வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து திரும்புவோரை வரவேற்கிறோம்: ப.சிதம்பரம்



புதுதில்லி, பிப்.11: அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து திரும்புவோரை வரவேற்க இந்தியா தயாராக இருப்பதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்லார்.தில்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதைத் தெரிவித்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து திரும்புவோர் தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ள யோசனையை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்திருக்கும் சிதம்பரம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து திரும்ப வேண்டும் என்று விரும்புவோரை இந்தியா நிச்சயம் வரவேற்கும் என்றார்.இந்த யோசனையை ஒரு திட்டமாக வகுத்து, நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது இந்தியாவுக்குச் சொந்தமான பகுதி என வலியுறுத்தியிருக்கும் சிதம்பரம், அங்கிருந்து திரும்ப வேண்டும் நினைப்போருக்கு அரசு வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றார்.உமர் அப்துல்லாவின் யோசனைக்கு மத்திய அமைச்சரும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் எதிர்ப்புத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்

பாகித்தான் கவர்ந்த பகுதியினை மீண்டும் இந்தியாவுடன் சேர்க்கும் வகையில் அதனை மீட்போம் என்று சொல்ல வேண்டிய அமைச்சர் அங்கிருந்து வருவோரை வரவேற்போம் எனக் கூறுவதன் மூலம் அப்பகுதியைத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டதாக ஒப்புக் கொள்கிறாரா? நம் நாட்டை மீட்க முடியாதவர்கள்தாம் அடுத்த நாட்டை அடிமைப்படுத்த கொத்துக் குண்டுகளை வீசிப பேரினப் படுகொலைகளைச் செய்தார்களா? இப்படியே காங்கிரசு ஆண்டால் வட இந்தியப் பகுதிகளைப் பாகித்தானுக்கும் சீனாவிற்கும் கொடுத்து விட்டுத் தென் இந்தியப் பகுதிகளை இலங்கைக்குக் கொடுத்து விடும் போலத் தெரிகிறது. வெட்கம்! வெட்கம்! கையாலாகாத அரசு இனி வீண் பெருமை பேசக் கூடாது. எப்பொழுது நம் நாட்டுப் பகுதிகளை அடுத்த நாட்டான் பறித்துக் கொண்டால் அது அந்நாட்டானுக்கே சொந்தம் என உலகறிய தெரிவித்து விட்டதோ அதன் பின் காங்கிரசை ஆளும் பொறுப்பில் இருந்து அகற்றவே நாட்டுப் பற்றாளர்கள் திரள வேண்டும்.

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/12/2010 2:45:00 AM

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர், சீனா ஆக்கிரமிப்பு அருணாசலப்பிரதேசம், இலங்கை ஆக்கிரமிப்பு கச்சத்தீவு... நல்ல வேளை.. மற்ற நாடுகளை பெருங்கடல் பிரித்து வைத்திருக்கிறது. இல்லையென்றால் அவர்களும் ஆங்காங்கே 'ஆக்கிரமித்து' இருப்பார்கள். என்னே இந்தியாவின் பெருந்தன்மை!

By சரவணன், சென்னை
2/11/2010 9:27:00 PM

மேனன், உன் மலயாளி வா ய்யயும், 'அதயும்' மூடிட்டு கேரளாவுக்கு ஓடு!

By Rocky
2/11/2010 8:50:00 PM

Instead you should have announced very clearly to get out of the Pakistanis from the occupied region. You should be strong enough to reclaim the region from both Pakistan and China what we lost years before. Jai Hind

By Narasimhan
2/11/2010 6:45:00 PM

நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம்னு இடம் குடுத்தா விடுதலையாம்ல வேணும்? கிடைக்குற சோரத் தின்னுபுட்டு கிடங்கடா அகதிப் பயலுகளா….. அநாதை அகதிப் பயலுகளா..என்னடா விடுதலை வேண்டிக் கிடக்குது உங்களுக்கு அனாதப் பயலுகளா? நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம்னு இடம் குடுத்தா விடுதலையாம்ல வேணும்? கிடைக்குற சோரத் தின்னுபுட்டு கிடங்கடா அகதிப் பயலுகளா…..செங்கல்பட்டில் ஒலித்த அதிரடிப்படை அதிகாரி ஒருவரின் குரலில் தான் எத்தனை கம்பீரம், எத்தனை சிறப்பு!!! ஓசிச் சோறு திங்கற உங்களுக்கு என்னடா விடுதலை??? இதுதான் தமிழகக் காவல்துறை ஈழத் தமிழ் மக்கள் மீது காட்டும் பரிவும் பாசமும். வாழ்ந்த வீடும் இழந்து, வாழ்வதற்கு இருந்த நம்பிக்கைகளும் இழந்து உப்புச் சப்பற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை தங்கள் வாழ்க்கையின் நிரந்தர அடையாளமாய்ச் சுமந்து திரியும் ஈழத் தமிழ் அகதிகள் கடைசியில் தமிழகத்திலேயே தாக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது மட்டுமன்றி கடுமையான கண்டணத்திற்குரியது. Chennai city belong to Malayalis; Thanjavur ans madurai only belong to Tamil people so, Tamil people please lets Kerala people have chennai for mal

By Menon
2/11/2010 6:14:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
dinamalar
Front page news and headlines today

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக