தொல்காப்பியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொல்காப்பியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 ஏப்ரல், 2025

உயிரறிவியலின் முன்னோடி – இலக்குவனார் திருவள்ளுவன்

 




     

    1902ஆம் ஆண்டு உலக மக்களை வியப்பில் ஆழ்த்தினார் அறிஞர் சகதீசு சந்திரபோசு. அவர் வெளியிட்ட உயிரினங்கள்-உயிற்றவற்றின் துலங்கல் தன்மை (Response in the Living and Non-Living) என்னும் நூலில் தாவரங்களுக்கு உயிர் உண்டு என்றதால் குழப்பமும்  வியப்பும் ஏற்பட்டு இறுதியில் உலகம் அவரைப் போற்றியது. நம்மிடம் உள்ள அறிவியல் புதையலை அறியாத நாமும் அறியாமையால் இன்று வரையும் அவ்வாறுதான் படித்து வருகிறோம். பாடல் வடிவில் உள்ள தமிழ் இலக்கிய உண்மைகள் யாவும் கற்பனையே என்னும் மாயையில் உள்ளதால் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே அறிஞர் தொல்காப்பியர் தமக்கும் முன்னரே தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதை வெளிப்படுத்தியதை உரியவாறு உலக அறிவியல் அறிஞர்களின் பார்வைக்குக் கொண்டு செல்லத் தவறியுள்ளோம்.



    தொல்காப்பியர்,


    ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
    இரண்டறி வதுவே அதனொடு நாவே
    மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
    நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
    ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
    ஆறறி வதுவே அவற்றொடு மனமே
    நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.
    (தொல்காப்பியம்: மரபியல் 27)

    என

    ஓரறிறவு முதல் ஆறறிவு வரை உள்ள உயிர்களை வகைப்படுத்தி நெறிப்படுத்தியுள்ளனர் அவருக்கும் முன்னோர். அத்துடன் அவர் நிறுத்திக் கொள்ளவில்லை.
    புல்லும் மரனும் ஓரறிவினவே
    பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

    நந்தும் முரளும் ஈரறிவினவே
    பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

    சிதலும் எறும்பும் மூவறிவினவே
    பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

    நண்டும் தும்பியும் நான்கறிவினவே
    பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

    மாவும் மாக்களும் ஐயறிவினவே
    பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

    மக்கள் தாமே ஆறறி வுயிரே
    பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே


    (தொல்காப்பியம்: மரபியல் )

    என வரிசையாக ஓரறிவு- ஆறறிவு உயிர்களை விளக்குகிறார்.

    தமிழ்வழிக் கல்வியை நாம் இழந்ததால் நம் அறிவியல் வளத்தையும் இழந்தோம்! உலகினர்க்குத் தமிழ் அறிவியல் சிறப்பை எடுத்துரைக்கவும் தவறி விட்டோம்! அறிவியல் மேதைகளாகும் வாய்ப்புகளையும் தவற விட்டோம்! அறிவியலில் இப்பொழுதும் சிறந்திருந்தால் உலக நாடுகள் நம்மை மதித்து நம் குரல்களுக்குச் செவிமடுத்து நம் இனமக்களைக் காப்பாற்ற முன் வந்திருப்பார்கள் அல்லவா?

    (படம் – சமச்சீர் கல்விப் பாடம்)

    திங்கள், 28 ஜூன், 2021

    தொல்காப்பியச் சிறப்புப் பொழிவு – மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர்

     அகரமுதல




    மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர்

    தமிழ்த்துறை

    ஆனி 14, 2052:: 28/06/2021

    நேரம்  : மாலை 4.00 மணி   ( இந்திய  நேரம் )

    தொல்காப்பியம் சொல்லிலக்கணம் பொருண்மையிலான இணையவழிச்  சிறப்புச்  சொற்பொழிவு

    தலைப்பு:

    தொல்காப்பியம் சொல்லதிகாரம் வேற்றுமையியல்: கல்வெட்டுத்தமிழில் கொடைப்பொருளும் இரண்டாம் வேற்றுமையுருபும் – சில மொழியியல் விளக்கங்கள்.

    உரையாளர்:

    பேரா.  அப்பாசாமி  முருகையன்

    உயர் ஆய்வு மையம்;

    வரலாறு, மொழிவரலாற்றுப் புலம், 

    பாரிசு.

    தாங்கள் இணைய  இணைப்பு

    Google Meet  link:

    https://meet.google.com/ouk-pcxn-rxm

    PIN: 431 020 853#

    இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இணையச் சந்திப்பில் இணைய இயலாதவர்கள் vel (வேல்) வலையொளியின் நேரலையில் இணையலாம். இணைப்பு முகவரி பின்னர் அனுப்பப்படும்.

    குறிப்பு:

    1. கூகுள் கூட்டச்(Google meet)  செயலி அனுமதிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே நபர்கள் பங்கேற்க இயலும் என்பதால் மற்றவர்கள்YouTube Live Stream –ல் இணையலாம்.

    You tube Live Stream Link for Special lecture on 28/06/2021@4pm

    Link:

    https://youtu.be/YZMTGWst_HU

    1. சிறப்புரையாளருக்கும் மற்றவருக்கும் இடையூறின்றிச் செயலியைப் பங்கேற்பாளர்கள் பயன்படுத்தல் நலம்.

    நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்

    பேரா.  ப. வேல்முருகன்