(சனாதனம் – பொய்யும் மெய்யும் 33-34-தொடர்ச்சி)
- சனாதனம் – பொய்யும் மெய்யும் 35-36
- 35. வேதங்கள் பெண்களைப் போற்றுகின்றன அல்லவா?
- பெண்குழந்தைகளுக்கு எதிராகவே வேதங்கள் பேசுகின்றன. பெண்குழந்தை பிறப்பை அதருவவேதம் இழிவாகக் கூறுகிறது. பெண்குழந்தைகள் பிறந்தால் அக்குழந்தைகளை இறக்கும்படிச் செய்வதாக யசுர் வேதம் கூறுகிறது. அயித்தரேய பிராமணம், பெண்குழந்தை பெறுவது பெருந்துன்பத்திற்கு ஆளாவது என அறிவிக்கிறது. (ஐங்குறுநூற்றுப் பாடலில் தெய்வத்திடம் பெண் குழந்தை வேண்டும் பெற்றோரைக் காணலாம்.)
- 36. சனாதனத்தில் யாவரும் சமம் என்று பொய்யாகக் கூறி வருகிறார்களே!
ஆமாம் இது பொய்தான். சான்றுக்கு ஒன்றைப் பார்ப்போம்
அயோத்தியில் பிராமணன் ஒருவனின் மகன் இறப்பிற்குக் காரணம் சூத்திரன் ஒருவன் தவம் மேற்கொண்டுவருவதுதான் என நாரதர் இராமரிடம் கூறினார், இராமர் அவ்வாறு தவமிருந்த சம்புகனைத் தேடிச்சென்று அவனைத் தவக்கோலத்தில் கண்டான். அக்கணமே தன் வாளால் அவன் தலை வேறு உடல் வேறாகும்படி வாளால் வெட்டிக் கொன்றான். சூத்திரன் தவமிருக்கக்கூடாது என இராமரும் நாரதருமே கூறுகையில் சாதாரண மக்கள் என்ன எண்ண மாட்டார்கள். இத்தகைய சனாதனத்தை நாம் வரவேற்பது முறையா?
“சனாதனச் சேற்றை விட்டு நம் மக்கள் இன்னமும் வெளியேறாதது மட்டுமல்ல. பலருக்கு இன்றும் அந்தச் சேறு சந்தனமாக தெரிகிறதே, அதை எண்ணும்போது தான் துக்கம் மட்டுமல்ல, வெட்கமும் நமக்கு உண்டாகிறது” – அறிஞர் அண்ணாவின் சனாதனம் குறித்தான பார்வை
“மனுவால் எந்த வருணத்தாருக்கு இந்த மனுதரும சாத்திரத்தால் என்ன தருமம் விதிக்கப்பட்டதோ, அதுவே வேத சம்மதமாகும். ஏனென்றால், அவர் வேதங்களை நன்றாய் உணர்ந்தவர்.” அத்தியாயம் 2. சுலோகம் 7.
இவற்றின் மூலம் பிராமணர் அல்லாதவர்கள் பிராமணருக்குரிய வழிபாட்டுச் சடங்குகளைச் செய்யக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிராமணர்களுக்குச் சமமானவர்களாக ஒருபோதும்பிற வகுப்பார் ஆக முடியாது என்பதன்அடிப்படையிலேயே இத்தகைய கருத்துகள் ஆரிய நூல்களில் உள்ளன.
34, 37 ஆம் வினாக்களுக்கான விடைகளையும் காண்க.
– இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக்.63-64
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக