kathir லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kathir லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

கடவுளாகவே கண்ணுக்குத் தெரிபவர்கள்!

கடவுளாகவே கண்ணுக்குத் தெரிபவர்கள்!













இவர்கள் படிக்க உதவுபவர் கார்த்திகா இராசுகுமார்.அவரின் இயற்பெயர் எல்.எச்.ராஜ்குமார். அவர் ஊட்டியின் ஹிந்துஸ்தான் போட்டோ ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தவர். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே கார்த்திகா ராஜ்குமார் என்கிற பெயரில் கதைகள், குறு நாவல்களை சாவி,குங்குமம் போன்ற பத்திரிகைகளில் எழுதி வந்தவர், இவரின் "அவன் அவர்கள் அது' நாவல் மிகவும் பிரபலம். அவரிடம் பேசினோம்:
""எல்லாரும் எல்லாம் செய்கிறார்கள் நாம் எதாவது வித்தியாசமாய் நாலு பேருக்கு உதவுகிற மாதிரி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். திருமணம் முடிந்து ஒரு பையன், ஒரு பெண் என்று அழகிய குடும்பம். ஆனாலும் என் மனதில் என்னவோ உறுத்திக் கொண்டே இருந்தது. காரணம் ஊட்டியின் இறக்கங்களிலும் ஏற்றங்களிலும் இருக்கும் ஆடாசோலை, காந்தல், பாலாடை போன்ற கிராமங்கள். ஊட்டி டவுனில் இருந்தது அந்த காப்பகம். ஒரு வயதான அம்மையார், முதியவர்களையும், காமுகர்களால் சீரழிக்கப்பட்டு தங்கள் வாழ்க்கையினைத் தொலைத்தவர்கள், படிக்க வசதியற்ற சிறுவர்களையும் தன் சொந்த பணத்தில் சிறு அறக் கட்டளை வைத்து பாதுகாத்து வந்தார். ஒரு முறை சர்ச்சில் அவரைப் பார்த்தேன். அவரது பெயர் மார்க்கித் செல்வராசா எனவும் அவர் இலங்கையின் ஊட்டி என அழைக்கப்படும் நுவரேலியாவைச் சேர்ந்தவர் என்றும் தன் சொத்துகளை பெரும் பகுதியை விற்று விட்டு சேவை மனப்பான்மையுடன் ஊட்டிக்கே வந்து விட்டதையும் அறிந்தேன். அவர் கணவருடன் அவரை சந்தித்த போது :  ""அம்மா எனக்கும் ஏதேனும் நல்லதை செய்ய வேண்டும் போல உள்ளது. என்னால் ஆன உடல் உழைப்பைத் தருகிறேன்'' என்றேன்.
அவர் சிரித்துக் கொண்டே, வரச் சொன்னார். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் இல்லம் இருந்த இடத்திற்குப் போனேன். ஊட்டியில் புகழ்ப் பெற்ற "ஹாண்டட் ஹவுஸ்' எனப் படும் பங்களா ஒன்று ரேஸ்கோர்ஸ் தாண்டி மேட்டுப் பகுதியில் இருந்தது. அந்த பங்களாவையும் அதைச் சுற்றியிருந்த இடத்தையும் வாங்கி அங்குதான் ஆதரவற்ற அனாதைகளுக்கு புகலிடம் கொடுத்திருந்தார். வாரா வாரம் அங்கு சென்ற
நான் சுத்தம் செய்வது, அலுவலக வேலைகளில் அவருக்கு உதவுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தேன்.
எனது பணியில் இருந்து விருப்ப ஒய்வு பெற்ற நிலையில் அந்த அம்மையார் முழு நேரம் பணிபுரிய என்னை அழைத்தார். நான் அவரிடமும் அவரது கணவரிடமும், ""நான் ரொம்பவும் சென்ஸிட்டிவானவன்,யார் தவறு செய்தாலும் எனக்குப் பிடிக்காது. மனதில் பட்டதை சரி தவறு என்று சொல்லி விடுவேன், நீங்களே தவறு செய்தாலும் சொல்லிவிடுவேன்'' என்றேன். ""அதனால் தான் உன்னை கூப்பிடுகிறோம்'' என்றார்கள்.
அவர்கள் அழைப்பின் பேரில் அந்த சிமர்னா ட்ரஸ்டில் நிர்வாகியாக இணந்தேன். இப்பொழுது அந்த அம்மையார் என்னிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு ஸ்விட்சர்லாந்துக்கு போய் விட்டார். மேனேஜிங் ட்ரஸ்டியாக எனது பள்ளி ஆசிரியரின் மகன் இருக்கிறார். அவர் ( சாம்வேல் பிரபாகர்) ஆசிரியராகவும் பணிபுரிகிறார்.
ஊட்டி என்றால் கோடை வாசஸ்தலம் என்பதுதான் எல்லோருக்கும் தெரியும் இங்கும் ஒரு வேலை கஞ்சிக்கு கஷ்டப்படும் குடும்பங்கள் குடிசைப் பகுதிகள் உண்டு. அப்பா இல்லாதவர்கள்,அங்கஹீனம் ஆகி எந்த பணியும் தொடர இயலாதவர், சிங்கிள் பேரண்ட் இவர்களின் குழந்தைகள் எல்லாருக்கும் கல்வி அளிக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக உள்ளோம். குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்றுக் கொள்ளும் நல்ல கொடையாளர்கள் உள்ளனர். எல்.கே.ஜியில் ஆரம்பித்து கல்லூரிப் படிப்பு வரை உதவுகிறோம். மாதம்  அறுநூற்று ஐம்பது ரூபாய் செலுத்தினால் போதும்.
மூளை வளர்ச்சி குறைவான குழந்தைகள், மற்றும் ஸ்பெஷல் கிட்ஸ் அனைவருக்கும் பள்ளியும் உடற்பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது,பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்ட முதிய வயது பெண்கள். அனாதையாக விடப்பட்ட பெண்கள் இவர்களுக்கு அடைக்கலம் தந்துள்ளோம். உள்ளே பேக்கரி உள்ளது, சமுதாயத்தினால் சீரழிக்கப்பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்பு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இல்லம் தரப்படுகிறது.
எங்களது சிமர்னாவில் கணக்குகளை திறந்தப் புத்தகமாகவே வைத்துள்ளோம். யார் வேண்டுமானாலும் வந்து எங்களின் கணக்குகளைப் பார்க்கலாம். மேலும் எங்கள் பகுதியில் வாழும் மக்களே குழந்தைகளை தத்து எடுத்துள்ளார்கள். ஓர் அறக் கட்டளை சரியாக இயங்கவில்லை என்றால் சொந்த பகுதி மக்கள் பார்வையில் இருந்து தப்ப முடியாது.  எங்களின் சிறப்பான சேவையைப் பார்த்து மக்கள் ஆர்வமுடன் உதவுகிறார்கள்.
ஒரு முறை ஒரு முதியவர் சுற்றிப் பார்க்க வந்தார். சாதாரண உடையில் இருந்தார் அவர். எல்லாவற்றையும் பார்த்த அவர், ""நான் உங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன். சிறு தொகை கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?''  என்று தயங்கி தயங்கி கேட்டார். ""பணம் எவ்வளவு கொடுக்கிறீர்கள்? என்பது முக்கியம் இல்லை. உங்களின் மனம்தான் முக்கியம்'' என்று சொன்னேன். அவர் தான் வைத்திருந்த பழைய துணிப் பையில் இருந்து பத்தாயிரம் ரூபாயை எடுத்து, ""நன்கொடையா வச்சுக்கங்க'' என்றார். ""நான் என்னால் முடிந்த போதெல்லாம் உதவுகிறேன்'' என்று ரசீது வாங்கிப் போனார்.
சேவை மனப்பான்மை குறைந்து வரும் இந்நாளில் இவரைப் போன்றவர்கள் கடவுளாகவே என் கண்களுக்குத் தெரிகிறார்கள்'' என்கிறார் கார்த்திகா ராஜ்குமார்.

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

7th Graduation day of SMK Fomra Institute of Technology

            ஃபோம்ரா கல்லூரி 7 ஆவது பட்டமளிப்பு விழா     

 
 சென்னை தையூரில் உள்ள சிரீ மோதிலால் கன்னையாலால் ஃபோம்ரா தொழில்நுட்பப்பயிலகத்தின் 7 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று(ஏப்பிரல் 7,2012 சனிக்கிழமை) சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரித் தலைவர் திரு சுந்தர்லால் ஃபோம்ரா பட்டமளிப்பு விழாவைத் தொடங்கி வைத்தார். முதல் முனைவர் இராசா வரவேற்புரை யாற்றினார். டாட்டா நெறியுரை பணி மையத்தைச் சார்ந்த திரு இரங்கராசன் சிறப்புரை ஆற்றினார். இந்தியத் தொழில்நுட்பப்பயிலகப் பேராசிரியர்  நரேந்திரன் பட்டமளிப்பு உரை ஆற்றினார்சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற பொறி. அருச்சனா இராணிக்கும் பொறி. தி.ஈழக்கதிருக்கும் பட்டங்கள் வழங்கிப் பின் அனைத்துப் பொறியாளர்களுக்கும் முதுநிலைப் பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கினார் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கினர்.

புதன், 19 ஆகஸ்ட், 2009

"கரண்ட் டி.வி' என்றொரு செய்தி சேனல். கிளிண்டன் அதிபராக இருந்தபோது துணை அதிபராக இருந்த அல்கோரே ஆரம்பித்த சேனல் இது. யூனா லீ, லவ்ரா லிங் என்று இரண்டு பெண் செய்தியாளர்கள், ஆண்டுதோறும் வடகொரிய எல்லையைத் தாண்டி சீனாவுக்குப் போகும் ஆயிரக்கணக்கான அகதிகளைப் பற்றிய செய்திப் படம் ஒன்றை படமாக்கிக் கொண்டிருந்தபோது வடகொரியாவுக்குள் விதிமுறைகளை மீறி சட்டத்திற்குப் புறம்பாக நுழைந்ததாகக் குற்றம்சாட்டி அந்த இரண்டு பெண் செய்தியாளர்களையும் பிடித்து ஜெயிலில் போட்டு விட்டது வட கொரியா. 12 வருட "கடும் வேலை' தண்டனையும் விதித்தது. சென்ற மார்ச் மாதம் இது நடந்தது.
இந்த நிலையில் திடீரென இம்மாதம் 4 ஆம் தேதியன்று வடகொரியாவுக்குப் போனார் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன். 2000 ஆண்டில் அவரது அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக இருந்த மெடலின் அல்பிரைட் வடகொரியா போனதுதான் கடைசி. அதற்குப் பிறகு அந்நாட்டுக்குச் சென்ற அமெரிக்க வி.வி.ஐ.பி கிளிண்டன்தான். இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் கிடையாது. ஐ.நா.வின் தடைகளை மீறி வடகொரியா அணுசோதனை நடத்தியதன் விளைவாக இரு நாடுகளுக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை.
இந்தப் பின்னணியில்தான் பில் கிளிண்டன் அங்கே போனார். வடகொரியா அதிபர் கிம் ஜாஸ் -2 கிளிண்டனுக்கு விருந்து கொடுத்தார். அதிபர் ஒபாமாவின் வாழ்த்துகளை கிம்முக்குத் தெரிவித்தார் பில்.
சந்தடியோடு சந்தடியாக "அந்த இரண்டு பெண் செய்தியாளர்களையும் விடுதலை செய்யுங்கள்' என்று வடகொரியாவை நாசுக்காகக் கேட்டுக் கொண்டார். இதில் ஒரு விஷயம். "அமெரிக்காவுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம்' என்று வடகொரியா அறிவித்த ஒரு வாரத்தில் கிளிண்டன் அங்கே போயிருக்கிறார். இந்தப் பேச்சுவார்த்தை பெண் செய்தியாளர்கள் விடுதலை பற்றியது அல்ல. இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவு பற்றியது.
இன்னொரு விஷயம். கிளிண்டன் இப்போது அதிபர் அல்ல. எனவே, அவரது விஷயம் அதிகாரபூர்வமானதாக இருக்க முடியாது என்ற கருத்தும் எழுந்திருக்கிறது.
யூனா லீ, லவ்ரா லிங் ஆகியோர் விடுதலை? கேள்விக்குறியாகவே இருக்குமோ என்ற அச்சம் போய் ஆச்சரியக்குறியாகிவிட்டது. இரண்டு பேரை வடகொரியா விடுதலை செய்து விட்டது. பில் கிளிண்டன் தான் வந்த விமானத்திலேயே அவர்களையும் அழைத்துப் போய்விட்டார்.

ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புதினுக்கு அவ்வப்போது ஏதேனும் சாகசங்கள் செய்துகொண்டே இருக்க வேண்டும். ஜூடோ தற்காப்புக் கலையில் "பிளாக் பெல்ட்' வாங்கியிருப்பவர் புதின். சமீபத்தில் கிழக்கு ரஷ்யப் பகுதியில் திமிங்கலம் ஒன்றின்மீது ரேடியோ டிரான்ஸ்மிட்டர் ஒன்றை குறிபார்த்துச் சுட்டு பொருத்தி விட்டுத் திரும்பினார். சிக்கலான சாகசம் அது. போர் விமானத்தில் சர்வசாதாரணமாகப் பறக்கக் கூடியவர். சைபீரிய புலி ஒன்றை துணிச்சலாக வேட்டையாடியவர்.
ஆகஸ்டு மாதம் முதல் தேதியன்று இன்னுமொரு சாகசம். இதை வேறு எந்த 56 வயது தலைவரும் செய்திருக்க முடியுமா? என்பது சந்தேகம்.
சைபீரியாவில் பைக்கால் ஏரி என்று ஓர் ஏரி இருக்கிறது. உலகிலேயே மிக ஆழமான ஏரி என்ற பெருமை இதற்கு உண்டு.
மிர்-1 என்ற நீர்மூழ்கி மினி கப்பல் ஒன்றில் ஏறி அமர்ந்தார் புதின். "சர்' என்று 1400 மீட்டர் -கிட்டத்தட்ட 4600 அடி ஆழத்திற்கு அந்த ஏரிக்குள் டைவ் அடிப்பதுபோல அந்த மினி நீர்மூழ்கிக் கப்பலில் போனார். இயற்கை எழில் கொட்டிக் கிடந்தது உள்ளே. தாவரத் தொகுப்பு, விலங்குகளின் தொகுப்பு என்று பைக்கால் ஏரி காட்டிய விழுமிய தோற்றப் பொலிவில் தன்னை மறந்தார்.
உலகில் உள்ள சுத்தமான தண்ணீரில் ஐந்தில் ஒரு பங்கு தண்ணீரை தன்னுள் கொண்டிருக்கும் ஏரி என்பது பைக்காலின் இன்னொரு பெருமை.
கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் 1400 மீட்டர் ஆழத்தில் இருந்து விட்டு வந்த பின்னர் செய்தியாளர்கள் கேட்டார்கள்: ""என்ன இப்படி சாகசத்துக்கு மேல் சாகசமாகச் செய்து கொண்டு போகிறீர்கள்? அடுத்தது என்ன, விண்வெளிப் பயணம்தானே?'
புதின் சிரித்துக்கொண்டே சொன்னார்: "பூமியில் பார்க்க வேண்டியதே ஏராளமாக இருக்கிறது, சாமி. விண்வெளிக்குப் போக இதற்குள் என்ன அவசரம்?'
இன்றைய தேதியில் உலகத் தலைவர்களில் மிக நன்றாக உடல் நலத்தைப் பேணுபவர் புதின்தான். ரொம்ப "நீட்'டாக டிரஸ் பண்ணும் தலைவரும் அவர்தான்.

"இன் தி பிரஸிடென்ட்'ஸ் சீக்ரெட் சர்வீஸ்' என்று ஒரு புதிய புத்தகம் அமெரிக்காவில் வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவின் பல்வேறு அதிபர்களுடன் நெருங்கிப் பழகிய, அவர்களுக்குப் பாதுகாப்பு தந்த, தந்து வரும் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேலான ரகசியப் பாதுகாப்பு அதிகாரிகளைப் பேட்டி கண்டு எழுதப்பட்ட புத்தகம். புத்தகத்தில் வெளியாகியுள்ள சில ரசமான தகவல்கள்.

ஜிம்மி கார்ட்டர் : வெள்ளை மாளிகையில் உள்ள டென்னிஸ் கோர்ட்களில் விளையாட ஊழியர்கள் அதிபரின் அனுமதியைப் பெறவேண்டும் என்று வெளியான செய்தியை மறுத்தவர். தன் பாதுகாப்பு அதிகாரிகளைவிட தன்னால் வேகமாக ஓடி அவர்களை ஓட்டப்பந்தயத்தில் ஜெயிக்க முடியும் என்று சொன்னார்.
ரெனால்டு ரேகன் : ரொம்பவும் கருணை உள்ளம். தங்கள் பணக் கஷ்டம் பற்றி எழுதி தனக்குக் கடிதம் அனுப்புபவர்களுக்கு உதவியாக யாருக்கும் தெரியாமல் தன் தனிப்பட்ட பணத்தை "செக்'காக அனுப்பும் வழக்கம் கொண்டவர்.
லின்டன் ஜான்ஸன் : அடிக்கடி "தண்ணி'. ஒரு தரம் தன் ஓவல் அலுவலகத்தின் ஒரு சோபாவில் தன் செயலாளர்களில் ஒருவருடன் "சில்மிஷம்' செய்து கொண்டிருந்தபோது தன் மனைவியால் கையும் களவுமாகப் பிடிபட்டவர். "மனைவி வருவதை ஏன் எனக்கு முன்கூட்டியே எச்சரிக்கவில்லை' என்று தன் பாதுகாப்பு அதிகாரிகள் மீது எரிந்து விழுந்தார்.
ரிச்சர்டு நிக்ஸன் : இருவரும் இவர் மனைவியும் தனித்தனி அறைகளில்தான் படுத்து உறங்குவார்கள். மனைவி "பேட்' (Pat) குடிப்பழக்கம் கொண்டவர். மார்ட்டினிஸ் மதுவகைகள் அதிகம் பிடிக்கும்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஓர் ஆராய்ச்சி, "உலகிலேயே நார்வே, ஸ்வீடன் நாடுகளைச் சேர்ந்த ஆண்கள்தான் குடும்ப வாழ்க்கையில் மிகவும் கவர்ச்சிகரமான கணவன்மார்களாகக் கருதப்படுகிறார்கள்' என்று தெரிவிக்கிறது.
இந்தக் கவர்ச்சி உடல் சார்ந்தது அல்ல என்பது முக்கியம். குடும்பத்தில் தன் வாழ்க்கைத் துணைவிக்கு, வீட்டு வேலைகளில் உதவுகின்ற மனப்பக்குவமே இந்தக் கவர்ச்சி. வீட்டு வேலை எனும்போது சமையலில், சாமான் கழுவுவதில், குழந்தை பராமரிப்பில் செய்யும் உதவிகளும் அடங்கும்.
"ஒரு திருமணம் நிலைப்பதும், வெற்றி பெறுவதும் ஆணும் பெண்ணும் சமமாக ஒருவருக்கொருவர் வீட்டு வேலைகளில் உதவிகரமாக இருப்பதைப் பொறுத்து அமைகிறதா' என்பதுதான் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியின் தலைப்பு.
"எகாலிடேரியன் நாடுகள்' (Egalitarian countries) என்று சில நாடுகள் உண்டு. பொதுவாக பெண்களின் வேலைகள் என்று முத்திரை குத்தப்பட்ட வீட்டு வேலைகளை ஆண்கள் செய்தால் அது தப்பில்லை. கெüரவக் குறைச்சல் இல்லை என்ற மனப்பக்குவம் வளர்ந்துள்ள நாடுகள் அவை.
நார்வே, ஸ்வீடன் இந்தப் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றன.
மொத்தம் பனிரெண்டு நாடுகளிலிருந்து 20-45 வயதுக்குட்பட்ட 13500 ஆண், பெண்களை பேட்டி கண்டு அதன் அடிப்படையில் ஆராய்ச்சியின் முடிவுகளை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கிறது.
எனவே இனிமேல் நார்வே, ஸ்வீடன் நாட்டு ஆண்களுக்கு உலகளாவிய கல்யாண மார்க்கெட்டில் "டிமாண்ட்' அதிகமானால் வியப்பில்லை.
கவர்ச்சிகரமான கணவர்கள் பட்டியலில் கடைசி இடம் ஆஸ்திரேலிய ஆண்களுக்கு! அவர்களுக்கு வீட்டு வேலைகளைவிட விளையாட்டுப் பந்தயங்களும் பீர் குடிப்பதும் ரொம்பப் பிடிக்கிறதாம்!

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

பிடித்தது: எனக்குப் பிடித்த புத்தகம்



சின்ன வயதில் கைக்குக் கிடைக்கும் புத்தகங்களையே புரட்டிப் பார்க்கும் வாய்ப்புகள் கிடைத்தன. "இரும்புக் கை மாயாவி, இமயத்தில் மாயாவி, மஞ்சள் பூ மர்மம்' போன்ற முத்து காமிக்ஸ் புத்தகங்களே அகராதிகளைப் போல எங்கள் கைகளில் அதிகமான புழக்கத்தில் இருக்கும். அப்போது பரிசுப் புத்தகங்களாக பாரதியாரின் கவிதைகளும், வனவிலங்குகள் பற்றிய குறிப்புகளும் கிடைக்கும்.கல்லூரிப் பருவத்தில் "முன்னேற்றப் பதிப்பகம்' மூலம் சலுகை விலையில் கிடைக்கும் பல பொதுவுடைமைப் புத்தகங்கள் எனக்குள் சமூகம் சார்ந்த உள்ளுணர்வை ஏற்படுத்தின. அப்போதுதான் "குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்' புத்தகம் வாசிக்கக் கிடைத்தது. "வால்காவிலிருந்து கங்கை வரை' நூலைப் படிக்கும்போது ஒப்புமையை உணர முடிந்தது.கல்லூரி நாட்களில் புதுக் கவிதை இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது. வெகுஜன இதழ்களில் வருகிற வரிகளை இரசித்து, உணவுக் கூடங்களில் நடக்கும் விவாதங்கள் சுவாரசியமானவை. கல்லூரி முடித்துப் போட்டித் தேர்வுக்கான ஆயத்தங்களில் இலக்கியம் கைகளிலிருந்து நழுவ, பொதுஅறிவு, சரித்திரம், பூகோளப் புத்தகங்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. களப்பணியின் பணியே படிப்பானது; மக்களே புத்தகமானார்கள்; அரசு இலக்குகளே மனப்பாடப் பகுதிகளாயின; ஆய்வுக் கூட்டங்களே வாசக வட்டங்களாயின.மனம் குறித்த கேள்விகளும், வாழ்வின் நோக்கம் குறித்த சிந்தனைகளும் கிளர்ந்தெழுந்த நேரத்தில் ஜென், கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ, ரூமி, கலீல்கிப்ரான், ரிச்சர்ட் பேக், இக்ரீஸ் ஷா, நீட்சே, காஃப்கா போன்ற நூல்கள் உதவின. அவற்றின் மூலம் துணிச்சலும், எதிர்காலம் குறித்த அச்சமின்மையும் ஏற்பட்டன.மதுரையின் ஐந்தாண்டுப் பணியில் வாசிப்பை இயக்கமாக்க ஒரு கருவியாக இருக்க முடிந்தது. ஆங்கில இலக்கியம், மனவியல், மேலாண்மை ஆகியவற்றின் பரிச்சயம் அப்போது நிழற்குடையை நிறுவி தனிமை வெப்பத்தைத் தணித்தன.ஷேக்ஸ்பியர், மார்லோ, டிக்கன்ஸ், ஷெல்லி, கீட்ஸ், வேர்ட்ஸ் வர்த், அரவிந்தர், தாகூர் என வாசிப்பை விசாலமாக்க, பணி பன்னீர் தெளித்தது.எத்தனையோ அரிய புத்தகங்கள் வாழ்வின் ஒவ்வொரு பிடியையும் தீர்மானிக்கும் திக்குகளாக எனக்கு இருந்திருக்கின்றன. வாசிக்கின்ற ஒவ்வொரு வரியையும் வாழ்க்கையோடு தொடர்புப்படுத்திப் பார்க்கும் கலையைக் கற்றபோது, என் படிப்பு அடர்த்தியானது.திருக்குறள் குறித்த மனித வள ஆய்வுக்காக அதைப் பயில ஆரம்பித்தபோது, இன்றைய மேலாண் வல்லுநர்கள் கண்டுபிடித்தவற்றையெல்லாம், உள்ளுணர்வின் மூலம் உணர்த்திய வள்ளுவர் உள்ளம் துள்ள வைத்தார்.தகவல் தொடர்பு பற்றி ‘நஹஹ் ண்ற் ப்ண்ந்ங் நட்ஹந்ங்ள்ல்ங்ஹழ்ங்' (பட்ர்ம்ஹள் கங்ங்ஸ்ரீட்)தொகுத்த நூல் முக்கியமானது. அதில் உள்ள பல குறிப்புகளைத் திருக்குறளுடன் தொடர்புப்படுத்திப் பார்க்க முடியும்.அண்மையில் ‘ஊழ்ன்ண்ற்ள் ர்ச் ஜ்ஹழ்’என்ற நூல் எனக்குப் போரைப் பற்றிய புதிய பார்வையை வழங்கியது. ‘ரண்ள்க்ர்ம் ர்ச் ற்ட்ங் ஸ்ரீழ்ர்ஜ்க்’ என்கிற நூல் அவ்வப்போது தலைதூக்கும் கர்வத்தை அமுக்கித் தள்ளியது. ‘பட்ங் ஆப்ண்ய்ந்’ என்கிற நூல் எனக்கு மூளையின் மின்னல் வேகச் செயலை விளக்கியது. ஜேரிட் டயமண்ட் எழுதிய ‘The rise and fall of the third chimpanzee’ இனிய நூல்.இப்படி எண்ணற்ற நூல்கள் நம் பார்வையை விரிவாக்கிக் காட்டும் திறனோடு சந்தையில் வந்து விழுந்தவண்ணமிருக்கின்றன. தன் வாழ்வில் 500 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய ஐசக் அஸிமோவ், விமானப் பயணத்திலேயே புத்தகத்தை முடித்த எட்வர்ட் டீ பேனோ ஆகியோர் பற்றிப் படிக்கும்போது நம் வாசிப்பின் வறுமையை உணர முடியும்.இந்த ஒவ்வொரு நூலுமே என்னைப் பரிணாம வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லும் தட்பவெப்ப மாற்றங்கள். இங்கு தகுந்தவையே எஞ்சுகின்றன; மிகுந்தவையே மிஞ்சுகின்றன; விஷயமுள்ளவையே விஞ்சுகின்றன