வெள்ளி, 25 செப்டம்பர், 2020
வியாழன், 24 செப்டம்பர், 2020
குவிகம் அளவளாவல் புரட்டாசி 11/ செட்டம்பர் 27
புரட்டாசி 11, 2051 /செட்டம்பர் 27, 2020 /
ஞாயிறு மாலை 6.30
குவிகம் அளவளாவல்
திரைப்பாடல் நிகழ்வு
புத்தக அறிமுகம்
உலகத்தமிழ்ச்சங்கம், தமிழ்க்கூடல் 19
ஓமனில் தமிழர் வாழ்வியல்
கூடலுரை – திருவாட்டி இராமலட்சுமி கார்த்திகேயன்
பதிவுப்படிவம்
https://tinyurl.com/yx8snlh7
இணைப்பு
https://tinyurl.com/yxm3hu8w
பின்னூட்டப் படிவம்
https://tinyurl.com/y67y2bzr
பசியுடன் இருக்கும் உறவுகளுக்கு உதவிடுவோம்! – த.இ.அ.
தமிழ் இளையோர் அமைப்பு
பார்த்திபனைப் போல் பசியுடன் இருக்கும் உறவுகளுக்கு அவரின் நினைவால் உதவிடுவோம்!
காந்தி தேசத்திடம் ஐந்து குறிப்பு வேண்டுகோளை முன்வைத்து யாழ். மாவட்டம் நல்லூர் முன்றலில் 15.09.1987 இலில்இருந்து பன்னிரண்டு நாட்கள் நீராகாரம் அருந்தாமல் இன்னாசெய்யாமை(அகிம்சை) வழியில் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்ந்தார் திலீபன் அண்ணா. தொடர்ச்சியாக 12 நாட்கள் உண்ணாமலிருந்து இந்தியத் தேசத்திடம் இருந்து எந்த பதிலும் வராமல் தன்னுடைய உயிரினை 26.09.1987 அன்று காலை 10.48 மணிக்குத் துறந்தார். யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த தியாக தீபம் துணைமாநாயகர்(லெப். கேணல்) திலீபன் அவர்கள் ஒரு மருத்துவப்பீட மாணவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இது வேறு எந்த இழப்பு மட்டுமல்ல. இது பல இதயங்களை வலிக்கும், ஆயிரக்கணக்கானோரின் உயிர்ப்பைத் தொடும் ஓர் இழப்பு. அவர் ஒரு போராளி, அவர் விடாமுயற்சியுடன் இருந்தார், அவருடைய வாழ்க்கை தமிழர்களின் மீட்பிற்கு முதன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும், நம்முடைய விடுதலையைப் பெறுவதற்காக. அவர் 12 நாட்கள் பட்டினி கிடந்தார், நாங்கள் எங்கள் வீட்டில் வாழ்வோம் என்ற நம்பிக்கையில் வாழ்வதற்காகத் தனது உயிரை ஈகம் செய்தார்.
இலட்சிய உறுதியின் உச்சக்கட்டமாக திலீபன் தன்னை அழித்துக் கொண்டான். அவன் உண்மையில் சாகவில்லை; காலத்தால் சாகாத வரலாற்று மைந்தனாக அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.
விடுதலையின் கனவுகளுடன் தன்னை உருக்கி ஒளிதந்த ஈகைப்பேரொளி, உண்ணாமல் தன் உயிரை ஈழ மக்களின் விடியலுக்காய் மறைத்த சூரியன் திலீபன் அவர்களின் நினைவாகப் புரட்டாசி 11, 2051 / 27 ஆம் நாள் ஞாயிறு காலை 11 மணி முதல் 2 மணி வரை இலண்டனின் 3 முதன்மை இடங்களில் தேவைப் படுபவர்களுக்கு உதவும் விதமாகத் தமிழ் இளையோர் அமைப்பினரின் ஏற்பாட்டில் இடம் பெறும் இந்த உணவு இரங்கல் திட்டத்துக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம். என்ன வகையான உணவு வகைகள், பொருட்கள் தந்து உதவலாம் என்ற விவரம் பகிரப்பட்டிருக்கும் படத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த இக்கட்டான காலத்தில் உணவுக்கும் இன்றியமையாப் பொருட்களுக்கும் அவதிப் படும் மக்களுக்கும் நாடு திரும்ப இயலாமல் துன்பப்படும் மாணவர்களுக்கும் இந்த உதவி சென்றடையும்.
பார்த்திபன் இப்பொழுதும் பசியுடன் தான் உள்ளான் அவன் நினைவில் பசியுடன் இருக்கும் உறவுகளுக்கு எம்மாலான உதவிகளைச் செய்வோம். இந்த நேரத்தில் திலீபன் அண்ணாவின் 12 நாட்களின் நிகழ்வுகளை ஆங்கிலத்தில் வாசிக்க கூடியவாறு மொழியாக்கம் செய்து எமது இணையத்தளத்தில் ஏற்றியுள்ளோம். 27ஆம் நாள் இடம்பெறும் எமது நிகழ்வினைத் துண்டு வெளியீடு மூலம் அந்த அந்த இடங்களில் வசிக்கும் மக்களுக்குக் கொடுப்போம். அதில் திலீபன் அண்ணாவின் வரலாற்று இணைப்பும் அவர்கள் வாசிக்கக் கூடியவாறு செய்யப்பட்டுள்ளது.
புதன், 23 செப்டம்பர், 2020
குவிகம் இலக்கிய வாசல், இணையவழிப் புத்தகச் சந்தை
குவிகம் இலக்கிய வாசல்
இணையவழிப் புத்தகச் சந்தை
இணையவழிப் புத்தகச் சந்தைபற்றிப் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் விளக்க ஒரு கூட்டம் புரட்டாசி 10, 2051 சனிக்கிழமை 26/09/2020 மாலை 6.30 – 7.30 அளவில் நடைபெறும். இணையவழிச் சந்தையின் அமைப்பாளர்களே இந்தக் கூட்டத்தில் பேச இருக்கிறார்கள்.
வெற்றி தோல்வி இரண்டையும் சமமாகப் பாருங்கள்! – ஆற்காடு க குமரன்
வெற்றி தோல்வி இரண்டையும் சமமாகப் பாருங்கள்!
நான் இறந்து விட்டேன்! என் தோளிலும் மார்பிலும் மாலைகள். நான் வெற்றி அடைந்து விட்டேனா இல்லை நான் தோல்வி அடைந்து விட்டேனா?
எதையும் வெளிக்காட்டாமல் நான்.
உண்மையில் இந்த நொடியில் நான் தான் கதாநாயகன். ஆட வேண்டிய நானே ஆடாமல் இருக்கிறேன்.
என்னை வைத்து எல்லாரும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.
வெற்றியையும் தோல்வியையும் இரண்டு விழிகளாகப் பாருங்கள். அதற்காக நீங்கள் உழைத்த உழைப்பு காட்சியாகத் தெரியும்.
அண்மைக் காலத்தில் நிறைய மாணவர்களின் தற்கொலைகள்.
இவர்கள் எல்லாம் தோல்விக்காகத் துவண்டவர்கள் அல்லர். தோல்விப் பயத்தினால் தூக்கிட்டு மாய்ந்தவர்கள்.
அந்தப் பிஞ்சு குழந்தைகளுக்குள் தோல்விப் பயத்தைத் தூண்டியவர்கள் யார்?
பெற்றோர்களும் ஆசிரியர்களுமே குற்றவாளிகள்!
நான் சாதிக்க முடியாததை என் பிள்ளையிடம் திணித்து. அவனைக் கொலை செய்த குற்றவாளி நானே!
இன்றைய நிறைய சிக்கல்களுக்குக் காரணம் கருவம், பெருமிதம் (கெளரவம்), பொறாமை.
உறவுகளுக்குள் பொறாமைஸ பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்ஸ
போதும் என்ற மனம் பொய்த்துப் போய் வெகு நாள் ஆனது.
கூட்டுக் குடும்பம் இல்லாமல் தனித்து நிற்பது. கூட்டுக் குடும்பத்தில் நமது பெரியவர்கள் நமக்கு நல்லதை மட்டுமே கற்றுக் கொடுப்பார்கள்.
தனிக் குடித்தனத்தில் சொல்வதை எல்லாம் நல்லதுக்கு என்று மட்டும் எடுத்துக் கொள்ள முடிவதில்லை. அந்த நல்லவற்றிலும் சொல்பவருடைய தன்னலம் இருக்கிறது.
நான் பள்ளிக்கூடம் செல்லும் காலத்தில் எல்லாம் எனது பாடப்புத்தகத்தில் ஓர் எழுதுகோல் அதிகமாக இருந்தாலும்
ஏன் வந்தது எப்படி வந்தது என்று ஆயிரம் கேள்விகள் என் உறவுகளிடம் இருந்து வந்தன.
இன்று பையன் பள்ளியிலிருந்து திரும்பி வருவதே பல குடும்பப் பெண்களுக்குத் தெரிவதில்லை. காரணம் அவர்களுக்குப் பணிச்சுமை.
ஆயாம்மா வேலைக்கு வரும் முன்பு
எசமானியம்மாள் வேலைக்குச் செல்கிறாள்.
பணம் பணம் பாழாய்ப்போன பணம்.
உதை படும் பந்துக்கு உள்ளிருப்பதும் காற்று! பந்து உருளுமிடமெங்கிலும் காற்று!
பொதுநுழைவுத் தேர்வு(நீட்டு), அரசாங்கத்தின் தவறாகவே இருந்தாலும் அதைத் திருத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. காரணம் அந்த அரசாங்கத்தை அமைத்தது நாமே!
ஆதார அட்டை
என்னிடமிருந்த அடையாளத்தை எடுத்துப் பதிவு செய்து எனக்கென்று கொடுத்த ஆதார அட்டையில் ஆயிரம் தவறுகள்.
அவற்றைத் திருத்துவதற்கு அரசாங்கமும் வருகிறது. திருத்திக்கொள்ள நம்மை அறிவுறுத்துகிறது. அதற்குக் கட்டணம் வேறு. தவறு செய்தது அரசாங்கம். தண்டனை எனக்கு. இன்னொரு பெரிய தவற்றையும் இந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. ஏதாவது ஓர் உயிர் பலியா? உடனே துயர்நீக்கு நிதி!
வசைபாடும் பெற்றோரைப் பார்த்துக் கட்டாயமாக ஒவ்வொரு பிஞ்சுக் குழந்தைக்கும் நெஞ்சிலும் ஓர் எண்ணம் தோன்றும். காரணம் நானும் ஒரு பெற்றோர். என் மகனைத் தண்டத்துக்குப் படிக்க வைத்தேன் நாலு பன்றியை வாங்கிக் கொடுத்திருக்கலாம். எனது மகனுக்குக் கல்வி புகட்ட வேண்டியது எனது கடமை
அதைக் கற்றுத் தெளிவது அவனது திறமை. அவன் எந்தன் சார்பாளன். என்னைப் போலத் தான் என் மகனும் இருப்பான் என்பதை யாரும் உணர்வதில்லை.
செய்த செலவை சொல்லிக் காட்டி, சொல்லிக் காட்டி அவனைச் சித்திரவதை செய்யும் போது அவனுக்குள் ஓர் எண்ணம் தோன்றும். என் உயிர் இழப்பு, நீ செய்த செலவை ஈடுகட்டும் என்று. அரசாங்கத்தின் துயர்நீக்கு நிதி. தற்கொலைக்கான அடுத்த தூண்டுதல். மூன்றாவது தன்னல அரசியல்வாதிகள். ஒருவன் இருக்கும் போது எவனும் திரும்பிப் பார்ப்பதில்லை. இறந்த பிறகு அவன் பெயரைச் சொல்லி அரசியல் நடத்துவது. இந்தப் பரபரப்பும் தற்கொலைக்கு ஒரு காரணம்.
தோல்வியில் இருந்து பிறப்பதுதான் வெற்றி. ஆகையால் தோல்விக்கு வருந்தாதீர்கள். பெற்றோர்களே! உங்கள் கண்களில் கனவுகளைக் காணுங்கள். உங்கள் கனவுகளை உங்கள் பிள்ளைகளின் கண்களில் காணத் துடிக்காதீர்கள்! அவர்களுக்கு என்று ஒரு கனவு இருக்கும் அதைச் சாகடிக்காதீர்கள்.
யாரையும் குறை சொல்வதாக எண்ண வேண்டாம். நானும் இரு பிள்ளைகளுக்குத் தகப்பன்.
பிள்ளைகளின் கனவுகளுக்குக் காட்சியாய் இருப்பவன்.
தோல்வியில் துவளும் போது தோழனாக இருங்கள்! எதுவும் நிலையில்லை என்று எடுத்துச் சொல்லுங்கள்.
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114
சனி, 19 செப்டம்பர், 2020
குவிகம் இணையவழி அளவளாவல் 20/09/2020: “என் ‘சிறு’கதை”
புரட்டாசி 04, 2051/ 20.09.2020
ஞாயிறு மாலை 6.30
குவிகம் இணைய அளவளாவல்
கோமல் சுவாமிநாதனின் பறந்துபோன பக்கங்கள்
‘என் சிறுகதை’ நிகழ்வில் வாசிக்கப்பட்ட கதைகளில் மூன்று கதைகளைத் தெரிந்தெடுத்து இந்த நிகழ்வில் அறிவிக்க இருக்கிறோம். இந்தக் கருத்தையும் தெரிவித்து அன்பளிப்பாகப் புத்தகங்களையும் வழங்குபவர் நண்பர் செ.பாசுகரன்.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும். நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்
நிகழ்வில் இணைய
கூட்ட எண் / Meeting ID: 892 8863 4062
கடவுக்குறி / Passcode: 874978
பயன்படுத்தலாம் அல்லது
https://us02web.zoom.us/j/89288634062?pwd=SnlTazBnbkJtYU0vWkp4c0ROaFN5Zz09
இணைப்பைச் சொடுக்கலாம்.
புதன், 16 செப்டம்பர், 2020
சீர்திருத்தச்செம்மல் இராமச்சந்திரனார் பணிகளில் இரண்டு

பகுத்தறிவுச்சுடர், சமூக நீதிச் சிற்பி, தன்மானச்சிங்கம், திராவிட இயக்க வைர விழுது, ஆதி திராவிடர்களின் பாதுகாவலர், சுயமரியாதைச் சுடரொளி என்றும் மேலும் பலவைகயாகவும் சிறப்பிக்கப்பெற்ற சீர்திருத்தச்செம்மல் சு.இராமச்சந்திரன் அவர்களின் பிறந்த நாள் 16.09.1884. அதை முன்னிட்டு அவர்செய்த எண்ணற்ற பணிகளுள் இரண்டை இங்கே நினைவுகூர்கிறோம்.
ஒடுக்கப்பட்ட மாணாக்கர்களுக்குத் தனி விடுதி ஏற்படுத்தி ஒப்பற்ற செயல் செய்தார். எனினும் அங்குள்ள மாணாக்கர்களுக்கு முடிதிருத்துநர், முடி திருத்த மறுத்து விட்டார்கள். அதனால், மன்னருக்கும் தனக்கும் முடி திருத்திய தொழிலாளியை வரவழைத்து ஒடுக்கப்பட்ட மாணாக்கர்களுக்கு முடி வெட்டச்செய்தார்.
சிவகங்கை நீதி மன்றத்தில் பிராமணர்களுக்கு என்று தனியாகக் குடிநீர்ப்பானையும் மற்ற சாதியருக்குத் தனியாகக் குடிநீர்ப்பானையும் இருந்துள்ளது. சிவகங்கை வழக்குரைஞரான இராமச்சந்திரனாரின் வழக்காடி ஒருவர் பிராமணர்களுக்கான குடிநீர்ப்பானையில் தண்ணீர் எடுத்து அருந்தி விட்டார்.இதனால் அவர் அவமானப்படுத்தப்பட்டார். இதைக் கேள்வியுற்றதும் இராமச்சந்திரனார் நீதி மன்றம் சென்று பிராமணர்க்கான குடிநீர்ப்பானையை எடுத்துப்போட்டு உடைத்து விட்டார். அதற்குப்பிறகு யாருக்கும் தனித்தனித் தண்ணீர்ப் பானை வைக்கத் துணிவு வரவில்லை.
இவைபோல் எண்ணற்ற பணிகளை இச்சான்றோர் செய்துள்ளார். இவைபோல் திராவிட இயக்கத்தினர் ஆற்றிய பணிகளை மறந்து விட்டும் அவற்றால் பயனடைந்துவிட்டும் திராவிடக்கட்சிகள் என்ன செய்துவிட்டன என்று கேட்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
தண்ணீரிலும் காட்டிய சாதிப்பாகுபாடுகளை ஒழித்தது திராவிடச்சிந்தனையாளர்கள்தாம் என்பதை இப்பொழுதுள்ளோர் உணரவேண்டும்.
சிவகங்கை இராமச்சந்திரனார் என்னும்தலைப்பில் கவிஞர் கொடைக்கானல் காந்தி ஒரு நூல் எழுதி உள்ளார். அந்நூலில் இருந்து மேற்குறித்த இரு நிகழ்வுகள் பற்றிய செய்திகளைக் கீழே காண்க.
இலக்குவனார் திருவள்ளுவன்
வெள்ளி, 11 செப்டம்பர், 2020
குவிகம் அளவளாவல்- முனைவர் கு.கல்யாணசுந்தரம்
ஆவணி 28, 2051 ஞாயிறு 18.30
13.09.2010
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும். நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்
நிகழ்வில் இணைய
கூ.எண் / Meeting ID: 851 5346 7980
க.சொ. / Passcode: 152088
பயன்படுத்தலாம் அல்லது
https://us02web.zoom.us/j/85153467980?pwd=cFZEMzZpQStmZ3ZiV3NNbkcreTY2dz09
இணைப்பைச் சொடுக்கலாம்
முனைவர் கல்யாணசுந்தரம் மதுரை தமிழ் இலக்கிய மின்னுலகத் திட்டத்தின் நிறுவனரும் தலைவரும் ஆவார்.
முதல் தமிழ் எழுத்துரு உருவாக்கியவர்.
எழுத்துருக்களின் தரவரையறை அறிவுரைஞர்.
சுவிச்சர்லாந்து நாட்டிலிருந்து இணையம் மூலம் சிறப்புரை ஆற்றுகிறார்