சனி, 22 டிசம்பர், 2012

கை கொடுக்கிறதுகாளான் வளர்ப்பு!'

சொல்கிறார்கள்

கை கொடுக்கிறதுகாளான் வளர்ப்பு!'
டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் பவுண்டேஷன் வழங்கும், கிராமப்புற சாதனையாளர் விருதை பெற்ற பிரகதாம்பாள்: என் சொந்த ஊர், புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் கிராமம். ஐந்தாம் வகுப்பு வரை தான், படித்திருக்கிறேன்.நெல்லு சோறு சாப்பிடக் கூட வழியில்லாத அளவுக்கு, வறுமை உள்ள பெரிய குடும்பம். தட்டுத் தடுமாறி, கல்யாணமும் முடிந்தது. என் கணவர், விவசாயத்தில், டிப்ளமோ படித்திருக்கார்.

சென்னை, ஆடுதுறை வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில், லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்தார். மாதச் சம்பளம், 750 ரூபாய் தான். ரொம்ப கஷ்டப்பட்டோம். நானும், ஏதாவது தொழில் செய்யணும் என நினைத்து, தையல் வேலை, கூடை பின்னுவது, கைவினைப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்வது என, பணம் சம்பாதித்தேன். அதில் வரும் வருமானத்தின் மூலம், வீட்டுச் செலவை சமாளித்தேன்.நான்காண்டு களுக்கு பின், வம்பன் வேளாண் ஆராய்ச்சி நிலையத்துக்கே, என் கணவர், டிரான்ஸ்பர் செய்யப்பட்டு, கிராமத்திற்கு வந்தோம்.அங்கு, 16 பேர் சேர்ந்து, 10 ஆயிரம் சேமிப்போடு, மகளிர் சுய உதவிக் குழு ஆரம்பித்தேன். வம்பன் ஆராய்ச்சி நிலையத்தில், ஐந்து நாள் காளான் வளர்ப்பு பற்றி, பயிற்சி எடுத்துக் கொண்டேன்.

காளான் வளர்ப்புக்கு தேவையான அனைத்தையும் தெரிந்து கொண்டேன். வங்கிக் கடன் வாங்கி, குழு உறுப்பினர்கள் சேர்ந்து, காளான் வளர்ப்பு தொழில் துவங்கினோம்.
இப்போது, இந்த தொழிலில், மாதம், 25 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கிறது. தினமும், நான்கு அல்லது மூன்று மணி நேரம் தான் வேலை செய்கிறோம். ஒவ்வொருத்தரின் பங்களிப்பை பொறுத்து, லாபத்தை பங்கிட்டு கொள்வோம்.உழைக்கிற நேரத் தை கூட்டினால், லாபமும் அதிகம் பெறலாம்.இதுவரை, 100 பெண்களுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி கொடுத்திருக்கேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக