வியாழன், 4 ஜூன், 2015

கனடா உதயன் இதழின் 1000ஆவது இதழ் வெளியீட்டு விழா , சென்னை


கனடா உதயன் இதழின் 1000ஆவது இதழ் வெளியீட்டு விழா , சென்னை



azhai_uthayan
கனடா உதயன் இதழின் 1000ஆவது இதழ் வெளியீட்டு விழா   சென்னை தியாகராயநகர் வாணி மகாலில் வரும்

ஆனி 12, 2046 / சூன் 27ஆம் நாள்

சனிக்கிழமை மாலை 6 மணிக்கு

நிகழவிருக்கிறது.
 கவிதைஉறவு அன்பர்களும் இலக்கிய ஆர்வலர்களும் திரண்டு வந்து கலந்து கொள்ள அன்புடன் வரவேற்கிறேன்.
ஏர்வாடி இராதாகிருட்டிணன்

ந.பாண்டுரங்கனின் நூல் வெளியீட்டு விழா – மதுரைக்கோயில்கள் …..

வைகாசி 31, 2046 / சூன் 14, 2015

மதுரை

azhai_maduraikoilgal

பேரா.வெ.அரங்கராசன் நூல்அறிமுகம் – புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம்


பேரா.வெ.அரங்கராசன் நூல்அறிமுகம் – புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம்

வைகாசி 24, 2046 / சூன் 07, 2015

azhai_thamizhilakkiyamandram_puzhuthivakkam_ve.arangarasan_nuulveliyeedu

இலக்குவனார் இலக்கியப் பேரவை, அம்பத்தூர் – கூட்டம் 101


இலக்குவனார் இலக்கியப் பேரவை, அம்பத்தூர் – கூட்டம் 101

வைகாசி 24, 2046 / சூன் 07, 2015

azhai_ilakkuvanar ilakkiya peravai_kuuttam101, june2015_p1
azhai_ilakkuvanar ilakkiya peravai_kuuttam101, june2015_p2

கவியழகனின் விடமேறிய கனவு – நூல் வெளியீடு: கனடா


கவியழகனின் விடமேறிய கனவு – நூல் வெளியீடு: கனடா

வைகாசி 23, 2046 / சூன் 06, 2015 

கனடா

azahi_vidameriya kanavu

நந்தன் சீதரன் எழுதிய தாழி – சிறுகதைத் தொகுப்பு – ஆய்வரங்கம்

 வைகாசி 23, 2046 / சூன் 06, 2015 

தமிழ்நாடு முற்போக்கு

கலை இலக்கிய மேடை

மதுரை

azhai_thaazhi_aayvarangam

உதவி வேண்டும் தாய்த்தமிழ்த்தொடக்கப்பள்ளி, பொள்ளாச்சி

அன்பிற்குரியீர்!
                  வணக்கம்.
  புதிய மனிதனை உருவாக்குவதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். நாம் சொல்லும் புதிய மனிதன் – நுகர்வியத்தை வெறுத்தொதுக்கி பிற மனிதனின் கண்ணீர் துடைக்கும் ஒப்புரவு, எதிரி என்றாலும் அவரையும் கண்ணியமாகவும் மாந்தநேயத்தோடும் நடத்தும் அறம், கேள்விக்கு சொல்லித்தரப்படும் விடையைக் கேள்விக்குட்படுத்தும் அறிவாற்றல், அறிவை ஒட்டுமொத்த சமூக மேம்பாட்டுக்குப் பயன்படுத்தும் உயர்நோக்கம் கொண்டவராய்  இருக்க வேண்டும். இதைச்  சாதிக்க தமிழால்தான் முடியும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இப்படி ஒரு புதிய தலைமுறையை உருவாக்கும் பெருநோக்கத்தோடுதான் எங்கள் தாய்த் தமிழ்ப் பள்ளியை நடத்தி வருகிறோம். உழைப்பை மட்டும் நம்பி, மக்கள் சார்ந்து இந்தப்  பணியை செய்து வருகிறோம். ஏழைகளான எங்களின் இந்தப் பெருங்கனவின் செயல்வெற்றிக்கு அனைத்து வகையிலும் துணை நிற்க வேண்டுகிறேன்.
thai_thamizhppalli01 thai_thamizhppalli02

தமிழர் வழிபாட்டு முறைகள் ஆரியத்தால் மறைக்கப்பட்டன.


    SVithiyanandan01
சில அறிஞர் சங்க நூல்களிற் சில ஆரியத் தெய்வங்கள் கூறப்பட்டுள்ளமையை அடிப்படையாகக் கொண்டு, சங்க காலப் பகுதியில் தமிழ் நாட்டில் ஆரியர் சமய வாழ்க்கைப் பண்பே சிறப்புற்றிருந்தது என்று கொண்டனர். இக்கூற்று ஏற்கத்தக்கதொன்றன்று. சங்கநூல்களில் விட்டுணு இந்திரன் முதலிய ஆரியத் தெய்வங்கள் இடையிடையே கூறப்பட்டுள்ளமை உண்மையே. ஆனால் நில இயற்கைக்கு ஏற்ப அமைந்த முருகன், கொற்றவை போன்ற திராவிடத் தெய்வங்களே மிகவும் சிறப்புடன் வணங்கப்பட்டு வந்தனர் என்பதையும் அதே நூல்களிலிருந்து அறியலாம். தமிழருக்கே தனியாக அமைந்த வழிபாட்டு முறைகளையும் அந் நூல்களிற் காண்கின்றோம். காலப் போக்கில் ஆரியத் தெய்வங்களுடன் தமிழ்த் தெய்வங்கள் யாவும் ஒன்றுபடுத்தப்பட்டன. இப்பொழுது அவற்றைப் பிரித்து வெல்வேறாகக் காணுதல் அரிதாய்விட்டது. சில தெய்வங்களை மட்டும் அவ்வாறு பிரித்துக் காணமுடியும். காலஞ் செல்லச் செல்லத் தமிழருக்கே சிறப்பான வெறியாட்டு முதலிய வழிபாட்டு முறைகளும் ஆரியக்குரிய கிரியை முதலியவற்றால் மறைக்கப்பட்டு ஒழிந்தன.
- பேராசிரியர் முனைவர் சு. வித்தியானந்தன் : தமிழர் சால்பு

புதன், 3 ஜூன், 2015

வடலூர் குருகுலத்தில் திருக்குறள் தேசிய நூல் மாநாடு

வடலூர் குருகுலத்தில் திருக்குறள் தேசிய நூல் மாநாடு

azhai_thirukkural maanadu_vadalur
வரும் வைகாசி 6, 2046 சூன் மாதம் 21 – ஆம் நாள் வடலூர் குருகுலத்தில் திருக்குறள் தேசிய நூல் மாநாடு நடைபெற உள்ளது.
திருக்குறள் தொடர்பான கட்டுரைகள் , கவிதைகள் வரவேற்கப் படுகின்றன.

அனுப்ப வேண்டிய மின்வரி: tamilkavinjarsangam@gmail.com


  திருக்குறள் தேசிய நூலாகுவதற்கு ஒத்துழைப்பு தரும் வண்ணம் அனைவரும் இம் மாநாட்டில் பங்கேற்க வேண்டுமெனத் தமிழன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
- க.ச.கலையரசன்,
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்.
9551547027


தேவதானப்பட்டியில் போலி இணையத்தளம் மூலம் பெண்களை மிரட்டும் கும்பல்

  தேவதானப்பட்டிப் பகுதியில் போலி மின்னஞ்சல் மூலம் இணையத்தளம் தொடங்கிப் பெண்களை மிரட்டி வரும் குற்றக்கும்பல்(மாபியா) மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 தேவதானப்பட்டிப் பகுதியில் போலி மின்னஞ்சல் முகவரி உருவாக்கி அதன் மூலம் இணையத்தளம், முகநூல், பதிபேசி(வாட்சு-அப்) போன்றவற்றைத் தொடங்கிப் பெண்களையும், வணிகர்களையும் குற்றக்கும்பல் மிரட்டி வருவதால் பொதுமக்கள், பெண்கள் பாதிப்படைகின்றனர். ஏதாவது ஒரு பெயரில் போலியான பெயர் வைத்துக் குடும்பப் பெண்களையும், தொழில்அதிபர்களையும், கொச்சைப்படுத்தி எழுதி அதனைப் பதிபேசி மூலம் தகவல் பரப்பி அவமானப்படுத்துகின்றனர். அதன்பின்னர் அதனைக் காண்பித்துத் தங்களுக்கு உடன்படாத பெண்களையும், மிரட்டிப் பணம் தராத தொழில்அதிபர்களையும், “நாளைக்குப் பதிபேசியில் தகவல் பரப்பி அவமானப்படுத்துவேன்” எனக் கூறிப் பணம் பறித்து வருகின்றனர்.
  இதன் தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்கள் பலர் வெளியே கூறமுடியாமல் தவித்து வருகின்றனர். சிலர் காவல்துறையில் புகார் பதியச்சென்றால் இதற்குக் கணிணிக் குற்றச் சட்டப்படி சென்னையில்தான் புகார் பதிவு செய்யப்படவேண்டும் எனக்கூறி அலைக்கழிப்பு செய்கின்றனர். இது குற்றக்கும்பலுக்குச் சாதகமாக அமைந்துள்ளது. இதனால் பல பெண்கள் தற்கொலை விளிம்பிற்குச் செல்கின்றனர்.
  எனவே தேனி மாவட்டத்தில் கணிணிக்குற்றப்(சைபர் கிரைம்) பிரிவினை மாவட்டக் காவல்துறை அலுவலகத்தில் இயக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
81vaigaianeesuname