ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

நடிகர் ஜெயராம் வீடு தாக்கப்பட்ட விவகாரம்: இயக்குநர் சீமான் மீது போலீஸôர் வழக்குப் பதிவு



சென்னை, பிப். 6: சென்னையில் நடிகர் ஜெயராம் வீடு வெள்ளிக்கிழமை தாக்கப்பட்டது தொடர்பாக திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் அமைப்பின் தலைவருமான சீமான் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்த விவரம்: மலையாள தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது தமிழ்ப் பெண்கள் குறித்து இழிவான கருத்துகளை நடிகர் ஜெயராம் தெரிவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்கறிஞர் அமைப்பு ஒன்றின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் ஜெயராமின் வீடு அருகே வெள்ளிக்கிழமை இரவு சுமார் 25 பேர் திரண்டனர். நடிகர் ஜெயராமுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய இவர்கள், ஜெயராமின் உருவபொம்மையை எரித்ததுடன் அவரது வீடு மீது தாக்குதல் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்த வளசரவாக்கம் போலீஸôர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் இயக்கத்தின் சென்னை மாவட்ட நிர்வாகி அதியமான் உள்பட 12 பேரை கைது செய்தனர். சீமான் தம்பி ஜேம்ஸ் உள்பட 4 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தாக்குதல் தொடர்பாக இந்திய குற்றவியல் சட்டத்தின் 7 பிரிவுகளின் கீழ் இயக்குநர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கருத்துக்கள்

அதுதான் மறப்போம் மன்னிப்போம் என முதல்வரே தெரிவித்துவிட்டாரே. இவர்களையும் மன்னித்து விட்டு விடுங்கள்.இல்லையேல் நாம் தமிழர் இயக்க வளர்ச்சி கண்டு அரசு எடுக்கும் வன்முறை நடவடிக்கையாகவே கருதப்படும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/7/2010 4:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக