சனி, 21 ஏப்ரல், 2012

Where are our children? Scream of the parents

இதயமுள்ளவர்களிடம் அழுதால் இரக்கத்தில் தாங்களும் அழுதாவது துயரத்தில் பங்கேற்பார்கள்.எங்கிருந்தோ இயக்கும்  நாடகப்பாத்திரங்க்ள அழுகை குறித்துக் கவலைப்படவா போகிறார்கள்? வருத்தத்துடன்
இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எங்க பிள்ளைங்க இருக்காங்களா? இந்தியக் குழுவிடம் தமிழர்கள் கதறல்

First Published : 21 Apr 2012 11:19:49 AM IST


கொழும்பு, ஏப். 21 :  இலங்கையில்  போர் முடிவுற்ற பிறகு அங்குள்ள நிலைமையை ஆராய சென்றுள்ள நாடாளுமன்றக் குழுவிடம், மெனிக்பார்ம் முகாமில் வாழும் மக்கள், விசாரணை என்று அழைத்துச் செல்லப்பட்ட எங்கள் பிள்ளைகளை எல்லாம் காணோம். அவர்கள் உயிரோடு இருக்கிறாங்களா,  இல்லையான்னே தெரியலை. எங்க பிள்ளைகளை மீட்டுத்தாங்க என்று கதறி இருக்கிறார்கள். மேலும், அங்கு வாழும் பெண்கள், தங்களுக்கு இலங்கை அரசாங்கம் அளிக்கும் புழுத்துப் போன அரிசியைக் கொண்டு வந்து காட்டி இதனை எப்படி சமைத்து சாப்பிடுவோம் என்று கேட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த இலங்கை அதிகாரிகள், நல்ல உணவுப் பொருட்களைத்தான் தருகிறோம் என்று வாய்க்கூசாமல் நாடாளுமன்றக் குழுவிடம் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக