dinaethal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
dinaethal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

மறந்துபோன மருதிருவர் கோட்டை


தினஇதழ் Home / அபூர்வ தகவல்கள் / மறந்துபோன மருதிருவர் கோட்டை

மறந்துபோன மருதிருவர் கோட்டை

சிவகங்கை அரசி வேலுநாச்சியாருக்கு பக்க பலமாக இருந்த மருது சகோதரர்கள் ஆங்கில ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்கள். சுமார் இருபது ஆண்டுகளாக இந்த கோட்டையில் வீரர்களுக்கும் யானைகளுக்கும் போர் பயிற்சி அளித்துள்ளனர்.காளையார்கோவில் மற்றும் சிவகங்கையில் இருந்த ஆயுத கிடங்குகளை விட சங்கரபதி கோட்டையில்தான் அதிக ஆயுதங்களை வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.வீரர்களுக்கு கொரில்லா பயிற்சி மற்றும் மற்போர் பயிற்சிக்கான அனைத்து வசதிகளும் கோட்டையில் செய்யப்பட்டு இருந்தன. கோட்டையை கண்காணிக்க கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோட்டையில் மதுரை திருமலை நாயக்கர் மஹால் போன்று தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுண்ணாம்பு, முட்டை, கடுக்காய் ஆகியவை ஒன்றாக அரைத்து ஊற வைத்து கோட்டையின் சுவர்களை பூசியுள்ளனர்.
யானைகள் கோட்டைக்குள் வந்து செல்லும் வகையில் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்டத்தின் போது இந்த பகுதி மருது சகோதரர்களின் பலமிக்க பகுதியாக விளங்கி வந்துள்ளது. இங்கிருந்து காளையார் கோவிலுக்கு சுரங்கம் அமைத்துள்ளனர்.கோட்டையின் உள்ளே இருந்த ரகசிய அறைகள் காலப்போக்கில் பராமரிக்காமல் மூடப்பட்டு விட்டன. பல வரலாற்று நிகழ்வுகளை தன்னகத்தே கொண்ட இந்த கோட்டை இன்று வனங்கள் சூழ்ந்து காடுகளுக்கு மத்தியில் மறைந்துள்ளது.தற்போது இக்கோட்டை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. கோட்டையின் சுவர்களின் பூச்சுகள் பெயர்ந்து கட்டடம் முழுவதும் சேதமாகும் நிலையில் இருக்கிறது.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் இந்த கோட்டையை புதுப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்தாண்டு தமிழக சட்டசபையில் சங்கரபி கோட்டை சுற்றுலாத்தலமாக மாற்றப்படும் என்று அறிவிப்பு செய்தனர். ஆனால் மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.வரலாற்றையும் நமது சுதந்திரத்தின் போராட்டத்தையும் தன்னுள் வைத்திருக்கும் இந்த கோட்டையை புதுப்பித்தால் நமது வீர மறவர்களின் வரலாற்றை வருங்கால சந்ததியும் அறிந்து கொள்ளும் நிலை உருவாகும்.தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

மலையாள ஆட்டத்தில் இருந்து பாதுகாக்க ஆணையம் தேவை.


தினஇதழ் Home / சிறப்பு பகுதிகள் / பக்கத்து வீட்டு பெண் என்னை ‘பட்டி’ என்று திட்டுவார்
பக்கத்து வீட்டு பெண் என்னை ‘பட்டி’ என்று திட்டுவார்

பக்கத்து வீட்டு ப் பெண் என்னை ப் ‘பட்டி’ என்று திட்டுவார்

சென்னை, ஆக. 10
மலையாளி லாபிகளிடமிருந்து தமிழக மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறினார்.இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், பக்கத்து வீட்டு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். தன் மீதான குற்றச்சாட்டு குறித்து ஜேம்ஸ் வசந்தன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:‘‘ராதா வேணு பிரசாத், தற்போது நாங்கள் இருக்கும் வீட்டின் இடத்தை கடந்த 2 வருடங்களுக்கு முன்பு விலைக்கு கேட்டார். எங்களுடைய கனவு வீடான அதை விற்க மாட்டோம் என கூறினோம். அதையடுத்து அவர் பல்வேறு வகையில் எங்களை மிரட்டி வந்தார். அவர் அடிக்கடி அத்துமீறி தகாத வார்த்தையில் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதனை தொடர்ந்து கடந்த 2011ம் ஆண்டு, அவர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்.
ஆனால் காவல்துறை முதல் தகவல் அறிக்கையை கூட அவர் மீது பதிவு செய்ய வில்லை. ஒய்வு பெற்ற மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி அவருக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டு வருகிறார். கடந்த ஆகஸ்டு 4ம் தேதி எங்களது வீட்டிற்கு வந்த நீலாங்கரை காவல்துறை ஆய்வாளர் புகழேந்தி, காவல்துறை உதவி ஆணையர் அழைத்து வரச் சொன்னார் என கூறி காவல் நிலையங்களுக்கு, செல்லாமல் தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக உணர்ந்த என் மனைவியும் நானும் அங்கிருந்து புறப்பட முற்பட்ட போது நான் கைது செய்யப்பட்டேன். இதற்கிடையே என்னை பார்க்கும் போதெல்லாம், ‘பட்டி’ (நாய்)என்று அழைப்பார். எனவே இது போன்ற மலையாளி லாபிகளிடமிருந்து அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். இவ்வாறு ஜேம்ஸ் வசந்தன் நிருபர்களிடம் கூறினார்

புதன், 7 ஆகஸ்ட், 2013

இலங்கை : தேர்தல் - பொம்மை அரசை உருவாக்க சூழ்ச்சி


  தின இதழ் Home / சிறப்பு பகுதிகள்
இலங்கை வடக்கு மாகாணத்தில் தேர்தல்பொம்மை அரசை உருவாக்க சூழ்ச்சி

இலங்கை வடக்கு மாகாணத்தில் தேர்தல் - பொம்மை அரசை உருவாக்க சூழ்ச்சி

சென்னை, ஆக. 7
இலங்கை வடக்கு மாகாணத்தில் நடைபெற உள்ள தேர்தலில் பொம்மை அரசை உருவாக்க சூழ்ச்சி நடப்பதாக கருணாநிதி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கை:கடந்த மாதம் 16ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ் ஈழம் ஆதரவாளர்கள் அமைப்பின் கூட்டம் என்னுடைய தலைமையில் நடைபெற்ற போது நிறைவேற்றப்பட்ட, இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும், இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்பது உள்பட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த தீர்மானங்களை தமிழக மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும், இந்திய மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும், சிங்கள ஆதிக்க வெறிக்கு எதிராக தமிழர் எழுச்சியை ஒன்று திரட்டவும், ‘டெசோ’ இயக்கத்தின் சார்பில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில், தமிழகம் முழுதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில், ‘தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்’ நடத்துவதென டெசோ இயக்கத்தின் சார்பில் முடிவெடுத்து அறிவித்ததற்கிணங்க, நாளைய தினம் சென்னையில் என்னுடைய தலைமையிலும், மதுரையில் கி. வீரமணி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதற்கிடையே இலங்கையில் செப்டம்பர் 21ம் தேதி நடைபெறவுள்ள வடக்கு, வடமேற்கு, மத்திய மாகாணக் கவுன்சில்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 2ம் தேதியோடு முடிவடைந்து விட்டது.அதனையொட்டி பேசிய இலங்கை பிரதமர் டி.எம். ஜெயரத்னே, ‘மாகாணக் கவுன்சில்களுக்கான காவல் துறை அதிகாரம் மற்றும் நிலம் சம்பந்தமான உரிமைகள் பறிக்கப்படும்’ என்று தெரிவித்திருக்கிறார். இதிலிருந்து இவருடைய பேச்சின் மூலம் 13வது சட்டத் திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்து, வடக்கு மாகாணத்தில் உரிமைகள் ஏதும் தராத ‘பொம்மை’ அரசு ஒன்றை உருவாக்க எண்ணிடும் சூழ்ச்சிதான் என்று தெரிகிறது.இதனை எதிர்க்கும் வகையிலேதான் நாளை நம்முடைய ஆர்ப்பாட்டம் அமையவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தினை வெற்றிகரமாக ஆக்கித் தரவேண்டிய கடமை நமக்கு உள்ளது.’’இவ்வாறு கூறியுள்ளார்.