எதில் தான் "ரிஸ்க்' இல்லை!
விலை பொருள் முன்பேர வர்த்தக (கமாடிட்டி டிரேடிங்) தொழிலில் அசத்தும் தர்ஷினி: ஆறு ஆண்டுகளாக, விலை பொருள் முன்பேர வர்த்தக சந்தையில் ஈடுபட்டு வர்த்தகம் செய்து வருகிறேன். துவக்கத்தில், 50 ஆயிரம் ரூபாய் பணம் போட்டு, இத்தொழிலை முதலீட்டு அடிப்படையில் ஆரம்பித்து, பின், கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, ஒரு முழு நேர வர்த்தகராக பணியைத் தொடர்ந்து வருகிறேன். தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை பொருள் முன்பேர வர்த்தகம் செய்த நேரத்தில், அதிர்ஷ்டமும் என்னுடன் சேர்ந்து கொண்டது. இதனால், இரண்டரை லட்ச ரூபாய் வரை லாபம் அடைந்தேன். இந்த லாபத்தில் கிடைத்த பணத்தை வைத்து, வர்த்தக துணை ஏஜன்ட் பணியைச் செய்ய ஆரம்பித்தேன். இன்றைக்கு, இத்தொழில் மூலம், நானே முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடுவதோடு, மற்றவர்களுக்கும் முதலீடு செய்ய உதவுகிறேன். விலை பொருள் முன்பேர வர்த்தகம் என்பது, காலை 10 மணியிலிருந்து, இரவு 11 மணி வரை செயல்படும். இதில் நமக்கு, சரியான ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தேர்வு செய்து, அந்த சமயத்தில் வர்த்தகத்தைத் தொடரலாம்; இரவு 7 முதல், 9 மணி வரை, விறுவிறுப்பாக இவ்வர்த்தகம் நடைபெறும். அந்த நேரத்தில், கவனத்துடன் வர்த்தகம் செய்ய வேண்டும். சாதாரணமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்ய, பெண்கள் ஆர்வமாக இருப்பர். காரணம், உலக நடப்புகள் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும். இத்தொழில், "ரிஸ்க்' நிறைந்தது தான்; ஆனால், எதில் தான், "ரிஸ்க்' இல்லை. தங்கம், வெள்ளி உள்ளிட்ட மதிப்புமிக்க வர்த்தகத்தை தேர்வு செய்து, அதை தினமும் கவனித்தால், லாபம் அடையலாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக