புதன், 28 டிசம்பர், 2011

painting girl surya praba: தூரிகைப் பெண் சூர்யபிரபா:


தூரிகைப் பெண்


ஓவியத்தில் ஆர்வம் கொண்ட, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான சூர்யபிரபா (அவர் தந்தை பேசுகிறார்): என் மகளுக்கு காது கேட்காது; வாய் பேச முடியாது என்பதெல்லாம், அவள் ஒரு வயது குழந்தையாக இருந்த போது தான் எங்களுக்கு தெரிந்தது. அடையாறில் உள்ள காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகளுக்கான மழலையர் பள்ளியில் சேர்த்தோம். அதன்பின், நாங்கள் புரிந்து கொள்ளும் அளவில் கொஞ்சம் பேசினாள். இரண்டாம் வகுப்பு முதல் சில்ட்ரன்ஸ் கார்டன் மேல்நிலைப் பள்ளியில், இயல்பான பிள்ளைகளுடன் படிக்க அனுப்பினோம். அவர்களுடன் போட்டி போடுவது இவளுக்கு சவாலாக இருந்தது. இருந்தாலும், கடினமாக உழைத்து படித்து, கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கிறாள். நல்ல ஆசிரியர்கள் கிடைத்ததே, அவளின் இந்த வெற்றிக்கு காரணம். சிறு வயதிலிருந்தே தான் சொல்ல நினைப்பதை வரைந்து காட்டுவாள் சூர்யபிரபா. அப்படித்தான் பழகியது தூரிகை அவளுக்கு. ஆனால், ஓவியத்திற்கான முறையான பயிற்சிகள் எதுவும் எடுக்கவில்லை. இருந்தாலும், பென்சில் டிராயிங், வாட்டர் கலர், ஆயில் பெயின்டிங் என பல ஓவியங்களை வரைந்திருக்கிறாள்.
சமீபத்தில் இவள் வரைந்த ஓவியங்களை காட்சிப்படுத்தினோம். நிறைய பாராட்டுகளுடன், நன்றாக விற்பனையும் ஆயின. இவையனைத்தும், இவளின் திறமைக்கான அங்கீகாரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக