வெள்ளி, 23 மார்ச், 2012

resolution of america is like butter milk - Vijakanth: அமெரிக்காவின் தீர்மானம் நீர் மோர்

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதற்கிணங்க நலல கருததுகளைத் தெரிவி்த்து இருக்கும் பொழுது எதிருரை தேவையில்லை.  அமெரிக்க நாடகத்தையும் இந்திய நாடகத்தையும் புரிந்து கொள்ள இக் கருத்துகள் உதவும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

++++++++++++++++++++++++++
அமெரிக்காவின் தீர்மானம் நீர் மோர்: விஜயகாந்த் கருத்து

First Published : 23 Mar 2012 03:17:51 PM IST


சென்னை, மார்ச்.23: இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள தீர்மானம் நீர் மோர் என்றும் அதில் இந்தியா தலையிட்டது நீர்மோரில் மேலும் தண்ணீரை ஊற்றியது போலாகிவிட்டது என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஆள் கடத்தல், ஆட்களை காணாமல் செய்வது, ஆட்களை கொலை செய்வது போன்ற காரியங்களில் ஒரு அரசே ஈடுபட்டால் அது மனித உரிமை மீறல்களாகும். ஒரு போரில் சரண் அடைய வந்தவர்களை சுட்டுக் கொல்வதோ, போரில்லாத பகுதி என்று அறிவித்து அங்கு மக்களை சேர்த்து அவர்கள் மீது குண்டு போடுவதோ, மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், வழிபாட்டு இடங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துவதோ போர்க் குற்றங்கள் ஆகும்.2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்கை அரசு தமிழினப் படுகொலையை நடத்தியதன் மூலம் இந்த இரு குற்றங்களையும் செய்துள்ளது. ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கை அரசு புரிந்துள்ள இந்த இரு குற்றங்களையும் ஐ.நா.வின் மேற்பார்வையில் விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்காவால் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் இந்தியா தலையிட்டு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தன் விருப்பத்திற்கு இலங்கைக்கு ஆலோசனை கூறவோ அல்லது பிரதிநிதிகளை நேரடியாக அனுப்பவோ கூடாதென்றும், இலங்கை அரசின் சம்மதத்தை பெற்ற பிறகு ஐ.நா. செயல்பட வேண்டும் என்றும் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை திருத்தியுள்ளது.அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின்படி ஐ.நா. மனித உரிமைக் குழு எதைச் செய்தாலும் அதை இலங்கை அரசு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று இருந்தது. ஆனால் இந்தியாவினுடைய திருத்தம் இலங்கை அரசின் சம்மதம் இன்றி ஐ.நா. மனித உரிமைக் குழு எதையும் செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவும் இந்தியாவை தன் பக்கம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று கருதி, இந்தியாவின் திருத்தத்தை ஏற்றுக் கொண்டு, அப்படி திருத்தப்பட்ட தீர்மானம்தான் தற்பொழுது நிறைவேறியுள்ளது.ஒரு நாட்டின் உள் விவகாரத்தில் தலையிட அனுமதிக்கக் கூடாதென்றும், அந்நாட்டின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா இதற்கு காரணம் கற்பித்துள்ளது. இறையாண்மை என்பதன் மூலம் தன் சொந்த குடிமக்களையே கொன்று குவிப்பதற்கு எந்த அரசையும் அனுமதிக்கக் கூடாது என்பதாலும், உலக சமுதாயம் அதை வேடிக்கை பார்க்கக் கூடாது என்பதாலுமே ஐ.நா. மன்றம் அத்தகைய நாடுகளில் தலையிட்டு மனித சமுதாயத்தை காப்பாற்ற உரிமை வழங்கப்பட்டுள்ளது. இறையாண்மை என்பதன் பெயரால் உலகளாவிய மனிதாபிமான உரிமைகளை தடுக்கவோ, தவிர்க்கவோ எந்த அரசுக்கும் உரிமை இல்லை.போர்க் குற்றங்கள் நிகழ்ந்தாலோ, இனப் படுகொலை நடந்தாலோ அதை தடுத்து நிறுத்த எந்த நாட்டிலும் தலையிடலாம். அதை ஒரு நாடு உள் விவகாரம் என்று சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது. இந்த அடிப்படையிலேயே தமிழினப் படுகொலை சம்பந்தமான தீர்மானம் மனிதாபிமான அடிப்படையிலும், போர்க் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன என்ற அடிப்படையிலும் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தீர்மானம் நீர் மோர் என்றால் இந்தியாவினுடைய தலையீடு அதில் மேலும் தண்ணீரை சேர்த்து நீர்த்து போகச் செய்து விட்டது.இலங்கையை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்ற போக்கை மாற்றி, அதை அப்பாவி நாடாகக் கருதுகின்ற அணுகுமுறையையே இந்திய அரசு மேற்கொண்டது என்று இந்திய அரசின் அதிகார வர்க்கம் தெரிவித்துள்ளது. இலங்கையைப் பொறுத்த வரையில் இந்தியா கொண்டு வந்த திருத்திய தீர்மானத்தின் மூலம் தங்களுக்கு இந்தியா மிகப் பெரிய சலுகையை செய்துள்ளது என்று இலங்கை அதிகார வர்க்கம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.எனினும் ஐ.நா. மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வந்த இந்த தீர்மானத்தின்போது, இந்திய அரசு வெளிப்படையாக இலங்கை அரசின் பக்கம் சாயாமல் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளது. இந்த தீர்மானம் நிறைவேறியதன் மூலம் இலங்கை அரசு உலக நாடுகளின் கண்டனத்திற்கு ஆளாகவில்லை என்றாலும், கண்காணிப்புக்கு ஆளாகியுள்ளது என்பது திருப்தி அளிக்கிறது.
கருத்துகள்

விஜயகாந்திற்கு கருத்துசொல்ல எந்த அருகதையும் கிடையாது
By இளங்கோவன் கோவிந்தசாமி
3/23/2012 4:12:00 PM

1 கருத்து: