.M.L.A. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
.M.L.A. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

மக்களவையில் தமிழர்களின் உணர்வுகளை அதிமுக எதிரொலித்தது

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


"மக்களவையில் தமிழர்களின் உணர்வுகளை அதிமுக பிரதிபலித்தது'

First Published : 02 Aug 2011 02:53:43 AM IST


புது தில்லி, ஆக. 1: இந்திய அரசின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கு மக்களவையில் ஆட்சேபத்தை தெரிவித்ததன் மூலம் தமிழர்களின் உணர்வுகளை அதிமுக எம்.பி.க்கள் பிரதிபலித்துள்ளதாக அக்கட்சியின் மக்களவைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மக்களவை நிகழ்வுகளைக் காண வந்த போது அவர்களுக்கு எதிராக அதிமுக எம்பிக்கள் தங்களது ஆட்சேபத்தைத் தெரிவித்தனர்.அப்போது மக்களவைத் தலைவர் மீரா குமார், "இந்திய அரசின் அழைப்பின் பேரில் வந்துள்ள இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை, கெüரவம் அளிக்க வேண்டியது நமது கடமை' என்றார். இதைத் தொடர்ந்து அதிமுகவின் நாடாளுமன்றத் தலைவர் தம்பிதுரையைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் விளக்கம் கேட்டதாகத் தெரிகிறது. அதையடுத்து, அதிமுக எம்.பி.க்கள் மீரா குமாரைச் சந்தித்தனர். அப்போது, எம்பிக்கள் நடந்துகொண்ட விதம் தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக மீரா குமார் கூறியிருக்கிறார். அதற்கு தம்பிதுரை, அதிமுக எம்பிக்கள் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலித்துள்ளனர் என்று கூறியதாகத் தெரியவந்துள்ளது.

வியாழன், 14 ஏப்ரல், 2011

Judgement against the winning of cheranmaadhevi M.L.A. : சேரன்மாதேவி ச.ம.உ.வின் வெற்றி செல்லாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு


மே ௧௩ அன்று தெரிவித்திருந்தால் இன்னும் பொருத்தமாக  இருந்திருக்குமோ! இனயேனும் தேர்தல் வழக்குகளைக் குறிப்பிட்ட குறைந்த அளவு கால வரயறைக்குள் முடிக்க நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!



சேரன்மாதேவி எம்எல்ஏவின் வெற்றி செல்லாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு





சென்னை, ஏப்.13:  2006 பேரவைத் தேர்தலில் சேரன்மாதேவியில் வேல்துரை எம்எல்ஏ பெற்ற வெற்றி செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வேல்துரை தற்போது திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.2006 தேர்தல் நடைபெறும்போது தமிழக அரசு ஒப்பந்தங்களைப் பெற்றிருந்ததால் அவர் பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி அதிமுகவின் பி.எச்.மனோஜ் பாண்டியன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.  அவரது மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வேல்துரை பெற்ற வெற்றி செல்லாது என இன்று தீர்ப்பளித்துள்ளது.இதுகுறித்து கருத்து தெரிவித்த மனோஜ் பாண்டியன்,  வேல்துரை அரசு ஒப்பந்தங்களைப் பெற்றிருப்பதாக 2006 தேர்தலில் மனுத் தாக்கலின்போதே தான் ஆட்சேபம் தெரிவித்ததாகவும், ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.எனினும் தேர்தலுக்குப் பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக மனுத்தாக்கல் செய்ததாகவும், அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதாகவும் அவர் கூறினார். பின்னர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் இன்று தீர்ப்பு வந்துள்ளது என்றார் அவர்.உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி எம்எல்ஏவாக வேல்துரை கடந்த 5 ஆண்டுகாலத்தில் பெற்ற ஊதியம், படிகள் அனைத்தையும் திரும்ப அளிக்க வேண்டும் என மனோஜ் பாண்டியன் தெரிவித்தார்.
கருத்துகள்

delayed justice denied justice.......Best example.
By sundara ram
4/13/2011 7:42:00 PM
இது எப்படி? தேர்தல் அதிகாரிகள் மனுவை தள்ளுபடி செய்கிறார்கள்!!, ஹைகோர்ட்டும் தள்ளுபடி செய்கிறது!!. ஆனால் சுப்ரீம் கோர்ட் தேர்தல் செல்லாது என்று அறிவிக்கிறது. தவறு யார் மீது? தேர்தல் அதிகாரிகளும், ஹைகோர்ட்டும் எதை வைத்து தள்ளுபடி செய்கிறார்கள்?? இம்மாதிரி போனால், நீதியில் நம்பிக்கை போய் விடும்..
By பெபெடோ-USA
4/13/2011 7:22:00 PM
already he enjoyed all mla benefits
By sankar
4/13/2011 7:08:00 PM
நாம் எவ்வளவு பலவீனமான சட்ட விதி முறைகளை வைத்திருக்கிறோம் என்பது வெளிப்படையாக தெரிகிறது. இதுபோன்ற காரணங்களால்தான் அரசியல்வாதிகள் துணிந்து தவறு செய்கிறார்கள்!!! அவமானமே!
By கோபால்
4/13/2011 6:41:00 PM
nalla velai intha theerppu jananaayagaththirkku ethiraaga kidaiththa savukkadiyaag naangal anaivarum paarkkirom..
By ramesh
4/13/2011 6:30:00 PM
is the court waited for this day...?what a judicial system...?why shouldn't the high court judge and election commission officials punished...?
By coutforall
4/13/2011 6:23:00 PM
What happen to Rathapuram constituticency at Tirunelvely District ,Because he is the one of Congress candidate to Rathapuram . If he win after 5 years the same judgement will come . Enna ulakam
By OS Miyakkhan
4/13/2011 6:19:00 PM
what to say? its all our fate......
By te
4/13/2011 5:50:00 PM
இது தானா உங்க டக்கு
By குமார்
4/13/2011 5:48:00 PM
இது போன்ற தேர்தல் வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பு சொல்ல ஒரு குறிப்பிட்ட கால வரையறை வகுத்துக்கொள்ள வேண்டும். தேர்தல் முடிந்து ஒரு ஆண்டுக்குள் தீர்ப்புச்சொல்லவேண்டும். ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வழக்குகளுக்கு வாய்தா கொடுக்காமலும் தள்ளுபடி செய்யாமலும் விசாரித்து தீர்ப்பு சொல்ல வேண்டும்.
By மு.நாட்ராயன்
4/13/2011 5:45:00 PM
நமது நீதி அமைப்பையும் ஜனநாயகத்தையும் கடவுள் காப்பாற்றட்டும்!
By சக்திவேல்
4/13/2011 5:33:00 PM
நமது நீதி அமைப்பையும் ஜனநாயகத்தையும் கடவுள் காப்பாற்றட்டும்!
By சக்திவேல்
4/13/2011 5:33:00 PM
APT REQUEST.
By swaminathan
4/13/2011 5:03:00 PM
The court has shown undue haste to declare this result just on the day of next election. What will be the effect of this judgement.We can wait for another 10 years. Let the lawyers earn money. Let the precious court time be wasted like this,.Long live our judicial system.Only those who wrote opur constitution must come and answer for this effective judgement.
By K.S.Nagarajan
4/13/2011 4:55:00 PM
Excellent judiciary system in India.Enjoy politicians in your 5 year terms. ahmed
By ahmed
4/13/2011 4:47:00 PM
LATE JUSTICE IS DENIED JUSTICE, ANOTHER EXAMPLE SERANMADEVI MLA DISQULIFIED, JUST 5 YRS, WAITING FOR JUSTICE, HIS PERIOD ALSO THE SAME PERIOD. IT IS NOT JUSTICE, IT IS SHAME FOR INDIANS. PASUTHAI GANESAN
By pasuthai ganesan
4/13/2011 4:43:00 PM
இப்போதாவது நீதி கிடைத்ததே !!!!தற்போது இவர் போட்டி இடுவது செல்லுமா ???தாமதமான தீர்ப்பு , நீதி கிடைப்பதில் மறுக்க பட்டதாகவே கருத வேண்டும் !!! ஆயினும் அண்ணா தி மு க விற்கு முதல் வெற்றி !!!
By எல் சி நாதன்
4/13/2011 4:43:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

யார் "எம்எல்ஏ'க்கள்?

எம்எல்ஏக்களுக்கு சென்னையில் இலவசமாக வீட்டுமனை வழங்கப்படும் என்ற அறிவிப்பு பலமுனைகளில் இருந்து எதிர்ப்புகளை உருவாக்கினாலும், இந்த சட்டப்பேரவையின் காலத்துக்குள் வீட்டுமனை வழங்குவதில் முதல்வர் உறுதியாக இருப்பதாகத் தகவல்.இதற்கிடையே, எம்எல்ஏக்களுக்கு மாதம் ரூ. 50,000 ஊதியம் என்ற உயர்வு அறிவிப்பு வேறு.இந்த நேரத்தில்தான் காலப் பொருத்தத்துடன் சில தலைவர்களின் செயல்பாடுகளைத் திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது.காமராஜர் என்றொருவர் தமிழ்நாட்டில் முதல்வராக இருந்தார்! அவர், தனது சொந்த ஊரான விருதுப்பட்டிக்கு (இப்போதைய விருதுநகர்) செல்லும்போது முன்னால் சுழல் விளக்குடன் சென்ற காவல் துறை வாகனத்தை நிறுத்தி "ஏன் சங்கு ஊதிக் கொண்டே செல்ல வேண்டும்?' எனக் கேட்டார்.பின்னொரு முறை தனது வீட்டுக்குச் சென்ற அவர், அங்கே புதிய குடிநீர்க் குழாய் அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். அதிகாரிகளை அழைத்து எனது வீட்டுக்குக் குடிநீர்க் குழாயை அமைக்கக் கேட்டது யார்? என வினவினார்."ஆயிரக்கணக்கானோர் குடிநீரின்றித் தவிக்கும்போது, முதல்வரின் வீடு என்பதால், வீட்டுக்குக் குடிநீர் இணைப்பை இத்தனை வேகத்தில் கொடுப்பீங்களான்னே?' எனக் கேட்டார்.காமராஜர் முதல்வராக இருந்தபோது சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் ஜீவானந்தம். எதிர்க்கட்சியானாலும், அவரது தொகுதிக்குள் ஒரு விழாவில் பங்கேற்க வந்த காமராஜர் "எங்கே ஜீவானந்தம்?' எனக் கேட்டார். அவரது குடிசை வீட்டுக்குச் சென்று "வாங்க ஜீவா, விழாவுக்குப் போகலாம்' என்றார் காமராஜர். "இல்லையில்லை, என்னால் வர முடியாது; எனது வேஷ்டியையும், சட்டையையும் துவைத்துக் காய வைத்துள்ளேன். காய்ந்தபிறகு அதை உடுத்திக் கொண்டுதான் வர முடியும்' என்றார் ஜீவானந்தம்.இப்படி எளிமையாகவும், யதார்த்தமாகவும் வாழ்ந்த பல எம்எல்ஏக்களை, அமைச்சர்களை, முதல்வர்களை, தலைவர்களை இந்தத் தமிழ்ப் பூவுலகம் கண்டுள்ளது.காமராஜரைப் போல, கக்கனைப் போல, ஜீவாவைப் போல இருங்கள் என்று இப்போதுள்ள தலைவர்களை, மக்கள் பிரதிநிதிகளைக் கேட்டுக் கொண்டால் நாம் புத்திபேதலித்தவர்கள். அரசியல் சூழல் வெகுவாக - தலைகீழாக மாறியிருக்கிறது.ரூ. 50,000 ஊதியம் என்பதில்கூட, கார் பயணம், அலுவலகச் செலவுகள் எல்லாமும் சேர்த்துத்தான் என்று விளக்கமளிக்கிறார்கள். போகட்டும், மக்களுக்காக உழைக்க வந்தவர்கள். ஆனால், சிலவற்றை இந்த நேரத்தில் பதிவு செய்ய வேண்டும்.ரூ. 50,000 ஊதியம் வாங்கும் எம்எல்ஏக்கள் தவறு செய்யக் கூடாது. இன்னும் வேண்டுமானால், தேவையான ஊக்க- உதவித் தொகைகளை கூடுதலாகக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால், எவரிடமும், எந்தக் காலமும்- அன்பளிப்பாகக் கூட எந்தப் பொருளையும், பணத்தையும், உதவியையும் பெற்றுக் கொள்ளாதவர்களாக எம்எல்ஏக்கள் மாற வேண்டும்.அவ்வாறு பெறுபவர்களை கையும்களவுமாகப் பிடிக்கும் இன்னொரு காவல் துறைப் பிரிவையும் முதல்வர் உருவாக்க வேண்டும். எந்த அரசியல் தலையீடும் இல்லாத வகையில், அந்தப் பிரிவுக்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும்.நேர்மையான மக்கள் பிரதிநிதிகளாக எம்எல்ஏக்கள் மாற வேண்டும் என்ற நோக்கத்தின் கீழ் ஊதிய உயர்வை அங்கீகரிக்கலாம். ஆனால், எல்லா வகையிலும்- எம்எல்ஏக்களுக்கு இலவச வீட்டுமனை என்பதுதான் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது.தொகுதியின், தொகுதி மக்களின் பிரதிநிதியான எம்எல்ஏ, சென்னையில் இடம் கிடைத்துச் சென்றுவிட்டால்? மக்களை விட்டு அவர் விலகி வெகுதொலைவு சென்றுவிடுகிறாரே? அப்புறம் இன்னொன்றையும் செய்யலாம், எம்எல்ஏக்களிடம் மனுக் கொடுக்க சென்னை செல்பவர்களுக்கு இலவச பேருந்துப் பயண அட்டை, தள்ளுபடி விலையில் ரயில் பயண அட்டைகள்...அடுத்து, எம்எல்ஏக்கள் ஒன்றும் நிரந்தரமானவர்கள் அல்லர். ஐந்தாண்டுகளுக்கு முன்பாகவே ராஜிநாமா செய்பவர்கள் அதிகரித்து வருவதும், இடைத் தேர்தலின்போது மீண்டும் அவர்களுக்கு போட்டியிட இடம் கிடைக்காததும் தற்போதைய அரசியலில் இயல்பான ஒன்றாகி வருகிறது.ஒவ்வொரு தேர்தலின்போதும் புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பது என்பது அனைத்துக் கட்சிகளிலும் இப்போது மாறியிருக்கும் வரவேற்கத்தக்க அரசியல் போக்கு.அப்படியானால், சில பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு முழுவதிலுமிருந்து கணிசமான எண்ணிக்கையிலான அரசியல்வாதிகளுக்கு "அதிகாரப்பூர்வமாகவே' சென்னையிலும் சில வீடுகள், தனி மாவட்டம்(!?), போலீஸôருக்கு இருப்பதைப் போல தனி ரேஷன் விநியோக முறை, தனியாக குறைதீர் ஆணையம்...பிறகு, தேர்தலின்போது மட்டும் உள்ளூரில், தொகுதிக்குள் முகாம்- தனி அலுவலகம், சொகுசான வீடு. இப்படியான அக- புற மாற்றங்கள் விளைவுகள் தமிழகத்தில் ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை.மக்களின் வாழ்க்கைத் தரத்தில், வாழ்வியல் சூழலில் எந்த மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படாது. இன்னமும், இன்னமும் கீழே இறங்கிச் செல்லாமலிருந்தால்தான் ஆச்சரியம்.
கருத்துக்கள்

அரசியல்வாதிகள் அதிகாரமற்ற முறையில் பணத்தைக் குவிப்பது போலவே அதிகார முறையிலும் சம்பாதிக்க விரும்புகிறார்கள். எனவேதான் மனை ஆசை. கட்டுரையாளர் குறிப்பிடுவது போன்ற சூழல் வராமல் இருக்க வேண்டும் என்றால், உடனடியாக இலவச வீட்டுமனைத் திட்டத்தைக கைவிட வேண்டும். தொகுதியில் இருக்க வேண்டிய இவர்களுக்கு எதற்குச் சென்னையில் வீட்டு மனை. மாதத்தில் 15 நாட்களேனும் தொகுதியில் இருக்க வேணடும் என்று சட்டம் கொண்டு வந்து ச.ம.உறுப்பினர்களைத் தொகுதி நலனில் கருத்து செலுத்தச் செய்ய வேண்டும். தொகுதி மேம்பாட்டு நிதியில் செலவழிக்கும் திட்டங்களில் ச.ம.உ., நா.உ., பிற மக்கள் சார்பாளர்கள் பெயர்களைக் குறிப்பிடாமல் உரிய தொகுதியின் பெயரை மட்டும் குறிக்கச் செய்ய வேண்டும். இல்லையேல் அடித்த கொ்ளளை வெளிவராத பொழுது ஏதோ சொந்த உழைப்பில் பெற்ற சொந்தப் பணத்தில் இருந்து நலத் திட்டங்கள் செய்தார்கள் என்று வருங்காலத்தினர் எண்ணக் கூடும். வருவாய் ஆசையின்றி மக்களுக்காகப் பாடுபட எண்ணுபவர்கள மட்டும் அரசியலுக்கு வந்தால் போதும் என்னும் நிலையை உருவாக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/10/2009 2:55:00 AM