திங்கள், 19 மார்ச், 2012

mess sisters

சொல்கிறார்கள்                                                                                                                              

உணவக உடன்பிறப்புகள் (மெஸ் சகோதரிகள்) ! 


ஒன்பது ஆண்டுகளாக, "மெஸ்' தொழிலில் அசத்தும் பத்மகுமாரி, ஜெலஜகுமாரி சகோதரிகள்: நாகர்கோவில் பக்கத்துல இருக்கிற கிருஷ்ணன் கோவில் எங்க சொந்த ஊரு. கல்யாணத்துக்கு பின், வீட்டுல சும்மா தானே இருக்கோம்னு, நானும் என் தங்கை மற்றும் எங்க பகுதி பத்து பெண்களைச் சேர்த்து, மகளிர் சுய உதவிக் குழுவை ஆரம்பிச்சோம். ஏதாவது சுய தொழில் தொடங்கலாமேன்னு யோசிச்சு, தையல், எம்ப்ராய்டரி உட்பட, பல தொழில்கள் பற்றி பேசி, கடைசியில, "மெஸ்' தொடங்கலாம்னு முடிவெடுத்தோம். இது சரிப்பட்டு வராதுன்னு, திடீர்ன்னு ஆறு பேர் ஒதுங்கிட்டாங்க. ஆனாலும், மனம் தளராம, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, 2003ல் இந்த, "மெஸ்'சை ஆரம்பிச்சோம். ஒன்பது வருஷமா நல்லா போயிட்டு இருக்கு. குழுவில், மீதியிருந்த நாலு பேர்ல, ரெண்டு பேர் உடல்நிலை காரணமா, "பார்ட்னர் ஷிப்'பை விட்டுட்டாங்க. நாங்க விடாப்பிடியாகத் தொடர, இன்னிக்கு வெற்றிகரமாக நடந்துட்டிருக்கு எங்க, "மெஸ்!' எங்க, "மெஸ்'க்கு ஏதாவது ஒரு சிறப்பு இருக்கணும்னு யோசிச்ச போது தான், "ஆல் இன் ஆல் பெண்கள்' ஐடியா வந்தது. புதுமைக்காக மட்டுமில்ல, பல பெண்களோட வாழ்க்கைக்கு அது கை கொடுத்த மாதிரியும் இருக்கும்னு, கடையோட எல்லா வேலைகளுக்கும் பெண்களாக வேலைக்கு எடுத்தோம். சமையலை விட்டா வேறு எதுவும் தெரியாத வயதான பெண்களுக்கும் ஆதரவு கொடுத்தோம். காய்கறி வெட்டுறது, சமைக்கறது, கல்லாவில் நிக்கிறது, சுத்தம் செய்றது, "ஆர்டர் டெலிவரி' கொடுக்கிறதுன்னு எல்லாமே பெண்கள் தான். தினமும் மதிய சாப்பாடு மட்டும் தான். ஆனாலும், பருப்பு, சாம்பார், மோர்க் குழம்பு, வெந்தயக் குழம்பு, வத்தக் குழம்பு, மோர், அவியல், பொரியல், கிச்சடின்னு ஏகப்பட்ட அயிட்டங்களை வச்சு அசத்திடுவோம்; வெள்ளிக்கிழமை மட்டும், "எக்ஸ்ட்ராவா' பாயசம் இருக்கும். ஆரம்பிச்ச புதுசுல கொஞ்சம் கஷ்டமாத் தான் இருந்துச்சு; அளவு தெரியாம குறைவா சமைச்சு, அரக்க பரக்க, மறுபடியும் உலை வைப்போம்; இப்ப எல்லாம் கை வந்துடுச்சு. இப்படி நாலு பேருக்கு நம்ம கையால சாப்பாடு போட்டு, அவங்க வயிறு நிறைஞ்ச சந்தோஷத்தை முகத்துல பார்க்கறதுல, எங்க மனசு நிறையுது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக