pakshe லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
pakshe லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

விடை பெற்றார் நிருபமா பேய்

இனப்படுகொலைகளுக்கு இதுவரை செய்த உதவிகளுக்காகவும் இனி்யும் சிங்களஅமெரிக்க உறவிற்குப் பாலமாக இருந்து  தப்பிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவும் அளிக்கப்பட்ட விருந்து. இதற்கு முன்பும் வெறியுறவுச் செயலர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். தூதர்களும் மாறியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு அளிக்கப்படா விருந்து இவருக்கு அளிப்பதில் இருந்தே சிங்கள இந்தியக் கூட்டுக் கொலைகளைப்பற்றிப் புரிந்து கொள்ளலாம். வருத்தத்துடன்   இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

விடை பெற்றார் நிருபமா ராவ்

First Published : 31 Jul 2011 02:48:25 AM IST

கொழும்பு, ஜூலை 30: இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் நிருபமா ராவுக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச சனிக்கிழமை பிரிவுபசார விருந்து அளித்தார். இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள ராஜபட்ச வீட்டில் சனிக்கிழமை காலை அவரை நிருபமாராவ் சந்தித்துப் பேசினார். அப்போது நிருபமா ராவுக்கு, ராஜபட்ச காலை விருந்து அளித்ததாக இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய வெளியுறவுத் துறை செயலாளராக உள்ள நிருபமா ராவ் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு பெறுகிறார். இதைத்தொடர்ந்து அவருக்கு இந்த பிரிவுபசாரத்துக்கு ராஜபட்ச ஏற்பாடு செய்திருந்தார். வெளியுறவுத் துறை செயலாளராக நியமிக்கப்படும் முன் நிருபமா ராவ், இலங்கையில் இந்தியத் தூதராகப் பணியாற்றினார்.ஓய்வு பெற்றுள்ள அவர் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள்

பதவியின் பின்பும் தமிழ்களை அழிக்க திட்டம் தீட்டி இருப்பார்கள் இருவரும் .அட கருணாநிதி ஒரு கடிதம் மன்மோகன் சிங்கத்திற்கு எழுதப்பா இந்த பொண்ணு எப்படி நியாயமாக நடந்து இருப்பாள் என்று.
By esan
8/1/2011 4:32:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

சனி, 23 ஜூலை, 2011

இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும்: பழ. நெடுமாறன் வலியுறுத்தல்

குற்றவாளியைத் தூண்டி விட்டு உதவிய இந்திய அரசும் குற்றவாளியாக  இருக்கையில் பட்சேவைக்காப்பாற்றித்தானே ஆக வேண்டும். எனவே, இந்தியாவிற்கு வேண்டுகோள் விடுக்காமல் உலக நாடுகளிடம் உண்மையை விளக்கி நீதி காண முயல வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும்:
பழ. நெடுமாறன் வலியுறுத்தல்

First Published : 23 Jul 2011 04:15:51 AM IST

மதுரை, ஜூலை 22: இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களையாவது பாதுகாக்க வேண்டும் என்பதை தலையாயப் பிரச்னையாகக் கருதி மத்திய அரசை தமிழக அரசு நிர்பந்திக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தினார்.  ஈழத் தமிழர், தலித் கிறிஸ்தவர், தமிழக மீனவர் மற்றும் கச்சத்தீவு மீட்பு போன்ற பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மதுரையில் ஒன்றிப்பு கிறிஸ்தவ மனித உரிமை அமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பழ.நெடுமாறன் பேசியது:  இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலை குறித்து ஐ.நா. சார்பில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அக்குழு ராஜபட்சவை ஒரு போர்க் குற்றவாளி என்று அறிவித்தது. அதன் பின்னரும் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியவில்லை. இதுகுறித்து மத்திய அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.  ஆனால், ராஜபட்சவைக் காப்பாற்றத் தேவையான அனைத்தையும் செய்து வருகிறது என்றார். 

புதன், 2 பிப்ரவரி, 2011

New party of K.P.: இலங்கை: புதுக் கட்சி தொடங்குகிறார் கே.பி.

சிங்களக் கொலைத்தலைவருக்குச் சார்பாகச் செயல்படும் என்பதில்  இருந்தே கு.ப. கட்சியின் நடுநிலைமை என்ன என்பது புரிந்து விடுகிறது. பாவம் கருணா! ஓரங்கட்டப்படுவாரா? உயிர் பறிக்கப்படுவாரா என்று தெரியவில்லை. இஙஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

இலங்கை: புதுக் கட்சி தொடங்குகிறார் கே.பி.

First Published : 01 Feb 2011 05:04:39 PM IST

கொழும்பு, பிப்.1- விடுதலைப் புலிகளின் அரசியல் விவகாரத்துறையின் முன்னாள் பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் விரைவில் புதுக் கட்சி ஒன்றைத் தொடங்களவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு அக்கட்சி செயல்படும் என்றும், நடுநிலையான போக்கைக் கடைபிடிக்கும் என்றும் இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. எனினும், அதிபர் ராஜபட்சவுக்கு ஆதரவாக கே.பி.,யின் கட்சி செயல்படும் என்று கூறப்படுகிறது.கடந்த ஞாயிற்றுக்கிழமை, கே.பி. வடக்குப் பகுதிக்கு பயணம் மேற்கொண்டபோது, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் பிரதிநிதிகளை அங்கு சந்தித்துப் பேசியதாகவும் அப்போது அரசியல் கட்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 31 ஜனவரி, 2011

Case against pakshe: இலங்கை அதிபர் இராசபட்சவுக்கு எதிராக வாசிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு

பக்சேவிற்கு மட்டும் அல்லாமல் இனப்படுகொலைபுரிந்த, இனப் படுகொலைக்க உதவிய அனைத்து நாட்டுக்  குற்றவாளிகளுக்கும் பொதுமக்கள் முன்னிலையில் மாறுகால், மாறுகை வாங்கி, மரணத் தண்டனை அளிக்க வேண்டும். இதன் மூலம் எந்த நாட்டு ஆட்சியும் எந்த மக்களுக்கு எதிராகவும் படுகொலை புரியும் எண்ணத்திற்கு வராமல் தடு்க்க வேண்டும்.  மக்கள்  படுகொலையாளர்கள் மடிய விரும்பும்  இலக்குவனார் திருவள்ளுவன்

இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு எதிராக 
வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு

வாஷிங்டன், ஜன.29: இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு எதிராக வாஷிங்டன் நகர நீதிமன்றத்தில் தமிழர் குழு வழக்குப் பதிவு செய்துள்ளது. தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் ஓராண்டுக்கும் மேலாக நடத்திய இனப் படுகொலையைக் கண்டித்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு நஷ்ட ஈடாக 3 கோடி டாலர் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  தமிழர் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பு (டிஏஜி) என்ற அமைப்பு சார்பில் வாஷிங்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் புரூஸ் வெய்ன், கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.  ராஜபட்ச மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கவில்லையெனில் தன்னிச்சையான தீர்ப்பு அளிக்கப்பட்டுவிடும் என்று வழக்கறிஞர் வெய்ன் குறிப்பிட்டார்.  சமீபத்தில் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு வந்திருந்தார் இலங்கை அதிபர் ராஜபட்ச.  அவர் மீது மனித துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரில் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5 பேர் திரிகோணமலையிலும், ஏசிஎப் அமைப்பைச் சேர்ந்த 17 பேர் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் கொல்லப்பட்டனர். இதற்கு இழப்பீடாக 3 கோடி டாலர் வழங்க வேண்டும் என டிஏஜி அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.  போர்க்குற்றவாளியான மஹிந்தா ராஜபட்சவை அமெரிக்காவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று தமிழர் அமைப்புகள் குரல் கொடுத்தன. ஆனால் மருத்துவ சிகிச்சைக்கு வந்து எவ்வித பதிலும் சொல்லாமல் சென்றுவிட்டார் ராஜபட்ச.  மனித உரிமை மதிக்கப்படும் அமெரிக்காவுக்கு போர் குற்றவாளியான ராஜபட்ச சர்வ சாதாரணமாக வந்து சென்றது மிகவும் வேதனையளிப்பதாக டிஏஜி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.  இலங்கையில் இன்னமும் தமிழர்கள் இரண்டாம் தர மக்களாக நடத்தப்படும் அவலம் தொடர்வதாகவும் அவர்கள் கூறினர். இலங்கையில் தங்களது குடும்ப உறவுகளை இழந்த பலரும் ராஜபட்சவுக்கு எதிராக குரல் எழுப்ப முடியாமல் உள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு எதிராக வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு

First Published : 30 Jan 2011 12:00:00 AM IST