செவ்வாய், 3 டிசம்பர், 2013
திங்கள், 2 டிசம்பர், 2013
அகரமுதல இணைய இதழ் 3 - இதழுரையும் பிறவும் akaramuthala editorial
சாதிக்கொரு நீதி- சரிதானா? முறைதானா? அறம்தானா? – இதழுரை
தண்டனை என்பது குற்றச் செயலுக்கு என்பதே உலக நடைமுறை. அதுவும் “ஓர்ந்து கண்ணோடாது யார்மாட்டும் தேர்ந்து செய்”வதாக இருத்தல் வேண்டும் என்பதே தமிழ்மறையாம் திருக்குறள்(541) நமக்கிட்டுள்ள கட்டளை. ஆனால், யாரையேனும் தண்டித்தாக வேண்டும் என்பதற்காக அப்பாவிகளைத் தண்டிப்பதும் குறிப்பிட்ட யாரையாவது தண்டிக்கக்கூடாது என்பதற்காகக் குற்றவாளிகளை விடுதலை செய்வதுமான போக்கே நம் நாட்டில் நிலவுகிறது.
இதற்கு அண்மையில் உள்ள சில சான்றுகளைக்
குறிக்கலாம். இதனைத் தெரிவிப்பதன் காரணம், நீதிமன்றத்திற்கு எதிரான போக்கை
வெளிப்படுத்த வேண்டும் என்பதல்ல. நீதி மன்றங்கள் தன்னளவில் ஆராய்ந்து,
பிறரைச் சார்ந்து இயங்காமல், சிறப்பாக அறம் வழங்க வேண்டும் என்பற்குத்தான்.
இறை நம்பிக்கை உடையவர்களையும் இந்து
சமயத்தினரையும் மனிதநேயர்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது
காஞ்சிபுரம் வரதராசபெருமாள் கோயில் மேலாளராக இருந்த சங்கரராமர் படுகொலை
செய்யப்பட்டது. 03.09.2004 மாலை 5.30 மணியளவில் இப்படுகொலை நடைபெற்றது.
முதலில் போலிக்குற்றவாளிகள்
சரணடைந்திருந்தாலும் பின்னர் உண்மையான குற்றவாளிகள் யார் என அறியப்பட்டது.
அவர்கள்தான் செயேந்திரன், விசயேந்திரன் முதலான 25 பேர்கள் என
நன்கறியப்பட்டது. மடத்தில் நடைபெற்ற தில்லுமுல்லுகளையும் கொலைகளையும்
மடத்தலைவரின் கூடா ஒழுக்கங்களையும் கற்பழிப்புகளையும் அரசிற்கும்
இதழ்களுக்கும் தெரிவித்து இறை நெறியைக் காப்பாற்றத் துடித்த சங்கரராமர்
யாரால் கொலை செய்யப்பட்டிருக்க முடியும் என்பது எளிதில் ஊகிக்கத் தக்கதே!
சங்கர மடம் உண்மையில் பிற்காலத்தைச் சேர்ந்த மடமே! பொதுவாக இதுவரை தெலுங்கு
பேசுபவர்களே மடத்தின் தலைமைப்பீடத்தில் அமர்ந்து உள்ளமையால் தமிழர்கள்
நலனுக்குச் சார்பானது எனச் சொல்ல முடியாது. இந்து சமயத்தின் தலைமை மடம்
என்றும் சொல்ல இயலாது. ஒரு சாதிக்குரிய தனி மடம் என்றும் சொல்ல முடியாதபடி
அதன் ஒரு பிரிவிற்கு உரியவர்களால் கொண்டாடப்படுவதே! ஆனால், தொடர் பரப்புரை
மூலம் தேவையற்ற முதன்மை இதற்கு அளிக்கப்பட்டு வருகிறது. செயேந்திரன்
பெண்ஒருத்தியுடன் நேபாளம் சென்றபொழுதே நல்ல முடிவாகக் கருதி ஏற்றிருக்க
வேண்டும். கட்டாயப்படுத்தி மீண்டும் பொறுப்பேற்கச் செய்ததும் தவறுதான்.
ஆனால், உண்மையில் இந்து சமயத்தின்மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களும்
இறைப்பற்று உள்ளவர்களும் அவதூறுகளுக்கு ஆளாகுவோரைப் பொறுப்பிலிருந்து
விலகச் செய்திருந்தால் பெருமையாக இருந்திருக்கும். ஆனால், இவர்கள்தாம்
இந்து சமயத்தைக் கட்டிக்காப்பதாக எண்ணி இவர் களைக்காப்பாற்ற முயன்றதுதான்
தவறு.
ஆக, இத்தகைய சூழலில் யார் குற்றவாளி
எனப் பார்ப்பதைவிட யார் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்கான கருத்தோட்டத்தைச்
செல்வாக்கு மிக்கவர்கள் திணித்து விட்டனர். சாதிப்பற்று இல்லாமல் இன்றைய
முதல்வர் தம் முந்தைய ஆட்சியில் ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்னும்
நிலையை மதித்து நடவடிக்கை எடுததார். எனவேதான் செயேந்திரன்
தளையிடப்பட்டதும் செயேந்திரன், விசயேந்திரன் முதலானோர் மீது வழக்கு
தொடுத்ததும் நிகழ்ந்தன. ஆனால், அடுத்து வந்த தலைவரோ, சூழலுக்கேற்ப ஆரியமும்
தமிழும் முதன்மைப்படுத்தப்பட்டால் போதும் என்ற எண்ணத்தில், குற்றவாளிகள்
கூறியதுபோல், தனிப்பட்டத் தகராறே வழக்கிற்குக் காரணம் என்பதுபோல் கருத்து
தெரிவித்தார். அவர் தன் ஆட்சியில் செய்தக்க செய்யாமையால், சான்றுகூற
வேண்டிய அனைவருமே தடம் புரண்டனர். கொலை செய்யப்பட்ட சங்கரராமரின் மனைவி,
தன்னிடம் மூவர், “சான்றுரையை மாற்றிச் சொல்லாவிட்டால் பிள்ளைகளை அமிலத்
தொட்டியில் மூழ்கடித்து இல்லாமல் ஆக்கிவிடுவோம்” என நீதிமன்ற
வளாகத்தி்லேயே மிரட்டியதால் பிள்ளைகளையாவது காப்பாற்ற வேண்டும் என
மாற்றிச் சான்று சொன்னதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறு மிரட்டலுக்கும்
செல்வாக்கிற்கும் அஞ்சி ஏறத்தாழ அனைவருமே பிறழ் சான்றுரையாளர்களாக
மாறியதால், தீர்ப்பு சொல்வது கடினம்தான். ஆனால், போலிக் குற்றவாளிகளைக்
கண்டறிந்து உண்மைக் குற்றவாளிகள் மீது வழக்கு தொடுக்கக் காரணமாக இருந்த
காவல் கண்காணிப்பாளர் பிரேம்குமார் மீது கண்டனம் தெரிவிக்க தெரிந்த நீதி
மன்றத்திற்கு - அனைவரும் பிறழ் சான்றுரைஞர்களாக மாறியதில் இருந்தே
குற்றவாளிகள் செல்வாக்கு மிக்கவர்கள் எனத் தெரிய வருவதைச் சுட்டிக் காட்டத்
தெரியாமல் போனது ஏன்? காவல்துறையின் மெத்தனப் போக்கைக் கண்டிக்க மனம்
வராதது ஏன்? குற்றவாளிகளின் நடவடிக்கைகளே குற்றத்தில் அவர்களுக்குப்
பங்கிருப்பதை உணர்த்துவதாகக் குறிப்பிடாதது ஏன்? குற்றவாளிகளின் எந்தப்
பிரிவினருக்கும் சிறு தண்டனைகூட வழங்காதது ஏன்? நீதிபதியுடனான பேரம்
வெளிவந்த பின்னும் உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையைப் பற்றி ஒன்றும்
சொல்லாதது ஏன்?
மக்கள்மன்றத்தில் எழுப்பப்படும்
வினாக்கள் இவைதாம். எழுதப்பெற்ற சட்டங்களைவிட எழுதப்பெறாத
சாதிச்செல்வாக்கால் உருவாக்கப்பட்ட வழக்காறுதான் மேலோங்கி உள்ளது
என்பதற்கு இத்தீர்ப்பும் ஒரு சான்று. இது போன்ற எத்தனையோ தீர்ப்புகள்
இதற்கு முன்னரும் வந்துள்ளன. சாதி ஒழியாதவரை பின்னரும் வர இருக்கின்றன.
சான்றுக்கு ஒன்றைமட்டும் சுட்டிக்காட்டினால் போதுமானதாக இருக்கும் என
எண்ணுகிறேன்.
இதேநாளில் 16 ஆண்டுகளுக்கு முன்பு
நடை பெற்ற படுகொலைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பீகாரில் உள்ள
இலட்சுமண்பூர் பாத்தே என்னும் சிற்றூரில், 1.12.1997 இரவு 58
தாழ்த்தப்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களுள் 27 பெண்களும் 16
குழந்தைகளும் அடங்குவர். பூமிஃகார்கள் எனப்படும் ஆரியவகுப்பினரின் ஆயுதப்
படையான இரண்வீர் சேனாவால் இவர்கள் படுகொலைசெய்யப்பட்டதாகத் தகவல்கள்
வந்தன. 13 ஆண்டுகளுக்குப் பிறகு, 7.10.2010 அன்று, பாட்னா அமர்வு நீதிபதி
விசய் பிரகாசு மிசுரா, குற்றம் சாட்டப்பட்டவர்களில் பதினாறு பேருக்கு
மரணத்தண்டனையும் பத்துபேருக்கு வாணாள்சிறைத் தண்டனையும் விதித்துத்
தீர்ப்பு வழங்கினார். ஒன்பது பேர் குற்றம் மெய்ப்பிக்கப் படவில்லை என
விடுதலை செய்யப்பட்டனர்.
தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பாட்னா
உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்தப் படுகொலை நடந்து 16
ஆண்டுகளுக்குப் பின் 9.10.2013 அன்று பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதிகள்
வி.என்சின்ஃகா, ஏ.கே. இலால் ஆகியோர் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
சான்றுரைத்தவர்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கி,
தண்டிக்கப்பட்டவர்களுக்கு ஐயத்தின் பயனை வழங்கி அவர்கள் அனைவரையும்
விடுதலை செய்துள்ளனர்.
கடவுளின் குழந்தைகள் எனச் சொல்லப்படுபவர்களைக் கடவுளே காப்பாற்ற வராத பொழுது, பாவம், நீதிபதிகள் என்ன செய்ய இயலும்?இவ்வாறெல்லாம் சாதிச் செல்வாக்காலும் பணப் பேரத்தாலும் பதவி மிரட்டல்களாலும் அறம் தவறுவதால் குற்றவாளிகள் தப்பிக்கின்றனர். என்றாலும் இதைவிடப் பெரும் அவலம், அப்பாவிகள் தண்டிக்கப்படுவதாகத்தானே இருக்க முடியும்? குற்றவாளிகள் என்று நன்கு அறியப்பட்டவர்களுக்கு ஐயத்தின் பயனை வழங்கி விடுதலை செய்து தொலைக்கட்டும்! ஆனால், குற்றவாளிகள் இல்லை எனத் தெரிந்தும் ஏதோ நீதித் தேவதையைத் தாங்கள்தான் காப்பாற்றுவதுபோல் அப்பாவிகைளத் தண்டிப்பது பெருங்கடேல்லவா?
இதற்கு எடுத்துக்காட்டாகப் பேரறிவாளர் முதலான மூவர் நிலையைக் கூறலாம்.
இராசீவு படுகொலை வருந்தத்தக்கதும்
கண்டிக்கத்தக்கதுமான நிகழ்வுதான். ஆனால், தமிழ்நாட்டில் கொலை
நடந்ததென்பதற்காகத் தமிழ்ச்சாதியினர் தாக்கப்படுவதும் தண்டிக்கப்படுவதும்
இன்படுகொலைக்கு ஆளாவதும் நாம் இவற்றிற்கு அமைதி காப்பதும் பெருங்கொடுமை
அல்லவா? யாரையேனும் தண்டித்து ஆக வேண்டும் என்பதற்காக அப்பாவிகளை
வதைத்துக் கொடுமைபுரிந்து தூக்குத்தண்டனையும் வாங்கித் தந்துள்ளது
மிகப்பேரவலம் அல்லவா? அவர், கொலையுண்டபொழுது திடீரென்று காணாமல் போய் மிள
வந்தவர்கள், மனித வெடிகுண்டிற்கு அடைக்கலம் கொடுத்தவர்கள், அவரின் கூட்ட
இடத்தை மாற்றியவர்கள் எனப்பலரும் வழக்கு வளையத்திற்குள் சிக்காத பொழுது
அப்பாவிகளை மட்டும் தொடர்ந்து வதைப்பதேன்? வழக்கு தொடர்பான பல ஆவணங்கள்
மறைக்கப்பட்டது தெரிவிக்கப்பட்டும் கண்டுகொள்ளாமல போனது ஏன்? தீர்ப்பளித்த
நீதிபதி, தலைமை வழக்கு அலுவலர் எனப் பலரும் இம்மூவரும் மரணத்
தண்டடனைக்குரியவர்கள் அல்லர் எனத் தெரிவிக்கப்பட்ட பின்பும்
விடாப்பிடியாகத் தூக்கு மரத்தில் இவர்களை ஏற்றச் சிலர் துடிப்பது ஏன்?
ச.சாமிகள், சு.சாமிகள் என வழக்கில் சேர்க்கப்பட வேண்டியவர்கள்
கட்டுப்பாடற்றுத் திரியும் பொழுது, ஒரு பாவமும் அறியாத இவர்கள்,
மரணக்குழியில் தள்ளப்படுவது ஏன்?
அண்மையில் மத்தியப் புலனாய்வுப்பணியகத்தின் கண்காணிப்பாளராக இருந்த
தியாகராசன் என்பார் தான்தான் பேரறிவாளரின் வாக்குமூலத்தில் -
வெடிகுண்டிற்குப் பயன்படும் என அறிந்தே மின்கலன் வாங்கித் தந்ததாகத் -தவறான
தகவலைச் சேர்த்ததாகவும் அதனால்தான் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது
என்றும் திடுக்கிடும் உண்மையை வெளிப்படுத்தி உள்ளார்.இதுபோல்தான் பிற குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் பொய்யான வாக்குரைகளாலும், இட்டுக்கட்டப்பட்ட செய்திகளாலும் மரண வாயிலில் நிற்கின்றனர்.
எனவே, பேரறிவாளர், முருகன், சாந்தன், நளினி ஆகியோர் உடனே விடுதலை செய்யப்படுவதுதானே முறை! சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்றால் அவ்வாறுதானே நிகழ வேண்டும்!
மாறாக, ஒருபுறம் உண்மைக் குற்றவாளிகள் விடுதலை ஆவதும், அப்பாவிகளின் உயிர் பறிக்கப்படுவதும் சரிதானா? முறைதானா? அறம்தானா?
“அகர முதல”
இதழ் 3
கார்த்திகை 15, தி.பி.2044
திசம்பர் 1, கி.பி.2013
++++++++++++++++++++++++++++++
இலங்கைக்குப் படைப்பயிற்சி – முதல்வர் எதிர்ப்பு
இலங்கைக்
கடற்படையினருக்குப் பயிற்சியளிப்பது தொடர்பான,
படைத்துறை ஒத்துழைப்புக் கொள்கையை மறு ஆய்வு செய்யுமாறு முதல்வர் செயலலிதா தலைமையாளர் மன்மோகன்சிங்கிற்கு மடல்
அனுப்பி உள்ளார். இந்தியக் கடற்படை
சார்பில், நடத்தப்பெறும் கடல்சார் பாதுகாப்பு தொழில் நுட்ப நான்கு ஆண்டுகள் பட்டப்படிப்பில்
(பி.டெக்.), இலங்கைக் கடற்படை
வீரர்களுக்கும் மத்திய அரசு இடம் அளிக்க உள்ளது. . . .
. . . . . ..
தொழிற்பயிற்சி(ஐடிஐ) முடித்தவர்களுக்குக் கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணி
மொத்த ஒழிவிடங்கள்: 402 அகவை வரம்பு : 30-11-2013 நாளன்று 35க்குள் இருக்க வேண்டும். . கல்வித்தகுதி :
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் உரிய பிரிவில் தொழிற்பயிற்சி(ஐடிஐ) முடித்து தேசியப்
பயிற்சிச் சான்றிதழ் வைத்திருக்க
வேண்டும். சம்பளம்: மாதம் ரூ. 14000 நேர்முகத் தேர்வு, செயல்முறைத் தேர்வு நடைபெறும் நாள்: 16.12.2013 – 21.12.2013 வரை. விண்ணப்பிக்கும் முறை: தகுதியும்
விருப்பமும் உள்ளவர்கள்
www.cochinshipyard.com <http://www.cochinshipyard.com > என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையவழி(ஆன்லைனில்) விண்ணப்பிப்பதற்கான
கடைசி நாள்: 15.12.2013
பாரத மின்நிறுவனத்தில்(BHEL) பொறியாளர், மேற்பார்வையாளர் பணியிடங்கள்
மொத்த ஒழிவிடங்கள்: 38 அகவை வரம்பு 33 இற்குள் கல்வித்தகுதி பொறியாளர் பணி (15 இடங்கள்): பொறியியல் துறையில் ஏதாவதொருபிரிவில் பட்டம்( B.E/ B.Tech) முடித்திருக்க வேண்டும். சம்பளம்:ரூ.43,550 மேற்பார்வையாளர் பணி(23 இடங்கள்): 60 %மதிப்பெண்களுடன் பட்டயம் முடித்திருக்க வேண்டும். சம்பளம்:ரூ.21,690 இணைய வழி (ஆன்லைனில்) விண்ணப்பம் தொடங்கும் நாள் : 30.11.2013 இணைய வழி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:
21.12.2013 அச்சுப்படி அஞ்சலில்
சென்று சேரக் கடைசி நாள்: 28.12.2013 முழு விவரங்கள்
அறிய www.bhel.com என்ற இணையத்தளத்தைப் பார்க்கவும்.
அகரமுதல இணைய இதழ் மூன்றின் படைப்புகள் - akaramuthala issue 3 articles
அன்புடையீர் வணக்கம்.
அகரமுதல இணைய இதழ் மூன்றில் பின்வரும் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. < http://www.akaramuthala.in/ > தளத்திற்குச் செ ன்று காண வேண்டுகின்றேன்.
தங்கள் படைப்புகளையும் அயல் எழுத்து, அயற் சொல் கலப்பு இன்றிச் சீருருவில் madal@akaramuthala.in மின்வரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகின்றேன். நன்றி.
(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3. மன்பதை வாழ்க்கை தொல்காப்பியம்
தமிழ் மக்களின் முன்னேறிய மன்பதையைப் பெரிதும் வெளிப்படுத்துகிறது. வாழ்க்கையின் இலக்கு இப்பொழுதும், இனி எப்பொழுதும் மதிப்பு மிக்கதாக
மிகவும் முன்னேறிய நிலையினதாகக் காணப்படுகிறது. தொல்காப்பியர் வாழ்க்கையின் இலக்காகப் பின்வருமாறு கூறுகிறார். காமம்
சான்ற கடைக்கோட் காலை, ஏமம் சான்ற மக்களொடு துவன்றி, அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. (தொல்காப்பியம்:
பொருள்.192) எனவே அனைவரும் பிறருக்கும், தமக்கும் பயன்தரக்கூடிய பெரும்
செயல்களை அடைவதை இலக்காக கொண்டு அறவாழ்க்கை நடத்துவதையே…
- பேராசிரியர் முனைவர்
சி.இலக்குவனார் (முந்தைய இதழின் தொடர்ச்சி) எழுத்துப் படலம் நூன்மரபு எழுத்துப்படலத்தில் உள்ள ஒன்பது இயல்களில் முதல் இயல்
நூன்மரபாகும். நூல் எழுதுவதற்கு வேண்டப்படும் எழுத்துகளைப் பற்றிக்
கூறுவதனால் இவ்வியல் நூன்மரபு எனும் பெயரைப் பெற்றுள்ளது. இதில்
கூறப்படுகின்ற இலக்கணம் சொற்களிடையே நிற்கும் எழுத்திற்கு அன்றித் தனியாக
நிற்கும் எழுத்திற்குஆகும் என அறிதல் வேண்டும். க.
எழுத்து
எனப்படுப அகரம் முதல் னகர இறுவாய் என்ப சார்ந்துவரல் மரபின் மூன்று அலங்கடையே. இந்நூற்பா தமிழ் எழுத்துகள் …
– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3..
பெரும்பொருளால்
பெட்டக்கது ஆகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு. (குறள் 732) பெரும் பொருளால் – மிகுந்த பொருள்களால்; பெட்டக்கது ஆகி – யாவராலும் விரும்பத்தக்கது ஆகி; அருங்கேட்டால் – கேடுகளின்மையால்; ஆற்றவிளைவதே – மிகுதியாக விளைவதே; நாடு-நாடு ஆகும். நாட்டில் மிகுந்த பொருள்கள் இருந்தால்தான் குறைவற்ற வாழ்க்கை நடத்த முடியும். இல்லையேல் முட்டுப்பட்ட வாழ்க்கை
நடத்துவதனால் துன்புற்றுப் பொருள் நிறைந்துள்ள வெளிநாடுகட்குச் செல்லத்
தலைப்படுவர். நமது நாடு மிகுந்த பொருள்கள்…
- இனஎழுச்சிக் கவிஞர் நெல்லை.
இராமச்சந்திரன் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 13 அறிக்கைவிட்டு அறிக்கைவிட்டே நமை ஏமாற்றி ஆண்டுவந்தார் இந்தியாவை! தில்லி
ஆட்சி விரித்தவலை வீழ்ந்திருக்கும் இறக்கும் புறாக்களாகி விசையற்றுப் பதவிசுகம் தமிழர் கண்டார்! அவித்தமுட்டை போலாகிக் கருவும்
செத்து
அருந்தமிழன்
தில்லிக்குத் தீனி ஆனான்! புவியாண்ட தமிழினத்தான்
புள்கூட் டம்போல் பூமியெலாம் பறந்தோடி அகதி ஆனான் 14 ஊரிழந்தான் உணர்வழிந்தான்
தேடித் தேடி ஒவ்வொன்றாய்த் தமிழுயிரை அவன்அ ழித்தான் தேரழித்தான் தெய்வீகப்
பண்ப ழித்தான்…
– முனைவர் இலக்குவனார் மறைமலை (சென்ற இதழின் தொடர்ச்சி) இக்கட்டுரையில் பயிலும் கலைச்சொற்கள்:
குறுக்கம்-Depression;
நெருக்கம்-Compression; தோள்துடுப்பு-Pelvic Fin; கால்துடுப்பு- Pectoral Fin; புறத்துடுப்பு-Dorsal Fin; அகத்துடுப்பு-Ventral Fin; வால்துடுப்பு-Caudal Fin; இளகி-Plastic Fin; குறுக்கு வெட்டு-Transverse Section; உள்நுழைக்கோணங்கள்- Entering Angels; வளைவும் இடப்பெயர்வும்-Curves and Displacement; துள்ளல்–Runs; புதையிர்த்தடம்-Fossil
வரலாற்றைத் திருத்தும் வேலை வழக்கமாய்ப் பார்ப்பான் வேலை பெரியாரைத் தலைகீ ழாகப் பிழைபடக்காட்டும் வேலை
சரியாய்அவ் வேலை தன்னைத் தமிழ்த்தேசம் பேசு வோர்கள் விரிவாகச் செய்கின் றார்கள் விதைநெல்லை அவிக்கின் றார்கள் புராணங்கள் பொய்கள் தம்மைப்
பூணூலார் சதிகள் தம்மை இராப்பகல் எடுத்துச் சொல்லி இனமானம் காத்து நின்றார் திராவிடர் தமிழர் என்றார் திருக்குறள் மேன்மை சொன்னார் பொறாமையால்
இவரை மாற்றான் போலன்றோ பழிக்கின் றார்கள்! ஒருபக்கம் சாதிக் கேடோ உழைப்பாளர் தமைப்பி ளக்கும் மறுபக்கம் மதத்தின் ஆட்டம் மாத்தமிழ் நாட்டு
மாண்பின் திறத்தையே…
- திருக்குறள் பாவலர் தமிழ்மகிழ்நன் 92802 53329 எல்லாளன் இருக்கின்றார் எல்லாரும் ஈழத்தின் இடர்நீக்க ஈங்கெழுந்தார் தெளிக! “இல்லையினி எல்லாளன்” என்று சொல்லு மெதிரி இடந்தேடி ஓடும்நாள் இனிவிரைவில் வருமே!
இளையவன் செயா (கந்தையா) பூத்துக் குலுங்கும் பூஞ்சோலை ; பறிக்கக் காத்திருக்கும் ரோசாமலர் கவின்தென்ற லிலாடும் பார்த்திருக்கும் பாவையவள் பக்குவமாய்ப் பூக்கொய்ய சேர்த்திருந்தாள் மகிழ்வைத்தன் செம்முகத்தில் !
பறிப்பவர் இலக்கணம் பாவைக்குத் தெரியும் ஓரிதழ் உதிர்ந்தாலும்
ஓர்குறையே ; அவளுக்கு இதழ்உதிராப் பூவேபூவைக்கு இதயம்நிறை மகிழ்ச்சி
இதழ்
நடத்துவதும் இதற்கொப்பானதே !
இணையஇதழ் கண்டேன் இணையில்லாத் தமிழ்காக்கும் கணையாக விளங்கிய கால்வழி நடத்தும்
இணையஇதழ் என்றும் அணையாமல் துலங்க திணையளவாய் வாழ்த்துகிறோம் தீந்தமிழில் !
- புலவர் சா இராமாநுசம் மாண்டார் இல்லை மாவீரர்-வீணில் மகிழும் பக்சே பாவீநீர்
மீண்டு(ம்) வருவார் அறிவீரே-ஈழம் மீள ஆட்சி புரிவாரே
(முந்தைய இதழின் தொடர்ச்சி) எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின்
பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண்
எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.
அயலக ஆதிக்க விலங்குளால் கட்டுண்டுக் கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற விடுதலைத் தேசமாக உருவாக்கும்
இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.
- தொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன் (முந்தைய இதழின் தொடர்ச்சி) ஆங்கில வரி வடிவத்தில், எழுத்துரு இல்லாத மலாய் மொழி போலத் தமிழை மாற்றி விடலாம் என்று குறுகிய சின்னப்புத்திக்குச் சொந்தக்காரராக ஏன் இப்படி எழுத்தாளர் மாறிப்போனார்
என்று தெரியவில்லை. பொதுவாக, ஆங்கிலத்தில் ‘தமிழ்99’ வகைத் தட்டச்சு முறையில்
அடிப்பதை அப்படியே தமிழ் எழுத்துருவை விட்டுவிட்டு எழுதப் படிக்கப் பழகிக்கொள்ளாலம் என்று சொன்னால், அதைவிடப் பைத்தியக்காரத்தனம் எதுவும்
இருக்க முடியாது. - அழகு ஒரு மொழியின் மரபே தொன்மையான அதன் எழுத்து…
அகரமுதல இணைய இதழ் மூன்றின் செய்திகள் akaramuthala issue 3
அன்புடையீர்
வணக்கம்.
பெற்றுள்ளன.
முழுமையாய்ப் படிக்கத் தளத்திற்குச் < http://www.akaramuthala.in/ > செல்க!
மொரிசியசின் பின்பேசின்(Beau Bassin)என்னும் நகரில் விடுதலைப்புலிகள் நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் துயர நினைவுநாளான மே 18, 2012 இல் திறக்கப்பட்டது இது.
மொரிசியசிலுள்ள பியூபேசின் உரோசு குன்று (Beau Bassin Rose Hill) நகர் மன்றம் உலகத்தமிழர்களின்
போற்றுதலுக்கும் உலக மனித நேயர்களின் பாராட்டுதலுக்கும் உரித்தாகியுள்ளது. ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைகளாலும் போரிலும்
தங்கள் இன்னுயிர் ...
தமிழ்ப்படநிலைய 6 ஆம் ஆண்டுத் தொடக்க விழா!!! தமிழ்ப்படநிலையத்தின் (Tamil Studio) ஆறாம் ஆண்டுத் தொடக்க விழா, நவம்பர் 23, சனிக்கிழமை மாலை, சென்னையில் க.க.நகரில்
நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இயக்குநர் இராம் பங்கேற்றார். தமிழ்ப்படநிலையத்தின்
செயல்பாடுகள் வருமாறு:- 2008, நவம்பர் 23 ஆம் நாள் குறும்பட /
ஆவணப்படங்களுக்கான இணையத்தளமாகத் தொடங்கப்பட்டது. பின்னர் அடுத்த ஆண்டே மாற்றுத் திரைப்படத்திற்கான ..
சென்னையில் நீந்திக் கடந்த நெருப்பாறு – நூல் ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ அவர்களினால் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை – எழும்பூரில் உள்ள தூய அந்தோணியார் அரங்கத்தில் நடைபெற்ற அரவிந்த குமாரனின் “நீந்திக் கடந்த நெருப்பாறு” எனும் நூலை கழகப்
பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வெளியிட,
- நீதிநாயகம் கே.சந்துரு இராசீவு கொலைவழக்கில் பேரறிவாளன் வாக்குமூலத்தைத் திருத்தியதாக
மத்தியப் புலனாய்வுப் பணியகத்தின்(சி.பி.ஐ.) அப்போதைய கண்காணிப்பாளர்
தியாகராசன் தெரிவித்துள்ளார். இது குறித்து நீதிநாயகம் கே.சந்துரு அதிர்ச்சியைத் தெரிவித்து மூவரையும் விடுதலை செய்யுமாறு பின்வருமாறு கருத்து
தெரிவித்து வேண்டி உள்ளார்:
கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்திலுள்ள அட்டப்பாடி வனப்பகுதியில் குடிபோதையில் உறங்கி
கொண்டிருந்த ஒருவரை மலைப்பாம்பு ஒன்று விழுங்கி விட்டது. வனப்பகுதி அருகே உள்ள
இடத்தில் மது அருந்திவிட்டு மயக்கத்தில் அயர்ந்துவிட்டவரையே மலைப்பாம்பு விழுங்கியுள்ளதாக ஊரினர் தெரிவித்துள்ளனர். பாம்பின் வயிற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டதாகவிம்
தெரிவிக்கப்படுகிறது.
.
உயிர்வலி ஆவணப்படவிழாவில் தோழர் கி.வெங்கட்ராமன் உரை! இராசீவு கொலை வழக்கில் தொடர்புபடுத்தப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் குறித்தும், மரண தண்டனை ஒழிப்பு குறித்தும்
பேசுகின்ற ‘உயிர்வலி’ ஆவணப்படத்தின் வெளியீட்டு
நிகழ்வும், நீதிபதி வீ.ஆர்.கிருட்டிணய்யர்
அவர்களின் 99ஆவது பிறந்தநாள் விழாவும்
விருதுகள் வழங்கும் விழாவும் 24.11.2013 சென்னையில் நடைபெற்றது. சென்னை பிட்டி.தியாகராயர் அரங்கில், மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில்
சீன வானொலி நிலையத்தின் தமிழ் ஒலிபரப்பு 1963-ஆம் ஆண்டு ஆகசுட்டுத் திங்கள் முதல் நாள் தொடங்கியது. 1963-2013 ஆகசுட்டுஉடன் 50 ஆண்டுகள் நிறைவெய்துவதைச் சிறப்பாகக் கொண்டாடும்வகையில் சீன வானொலித் தமிழ் பிரிவு பல்வேறு போட்டிகளை நடத்தியது. இந்தப் போட்டிகளில் உலக வாழ்
தமிழர்கள் ஆயிரக்கணக்கில் ஆர்வமுடன் பங்கேற்றனர். பொன்விழா கட்டுரைப் போட்டி, ஊடக போட்டிகள், பொது அறிவுப் போட்டி என்று நடத்தியது. பொன்விழப் போட்டிக்கான முதல் பரிசை அமெரிக்கா வாழ்
தமிழரான ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ பெற்றுள்ளார். பொன் விழா கட்டுரையின் ஊடகப் பரிசான சிறப்புப்
தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கைக் கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி! இராமதாசு
கண்டனம். தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கைக்
கடற்படையினருக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என
பாமாக நிறுவனர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள இந்திய
கடற்படை கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கடல்சார் பாதுகாப்பு
தொழில்நுட்ப படிப்பில் சிங்களக் கடற்படையினர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)