prayer லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
prayer லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 ஜூலை, 2011

பெங்களூர் மறை மாவட்டத்தில் தமிழ் வழிபாட்டுக்கு ஆபத்து

பெங்களூர் மறை மாவட்டத்தில் தமிழ் வழிபாட்டுக்கு ஆபத்து

First Published : 18 Jul 2011 12:28:11 AM IST


பெங்களூர், ஜூலை 17: பெங்களூர் கத்தோலிக்க உயர் மறை மாவட்டத்தில் தமிழ் வழிபாட்டுக்கு ஆபத்து நேர்ந்துள்ளதாக தமிழ் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மற்றும் பங்குத் தந்தைகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.கர்நாடகத்தில் அதிகளவில் கத்தோலிக்கக் கிறிஸ்தவ மக்கள் உள்ளனர். பெங்களூரில் மட்டும் 4,10,604 பேர் கத்தோலிக்கர்கள். இவர்களில் 70 சதவீதம் பேர் தமிழர்கள்.இதனால், பெங்களூர் ஊரகம், நகரம், ராமநகரம், தும்கூர், சிக்கபளாப்பூர், கோலார் மாவட்டங்களை உள்ளடக்கிய பெங்களூர் கத்தோலிக்க உயர் மறை மாவட்டத்துக்குள்பட்ட தேவாலயங்களில் வழிபாட்டு மொழியாக தமிழ் நிலைத்திருக்கிறது.1960-களில் 55 தேவாலயங்கள் இருந்தன. இவற்றில் 40-ல் தமிழ் வழிபாடு நடைபெற்று வந்தது. தேவாலயங்கள் படிப்படியாக 133-ஆக உயர்ந்த பிறகு, இப்போது 55-ல் தமிழ் வழிபாடு நடைபெறுகிறது.1975-களுக்குப் பிறகு தமிழ் மொழிக்கு எதிரான பிரசாரம் கர்நாடகத்தில் தலைதூக்கத் தொடங்கியதும், தமிழ் வழிபாட்டுக்கு முட்டுக்கட்டை போட சில கன்னட பங்குத் தந்தைகள் பகிரங்க முயற்சியில் ஈடுபட்டனர்.1980-களில் அனைத்து நிலைகளிலும் கன்னட மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்று கோகாக் ஆணையம் அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து தமிழர்கள் மீது வன்முறை ஏவப்பட்டது. இதன்பிறகு தமிழ் வழிபாட்டுக்கு கன்னடர்களின் எதிர்ப்பு வலிமை பெற்றது. கன்னடர்களின் எழுச்சியைத் தொடர்ந்து பெங்களூர் மறைமாவட்டத்தில் உள்ள 133 தேவாலயங்களிலும் கடந்த 15 ஆண்டுகளாக கன்னட வழிபாடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனினும், இதில் பங்கு கொள்ளும் கன்னட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.2004-ல் பொறுப்பேற்ற பிறகு இதற்கு அடிபணிந்துள்ள மறைமாவட்ட பேராயர் பெர்னார்ட் மோரஸ், எல்லா திருச்சபைகளிலும் கன்னட வழிபாட்டைக் கட்டாயமாக்கினார். கன்னட பங்குத் தந்தைகளுக்கு முக்கியப் பொறுப்புகளை அளித்தார். திருச்சபைகளில் வைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெயர்ப் பலகைகளை அகற்றி அனைத்தையும் கன்னடமயமாக்கினார். தமிழ் திருச்சபைகள் நடத்திவந்த தமிழ்ப் பள்ளிகளை மூடிவிட்டார் என்றும் தமிழ் பங்குத்தந்தைகள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.தமிழர்கள் அதிகம் பேர் இருந்தும் ஜே.சி.சாலையின் புனித தெரசா தேவாலயம், டி.சி.பாளையாவின் புனித அந்தோணியார் தேவாலயத்தில் தமிழ் வழிபாட்டை முழுமையாக அகற்றிவிட்டு கன்னட வழிபாட்டை அறிமுகப்படுத்தியுள்ளார்.கம்மனஹள்ளி புனித பயஸ் தேவாலயம், நாகனள்ளி புனித பவுல் தி ஹெர்பட் தேவாலயம், ஹெக்டே நகர் புனித மரியன்னை தேவாலயங்களில் தமிழர்கள் அதிகம் பேர் இருந்தும், தமிழ் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்காமல் கன்னட வழிபாட்டை நடைமுறைப் படுத்தியுள்ளார் என்று தமிழ் பங்குத் தந்தைகள் புகார் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து புனித சூசையப்பர் தேவாலய பங்குத் தந்தை என்.ஏ.நாதன் கூறுகையில், எந்த மொழியிலும் வழிபாடு நடத்தலாம். எந்த மாநிலத்தில் வாழ்ந்தாலும் அவரவர் மொழியில் மத வழிபாடு நடத்தும் உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. பலதரப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் அவரவர் மொழியில் வழிபாடு நடத்துவதுதான் சரியானது. அந்த உரிமையை யாரும் தட்டிப்பறிக்க முடியாது. மதத்தில் அரசியலையோ, அரசியலில் மதத்தையோ கலக்கக்கூடாது.தமிழ் வழிபாடு கூடாது என்று கூறுவதற்கு யாருக்கும் உரிமையில்லை. அதிகாரத்தை அனுபவிக்க வேண்டுமென்பதற்காக சில கன்னட குருக்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது. உலகெங்கும் சென்று நற்செய்தியை போதியுங்கள் என்று சொன்ன இயேசு கிறிஸ்துவின் சீடர்களாகக் கருதப்படும் இவர்களின் நடவடிக்கை கிறிஸ்தவ கொள்கை, தத்துவங்களுக்கு எதிரானதாகும். கிறிஸ்தவத்தில் இனவாதம், மொழிவாதம், சாதிவாதம் கூடாது என்றார்.

சனி, 17 ஏப்ரல், 2010

கவுகாத்தி:அசாம் மாநிலத்தில், ஒரு குறிப்பிட்ட வழிபாட்டில் பெண்களுக்கு விதிக்கப் பட்டிருந்த தடையை மீறி, அவர்களை அந்த வழிபாட்டில் கலந்து கொள்ள அசாம் கவர்னர் வழிகாட்டியுள்ளார்.அசாம் மாநிலத்தில் கி.பி.,15ம் நூற்றாண்டில், சங்கரதேவர் என்பவரால் உருவாக்கப்பட்ட வைஷ்ணவ சம்பிரதாயத்தில், அதன் வழிபாட்டிடத்தில் பெண்களுக்கு பல நூற்றாண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அதன் வழி பாட்டிடத்தில் பெண்கள் நுழைவதில்லை.

சமஸ்கிருத மொழியில் வல்லுனரான, அசாம் கவர்னர் ஜே.பி.பட்நாயக், மாநிலத்திலுள்ள பல 'சாத்ரா' என்ற வழிபாட்டு அரங்கில் வழிபட்டுள்ளார். அவர் கடந்த 4ம் தேதி, பார்பேட்டா என்ற இடத்திலுள்ள சாத்ராவுக்குச் சென்றபோது, அந்த இடத்துக்கு வெளிப்புறத்தில் பெண்கள் கூட்டமாக நின்று கொண்டிருப்பதைக் கண்டார்.பின்னர் அதற்கான காரணத்தைத் தெரிந்து கொண்ட அவர், சாத்ராவின் உயர்மட்ட அதிகாரியைச் சந்தித்து, வைஷ்ணவ சம்பிரதாயத்தை நிறுவிய சங்கரதேவரோ அவரது சீடர் மாதவதேவரோ, இவ்விதம் வழிபாட்டு அரங்கில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதை குறிப்பிட வில்லை என்று தக்க சான்றுகளுடன் எடுத்துக் காட்டினார்.

சாத்ரா அதிகாரியும் அதை ஏற்றுக் கொண்டார். ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனுமதி வழங்கப் பட்டப்போதும் கூட, பெண்களே இந்த வழிபாட்டு அறையில் நுழையாமல் இருந்தனர் என்று கூறினார். பின்பு கவர்னருடன் 20 பெண்கள் உள்ளே சென்று வழிபட்டனர்.மறுநாள், ஐந்து பெண்கள் உள்ளே சென்று வழிபட்டனர். அதில் ஒருவர் 51 ஆயிரம் ரூபாயையும், அமெரிக்காவில் வசிக்கும் மற்றொரு பெண் நாலாயிரத்து 800 ரூபாயையும் காணிக்கையாக அளித்தனர்.

அசாமின் பிரபல இலக்கியவாதியும், ஞானபீட விருது பெற்றவருமான மமோனி ரைசன் கோஸ்வாமி, கவர்னரைச் சந்தித்து வரலாற்றுச் சாதனை புரிந்ததற்கு வாழ்த்து தெரிவித்தார்


நகல் எடுக்க | எழுத்தின் அளவு: Decrease font Enlarge font |
மின்னஞ்சல் | RSS | Bookmark and Share


வாசகர் கருத்து
மா தவம் ( பெருந்தவம்) செய்தவன் மாதவன்; சங்கு அறுக்கும் தொழில் புரிபவன் சங்கரன். எனவே, இவை நல்ல தமிழ்ச் சொற்களே. தேவர் என்பதும் நல்ல தமிழ்ச் சொல். தேவர் அனையர் கயவர் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவரும். தேவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தனர். எனவே, சமயத் தலைமைப் பொறுப்பில் தேவர்கள் இருந்ததில் வியப்பில்லை. இந்தியா என்பது ஆங்கிலேயர் வந்த பின் அமைந்த அரசியலமைப்பு. நாம் மொழியாலும் இனத்தாலும் நாட்டாலும் தமிழர்களே. ஆனால், அரசமைப்பால் இந்தியர்கள். இன்றைய சூழலில் இந்த அரசமைப்பு சிதைவு படக் கூடாது என்பது உண்மைதான். அதே நேரம் நாம் தமிழர்கள் என்பதும் வரலாறு சொல்லும் உண்மை.எனவே, நண்பரே உண்மையைப் புரிந்து கொள்க.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
by I. Thiruvalluvan,chennai,India 15-04-2010 20:19:15 IST
சரியான வழிகாட்டு முறை... நன்றி...
by H நாராயணன்,Hyderabad,India 15-04-2010 20:03:52 IST
திருவள்ளுவன் சொல்வது மிகவும் சரி நான் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவன். ஆனாலும் தமிழ் எங்கள் உயிர்
by pms அப்துல்ரகுமான் ,dubai,India 15-04-2010 14:23:35 IST
ஹலோ mr திருவள்ளுவன்,என்ன சொல்றிங்க மாதவா அண்ட் சங்கரா இந்த ரெண்டு பெரும் தமிழ் பேர் இல்லையே! 2000 வருஷத்திற்கு முன்ன திருக்குறள் ' ஆதி பகவன் முதற்றே உலகு ' என கூறுகிறது ! தமிழ் என் தாய்மொழி, ஹிந்து என் மதம்! தெரிந்துகொள்! இந்தியன் என்று சொல்வோம் ! ஜெய் ஹிந்த்!
by ka விஜயகுமார்,singapore,India 15-04-2010 09:40:15 IST
சங்கரத் தேவர் , மாதவத் தேவர் என்னும் பெயர்கள் 15 ஆம் நூற்றாண்டு வரையிலும் தமிழர்கள் அசாமில் செல்வாக்குடன் வாழ்ந்தமையைக் காட்டுகின்றது. இந்தியக் கண்டம் முழுவதும் பரவியிருந்த தமிழ் மொழியும தமிழ் இனமும் அழிவைச சந்தித்ததன் காரணம் பிற மொழிச் சொற்களைக்கலந்து மொழிக் கொலை புரிந்து புதிய மொழிகள் உருவாக வழி வகுத்ததே! இனியேனும் மொழிக் கொலையைத் தடுப்போம்! நம மொழி காப்போம்!
நம் இனம் காப்போம்!
by I. Thiruvalluvan,chennai,India 15-04-2010 03:10:32 IST