மூளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மூளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 மே, 2013

அமெரிக்காவில் மூளை அறுவை மருத்துவத்தின் போது நரம்பிசை வாசித்த இளைஞர்

அமெரிக்காவில் மூளை அறுவை மருத்துவத்தின் போது  நரம்பிசை  வாசித்த இளைஞர்
லாஸ்ஏஞ்சல்ஸ், மே 26-

அமெரிக்காவில் மூளை ஆபரேசனின் போது வாலிபர் 'கிதார்' வாசித்த நிகழ்ச்சி ஆன்லைனில் ஒளிபரப்பப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்தவர் பிராட் கார்டன் (39). கிதார் இசைக்கலைஞர். கடந்த 2006-ம் ஆண்டில் இவரது கையில் நடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவருக்கு பக்கவாத நோயும் உருவானது. எனவே, அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில் பக்கவாத நோயை சரிசெய்ய மூளையில் "பேஸ் மேக்கர்" கருவி பொருத்த டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக பிராட் கார்டரின் மூளையில் டாக்டர்கள் ஆபரேஷன் செய்தனர். அப்போது கார்டர் தனக்கு மிகவும் பிரியமான கிதாரில் இசை வாசித்துக் கொண்டே இருந்தார். இந்த நிகழ்ச்சி வீடியோ மூலம் படமாக்கப்பட்டது.

இதற்கிடையே ஆபரேஷன் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. ஆபரேஷனின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி 'டுவிட்டர்' ஆன்லைனில் 500 தடவைக்கும் மேல் ஒளிபரப்பப்பட்டது.

இச்சம்பவம் மருத்துவ உலகில் நடந்த சாதனைகளில் ஒன்று என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

புதன், 5 செப்டம்பர், 2012

மூளை (Brain)

மூளை (Brain)

மூளை

(Brain)

- இலக்குவனார் திருவள்ளுவன்

மூளை, உடற்செயல்களைக் கட்டுப்படுத்தி ஒருமுகப்படுத்தும் உறுப்பு ஆகும். அனைத்துச் செயல்களுக்கான கட்டளைகளும் முளைக்கும் இடம் என்பதால் (முளை>) மூளை எனப்படுகிறது. இருபக்கச் சமச்சீருள்ள உயிரினங்களுக்கு மூளை இருக்கும். மைய நரம்புமண்டலத்தின் முன்பகுதி இதுவே.

நரம்பு மெய்ம்மியால் ஆன மிகப் பெரிய உறுப்பு மூளை. இது, மண்டை ஓட்டின் உள்ளே பாதுகாப்பாக உள்ளது. வெளிச் சவ்வு, நடுச்சவ்வு, உள் சவ்வு ஆகிய மூன்று சவ்வுப் போர்வைகளால் மூடப்பெற்றுள்ளது.

மூளையானது, முன் மூளை, நடு மூளை, பின் மூளை என மூன்று பகுதியாகப் பிரித்து அறியப்படும்.முன்மூளையானது, பெருமூளை, இடை மூளை என இருபகுதியாகும்.

பெருமூளை இரண்டுஅரைக்கோளங்களாகக் காணப்படும். இரு கோளங்களுக்கும் இடையில் (பெருமூளை)நீள்பள்ளம் உள்ளது. பெருமூளையின் மறுபுறம்,

01. உவளிடம்,

02. கீழ் உவளிடம்,

03. அடி உவளிடம்,

04. நடு உவளிடம்,

05. பக்க உவளிடம்

ஆகியன உள்ளன.


தொடர்ச்சிக்கு :

புதன், 27 அக்டோபர், 2010

காகங்களுக்கே அதிக மூளை: புதிய கண்டுபிடிப்பு
26 October, 2010 by admin
காகங்களுக்கு அதிக மூளை இருப்பதாகவும், அவை மனிதர் பேசுவதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் உடையது என்றும் பாரம்பரியமாக தமிழர்கள் நம்பி வந்தனர். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டதால், அவர் வளர்த்து வந்த காகம் கொலையாளியின் வீட்டிற்குச் சென்று அவர் அருந்த இருந்த தேனீருக்குள் நஞ்சைக் கலந்ததாகவும், ஒரு பழைய கதை உண்டு. அது எவ்வளவு தூரம் உண்மை அல்லது பொய் என அப்போது தெரியாது, ஆனால் சமீபகாலமாக விஞ்ஞானிகள் ஒன்றைக் கண்டு பிடித்துள்ளனர்.

பொதுவாக இவ் உலகில் மனிதரைத் தவிர வேறு உயிரினங்கள் கருவிகளைப் பாவிப்பதே இல்லை. சில மிருகங்கள் தனது உணவை பிளக்க கல்பாறைகளைப் பயன்படுத்தினாலும், அவை கருவிகளைப் பயன்படுத்துவது இல்லை. அப்படி இருக்கையில் காகம் மட்டும் தனக்கு உதவும் வகையில் கருவிகளைப் பயன்படுத்தி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக இங்கே இணைக்கப்பட்டுள்ள வீடியோவைப் பாருங்கள், மரக் கட்டை ஒன்றினுள் ஓட்டைகளைப் போட்டு அதனுள் வசிக்கும் சிலவகை புழுக்களை காகங்களால் அவ்வளவு எளிதில் கொத்தித் தின்ன முடியாது. ஏன் எனில் காகங்களின் அலகுகள்(சொண்டு) மிகச் சிறியவை.

எனவே அவ்வாறு ஆழத்தில் இருக்கும் பூச்சிகளை சிறிய சுள்ளித் தடிகளைக் கொண்டு குத்தி வெளியே எடுத்து காகங்கள் உண்ணுகின்றன. இக் காட்சிகள் தெளிவாக படமாக்கப்பட்டுள்ளது. மற்றும் சில வகைப் புழுக்களில் கொடுக்கு காணப்படுவதால் அவை கடிக்கும் தன்மை கொண்டவை. எனவே காகம் சில வகைப் புழுக்களை சுள்ளித்தடியால் குத்தி எடுக்கிறது, கொடுக்குகள் உள்ள புழுக்களை இவை கையாளும் விதமே அலாதியானது. அவ்வகையான புழுக்களை காகங்கள் தடியால் குத்தி வெளியே எடுப்பது இல்லை, மாறாக தடியை அதன் கொடுக்குகளுக்கு இடையே நீட்ட, புழுக்களும் தடியை தனது எதிரி என நினைத்து கடிக்கிறது. அவ்வாறு கடிக்கும் நேரத்தில் கொடுக்குகள் தடியை இறுகப் பிடிக்கும், அப்போது காகம் லாவகமாக அவற்றை வெளியே எடுத்துவிடுகிறது.

பறவை இனங்களில் காகத்திற்கு மூளை அதிகம் என விஞ்ஞானிகள் தற்போது கூறி வருவதையே தமிழர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கூறிவந்தனர் என்பதே உண்மையாகும். சில காகங்கள் தமக்கு பிடித்த சுள்ளித் தடிகளை தம்மோடே வைத்திருப்பதாகவும், அவை பறந்து வேறு இடங்களுக்குச் சென்றால் கூட ஒரு கருவியாக அதைப் பயன்படுத்த அச் சுள்ளித் தடியை தன்னோடு கொண்டு செல்வதாகவும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Send To Friend |   செய்தியை வாசித்தோர்: 2301