வேலைவாய்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேலைவாய்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 23 நவம்பர், 2013

இந்தியப் பொறியியல் பணிக்கு (I.E.S.) விண்ணப்பிக்கலாம். நவ.25 இறுதிநாள்

இந்தியப் பொறியியல் பணிக்கு (I.E.S.)  விண்ணப்பிக்கலாம். நவ.25 இறுதிநாள்
இந்திய ஆட்சிப்பணி போன்று சிறப்பான பணி இந்தியப்  பொறியியல் பணி. இவ்வாண்டில் இப் பணியில் 763 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை  மத்தியத் தேர்வாணையம்(யு.பி.எசு.சி.) வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு நவம்பர் 25ஆம்  நாளுக்குள்  ம.ப.தே.ஆ. இணையதளத்தில் (www.upsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுமுறை, பாடத்திட்டம்  முதலான அனைத்து விவரங்களையும் இந்த இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.  இப்போது பொறியியல்(பி.இ., பி.டெக்.) இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இதனை எழுதலாம்.
இப்பணியில் தேர்ந்தெடுக்கப்பட்டால் தொடக்கத்திலேயே  மாதச்சம்பளம் உரூ.60 ஆயிரம்கிட்டும்.  முதன்மைத்தேர்வு மட்டும்தான் உண்டு.
. முதல் பகுதியில் பொது அறிவு, பொது ஆங்கிலம் (ஒரு பிரிவு),  தொடர்பான பொறியியல் பாடம் (2 பிரிவு) தொடர்பாகத் தெரிவு முறையில் (objective) கேள்விகள் கேட்கப்படும். 200 மதிப்பெண் வீதம் 3 பிரிவுகளுக்கும் மொத்தம் 600 மதிப்பெண். 2ஆவது பகுதியில் விரிவாக விடையளிக்க வேண்டும்.  தொடர்புடைய பொறியியல் பாடத்தில் இருந்து 2 தாள்கள். ஒவ்வொன்றுக்கும் 200 மதிப்பெண் வீதம் 400 மதிப்பெண். ஒட்டுமொத்தமாக 1000 மதிப்பெண். அடுத்த கட்ட தேர்வான நேர்முகத்தேர்வுக்கு 200 மதிப்பெண். பொதுவாக வடநாட்டுப் பல்கலைக்கழகப் பாடமுறையைச் சார்ந்து   வினாக்கள் அமைவதால், அவற்றை  அறிந்து கொண்டால் சிறப்பாக எழுதலாம்.
 
தேர்வு எழுதுநருக்கு வாழ்த்துகள்.


புதன், 2 அக்டோபர், 2013

வேலைவாய்ப்பு விவரங்கள்


மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு : முதல்வர் அறிவிப்பு

மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET.....

பெங்களூர் HAL நிறுவனத்தில் டிரெய்னி பணி

பெங்களூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் நிறுவனமான Hindustan Aeronautics Limited (HAL) நிறுவனத்தில.....

பத்தாம் வகுப்பு, ஐடிஐ படித்தவர்களுக்கு தெற்கு ரயில்வேயில் பணி

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள டிராக்மேன், போர்ட்டர.....

டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பணி

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத.....

பிர்லா கல்வி நிறுவனத்தில் கணக்காளர் பணி

ராஜஸ்தான் மாநிலம் பிலானி நகரில் செயல்பட்டு வரும் பிர்லா கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள தலைமை கணக்கா.....

தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பொது மேலாளர் பணி

தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொது மேலாளர் (எலக்ட்ரிக்கல்) ப.....

இந்திய அருங்காட்சியகத்தில் குரூப் சி பணிகள்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் இந்திய அருங்காட்சியகத்தில் காலியாக உள்ள குரூப் ச.....

ஒரிசா சுரங்க கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மருத்துவ அதிகாரி பணி

புவனேஸ்வரில் செயல்பட்டு வரும் ஒரிசா சுரங்க கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மருத்துவ .....

ஒரிசா சுரங்க கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மேலாளர் பணி

புவனேஸ்வரில் செயல்பட்டு வரும் ஒரிசா சுரங்க கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர்(ந.....

ஒரிசா சுரங்க கார்ப்பரேஷன் நிறுவனத்தில் துணை மேலாளர் பணி

புவனேஸ்வரில் செயல்பட்டு வரும் ஒரிசா சுரங்க கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள துணை மேலா.....

ஒரிசா சுரங்க கார்ப்பரேஷன் நிறுவனத்தில் துணை மேலாளர் பணி

புவனேஸ்வரில் செயல்பட்டு வரும் ஒரிசா சுரங்க கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள துணை மேலா.....

ஒரிசா சுரங்க கார்ப்பரேஷன் நிறுவனத்தில் துணை மேலாளர் பணி

புவனேஸ்வரில் செயல்பட்டு வரும் ஒரிசா சுரங்க கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள துணை மேலா.....

அரியலூர் மாவட்டத்தில் கணினி இயக்குபவர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அரியலூர் மாவட்ட குழந்தைகள் நலக் குழு அலுவலகத்தில் கணினி இயக்குபவர் பதவிக்கு  விருப்பமுள்ளவர்கள் விண்.....

அக்.18 முதல் 23 வரை ராமநாதபுரத்தில் விமானப்படைக்கு ஆட்சேர்ப்பு: இலவசமாக எழுத்துத்தேர்வு பயிற்சி

ராமநாதபுரத்தில் வரும் அக்டோபர் மாதம் 18  ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை விமானப்படை ஆட்சேர்ப்பு நடைபெ.....

கரூர்: கிராம உதவியாளர் பணியிடத்துக்கு அழைப்பு

கரூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் வட்டங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அழைப்பு வி.....

பொறியியல் பட்டதாரிகளுக்கு ரயில்வே நிறுவனத்தில் பணி

இந்திய இரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் RITES Limited என்ற பொதுத்துறை நிறுவனத்தில் காலி.....

இராணுவ கல்லூரியில் பல்வேறு பணி

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் செயல்பட்டு வரும் இராணுவ பயிற்சி பள்ளியில் பல்வேறு துறைகளில்.....

BHEL  நிறுவனத்தில் டெக்னீசியன் பணி

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் BHEL நிறுவனத்தில் காலியாக உ.....

தில்லி அரசில் குரூப் பி, சி பணிகள்

தில்லி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப் பி, சி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்த.....

புதுச்சேரி அரசில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணி

புதுச்சேரி அரசின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் காலியாக உள்ள தொடக்கப்பள்.....

செவ்வாய், 9 ஜூலை, 2013

காவல் படையில் மருத்துவப் பணி

காவல் படையில் மருத்துவப் பணி




இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதற்கு என்றே பிரத்யேகமாக நிறுவப்பட்டதுதான் பி.எஸ்.எப்., எனப்படும் பார்டர் செக்யூரிடி போர்ஸ் ஆகும். இந்த படை இந்திய பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய படைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு 1965 முதல் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்தப் படைக்கு என்றே பிரத்யேகமான மருத்துவமனைகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் பாரா மெடிக்கல் காலியாக உள்ள  பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள்: எல்லைப் பாதுகாப்புப் படையின் பாரா மெடிக்கல் பதவிக்கு எஸ்.ஐ., (ஸ்டாப் நர்ஸ்) - குரூப் பி பதவியில் 5 இடங்களும், ஏ.எஸ்.ஐ.,(பார்மஸிஸ்ட்)-குரூப் சி பிரிவில் 35 இடங்களும், ஏ.எஸ்.ஐ.,(ஓ.டி., டெக்னீசியன்) - குரூப் சி பிரிவில் 9 இடங்களும் நிரப்பப்படுகின்றன.
வயதுவரம்பு: பி.எஸ்.எப்.,பில் மேற்கண்ட பதவிகளுக்கான அதிகபட்ச வயது ஸ்டாப் நர்ஸ் பிரிவுக்கு 30-க்குள் இருத்தல் வேண்டும். இதர இரண்டு பிரிவுகளுக்கு 25-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: ஸ்டாப் நர்ஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் 2 விற்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு நர்ஸிங் பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பை முடித்து மத்திய அல்லது மாநில நர்ஸிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
பார்மஸிஸ்ட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் ப்ளஸ்டூவிற்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு பார்மஸியில் பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆப்ரேஷன் டெக்னிக் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் இதே போல் பிளஸ் 2 படிப்பு முடித்து அதன் பின்னர் ஓ.டி.,யில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
உடற்தகுதிகள்: இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் ஆண்கள் குறைந்த பட்சம் 165 செ.மீ.,ரும், பெண்கள் 150 செ.மி.,யும் பெற்றிருக்க வேண்டும். முழுமையான உடல் தகுதிகளை இணைய தளத்தைப் பார்த்து அறிந்து கொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம்: பி.எஸ்.எப்.,பின் துணை மருத்துவ பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.50/-க்கான டி.டி.,யை 15 மண்டலங்களில் ஏதாவது ஒன்றில் மாற்றத்தக்க வகையில் எடுத்து அனுப்பலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bsf.nic.in/doc/recruitment/r49.pdf  என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.07.2013

பாரத் புவி நிறுவனத்தில் பணி

பாரத் புவி நகர்த்துவோர்(எர்த் மூவர்சு)வ-து நிறுவனத்தில் பணி







பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் என்று முன்னர் அழைக்கப்பட்ட பி.இ.எம்.எல்., நிறுவனம் ரயில் கோச்களைத் தயாரித்தல், சுரங்கப் பணிகளுக்கான உபகரணங்களைத் தயாரித்தல் போன்ற பணிகளுக்காக 1964ல் நிறுவப்பட்டது. தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வரும் இந்த நிறுவனத்திற்கு விக்ஞ்யான் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்., என்ற கிளை நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் கர்னாடகாவின் சிக்மகளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஐ.டி.ஐ., டிரெய்னி பிரிவில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஐடிஐ டிரெய்னி
பயிற்சிக்கான பிரிவுகள்: Moulder, Fitter, Turner, Mechanic(Diesel)
வயதுவரம்பு: 33-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மேற்கண்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு பிரிவுக்கும் பயிற்சியின்போது மாத உதவித்தொகை வழங்கப்படும். அதற்கான விவரத்தை இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தினை போன்று தயாரித்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Chief General Manager, VIGNYAN INDUSTRIES LIMITED, B. H. Road, Haliyur, P B No.4. TARIKERE - 577 228, Chikmagalur Dist. Karnataka.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.07.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bemlindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

இந்துசுதான் நிறுவனத்தில் பயிற்சி அதிகாரிகள் பணி

இந்துசுதான் கல்நெய்(பெட்ரோலிய) நிறுவனத்தில் பயிற்சி அதிகாரிகள் பணி

இந்தியாவில் இயங்கி வரும் பெட்ரோலிய நிறுவனங்களில் எச்.பி.சி.எல்., எனப்படும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் மிக முக்கிய நிறுவனமாகும். இந்த நிறுவனம் பார்சூன் 500 நிறுவனங்களுள் ஒன்றாகும். இந்த துறை சார்ந்த சந்தைப் பங்கில் 20 சதவீத பங்குகளை இந்த நிறுவனம் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தில் ஆபிசர் டிரெய்னிங் வகையிலான 2 பிரிவுகளில் உள்ள 39 காலி இடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஆபிசர் டிரெய்னி, குவாலிடி கண்ட்ரோல்/ஆப்பரேஷன்ஸ், எச்.ஆர்., எனப்படும் மனிதவளம்
வயதுவரம்பு: 27-க்குள் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் வேறுபடும். இணையதளத்தைப் பார்க்கவும்.
கல்வித்தகுதி: குவாலிடி கன்ட்ரோல்/ஆப்பரேஷன்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்.எஸ்.சி., வேதியியலுக்கு இணையான முது நிலைப் படிப்பை அனலிடிகல், பிஸிக்கல், ஆர்கானிக் அல்லது இன்-ஆர்கானிக் கெமிஸ்ட்ரி ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முடித்திருக்க வேண்டும்.
எச்.ஆர்., பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் எச்.ஆர்.,பி.எம்., அல்லது ஐ.ஆர்., போன்ற ஏதாவது ஒரு பிரிவில் 2 ஆண்டு முது நிலைப் பட்டப் படிப்பு அல்லது இதே பிரிவுகளில் சிறப்பு பெற்ற எம்.பி.ஏ., முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் மேற்கண்ட பயிற்சி அதிகாரி பணி இடங்கள் இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு, நேர்காணல், மருத்துவப் பரிசோதனை என்ற நிலைகளை வெற்றிகரமாகக் கடக்க வேண்டியிருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.535. இதனை ஏதாவது ஒரு பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் செலான் வாயிலாக 32315049001 என்ற HPCL Powerjyothi அக்கவுண்ட் எண்ணில் செலுத்த வேண்டும். இதன் பின்னர் ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்திய விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் வயதுவரம்பு உள்ளிட்ட முழுமையான தகவல்களை அறிய www.hindustanpetroleum.com/Upload/En/UPdf/OOTHPCL.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.07.2013