஈழத்தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான உரிமைகள் பெற்றுத் தருவோம் என்று கூறிய மத்திய காங்கிரஸ் அரசு தற்போது மவுனமாக உள்ளது.
இந்தியா உள்பட பல நாடுகளிடம் உதவி பெறும் இலங்கை அரசு அதை தமிழர் பகுதியில் சிங்கள மயமாக்கலுக்கே பயன்படுத்தி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்ததால், இலங்கையில் நடந்து வரும் சீரமைப்புப் பணிகளை பார்வையிட அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்பி ஆய்வு செய்ய முடிவு செய்தது.
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் 16 எம்.பி.க்கள் இந்த குழுவுக்காக தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் இருந்து அ.தி. மு.க. சார்பில் ரபிபெர்னாட், தி.மு.க. சார்பில் இளங்கோவன், காங்கிரஸ் சார்பில் என்.எஸ்.வி.சித்தன், சுதர்சன நாச்சியப்பன், மாணிக்கம் தாகூர், கிருஷ்ணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் எம்.பி.க்கள் குழு பயணம் வெறும் கண்துடைப்பு நாடகம் என்று புகார்கள் எழுந்தன. இதையடுத்து இலங்கை செல்லும் குழுவில் இருந்து அ.தி. மு.க. விலகியது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ராஜபக்சேயுடன் எம்.பி.க்கள் விருந்து சாப்பிட மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருடன் எந்த விவாதத்துக்கும் ஏற்பாடு செய்யாததால் அ.தி.மு.க. குழுவில் இடம் பெறாது என்று கூறியிருந்தார்.
தற்போது தி.மு.க.வும் எம்.பி.க்கள் குழுவில் இருந்து விலகிவிட்டது. ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதில் முதன்மையாக உள்ள தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் விலகிவிட்ட நிலையில், அந்த குழுவில் 14 எம்.பி.க்களே உள்ளனர்.
இவர்கள் இன்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு இலங்கை செல்கிறார்கள். அவர்களிடம் நேற்று மத்திய வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் பயணத் திட்டம் பற்றிய நிகழ்ச்சி நிரல்களை விளக்கி கூறினார்.
எம்.பி.க்கள் குழுவினர் ராஜபக்சே, பசில் ராஜபக்சே, பிரீஸ், ரணில் விக்கிரமசிங்கே பிள்ளையான் உள்பட சிலரை சந்தித்து பேசுவது பற்றி தெரிவிக்கப்பட்டது. 21-ந் தேதி ராஜபக்சேயுடன் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பற்றியும் கூட்டத்தில் கூறப்பட்டது. இதற்கு எம்.பி.க்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
தி.மு.க., அ.தி.மு.க. விலகிவிட்ட நிலையில், ராஜபக்சேயுடன் சிற்றுண்டி சாப்பிடும் விருந்து நிகழ்ச்சியை மாற்றவேண்டும் என்று குழுவில் இடம் பெற்றுள்ள தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் கூறினார்கள்.
ராஜபக்சேயுடன் 21-ந் தேதி காலை சாப்பிடுவதற்கு பதில் 20-ந் தேதி மாலை அவரை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுபோல 18-ந் தேதி இலங்கை ரெயில்வே திட்டப்பணிகளை பார்வையிட பயணத் திட்டத்தில் நிகழ்ச்சி சேர்க்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு மாணிக்கன் தோட்ட முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களை சந்தித்துபேச அனுமதிக்க வேண்டும் என்றும் எம்.பி.க்கள் வலியுறுத்தினார்கள்.
பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜ் இதுபற்றி கூறுகையில், இலங்கையில் இந்தியா உதவியுடன் நடக்கும் சீரமைப்பு பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை பார்வையிடுவது முக்கியம் அல்ல. முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களை சந்திப்பதே முக்கியம். அதற்காக வற்புறுத்தியுள்ளோம் என்றார்.
எம்.பி.க்கள் குழு நாளை முதல் 4 நாட்கள் இலங்கையில் பல்வேறு இடங்களுக்கு செல்லவுள்ளனர். நாளை (17-ந் தேதி) காலை இலங்கை வெளியுறவு மந்திரி பிரீஸ், பொருளாதார வளர்ச்சி மந்திரி பசில் ராஜபக்சேயை சந்தித்து பேசுகிறார்கள்.
பசில் ராஜபக்சேயுடன் பேசி முடித்த பிறகு இந்திய எம்.பி.க்கள் இலங்கை பாராளுமன்றத்துக்கு செல்ல உள்ளனர். அங்கு அவர்களுக்கு சபாநாயகர் சாமல் ராஜபக்சே மதிய விருந்து கொடுக்கிறார்.
நாளை பிற்பகல் முதல் மாலை வரை தமிழ் தேசிய கூட்டணி பிரதிநிதிகளை எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்து பேசுகிறார்கள். இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தோட்ட தொழிலாளர் காங்கிரஸ் நிர்வாகிகளையும் எம்.பி.க்கள் சந்தித்து பேச உள்ளனர்.
நாளை மறுநாள் (புதன்) காலை இந்திய எம்.பி.க்கள் குழுவுக்கு கொழும்பில் உள்ள இந்திய தூதர் அசோக் கே.காந்தா காலை விருந்து கொடுக்கிறார். பிறகு எம்.பி.க்கள் இலங்கை வடக்கு பகுதிக்கு செல்கிறார்கள். அங்கு ஈழத்தமிழ் எம்.பி.க்களை சந்தித்து பேசுகிறார்கள். மனித உரிமை சங்கத்தினரையும் சந்திக்கிறார்கள்.
அன்றிரவு யாழ்ப்பாணத்தில் தங்குகிறார்கள். 19-ந் தேதி காங்கேசன் துறைமுகம் சென்று சீரமைப்பு பணிகளை பார்வையிடுகிறார்கள். அன்று எதிர்க்கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்கேயை சந்தித்து பேசுகிறார்கள்.
20-ந் தேதி இலங்கை கிழக்கு பகுதிகளை பார்வையிடுகிறார்கள். அங்கு மாகாண முதல்-மந்திரி பிள்ளையானை சந்தித்து பேசுகிறார்கள். 21-ந் தேதி சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சேயை சந்தித்து விட்டு எம்.பி.க்கள் குழு இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளது.
இந்திய எம்.பி.க்கள் குழுவினர், போர் குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் ராஜபக்சேயின் தம்பி கோதபயாவை சந்தித்து பேசமாட்டார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் ஈழத் தமிழர்கள் முகாம்களை பார்வையிட எம்.பி.க்கள் குழு விடுத்துள்ள கோரிக்கை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். எம்.பி.க்களின் கோரிக்கை ஏற்கப்படுமா? என்பது இன்று மாலை தெரிய வரும்.
 
+++++++++++++++++++++++++++++++++++++
கருத்து
Monday, April 16,2012 05:43 PM, v sanjay said: 0 0
DMK, ADMK குழுவில் இருந்து விலகியது அரசியல் லாபத்திற்க மத்திய அரசின் மீதும் CONGRESS கட்ச் மீதும் குறை கூறுவதற்குத்தான் உண்மை நிலை இவர்களுக்கு எந்த இலங்கைதமிழ் மக்களின் மீதும் சரி இந்திய மக்களின் மீதும் அக்கறை கிடையாது இவர்களின் நாடகம் மக்களுக்கு நன்கு தெரியும். '
Monday, April 16,2012 05:12 PM, இராயைராய சோழன் said: 0 0
கைப்பற்றப்பட்ட தமிழர் நிலங்களில் சிங்களவரை குடியேற்றுவதை பற்றி பாதுகாப்பு கமாண்டரால் விளக்கமளித்தல். பின்பு மதிய போசனம். யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினரோடும் இலங்கை அரசால் இனம் காணப்பட்ட‌ சிவில் சமூகத்தோடும் பரஸ்பர உரையாடல். இந்திய உதவி தூதுவருடன் இராப்போசனம். ஏப்ரல் 19, 2012 1. வடமாகாண சிங்கள இராணுவ தயானந்த சிறி ஆளுனருடன் தமிழர்பகுதியைகைப்பற்றியதற்கு நன்றி தெரிவிப்பு . 2.டக்கிளஸ்தேவானந்தாவுடனும் மாகாண அதிகாரிகளுடன் சந்திப்பு. 3.சிங்களவருக்கு அமைத்துக்கொடுக்கும் காங்கேசன்துறை துறைமுக விஜயம். 4. கொழும்புக்கு திரும்புதல். 1.சீனாவால் ஆரம்பிக்கப்பட்ட துறைமுகத்தை பார்வையிட்டு பாராட்டுதல் வழங்கல். களுத்துறைக்கான விஜயம் 2. தெற்கு மாகாண ரயில்வே திட்ட புனர்நிர்மாண வேலைகள் கையளிக்கப்படல். 3.சிங்கள தென் மாகாண ஆளுனருடன் தேநீர் விருந்து. 4. கொழும்புக்கு திரும்புதல்.மகிந்தவுடன் இராப்போசனம் மகிந்த கொடுக்கும் விலைமதிப்பற்ற வைரம் இரத்தினக்கல்லையும் கையூட்டையும் பெறுதல். 5.அமரிக்க இந்திய ஆதரவாளரான‌ எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இராப்போசனம். ஏப்ரல் 20, 2012 கிழக்கு மாகாண மட்டக்களப்புக்கு விஜயம் 1.குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கான‌ தொழிற் பயிற்சி கல்லூரி கையளிக்கப்படல். 2. தமிழர் கொலைத்திட்ட‌ சீவா திட்டத்திற்கான விஜயம் 3. கொழும்பிலுள்ள உள்ளூர் மக்களுடன் சந்திப்பு.இந்திய இலங்கைஅடிமையான பிள்ளையான் என்ற கிழக்கு மாகாண முதலமைச்சருடன் போசனம். மத்திய மாகாணம் அழகிகள் அழகர்கள் கட்டிபுரளும் டிக்கோயாவுக்கு விஜயம். 1.தமிழினத்தை குண்டுகள் போட்டு படுகொலை செய்த‌ வைத்தியசாலைத் திட்டத்திற்கான விஜயம் 2.இந்திய இலங்கை ஒப்பந்தத்தால் அனாதைகள் ஆக்கி நடுதெருவில் விடப்பட்ட மலையக தமிழரை (நேரு சாஸ்திரி உடன்படிக்கை) இன்னும் எவளவு தமிழரை அகதிகள் ஆக்கமுடியும் என்று ஹற்றன் டிக்கோயா மக்களுடன் கலந்துரையாடல். கொழும்பு திரும்புதல் ஏப்ரல் 21, சனிக்கிழமை 1. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு பணப்பெட்டிகள் கைமாறல். காலை உணவு 2. ஊடகவியலாளருடன் கலந்துரையாடல் இலங்கை அரசாங்கத்துக்கு நற்சான்றிதழ் வழங்குதல் ( இலங்கையில் மனித உரிமைகள் நல்லநிலையில் உள்ளது. இலங்கை விடயத்தில் அனைத்துலகம் தலையிடக்கூடாது. இலங்கை இந்தியா இணைந்து தான் தமிழரை படுகொலை செய்யும் படுகொலைகளை நாங்கள் இணைந்தே மூடிமறைப்போம். தமிழரை நாங்கள் விரும்பிய போது கொல்வோம் அவர்கள் இந்திய இலங்கை அடிமைகள்.. 14.30 மணிக்கு இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு புறப்படல் பணப்பொட்டிகளும் மாணிக்கக்கல்லுகளும் வைரங்களும் தூதுக்குழுவினருக்கு வரி இல்லாமல் சுங்க துறையே பாதுகாப்பாக வெளியில் கொண்டுவந்து கொடுக்கும் _

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக