செவ்வாய், 4 மே, 2010

பார்வதியம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை: மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை



சென்னை, ​​ மே 3:​ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள்,​​ மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்து செல்ல அனுமதி அளிக்கலாம் என்று மத்திய உள்துறை செயலாளருக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.சட்டப் பேரவையில் திங்கள்கிழமை விதி 110-ன் கீழ் துணை முதல்வர் மு.க.​ ஸ்டாலின் இது குறித்து படித்த அறிக்கை:மலேசியாவில் இருந்து சென்னைக்கு சிகிச்சைக்காக வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளை,​​ சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் திருப்பி அனுப்பிய நிகழ்வு குறித்து 19-4-2010 அன்று பேரவையில் விவாதிக்கப்பட்டது.அதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி,​​ இந்தச் செய்தி உரிய வகையில் தனக்கும்,​​ அரசுக்கும் சொல்லப்படவில்லை.​ அதனால் அவர் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.​ அங்கே அவர் சிகிச்சை பெறுவதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.​ தமிழகத்தில் சிகிச்சை பெற விரும்புகிறேன் என்று பார்வதியம்மாள் அறிவித்தால்,​​ அதை பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு எழுத மாநில அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு 30-4-2010 அன்று விசாரணைக்கு வந்தது.​ அப்போது தமிழக அரசு வழக்கறிஞர்,​​ மருத்துவ சிகிச்சை கோரி மாநில அரசுக்கு மனு அளித்தால் மனிதாபிமான அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு மத்திய அரசுக்கு தக்க முன்மொழிவுகள் அனுப்பப்படும் என்று கருத்தை நீதிமன்றம் முன்வைத்தார்.இதுதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்,​​ சிகிச்சை குறித்த முறையீட்டை மனுதாரரோ அல்லது பார்வதியம்மாள் தரப்பிலோ கொடுக்க வேண்டும் என்றும்,​​ அப்படி கொடுக்கப்பட்ட மனுவை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.இதற்கிடையில் பார்வதியம்மாளின் பெருவிரல் ரேகை பதித்த கடிதம் 30-4-2010 அன்று முதல்வரின் தனிப்பிரிவில் இயங்கும் கம்ப்யூட்டரில் மின் அஞ்சல் மூலம் பெறப்பட்டது.​ அதில்,​​ தனது சிகிச்சைக்காக கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வருவதற்கு மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் ஏற்பாடு செய்து தரும்படி முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.முதல்வர் கருணாநிதி ஏற்கெனவே சட்டப் பேரவையில் அறிவித்தபடி,​​ பார்வதியம்மாள் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளபடி அவர் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகத்துக்கு வந்து செல்ல சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆராய்ந்து அனுமதியளிக்கலாம் என்று மத்திய உள்துறைச் செயலாளருக்கு தமிழக அரசு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது என்றார் மு.க.​ ஸ்டாலின்.
கருத்துக்கள்

அம்மையார் பெயரால் முயல்பவர்கள் எந்தச் சலனத்திற்கும் இடம் கொடுக்காமல் தமிழகத்திற்கு அழைத்துவராமல் இருப்பதே சால்புடைத்து. எதிரிகள் எமை நத்துவாய் எனக் கோடி இட்டழைத்தாலும் தொடேன் என்னும் உணர்வாளர்களின் தாய்க்கு அவமானம் ‌தேடித் தராதீர்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
5/4/2010 11:12:00 AM

மாநில அரசின் மடல்கள் என்னவாகும் என்பது அனைவரும் அறிந்ததே! அப்படிப்பட்ட மடல்களில் ஒன்றாக இம்மடல் ஆகிவிடக்கூடாது. ஆனால் அதற்கு முழு ஈடுபாடு தேவை. மேலும் இவர்களே நிபந்தனைகளைச் சுட்டி வம்பு வளர்ப்பானேன்? தரட்டும் இசைவு! வரட்டும் வீர அன்னை! அதன்பின் எதையும் கூறலாம். நம்பிக்கைக் குழப்பத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன் By Ilakkuvanar Thiruvalluvan 5/4/2010 3:01:00 AM இவ்வாறு நான் வைகறையில் பதிந்த கருத்தில் என்ன பண்பாட்டுக் குறைவு அல்லது வன்முறையைத்தினமணி கண்டது? இச் செய்தியை நீக்குவானேன். நிபந்தனை என்ற பெயரில் பாதுகாப்புக் கைதியாக நடத்துவார்களே! போர்க்களச்சாவு என எண்ணி வராமல் இருந்து விடலாமே! என்றோர் எண்ணமும் வீரத்தலைவரைப் பெற்ற வீர அன்னை வீர மகனைக் காணும் வரையாவது இருக்கலாமே என்ற மற்றோர் எண்ணமும் வந்ததால் குழப்பம் என்று குறிப்பிட்டேன். இப்பொழுது தெளிவாகக் கூறுகிறேன். அம்மையார் பெயரால் முயல்பவர்கள் எந்தச் சலனத்திற்கும் இடம் கொடுக்காமல் தமிழகத்திற்கு அழைத்துவராமல் இருப்பதே சால்புடைத்து. எதிரிகள் எமை நத்துவாய் எனக் கோடி இட்டழைத்தாலும் தொடேன் என்னும் உணர்வாளர்களின் தாய்க்கு அவமானம் ‌

By Ilakkuvanar thiruvalluvan
5/4/2010 11:11:00 AM

Very Good dramma! DMK, and Congress partis killed Prabahan and 40, 000 innocent people. Now, they act as they are going to save 80 year old Mrs. Parvathy. You people deport her when she arrive with the valid visa, now you want to bring her to indian soil; what a laughable matter this is. When 40,000 Tamil hindu people were killed you people never open your mouth and you dance with Sonia, now you want show to the world that you Indians take care a woman who is about to die. Is it not a joke. Srilanka president and his brothers said Tamilnadu politicians are jokes last year. You Tamilnadu politicians proved that you all jokers to the world dont you. Shame shame .

By Karma
5/4/2010 5:53:00 AM

VERY NICE RAJASJI

By Paris EJILAN
5/4/2010 5:37:00 AM

வர்றாங்க..வர்றாங்க பார்வதியம்மா வர்றாங்க !..பூங்கொத்த கொண்டுகிட்டு இன்னொரு அக்கா வருவாங்க!! ஆரஞ்சுப் பழம் கணக்கில் "அதக் கொண்டுகிட்டு"அவுங்க அண்ணன் வருவாங்க !!! நோயாளிப் போர்வையிலே போராளி வருவாங்க !! அம்மா கதை முடியும்போது மனிதாபிமானத்தை காப்பாற்ற பிரபாகரனும் வருவாங்க !!! எல்லோரும் வந்தவுடன் அகண்ட தமிழகம் காண்பாங்க!!! அப்போ கருணாநிதியின் குடும்பம் அகதியாகி ஓடுவாங்க !!!!!@ rajasji

By rajasji
5/4/2010 4:23:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக