Iraianbu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Iraianbu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 மார்ச், 2011

சுற்றுலா சென்றால் புத்துணர்வு ஏற்படும் : இறையன்பு இ.ஆ.ப.,, பேச்சு



சென்னை : ""சுற்றுலா செல்வதால், மன அழுத்தம் நீங்கி புத்துணர்வு ஏற்படும்,'' என, சென்னை பல்கலை கருத்தரங்கில் இறையன்பு பேசினார். சென்னை பல்கலையின் இந்திய வரலாற்றுத் துறை சார்பில், சுற்றுலா குறித்த கருத்தரங்கு நடந்தது. வரலாற்றுத் துறை தலைவர் பேராசிரியர் வெங்கடராமன், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் இறையன்பு ஐ.ஏ.எஸ்., பெங்களூர் நேஷனல் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் பரினீதா பங்கேற்றனர்.

இதில், சுற்றுலாவின் இனிமைகள் என்ற தலைப்பில், இறையன்பு ஐ.ஏ.எஸ்., பேசியதாவது: இன்ப சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, கலாசார சுற்றுலா, உணவு சுற்றுலா, வணிக சுற்றுலா, கல்வி சுற்றுலா என சுற்றுலாவில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான சுற்றுலா பயணத்தை மேற்கொள்கின்றனர். தமிழகத்தில் மருத்துவ சுற்றுலா வரும் பயணிகள் இன்பச் சுற்றுலா செல்லும் அளவுக்கு மாறுகின்றனர். ரஷ்யர்கள் தஞ்சைக்கு வந்து தமிழ் கற்றுக் கொள்கின்றனர். அங்குள்ள கோவில்களில் உள்ள ஓவியங்கள், கல்வெட்டுகளை ஆய்வு செய்கின்றனர். ஆனால், நம்மவர்கள் அதனருகில் நின்று புகைப்படம் எடுத்து சென்று விடுகின்றனர். சுற்றுலா என்பது மிக முக்கியமானது. ஒவ்வொருவரும் பயணம் செய்தால் தான் மன அழுத்தம் நீங்கி, புத்துணர்வு ஏற்படும். எனவே, அனைவரும் பயனுள்ள சுற்றுலா செல்லுங்கள். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் குறைந்தது 10 ஆயிரம் மைல்கள் பயணம் செய்ய வேண்டும். 10 ஆயிரம் புத்தகங்களை படிக்க வேண்டும். இவ்வாறு இறையன்பு பேசினார்.

சனி, 15 மே, 2010

பணிக்குச் செல்லும் பிள்ளைகளை படிக்க வைக்க ஒரு வழி



ஓருநாள் நான் காரில் சென்று கொண்டிருக்கும்போது, சிக்னலுக்காகக் காத்திருந்தேன். காரின் ஜன்னல் கண்ணாடியைத் தட்டும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். ஒரு சிறுமி கையேந்தினாள். குழந்தைகளை இப்படி பிச்சை எடுக்க அனுப்புகிறார்களே என்று ஒரு விநாடி கோபம் வந்தது. பின்பு என்னை நானே சமாளித்துக்கொண்டு, சில சில்லரைகளைப் போட்டேன். அதற்குள் சிக்னல் விழுந்தது. வண்டிகள் நகரத் தொடங்கின. நகரும் வண்டிகளையும் பொருள்படுத்தாமல் அந்தச் சிறுமி குறுக்கில் ஓடினாள். அப்படி அவசரமாக அவள் எங்கு செல்கிறாள் என்று பார்த்தேன். மறுபக்கம் அவளது தாயிடம் சென்று தான் பெற்ற சில்லரைகளைக் கொடுத்தாள். அவள் தாயின் முகத்தில் மகிழ்ச்சி. அந்தச் சிறுமியை அரவணைத்துக் கொண்டாள்.குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானதும் தன் பெற்றோரைக் கவனிக்கிறாரா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும், எந்தக் குழந்தையுமே தங்கள் தாயின் முகத்தில் வருத்தத்தைப் பார்க்க விரும்புவதில்லை. அப்படிப் பார்த்தால் அவர்கள் மனம் படாத பாடு படுகிறது. தங்கள் பெற்றோர்கள்தான் அவர்களுடைய உலகம். எனவே, தனக்கு அடுத்த வேளைக்கு உணவளிக்க பெற்றோர்கள் சிரமப்படுகிறார்கள், அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம்தான் பெரும்பாலான சிறுவர்களை வேலைக்குச் செல்லும் கட்டாயத்துக்கு உள்படுத்துகிறது.குழந்தைகளை வேலைக்கு அனுப்பக்கூடாது என்று பேசப்படுகிற பெரிய பெரிய மாநாடுகளில்கூட, எடுபிடி வேலைகளில் குழந்தைகள் ஈடுபடுவதை நாம் காண்கிறோம். பெரிய பெரிய நிறுவனங்களில் தூய்மை துப்புரவு சம்பந்தப்பட்ட பணிகள் வெளி ஆள்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் அளிக்கப்படுகிறது.அந்த ஒப்பந்தத்தில் குழந்தைகளைப் பணியில் அமர்த்தக் கூடாது என்ற கட்டுப்பாடும் உள்ளது. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகள் ஒப்பந்த அளவில்தான் இருக்கின்றனவே தவிர நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அப்படி வேலை செய்யும் குழந்தைகளை அழைத்து விசாரித்தால் வீட்டு நிலவரத்தின் காரணத்தால் வேலைக்கு வருவதாகக் கூறுகின்றனர்.இதில் இன்னும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், அப்படி குழந்தைகளை வேலைக்கு அமர்த்துபவர்கள் சட்டத்தைக் காட்டி பிள்ளைகளிடம் கூறுகின்றனர் - "சட்டப்படி உங்களை வேலைக்கு அமர்த்தினால் எங்களுக்குத் தண்டனை கிடைக்கும். இருப்பினும் உங்களுக்கு உதவுவதற்காக உங்களை வேலையில் சேர்த்துக் கொள்கிறோம். நாளைக்கு ஏதாவது மாட்டிக் கொண்டால் ஆபத்துதான்‘.இதைக் கேட்டு சிறுவர்களும், முதலாளி தமக்கு ஏற்படும் இன்னலைச் சகித்துக் கொண்டு தங்களுக்கு உதவுவதாகக் கருதி அவர்களிடம் விசுவாசமாக நடந்து கொள்கின்றனர். அப்படியிருக்கும் சிறுவர்கள் பல இடங்களில் அதிக அளவில் கசக்கிப் பிழியப்படுகின்றனர். உலகமறியா சிறுவர்கள், ஒருபக்கம் வீட்டுச் சுமையைச் சுமந்துகொண்டும் மறுபக்கம் முதலாளியின் நன்றிக் கடனைச் சுமந்துகொண்டும் பாடுபடுவதைக் கண்டால் மனம் வேதனை அடைகிறது. இதற்கு வழி என்ன? குழந்தைகளை வேலைக்கே அமர்த்தக் கூடாது என்ற சட்டம் இந்த நிலையை மாற்றுமா? அப்படி மாற்றியிருந்தால் இன்று எல்லா குழந்தைகளும் பள்ளிக்கூடத்தில்தானே இருக்க வேண்டும். ஆக பெற்றோரின் பொருளாதார நிலை சீர்பட்டால் ஒழிய இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது மிகவும் கடினமான ஒன்றுதான்.இங்கு மகாத்மா காந்தி நடத்திய "டால்ஸ்டாய் ஃபார்ம்' நினைவுக்கு வருகிறது. காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் நிற வெறியை எதிர்த்து சத்யாகிரகம் செய்பவர்களுக்காக "டால்ஸ்டாய் ஃபார்ம்' என்ற சத்யாகிரக கூடத்தை நிறுவினார். இங்கு சத்யாகிரகப் போராட்டம் நடத்தி, சிறைக்குச் சென்ற குடும்பத்தினரும் அவர்களது குழந்தைகளும் தங்கி இருந்தனர். சமைப்பது, துணி துவைப்பது மற்ற சுகாதாரப் பணிகளைப் பார்ப்பது என்ற தினசரி வேலைகளைத் தவிர கூடாரம் அமைப்பது, தனக்குத் தேவையான காலணிகள் தயாரிப்பது போன்ற வேலைகளும் சத்யாகிரகிகளே செய்து கொள்ள வேண்டும் என்பது அவர்கள் தங்களுக்கு விதித்துக் கொண்ட விதியாகும்.அப்படியிருக்கும்போது, பிள்ளைகளும் ஆசிரமப் பணிகளில் ஈடுபட்டனர். அப்படி ஈடுபட்ட குழந்தைகள் தங்கள் படிப்பை இழந்துவிடக் கூடாது. குழந்தைப் பருவ விளையாட்டுகளை அவர்கள் தவறவிட விட்டுவிடக் கூடாது என்று எண்ணிய காந்திஜி இதற்கான ஓர் ஏற்பாட்டைச் செய்தார். அதாவது ஆசிரமத்தில் ஓரளவு படித்தவர்கள் தினமும் மதிய வேளைகளில் இந்தப் பிள்ளைகளுக்குப் படிப்பு சொல்லித் தர வேண்டும். தவிர அவர்களுடன் விளையாடவும் வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படி ஆசிரமத்தின் அனைத்துக் குழந்தைகளுக்கும் தினமும் பாடம் கற்பிக்கப்பட்டது. காந்திஜியும் கற்பித்தார். இதில் விசேஷம் என்னவென்றால், பெற்றோரின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில், குழந்தைகளின் மதங்களுக்கு ஏற்ப அவரவர் மத நூல்களும் அவர்களுக்குச் சொல்லித் தரப்பட்டது. இப்படிப் படித்த பிள்ளைகள் பிற்காலத்தில் நல்ல நிலையில் இருந்தார்கள் என்று காந்தியே கூறியிருக்கிறார்.நாமும் இந்த வழியை ஏன் பின்பற்றக்கூடாது? பிள்ளைகளைப் பணியில் அமர்த்தவே கூடாது என்பதற்குப் பதிலாக அப்படி அமர்த்தப்படும் பிள்ளைகள் படிப்பதற்கான வசதிகளை நிர்வாகம் செய்து தர வேண்டும் என்று விதிமுறை செய்யலாம் அல்லவா.இப்படிப்பட்ட பிள்ளைகளுக்காக அரசாங்கமே அங்கங்கு பகுதி நேரப் பள்ளிகளை நடத்தலாம். பிள்ளைகளின் பள்ளிக்கான செலவுகளையும், படிப்பதற்கான செலவுகளையும் நிர்வாகம் ஏற்க வேண்டும்.இப்போது மத்திய அரசு அலுவலகங்களிலும் வங்கிகளிலும் ஊழியர்களுக்கான பல பயிற்சிகள் வேலை நேரத்திலேயே நடத்தப்படுகின்றன. இதைப்போன்றே காலை 10 மணி முதல் 5 மணி வரை பணிநேரம் என்றால் அதில் மதியம் 3 முதல் 5 வரை படிப்புக்காகச் செலவிடப்பட வேண்டும்.இப்படிச் செய்யும்போது பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கும் உதவ முடியும் தன்னையும் உயர்த்திக் கொள்ள முடியும். அப்படிச் செய்யும் நிர்வாகம் பணிநேரம் முடிந்து ஒரு மணிநேரம் விளையாடவும் வசதி செய்து தர வேண்டும்.
கருத்துக்கள்

Similar suggestion of educating children was (hope it is still being practised) practised when Mr.Iraianbu IAS was collector in Kanchipuram. Such good persons are very rare in power..

By siva
5/15/2010 4:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

புதன், 10 பிப்ரவரி, 2010

ஞாபக சக்தியை மேம்படுத்த குறுக்கு வழிகள் இல்லை



சேலம், ​ பிப். 7:​ மாணவ,​ மாணவிகள் தங்களது ஞாபக சக்தியை மேம்படுத்த குறுக்கு வழிகள் எதுவுமில்லை என்று தமிழக சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறைச் செயலர் வெ.இறையன்பு கூறினார்.சேலத்தில் மனித நேய மக்கள் சேவை மன்றம் சார்பில் நடத்தப்பட்ட பிளஸ் 2 மாதிரித் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ,​ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எம்.குணசேகரன் வரவேற்றார். முதன்மைக் கல்வி அலுவலர் ராஜராஜன்,​ மாநகராட்சி ஆணையர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் மாணவ,​ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி இறையன்பு பேசியது:பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவ,​ மாணவிகளுக்கு அடுத்து வரும் 20 நாள்களும் மிகவும் முக்கியமானவை. பிளஸ் 2 தேர்வு ஆரம்பிக்கப்பட்டபோது முதல் பிரிவில் நான் தேர்வு எழுதினேன். ஏற்கெனவே இத் தேர்வு நடைபெறவில்லை என்பதால் எந்தெந்த கேள்விகள் வினாத்தாளில்இடம் பெறும் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது எந்தெந்த பாடத்தில் இருந்து எத்தனை கேள்விகள் வரும்,​ எந்த மாதிரியான வினாக்கள் இடம்பெறும் என்றெல்லாம் அனைவருக்கும் தெரியும்.ஒரு காலத்தில் தமிழகம் தான் வணிகத்தில் உலகத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. வங்கக் கடல் சோழர்களின் ஏரியாகத் திகழ்ந்தது. ஆனால் அதன் பிறகு அறிவை விருத்தி செய்யாததாலும்,​ அடிவருடி பிழைத்ததாலும் நமது பெருமைகளை இழக்க நேரிட்டது. ஆனால் ஒவ்வொரு நொடியிலும் விழிப்புடன்,​ ஆக்கப்பூர்வமாகச் செயல்படுபவர்களை இந்த சமுதாயம் ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. இதை மனதில் வைத்து மாணவர்கள் செயல்பட வேண்டும்.தேர்வு நேரத்தில் பயத்தை விலக்க மனதில் தொடர்ந்து நேர்மறை எண்ணங்களை திரும்பத் திரும்ப கூறிக் கொள்ள வேண்டும். நல்லவற்றை தொடர்ந்து காட்சிப்படுத்த வேண்டும். படிக்கும்போது ஆர்வத்துடனும்,​ விருப்பத்துடனும் படித்தால் அது மனதில் பதிந்து விடும். வெண்டைக்காய்,​ வல்லாரை கீரை சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று கூறுவதை நம்பி குறுக்கு வழியில் செல்ல முயற்சிக்கக் கூடாது.ஒரு விஷயத்தை நீண்ட நாள்கள் நடைமுறையில் பயன்படுத்தாமல் இருந்தாலும்,​ ஒரு விஷயத்தை படிக்கும்போது கவனச்சிதறல் இருந்தாலும்,​ விருப்பமின்றி படித்தாலும் நிச்சயம் அது மறதிக்கு வழி வகுக்கும்.எந்த ஒரு விஷயத்தையும்,​ பழக்கத்தையும் தொடர்ந்து 21 நாள்கள் மேற்கொண்டால் அதுவே நம் வழக்கமாகி விடும். மேலும் சுழற்சி முறையில் பாடங்களைப் படித்தால் நினைவில் கொள்ள முடியும். கடினமான பகுதிகளை குழுவாக சேர்ந்தோ,​ ஆசிரியர் முன்னிலையிலோ படிக்க வேண்டும். தேர்வுக் காலத்தில் மோர்,​ இளநீர் போன்ற சத்தான உணவையே உண்ண வேண்டும்.ஒரு மணி நேரம் படிப்பதை 10 நிமிஷங்கள் மனதில் சொல்லிப் பார்க்க வேண்டும். மனப்பாடம் செய்தே ஆக வேண்டும் என்று உள்ள பகுதிகளை எழுதி வைத்து தினமும் ஒரு மணி நேரம் படிக்க வேண்டும். தேர்வுக்கு இரண்டு மணி நேரம் இருக்கும்போதே படிப்பதை நிறுத்திவிட்டு தேர்வுக்குத் தயாராக வேண்டும் என்றார் இறையன்பு.
கருத்துக்கள்

சரிதான்..

By thangaraja
2/9/2010 9:22:00 PM

oru nalla paada thittangalai namadhu arasu kondu varavendum.....ini varum kalangalil purindhu padikum,padipae nirkum.....ippirukum mug up paada stylai matri piditha paadangalai thervu seitdhu padkikum thittam varavendum....

By sano
2/9/2010 5:32:00 PM

நம் நாட்டின் கல்வித் திட்டம் போல் ஒன்றுக்கும் பிரயோஜமில்லாத திட்டம் வேறெங்கும் இருக்கிறதா என்று தெரியவில்லை. யார் அறிவாளி என்றால் "நன்றாக மனப்பாடம் செய்துவிட்டு தேர்வுவரை நினைவில் வைத்து இருந்துவிட்டு விடைத்தாளில் அப்படியே எழுதிவிட்டு அதற்கப்புறம் கஜினி சூர்யா மாதிரி மறந்து போகிறவன்தான்" என்பது இங்கே எல்லோராலும் ஒப்புக்கொண்டு விட்ட வரையறை. இந்த மாதிரி ஒரு ஐடியா நம் பாடத்திட்டத்தினை உருவாக்கியவர்களுக்கு எங்கிருந்துதான் கிடைத்ததோ தெரியவில்லை. படிக்கும் பாடத்தை புரிந்துகொண்டு படித்தால் அது எத்தனை நாளானும் மறக்கவே மறக்காது. புரியவில்லை என்றால் அடுத்த நிமிஷமே மறந்து போகும். உதாரணத்துக்கு வேகம் என்றால் என்ன? சென்ற தொலைவை எடுத்துக்கொண்ட நேரத்தால் வகுக்க கிடைப்பது வேகம் என்று அப்படியே உரு போட்டு எழுதும் நம் மாணவர்கள், மணிக்கு 50 KM வேகத்தில் செல்லும் வண்டி 2 மணி நேரத்தில் எவ்வளவு தூரம் செல்லும் என்று கேட்டால் பதில் சொல்ல மாட்டார்கள். புத்தியை கொஞ்சம் கூட உபயோக்கிக்க வழியே இல்லாத படத் திட்டத்தை போட்டுவைத்து ஒரு மாணவனின் தனித்தன்மையை மழுங்கடிக்கச் செய்வதுதான் நம் கல்வி திட்டத்தின் சாதனை. தேர

By jayadeva
2/9/2010 5:19:00 PM

நம் நாட்டின் கல்வித் திட்டம் போல் ஒன்றுக்கும் பிரயோஜமில்லாத திட்டம் வேறெங்கும் இருக்கிறதா என்று தெரியவில்லை. யார் அறிவாளி என்றால் "நன்றாக மனப்பாடம் செய்துவிட்டு தேர்வுவரை நினைவில் வைத்து இருந்துவிட்டு விடைத்தாளில் அப்படியே எழுதிவிட்டு அதற்கப்புறம் கஜினி சூர்யா மாதிரி மறந்து போகிறவன்தான்" என்பது இங்கே எல்லோராலும் ஒப்புக்கொண்டு விட்ட வரையறை. இந்த மாதிரி ஒரு ஐடியா நம் பாடத்திட்டத்தினை உருவாக்கியவர்களுக்கு எங்கிருந்துதான் கிடைத்ததோ தெரியவில்லை. படிக்கும் பாடத்தை புரிந்துகொண்டு படித்தால் அது எத்தனை நாளானும் மறக்கவே மறக்காது. புரியவில்லை என்றால் அடுத்த நிமிஷமே மறந்து போகும். உதாரணத்துக்கு வேகம் என்றால் என்ன? சென்ற தொலைவை எடுத்துக்கொண்ட நேரத்தால் வகுக்க கிடைப்பது வேகம் என்று அப்படியே உரு போட்டு எழுதும் நம் மாணவர்கள், மணிக்கு 50 KM வேகத்தில் செல்லும் வண்டி 2 மணி நேரத்தில் எவ்வளவு தூரம் செல்லும் என்று கேட்டால் பதில் சொல்ல மாட்டார்கள். புத்தியை கொஞ்சம் கூட உபயோக்கிக்க வழியே இல்லாத படத் திட்டத்தை போட்டுவைத்து ஒரு மாணவனின் தனித்தன்மையை மழுங்கடிக்கச் செய்வதுதான் நம் கல்வி திட்டத்தின் சாதனை. தேர

By jayadeva
2/9/2010 5:19:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

சனி, 30 ஜனவரி, 2010

தேர்வுகளை மகிழ்ச்சியாக எதிர்கொள்ள வேண்டும்



திருவண்ணாமலை, ​​ ஜன.​ 29:​ தேர்வுகளை மகிழ்ச்சியாக எதிர்கொள்ள வேண்டும் என மாணவ,​​ மாணவியருக்கு தமிழக அரசின் சுற்றுலாத் துறை செயலாளர் வெ.இறையன்பு அறிவுறுத்தி உள்ளார்.செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ.​ டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் ஏற்பாட்டில் ​10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஸ்ரீ ராஜீவ்காந்தி உயர்கல்வி வழிகாட்டி முகாம் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடந்தது.விஷ்ணுபிரசாத் எம்.எல்.ஏ.​ வரவேற்றார்.​ ஆரணி மக்களவை உறுப்பினர் எம்.கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார்.​ முகாமில் பங்கேற்று இறையன்பு பேசியது:​ ஒவ்வொரு மாணவ,​​ மாணவியரும் குறிப்பிட்ட நோக்கத்துடன் செயல்பட வேண்டும்.​ எந்தப் பணியைச் செய்தாலும் ஒரே நோக்கத்துடன் செய்தால் தான் அப்பணியை செம்மையாக செய்ய முடியும்.​ ஓரே பணியை பலராலும் செய்ய முடியாது.​ வளர்ச்சி பெற்ற நாடுகள் அனைத்திலும் பலதுறை பணியாளர்கள் இருந்ததால் தான் அவ்வளர்ச்சி சாத்தியமானது.​ நமது நாட்டிலும் வேலைவாய்ப்புக்கு பஞ்சமில்லை.​ வேலையில்லாத் திண்டாட்டம் எதுவும் கிடையாது.​ ஏராளமான வேலைகளுக்கு தகுதியான ஆள்கள் கிடைப்பதில்லை.​ ​இந்தியாவில் தற்போது மருத்துவ சுற்றுலா பெருகி வருகிறது.​ இதற்கு நமது நாட்டில் குறைந்த செலவில் கிடைக்கும் தரமான சிகிச்சை முறையே காரணமாகும்.​ இந்திய மருத்துவத் துறை பணியாளர்களுக்கு அயல்நாடுகளில் சிறந்த வரவேற்பு உள்ளது.​ ​​ திறமை,​​ உழைப்புக்கு எப்போதும் மதிப்புண்டு.​ இரு பண்புகளைக் கொண்டவர்கள் தான் மிகுந்த உயர்நிலையை அடைந்துள்ளனர்.​ நமது மாணவ,​​ மாணவியருக்கு வெளியுலகத் தொடர்புகள் மிகவும் தேவைப்படுகிறது.​ நகர்ப்புற மாணவர்களைக் காட்டிலும் கிராமப்புற மாணவர்கள் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கின்றனர்.​ மாணவ,​​ மாணவியர் தங்கள் பெற்றோருக்காகவோ,​​ ஆசிரியருக்காகவோ படித்தல் கூடாது.​ தங்களுக்காக படிக்க வேண்டும்.​ தேர்வு அறையில் செய்ய வேண்டியவற்றை முன்கூட்டியே நாள்தோறும் இரவு நேரத்தில் திட்டமிடுதல் வேண்டும்.​ தேர்வுகளை மகிழ்ச்சியாக எதிர்நோக்கினால் வெற்றி நிச்சயம்.​ ஒவ்வொருவரும் தங்களுக்குள் மறைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொணர முயல வேண்டும்.​ தங்களுக்கு பிடித்தமான துறைகளை தேர்வு செய்து செயல்பட்டால் முன்னேறலாம்.​ அதே போல் மாணவர்களுக்கு ஒழுக்கம் மிகவும் முக்கியம்.​ தகவல் தொடர்பு திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.​ பாடப் புத்தகங்களை தவிர வேறு நல்ல பல நூல்களை வாசிக்க வேண்டும் என்றார் இறையன்பு.மாவட்ட ஆட்சியர் மு.ராஜேந்திரன்:​ திருவண்ணாமலை மாவட்டம் கல்வித் தரத்தில் மிகவும் பின் தங்கி உள்ளது.​ கல்வித் தரத்தை உயர்த்த மாணவர்கள்,​​ ஆசிரியர்கள் இணைந்து செயல்பட வேண்டும்.​ கல்வியறிவு பெருகினால் தான் சமூகம் முன்னேறும்.எதைப் படிக்கிறோம் என்பது முக்கியமில்லை,​​ எப்படிப் படிக்கிறோம் என்பது முக்கியம் என்றார்.​ ​ முதன்மைக் கல்வி அலுவலர் வை.பாலமுருகன்,​​ மாவட்டக் கல்வி அலுவலர் புண்ணியகோட்டி,​​ முன்னாள் எம்.எல்.ஏ.​ வ.அன்பழகன்,​​ நகராட்சித் தலைவர் ஏ.எம்.சம்பத்,​​ துணைத் தலைவர் மோகனவேல் ஆகியோர் பேசினர்.அண்ணா பல்கலை நேனா தொழில்நுட்பத் துறை இயக்குநர் டாக்டர் ஜெயவேல்,​​ சென்னை மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் பி.முத்துசாமி,​​ அரசுத் தேர்வாணைய அதிகாரி கே.பாண்டியன்,​​ வேளாண்மை நிபுணர் ராதாகிருஷ்ணன்,​​ பல் மருத்துவர் பி.ஆர்.வாசு ​ ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.​ நகர திமுக செயலர் செல்வபாண்டி,​​ காங்கிரஸ் நிர்வாகிகள் கே.தாமோதரன்,​​ க.நடேசதேவர்,​​ கோபு,​​ காந்தி,​​ பெருமாள்,​​ கோபால் உள்படபலர் பங்கேற்றனர்.​ நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாணவ,​​ மாணவியர் கலந்து கொண்டனர்

வியாழன், 17 டிசம்பர், 2009

General India news in detail

சென்னை : அரசு இசைக் கல்லூரிகளில் பணி மூப்பின் அடிப்படையில் பதவிகள் வழங்கப்படுவதாக, பண்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.



சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகளில், பயிற்றுவிக்கப்படும் பட்டயப் படிப்புகள் அனைத்தும், மூன்று ஆண்டுகால பட்டயப் படிப்புகளாகும். நட்டுவாங்கத்தில் ஓராண்டு பயிற்சி ஏதும் வழங்கப்படுவதில்லை. நட்டுவாங்கத்தில், இரண்டு ஆண்டு பயிற்சிக்கு பின் நட்டுவாங்கக் கலைமணி பட்டயம் வழங்கப்படுகிறது. இசைக் கலைமணி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் இசை ஆசிரியர் பயிற்சியில் நேரடியாக சேர இயலாது. இசை ஆசிரியர் பயிற்சியில் சேருவதற்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு இசைக் கல்லூரிகளில் உள்ள பயிற்றுனர், விரிவுரையாளர், பேராசிரியர், கல்லூரி முதல்வர் ஆகிய பணியிடங்களுக்கு, தனித்தனியே பணி விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படியே, அவர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.



தமிழகத்தில் உள்ள இதர கல்லூரிகளில் உள்ளது போல், விரிவுரையாளர் ஒருவர் பட்ட மேற்படிப்போ அல்லது முனைவர் பட்டமோ படித்திருந்தால் கூட, பணி மூப்பின் அடிப்படையில் தான் விரிவுரையாளரிலிருந்து பேராசிரியராகவோ, பேராசிரியரில் இருந்து கல்லூரி முதல்வராகவோ பதவி உயர்வு பெற இயலும். எனவே, பணியில் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவர், தான் முதுநிலை பட்டம் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருந்தால், சிறப்பு நிலையாகக் கொண்டு நேரடியாக பணி மூப்பினைத் தவிர்த்து பேராசிரியராகவோ, முதல்வராகவோ நியமனம் செய்திட விதிமுறைகளில் வழிவகை இல்லை. இவ்வாறு இறையன்பு தெரிவித்துள்ளார்.



//////////////////////////////////////////////////////////////////////////////////////////
என்ற போதும் இந்நடைமுறைக்கு மாறாகப் பள்ளி ஆசிரியர்களில் இருந்து எந்தப் பணி மூப்பும் பார்க்காமல் விதிமுறைகளுக்கு மாறாக நேரடியாக இசைக் கல்லூ்ரிகளில் நியமிக்கப்பட்டவர்கள் நியமனங்களை நீ க்கினாலும் அவ்வாறு நியமித்தவர் மீது நடவ டிக்கை எடுத்தாலும்தான் இவ்வறிக்கைக்கு மதிப்பு இருக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

சனி, 28 நவம்பர், 2009

'தூரிகையில் தமிழகம்': முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்



சென்னை, நவ. 27: தமிழக சுற்றுலாத் துறை தயாரித்துள்ள "தூரிகையில் தமிழகம்' என்ற நூலை முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்டார். தமிழ்நாடு சுற்றுலாத் துறை தனியார் நிறுவனத்துடன் இணைந்து "தூரிகையில் தமிழகம்' என்று நிகழ்ச்சியினை சென்னை கிண்டியில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் அண்மையில் நடத்தியது. நிகழ்ச்சியில் தமிழகத்தின் புகழ்பெற்ற ஓவியர்கள் பலர் கலந்து கொண்டு தமிழகத்தில் உள்ள சுற்றுலா மையங்களை ஓவியங்களாகத் தீட்டினர். அதனை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். அந்த ஓவியங்களைத் தொகுத்து "தூரிகையில் தமிழகம்' என்ற தலைப்பில் புத்தகமாக தமிழக சுற்றுலாத் துறை தயாரித்துள்ளது. புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஓவியங்களுக்கு கீழே தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி ஆகிய மொழிகளில் அதுகுறித்த விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தமிழகத்தின் தொன்மையான சின்னங்களையும், பாரம்பரிய பண்பாட்டு கூறுகளையும் உணர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை அலுவலகங்கள், விருந்தினர் இல்லங்கள், இதர மாநிலங்களில் உள்ள சுற்றுலா அலுவலகங்கள் அனைத்திலும் இந்த புத்தகம் பார்வைக்கு வைக்கப்படும். தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இப்புத்தகத்தை முதல்வர் கருணாநிதி வெளியிட முதல் பிரதியை தலைமைச் செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதி பெற்றுக் கொண்டார். சுற்றுலா, பண்பாட்டுத்துறை செயலர் வெ. இறையன்பு, சுற்றுலா வளர்ச்சி இயக்குநர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

தமிழ்நாட்டின் கலை பண்பாட்டு உணர்வுகளை வெளிப்படுத்தும் பாராட்டிற்குரிய முயற்சி. புத்தகத்தைப பார்வையாக மட்டும் வைத்தால் பயனில்லை. ஒவ்வோர் உணவகங்களிலும் இந்நூலில் உள்ள படங்களைக் காட்சிக்கு வைக்க வேண்டும. அப்பொழுதுதான் சுற்றுலாப் பயணிகளும பொது மக்களும் பயனுறுவர்; நம் நோக்கமும் நிறைவேறும். மேலும் அறைகளின் பெயர்களைத் தமிழக வரலாற்று நாகரிகப் பண்பாட்டுச் சிறப்புகளை அறியும் வண்ணம் தமிழில் வைக்க வேண்டும். நவீனப் படங்கள் என்று இல்லாமல் மரபு சார்ந்த படங்களுக்கே முதன்மை அளிக்க வேண்டும். இது குறி்த்து நான் 1995 இல் தமிழ்நாடு உறைவகத்தின் மதுரை மண்டல மேலாளரிடம் அறிக்கை அளிததிருந்தேன். ஏற்றுக் கொண்டு செயல்படத் தொடங்கும் பொழுது ஏனோ நின்று விட்டது. துடிப்பான செயற்பாடும் சிந்தனையும் மிக்க முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் இதன் செயலராக உள்ளதால் எண்ணினால் விரைந்து நிறைவேற்றுவார். சுற்றுலாத் துறைக்கும் அரசிற்கும் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/28/2009 3:09:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

Top City news update

சென்னை: தமிழகத்தில் உள்ள சுற்றுலா மையங்களை ஓவியங்களாக தீட்டி உருவாக்கப்பட்டுள்ள, "தூரிகையில் தமிழகம்' என்ற புத்தகத்தை முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டார். தமிழ்நாடு சுற்றுலாத்துறை, "தூரிகையில் தமிழகம்' என்ற நிகழ்ச்சியை தனியார் நிறுவனத்தின் பங்கேற்புடன் சென்னை ராஜாஜி மண்டபத்தில், முன்பு நடத்தியது. இதில், தமிழகத்தின் புகழ்பெற்ற ஓவியர்கள் பலர் கலந்து கொண்டு, தமிழகத்திலுள்ள சுற்றுலா மையங்களையும், பண்பாட்டுச் சாரங்களையும் ஓவியங்களாக தீட்டினர். இந்த ஓவியங்களைப் பொதுமக்கள் பார்த்து பாராட்டினர். இந்த ஓவியங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு, "தூரிகையில் தமிழகம்' என்ற பெயரில் புத்தகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவிங்கள் பற்றிய குறிப்புகள் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச் மற்றும் ஜெர்மன் மொழிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த விளக்கங்களோடு இப்புத்தக்தைக் காணும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், தமிழகத்தின் தொன்மைச் சின்னங்களையும், பாரம்பரியப் பண்பாட்டுக் கூறுகளையும் அறிந்து உணர்ந்து மகிழ வாய்ப்பு ஏற்படும். சென்னையில் நேற்று, தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி இப்புத்தகத்தை வெளியிட, முதல் பிரதியை, கனிமொழி பெற்றுக் கொண்டார்.


வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

பிடித்தது: எனக்குப் பிடித்த புத்தகம்



சின்ன வயதில் கைக்குக் கிடைக்கும் புத்தகங்களையே புரட்டிப் பார்க்கும் வாய்ப்புகள் கிடைத்தன. "இரும்புக் கை மாயாவி, இமயத்தில் மாயாவி, மஞ்சள் பூ மர்மம்' போன்ற முத்து காமிக்ஸ் புத்தகங்களே அகராதிகளைப் போல எங்கள் கைகளில் அதிகமான புழக்கத்தில் இருக்கும். அப்போது பரிசுப் புத்தகங்களாக பாரதியாரின் கவிதைகளும், வனவிலங்குகள் பற்றிய குறிப்புகளும் கிடைக்கும்.கல்லூரிப் பருவத்தில் "முன்னேற்றப் பதிப்பகம்' மூலம் சலுகை விலையில் கிடைக்கும் பல பொதுவுடைமைப் புத்தகங்கள் எனக்குள் சமூகம் சார்ந்த உள்ளுணர்வை ஏற்படுத்தின. அப்போதுதான் "குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்' புத்தகம் வாசிக்கக் கிடைத்தது. "வால்காவிலிருந்து கங்கை வரை' நூலைப் படிக்கும்போது ஒப்புமையை உணர முடிந்தது.கல்லூரி நாட்களில் புதுக் கவிதை இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது. வெகுஜன இதழ்களில் வருகிற வரிகளை இரசித்து, உணவுக் கூடங்களில் நடக்கும் விவாதங்கள் சுவாரசியமானவை. கல்லூரி முடித்துப் போட்டித் தேர்வுக்கான ஆயத்தங்களில் இலக்கியம் கைகளிலிருந்து நழுவ, பொதுஅறிவு, சரித்திரம், பூகோளப் புத்தகங்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. களப்பணியின் பணியே படிப்பானது; மக்களே புத்தகமானார்கள்; அரசு இலக்குகளே மனப்பாடப் பகுதிகளாயின; ஆய்வுக் கூட்டங்களே வாசக வட்டங்களாயின.மனம் குறித்த கேள்விகளும், வாழ்வின் நோக்கம் குறித்த சிந்தனைகளும் கிளர்ந்தெழுந்த நேரத்தில் ஜென், கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ, ரூமி, கலீல்கிப்ரான், ரிச்சர்ட் பேக், இக்ரீஸ் ஷா, நீட்சே, காஃப்கா போன்ற நூல்கள் உதவின. அவற்றின் மூலம் துணிச்சலும், எதிர்காலம் குறித்த அச்சமின்மையும் ஏற்பட்டன.மதுரையின் ஐந்தாண்டுப் பணியில் வாசிப்பை இயக்கமாக்க ஒரு கருவியாக இருக்க முடிந்தது. ஆங்கில இலக்கியம், மனவியல், மேலாண்மை ஆகியவற்றின் பரிச்சயம் அப்போது நிழற்குடையை நிறுவி தனிமை வெப்பத்தைத் தணித்தன.ஷேக்ஸ்பியர், மார்லோ, டிக்கன்ஸ், ஷெல்லி, கீட்ஸ், வேர்ட்ஸ் வர்த், அரவிந்தர், தாகூர் என வாசிப்பை விசாலமாக்க, பணி பன்னீர் தெளித்தது.எத்தனையோ அரிய புத்தகங்கள் வாழ்வின் ஒவ்வொரு பிடியையும் தீர்மானிக்கும் திக்குகளாக எனக்கு இருந்திருக்கின்றன. வாசிக்கின்ற ஒவ்வொரு வரியையும் வாழ்க்கையோடு தொடர்புப்படுத்திப் பார்க்கும் கலையைக் கற்றபோது, என் படிப்பு அடர்த்தியானது.திருக்குறள் குறித்த மனித வள ஆய்வுக்காக அதைப் பயில ஆரம்பித்தபோது, இன்றைய மேலாண் வல்லுநர்கள் கண்டுபிடித்தவற்றையெல்லாம், உள்ளுணர்வின் மூலம் உணர்த்திய வள்ளுவர் உள்ளம் துள்ள வைத்தார்.தகவல் தொடர்பு பற்றி ‘நஹஹ் ண்ற் ப்ண்ந்ங் நட்ஹந்ங்ள்ல்ங்ஹழ்ங்' (பட்ர்ம்ஹள் கங்ங்ஸ்ரீட்)தொகுத்த நூல் முக்கியமானது. அதில் உள்ள பல குறிப்புகளைத் திருக்குறளுடன் தொடர்புப்படுத்திப் பார்க்க முடியும்.அண்மையில் ‘ஊழ்ன்ண்ற்ள் ர்ச் ஜ்ஹழ்’என்ற நூல் எனக்குப் போரைப் பற்றிய புதிய பார்வையை வழங்கியது. ‘ரண்ள்க்ர்ம் ர்ச் ற்ட்ங் ஸ்ரீழ்ர்ஜ்க்’ என்கிற நூல் அவ்வப்போது தலைதூக்கும் கர்வத்தை அமுக்கித் தள்ளியது. ‘பட்ங் ஆப்ண்ய்ந்’ என்கிற நூல் எனக்கு மூளையின் மின்னல் வேகச் செயலை விளக்கியது. ஜேரிட் டயமண்ட் எழுதிய ‘The rise and fall of the third chimpanzee’ இனிய நூல்.இப்படி எண்ணற்ற நூல்கள் நம் பார்வையை விரிவாக்கிக் காட்டும் திறனோடு சந்தையில் வந்து விழுந்தவண்ணமிருக்கின்றன. தன் வாழ்வில் 500 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய ஐசக் அஸிமோவ், விமானப் பயணத்திலேயே புத்தகத்தை முடித்த எட்வர்ட் டீ பேனோ ஆகியோர் பற்றிப் படிக்கும்போது நம் வாசிப்பின் வறுமையை உணர முடியும்.இந்த ஒவ்வொரு நூலுமே என்னைப் பரிணாம வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லும் தட்பவெப்ப மாற்றங்கள். இங்கு தகுந்தவையே எஞ்சுகின்றன; மிகுந்தவையே மிஞ்சுகின்றன; விஷயமுள்ளவையே விஞ்சுகின்றன

வியாழன், 6 ஆகஸ்ட், 2009

புராதனச் சின்னங்களைப் பாதுகாக்க முறையான சட்டம் இல்லை: தலைமைச் செயலர் ஸ்ரீபதி



சென்னை, ஆக. 4: நாட்டில் புராதனச் சின்னங்களைப் பாதுகாக்க முறையான சட்டம் ஏதும் இல்லை என தமிழக தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி தெரிவித்தார்."புராதனச் சின்னங்களைப் பாதுகாத்தல்' என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடந்தது.கருத்தரங்கைத் துவக்கி வைத்து தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி பேசியதாவது:நமது நாட்டில் முறையான பராமரிப்பு இல்லாததால் துவாரகா உள்ளிட்ட நினைவுச் சின்னங்கள் சிதிலமடைந்து வருகின்றன.நாம் அன்பை பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தி வருகிறோம். அந்த அன்பை புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பதில் வெளிப்படுத்தினால் அவற்றை நாம் காக்க முடியும்.கல்குவாரிகளுக்கு தடை... நமது புராதனச் சின்னங்கள் பெரும்பாலும் மலைகளில்தான் உள்ளன. எனவே நினைவுச் சின்னங்கள் நிறைந்த மலைகளில் கல்குவாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் நமது பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாக்கும் வகையில் கட்டுமானப் பொறியாளர் துறை மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும்.முறையான சட்டம் இல்லை... ஒவ்வொரு புராதனச் சின்னமும் தூரத்தில் இருந்து பார்த்தால்தான் அதன் அழகை ரசிக்கும்படி இருக்கும்.ஆனால் அந்தச் சின்னங்களை சுற்றி இப்போது கட்டடங்களை அதிக அளவில் எழுப்பி வருகின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் அதன் அழகை முழுமையாக ரசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இவற்றைப் பாதுகாக்க முறையான சட்டம் ஏதும் இல்லை. எனவே மக்களே முன்வந்து இவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றார் ஸ்ரீபதி.
சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை செயலாளர் இறையன்பு
, தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் ஸ்ரீதர், சுற்றுலாத் துறை இயக்குநர் மோகன்தாஸ், மத்திய அரசின் தொல்லியல் துறை சென்னை மண்டல கண்காணிப்பாளர் சத்தியபாமா பத்ரிநாத், அறநிலையத் துறை ஆணையர் சம்பத் உள்பட பலர் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.
கருத்துக்கள்

பழமைச் சின்னங்களைத் தூரத்தில் நின்று பார்த்தால் தான் அதன் அழகை ரசிக்க முடியும் ஆனால் அவற்றைச்சுற்றி இன்று பார்வைக்குத் தடையாகக் கட்டடங்களையும் கடைகளையும் எழுப்பி உள்ளனர் என்று சொல்லியிருக்கும் தலைமைச் செயலர் அவற்றைப் பாதுகாக்கச் சட்டம் எதுவும் இல்லாததால் மக்களே முன்வந்து பாதுகாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது இலவு காத்த கிளி கதைதான். மக்களில் பலம் வாய்ந்த ஒரு பகுதியினர் தானே தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்; சாதாரண மக்கள் அதன் அருகே கூட நெருங்க முடியாது. அந்தச் சாதாரண மக்களின் எண்ணமெல்லாம் அரசாங்கமே பழமைச் சின்னங்களைப் பாதுகாத்து எதிர்காலச் சந்ததியினர் காணும் வகை செய்ய வேண்டும் என்பதுதான். அதற்கெனச் சட்டங்கள் இல்லையென்றால் அவற்றை இயற்றியாவது பாதுகாக்க வேண்டும்.

By ப. இராசமோகன்
8/5/2009 12:58:00 PM

புதன், 5 ஆகஸ்ட், 2009

ஆகஸ்ட் 05,2009,00:00 IST





சென்னை : ""புராதனச் சின்னங்களையும், சிற்பங்களையும் பாதுகாப்பதன் மூலம் அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லலாம்'' என, தமிழக சுற்றுலாத் துறைச் செயலர் இறையன்பு தெரிவித்தார். தமிழக சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை சார்பில், "புராதனச் சின்னங்களை பாதுகாத்தல்' என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கு நடத்தப்பட்டது. தமிழக அரசின் தலைமைச் செயலர் ஸ்ரீபதி, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.



நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாட்டின் மீது கொண்ட அன்பை, புராதனச் சின்னங்களை பாதுகாப்பதன் மூலம் வெளிப்படுத்தலாம். மகாபலிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவில், மிகக் கவனமாக பாதுகாக்கப்பட்டும், பல்வேறு காரணங்களால் சிதைந்து வருகிறது. பாறைகளில் செதுக்கப்பட்ட ஓவியங்கள், சிற்பங்கள் போன்றவற்றை பாதுகாப்பது குறித்து, கட்டுமானப் பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மலைகளில் உள்ள புராதனச் சின்னங்கள், ஓவியங்கள், நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கும் வகையில், அங்கு கல் குவாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புராதன சிற்பங்களைச் சுற்றிலும் வீடுகள் எழுப்படுவதால், அவற்றின் கலை அழகு பலருக்கும் தெரியாமல் போகிறது. சுற்றுலா தலங்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. சட்டங்கள் மூலம் இவற்றை தடுக்க இயலாது. மக்களுக்கு அவர்களுக்குள்ளாகவே விழிப்புணர்வு ஏற்பட்டால் தான், பண்டையகால சிற்பங்கள் முழு வீச்சில் பாதுகாக்கப்படும். இவ்வாறு ஸ்ரீபதி கூறினார்.



சுற்றுலாத் துறைச் செயலர் இறையன்பு பேசியதாவது: தமிழகத்தில் உள்ள புராதனச் சின்னங்களையும், சிற்பங்களையும் பாதுகாப்பதன் மூலம் அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லலாம். நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட, இதுபோன்ற பணிப்பட்டறைகள் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் வெவ்வேறு இடங்களில் இதுபோன்ற விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்படும். தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், கங்கை கொண்ட சோழபுரம் கோவில், மகாபலிபுரத்தில் உள்ள சிற்பங்கள் உள்ளிட்ட, பாரம்பரியம் மிக்க, கலைநயத்துடன் கூடிய அரிய சிற்பங்கள் இந்தியாவில் தான் உள்ளன. இந்தியாவை உலகின் அருங்காட்சியகம் என்றே கூறலாம். இந்தியாவில் உள்ளது போல, உலகில் வேறெங்கும் புராதானச் சின்னங்கள் அதிக அளவில் இல்லை. அக்கால சிற்பிகள், முழு ஈடுபாட்டுடன் சிற்பங்களை உருவாக்கி உள்ளனர். அவற்றை பராமரிப்பதும், பாதுகாப்பதும் மக்களின் கடமை. சிற்பிகள் தங்களின் சிற்பங்களில், அவர்கள் பெயரை அச்சிடவில்லை. ஆனால், அதைச் சுற்றிப் பார்க்க வரும் பயணிகள் தங்கள் பெயரை அதில் குறிப்பிடுவதால், சிற்பங்களின் உண்மையான தன்மை சீரழிந்து வருகிறது. இவற்றைத் தடுக்க, பல அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து, விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு இறையன்பு கூறினார்.



இந்நிகழ்ச்சியில், தொல்லியல் துறை முதன்மைச் செயலர் ஸ்ரீதர், சுற்றுலாத் துறை இயக்குனர் மோகன்தாஸ், இந்து சமய மற்றும் அறநிலையத் துறை ஆணையர் சம்பத் மற்றும் சுற்றுலாத் துறையின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வியாழன், 16 ஜூலை, 2009

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்க
மக்களிடம் மன மாற்றம் தேவை:
இறையன்பு



திருநெல்வேலி, ஜூலை 15: மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் தமிழ்நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயரும் என சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை செயலர் வெ. இறையன்பு தெரிவித்தார். திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற "விருந்தினர் போற்றுதும்...விருந்தினர் போற்றுதம்' நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் சுற்றுலாத்துறை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. இத்துறையை மேம்படுத்தும் வகையில் கோயில் நகரங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.30 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதில் குற்றாலத்திற்கு மட்டும் ரூ.4.7 கோடி செலவிடப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிடும் வகையில் முதல் கட்டமாக 400 இளைஞர்களுக்கு வழிகாட்டி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக "எங்கும் ஏறி, எங்கும் இறங்கும்' பஸ் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பஸ் தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் வெற்றியைப் பொருத்து தமிழ்நாட்டின் இதர நகரங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். குற்றாலம் ஏற்கெனவே தேசிய சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்றுள்ளது. அதை மேலும் பிரபலமாக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இது தவிர, தமிழ்நாட்டில் உள்ள பிரபலமடையாத ஏற்காடு, கொல்லிமலை, தாரமங்கலம், பழவேற்காடு, திருக்கடையூர், புளியஞ்சோலை, மேகமலை, திருக்கடையூர் உள்ளிட்ட 18 சுற்றுலா மையங்களை உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இசைப் பிரியர்களை மகிழ்விக்கும் வகையில் சென்னையில் "பூங்காவில் பூங்காற்று' என்ற இசை நிகழ்ச்சி வாரத்தில் ஒரு நாள் பூங்காவில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலாவில் நாட்டுப்புற கலைகளையும் இடம்பெறச் செய்து வருகிறோம் என்றார் இறையன்பு. முன்னதாக, ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற "விருந்தினர் போற்றுதும்... விருந்தினர் போற்றுதும்' நிகழ்ச்சியில் இறையன்பு பேசியதாவது: நம் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டியது நமது கடமை. குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமின்றி எல்லோருமே சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் நிலையில் இருக்கிறோம். உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் நேர்மையாகவும், அன்பாகவும், ஒழுக்கமாகவும் நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடந்து கொள்ளும் ஓட்டுநர்களை அவர்கள் பாராட்டி சுற்றுலாத் துறைக்கு கடிதங்களை எழுதி வருகின்றனர். நல்ல ஓட்டுநர்களை அவர்கள் தொடர்ந்து பயன்படுத்தியும் வருகின்றனர். இதனால் ஓட்டுநர்களின் பொருளாதார நிலை மேம்படும். "சுற்றுலா நட்பு வாகனம்' திட்டத்தில் சேரும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இரண்டு மணி நேர பயிற்சியும் அளிக்கிறோம். அவ்வாறு பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் குற்றாலத்தில் 26 பேரும், சென்னையில் 93 பேரும், மதுரையில் 7 பேரும் உள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும். நமது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் சுற்றுலாப் பயணிகளின் வருகை இரண்டு மடங்கு அதிகரிக்கும். சுற்றுலாப் பயணிகளிடம் அன்பாகவும், அணுசரணையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றார் இறையன்பு. கூட்டத்தில் பங்கேற்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடையும், ரூ. 100-ம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை செயலர் ஆ.சி. மோகன்தாஸ், மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன், மேயர் அ.லெ. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 9 ஜூன், 2009

சிறந்த நூல்களே சிந்தனையைத் தூண்டும்:
இறையன்பு பேச்சு
தினமணி


சென்னை, ஜூன் 8: சிறந்த நூல்களே நம்மை அதிகம் சிந்திக்கத் தூண்டும் என்று சுற்றுலா வளர்ச்சி நிறுவனத்தின் செயலர் வெ.இறையன்பு தெரிவித்தார். எழுத்தாளர் சாந்தகுமாரி சிவகடாட்சம் எழுதிய "கங்கையில் ஒரு சங்கமம்' நூல் வெளியீட்டு விழா மயிலாப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நூலை வெளியிட்டு இறையன்பு பேசியதாவது: சிறந்த இலக்கியப் படைப்புகள் நமக்குள் எண்ண அலைகளை ஏற்படுத்தும். மிகச் சிறந்த நூல்கள் குறைவான பக்கங்களில் எழுதப்பட்டிருந்தாலும், நம்மை அதிக நேரம் சிந்திக்கத் தூண்டும். நமக்கு முன் எழும் கேள்விகளுக்கு அறிவால் விடை தேட முயற்சிக்க வேண்டும். மூளையின் திறன் வளர்ச்சி பெற அறிவு உதவும். ஆனால் இலக்கியம் நமது இதயத்தை வலுப்படுத்தும். மக்களை நல்வழிப்படுத்துவது, அவர்களுக்குள் பரிணாம வளர்ச்சியை ஏற்படுத்துவது ஆகியவை இலக்கியத்தின் பங்காக இப்போது மாறியுள்ளது. படிக்கும் பழக்கம் ஒரு தவம்: இலக்கியமோ அல்லது கலையோ எதுவாயினும் முழுமை பெற வேண்டும். இளைஞர்களுக்கு எதையும் படித்து அறிய வேண்டும் என்ற ஆர்வம் முன்பு இருந்தது. இதனால் புத்தகங்கள் படிக்கும் வழக்கத்தை அவர்கள் தவமாகக் கொண்டிருந்தனர். ஆனால், காலப்போக்கில் இளைஞர்களிடையே வாசிக்கும் பழக்கம் சுருங்கிவிட்டது. வாழ்வில் சோதனைகளை நாம் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். தற்கொலை முடிவுக்கு நாம் ஒருபோதும் வந்து விடக் கூடாது. பிரச்னைகளை எதிர்த்துப் போராடி அடுத்த தலைமுறையை சிறப்பானதாக நாம் உருவாக்க வேண்டும். சவால்கள், அவமானங்கள், புறக்கணிப்புகள், போராட்டங்களை இளைஞர்கள் எந்த அளவுக்கு தங்களின் வாழ்வில் சந்திக்கிறார்களோ அந்த அளவுக்குச் சாதனை படைப்பார்கள். பெற்றோரின் அரவணைப்பில் அதிகம் இருக்கும் குழந்தைகள் பின்னாளில் முருங்கை மரத்தைப் போல வலுவிழக்க நேரிடும் என்றார் வெ.இறையன்பு. சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் வி.கு.சுப்புராஜ்: "கங்கையில் ஒரு சங்கமம்' நூல் சமூகப் பிரச்னையை மருத்துவ நோக்குடன் விளக்குவதாக உள்ளது. எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் இந்த நூல் அமைந்துள்ளது. எனினும் தவறான பழக்கங்களால் மட்டுமே எய்ட்ஸ் நோய் ஏற்படுகிறது என்ற எண்ணம் மக்களிடையே உள்ளது. இதனால் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரை சமுதாயம் ஒதுக்கி வைக்கிறது. இதனால்தான் மற்ற நோய்களைவிட எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. எய்ட்ஸ் விழிப்புணர்வை வலியுறுத்தும் இந்த நூலின் 1,000 பிரதிகளை சுகாதாரத் துறை வாங்கும். நாட்டிலேயே எட்ய்ஸ் கட்டுப்பாட்டில் தமிழகம் முன்னிலை பெற்றுள்ளது என்றார் சுப்புராஜ். இந் நிகழ்ச்சியில் இதய மருத்துவ நிபுணர் என்.சிவகடாட்சம், தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன், பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பக நிர்வாகி ராமசுப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நூலாசிரியர் சாந்தகுமாரி சிவகடாட்சம் ஏற்புரை வழங்கினார்.