வலைத்தமிழ் 

ஆணி 05, 2052 / 21.08.2021 கிழக்கு நேரம் பிற்பகல் 3.00

தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்

இன்றைய இளம் பெற்றோர்கள், பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் சூழலில் வசிப்பவர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள் என்று பலரும் தங்கள் பேச்சில் எத்தனை விழுக்காடு தமிழ், ஆங்கிலம் கலந்துள்ளது என்று சிந்தித்தால் நம் பேச்சுத்தமிழ் எவ்வளவு மாற்றமடைந்துள்ளது என்று தெரியும். 

இதற்கு என்ன தீர்வு?  எங்கே சென்று இதற்குப் பயிற்சி எடுப்பது?  ஒழுங்கு செய்யப்பட்ட வழிமுறை உள்ளதா?  

வட அமெரிக்காவில் தொடங்கப்படும் “தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்” என்பது குழந்தைகளுக்கானதல்ல, பெறோர்களுக்கானது. வரும் 21/08 அன்று  கிழக்கு நேரம் பிற்பகல் 3 மணிக்கு,  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உங்கள் நாட்டில், உங்கள் ஊரில், உங்கள் பகுதியில், நாம் பேசும் தமிழை தமிழாய் பேசுவோம் வாருங்கள். 

இளையதலைமுறை பெற்றோர்கள் தமிழைத் தமிழாகவும், ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும் பேசுவது மட்டுமே நம் அடுத்த தலைமுறை பிள்ளைகளைச் சரியான தமிழ் பேச ஊக்கப்படுத்தும்.  

இதற்கு வழிகாட்டுதல் குழு, தமிழறிஞர் குழு, வார்த்தைகளைத் தொகுத்த கையேடு, இணையதளம், ஒரு மணி நேர நெறியாளர்ப்  பயிற்சி  ஆகியவை ஏற்படுத்தப்பட்டு ஆர்வமுள்ள தன்னார்வ ஒருங்கிணைப்பாளருக்கு இலவசப் பயிற்சிகள், வழிகாட்டுதல் வழங்கப்படும்..  

உங்கள் ஊரில் இலவச பயிற்சி நடத்த/பயிற்சிபெற பதிவுசெய்யவும்: www.ValaiTamil.org

 



நினைவுக் குறிப்பு :- 1990 களில், 

தமிழ் பேசுக!

தமிழில் பேசுகையில் தமிழிலேயே பேசுக!

தமிழ் எழுதுக!

தமிழில் எழுதுகையில் தமிழிலேயே எழுதுக! 

என முழக்க ஒட்டிகள் அச்சடித்துப் பரப்பியது நினைவிற்கு வருகிறது.

முயற்சி வெல்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்