திங்கள், 16 ஏப்ரல், 2012

Nature should be used

இயற்கையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!

மூலிகைச் சாறு தயாரித்து, வீடு வீடாக இலவசமாக வினியோகிக்கும் தணிகாசலம்: சின்ன வயதில் இருந்தே, மூலிகைப் புத்தகங்களுடன் தான் என் பொழுது கழியும். வயிற்று வலியிலிருந்து, புற்று நோய் வரை, மூலிகையில் தீர்வு உள்ளது என தெரிந்த போது, பிரமிப்பாக இருந்தது. என் பிள்ளைகள், பிறந்ததில் இருந்து, இன்று வரை, ஒன்று அல்லது இரண்டு முறை தான் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். பெரும்பாலும், மூலிகைச் சாற்றினாலேயே நோய்களை குணப்படுத்தி விடுவேன். அந்த அனுபவம், பலருக்கும் பயன்பட வேண்டும் என்று தான், கடந்த 12 ஆண்டுகளாக, தினம் ஒரு மூலிகைச் சாறு தயாரித்து, வீடு வீடாக, இலவசமாக வினியோகிக்கிறேன்.காலையில் 4 மணி க்கு எழுந்து, மூலிகைகளை அரைத்து, சாறாக்கி பாக்கெட் செய்து, அனைத்தையும் பைக்கில் ஏற்றி, ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வைத்துவிட்டு வந்து விடுவேன். சில வீடுகளில், அதை தொட கூட மாட்டார்கள். மறு நாள் அந்த பாக்கெட் கெட்டுப் போயிருப்பதை பார்க்க, மனசுக்கு கஷ்டமாக இருக்கும்.மூலிகைகளின் சிறப்பை உணர்ந்தவர்கள், என்னிடம் கேட்டு வாங்கி பயன்படுத்துவர். இலவசமாக வாங்க விரும்பாதவர்கள், விருப்பப்பட்டு கொடுக்கும் பணத்தை பெற்றுக் கொள்கிறேன். சிலர், நோயை பற்றி சொல்லி அதற்கான மூலிகைச் சாறை கேட்பர். தயார் பண்ணிக் கொடுப்பேன்.காலை, 6 முதல் பக ல், 11 மணி வரை, குறைந்தது, 200 வீடுகளுக்காவது பாக்கெட் கள் போடுவேன்.அஜீரணமும், மலச்சிக்கலும் தான் அடிப்படை நோய்கள். இது இரண்டும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டாலே மற்ற நோய்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.இயற்கையான உணவுகளைச் சாப்பிடுவது, விடியற்காலையில் எழுந்து, குளிர்ந்த நீரில் குளிப்பது, நிமிர்ந்து உட்கார்வது என, ஆரோக்கியத்திற்கான விஷயங்கள் எல்லாம் நம்மைச் சுற்றியே உள்ளன; அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக