ஆசியவியல் நிறுவனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆசியவியல் நிறுவனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 பிப்ரவரி, 2024

ஆசியவியல் நிறுவனம்: ஆண்டுவிழாவும் கந்துரையாடலும் தமிழ் விழாவும் – 20.02.24 பிற்பகல்

 


மாசி 08.2055 ++ 20.02.24 செவ்வாய் பிற்பகல் 3.30 முதல் 7.30 வரை
இடம்: ஆசியவியல் நிறுவனக் கலையரங்கு


ஆசியவியல் நிறுவனம்
43 ஆவது ஆண்டு நிறைவு விழா

உலகு தழுவிய தமிழ் விழா
மொரீசியசு தமிழர்களுடன் கலந்துரையாடல்
அயலகத் தமிழர் ஆய்வு மையம் – அடிக்கல் நாட்டுதல்
தவத்திரு சேவியர் தனிநாயகம் அடிகளார் அறக்கட்டளை தொடக்கம்
கோயில் புராண நூல் வெளியீடு

போதி தருமரும் ஆசியப் பண்பாடும் – சிற்றுரை
12ஆவது உலகத்தமிழ் மாநாடு அறிவிப்பு

பங்கேற்பு
மாண்புமிகு அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு செஞ்சி மசுதான்
வெளிநாட்டு உள்நாட்டு அறிஞர்கள்
முழுமைக்கு அழைப்பிதழ் காண்க


திங்கள், 27 ஜனவரி, 2020

உருசிய நாட்டில் தமிழும் தமிழரும்: சந்திப்பும் கலந்துரையாடலும்

அகரமுதல

படம் + அலெக்சாண்டர் துபியான்சிகி

தை 20, 2051 / திங்கட்கிழமை / 03.02.2020
மாலை 4.00

ஆசியவியல் நிறுவன வளாகம்

உருசிய நாட்டில் தமிழும் தமிழரும்:
சந்திப்பும் கலந்துரையாடலும்

தலைமை : கென்னடி ஏ.உரோகலேவு (Gennadii A.Rogalev)
உருசிய நாட்டு அறிவியல் பண்பாட்டு மைய இயக்குநர், சென்னை
கலந்துரையாடும் சிறப்பு அழைப்பாளர் : பேரா.அலெக்சாண்டர் துபியான்சிகி(Prof.Alexandar Dubyanskiy)
மிக்க அன்புடன்
சான் சாமுவேல்
இயக்குநர்
ஆசியவியல் நிறுவனம்
செம்மஞ்சேரி

சனி, 18 மே, 2019

மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு, புது தில்லி

அகரமுதல


புரட்டாசி 06-07, 2050 ***  23-24.09.2019

பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர்கள்:

இயக்குநர்ஆசியவியல் நிறுவனம் 
 [ Dr.G.John Samuel,
Founder Director and Secretary
INSTITUTE OF ASIAN STUDIES]
சோழிங்கநல்லூர் (அஞ்சல்), செம்மஞ்சேரிசென்னை  600 119
மின்னஞ்சல்:    info@instituteofasianstudies.com
தொலைபேசி:   24500831, 24501851 , பேசி:           9840526834
இணையத்தளம்:  www.instituteofasianstudies.com

 பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன்
தலைவர், பன்னாட்டுத் திருக்குறள் நிறுவம்,
மொரிசியசு

முனைவர் மு.இராசாராம் இ.ஆ.ப.
தலைவர்,
பன்னாட்டு அமைதிக்கான திருக்குறள் நிறுவம்
சென்னை

புதன், 30 ஜனவரி, 2019

சென்னையில் திருக்குறள் ஆய்வரங்கம்

அகரமுதல
தை 26, 2050 சனி  09.02.2019 காலை 10.00
மாநாட்டு அரங்கம், ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி
திருக்குறள் உலகப் பொது நூல்  (Thirukkural as a Book of the World)
தொடக்கவுரை :
 பேராசிரியர் முனைவர் துரைசாமி, துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழகம்
ஆய்வுரைஞர்கள்:
பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன்,மொரிசியசு
நீதிபதி ஆர், மகாதேவன்
முன்னாள் அரசு செயலாளர்  கிறித்துதாசு காந்தி ,
முன்னாள் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைசெயலாளர்
முனைவர் மூ. இராசாராம்
பேராசிரியர் சோ.ந. கந்தசாமி,
பேராசிரியர் க. செல்லப்பன்,
பேராசிரியர் ப. மருதநாயகம்,
பேராசிரியர் சான் சாமுவேல்,
பேராசிரியர் வெ. முருகன்,
பேராசிரியர் செய பிரகாசு  நாராயணன் 
நிறைவுரை: பேராசிரியர் பொன்னவைக்கோ, பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்
குறிப்பு:  வரும் செட்டம்பர் மாதம் தில்லியிலுள்ள யுனெசுகோ கலையரங்கில் மூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது. இதையடுத்து நான்காவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு பாரீசிலுள்ள யுனெசுகோள தலைமை அலுவலக வளாகத்தில் அடுத்த ஆண்டு ஆகட்டு மாதம் நடைபெறவுள்ளது.

செவ்வாய், 22 ஜனவரி, 2019

சீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்

அகரமுதல

தை 15, 2050 செவ்வாய்  29.01.2019 மாலை 4.00
ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி
பேராசிரியர் ஈசுவரி (சொ சின் (Zhou Xin),
(துறைத் தலைவர், 
 தமிழ்மொழித்துறை, 
அயல் மொழிப் பல்கலைக் கழகம், 
பீகிங்கு, சீனா)
தமிழன்பர்களோடு கலந்துரையாட உள்ளார்.
வாய்ப்புள்ள ஆர்வலர்கள் வருக!
முனைவர் சான் சாமுவேல்
நிறுவன இயக்குநர்
ஆசியவியல் நிறுவனம், 
செம்மஞ்சேரி, சோழிங்க நல்லூர், 
சென்னை 600 119 
பேசி: 9840526834 
இணையத் தளம் :  www.instituteofasianstudies.com
குறிப்பு: சீனாவில் பீகிங்கு நகரில் பீகிங்கு வெளிநாட்டு ஆய்வுப்பல்கலைக்கழகம் [Beijing Foreign Studies University (BFSU)] இயங்குகிறது. சீன மொழியில் இதனைச் சுருக்கமாகப் ‘பெய்வெய்’ என்று  அழைக்கின்றனர் தமிழில் அயல்மொழிப் பல்கலைக்கழகம் என்றும் குறிப்பிடுகிறோம்.
சீனாவின் வெளியுறவுத் துறையின்கீழ் இயங்கும் இப்பல்கலைக்கழகத்தில் வெளிநாடுகளைப் பற்றிய படிப்புகள் தரப்படுகின்றன. தமிழ் முதலான 84 மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன.
சீனர்களுக்குத் தமிழ் மொழியினைக் கற்றுத்தரும் திட்டம் ஆசியவியல் நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ளது. சீன நாட்டிலிருந்து பத்து மாணவர்கள் இங்கு 4 ஆண்டுப்படிப்பில் சேர்ந்து தமிழ்மொழியினைப் பயின்று வருகின்றனர்.
1941 இல் நிறுவப்பட்ட வெளிநாட்டு ஆய்வுப் பல்கலைக்கழகத்தில் ஈராண்டுகளுக்கு முன்னரே தமிழ் வகுப்பு தொடங்கப்பட்டது. சீனாவில் தமிழ் என்று மேம்போக்காகத் துள்ளுவதை விட அதனைப் பரவலாக்க மத்திய அரசையும் தமிழக அரசையும் கொடையாளர்களையும் வலியுறுத்த வேண்டும். அதற்கு இந்தக் கலந்துரையாடல் துணை புரியும்.

திங்கள், 10 ஜூன், 2013

ஓலைச்சுவடிகள் குறித்த தேசியப் பயிலரங்கு

ஓலைச்சுவடிகள் குறித்த தேசியப் பயிலரங்கு

ஓலைச்சுவடிகள் மற்றும் தொல் பழங்கால எழுத்துகள் தொடர்பான இலவச தேசியப் பயிலரங்கு, ஆசியவியல் நிறுவனம் மற்றும் மத்திய அரசின் சுவடிப் பாதுகாப்பு மையம் ஆகியவை சார்பில் வரும் 24-ஆம் தேதி தொடங்குகிறது.
இது தொடர்பாக ஆசியவியல் நிறுவன இயக்குநர் ஜி.ஜான் சாமுவேல் வெளியிட்டுள்ள அறிக்கை:
செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் தேசியப் பயிலரங்கு வரும் 24-ஆம் தேதி தொடங்கி ஜூலை 14-ஆம் தேதி வரை 21 நாள்கள் நடக்கின்றது. பயிலரங்கை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் தொடங்கி வைக்கிறார்.
இப்பயிலரங்கில் இளம் தமிழறிஞர்கள், தமிழாய்வில் ஆர்வமுள்ள ஜப்பானியர்கள், அமெரிக்கர்கள், மலேசியர்கள், சீனர்கள், மோரீசியஸ் நாட்டினர் என பல்வேறு வெளிநாட்டவர்களும் பயிற்சி பெறுகின்றனர்.
பண்டைய எழுத்துகளின் வளர்ச்சி, பிராமி, கிரந்த எழுத்துகள், வட்டெழுத்து, சாரதா எழுத்து, சுவடிப் படிப்பு, சுவடிப் பாதுகாப்பு, கல்வெட்டு, சுவடிகளை கணினியில் பதிவு செய்தல் உள்ளிட்டவை தொடர்பாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
மேலும், 40-க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகின்றனர். பயில்வோருக்கு எந்தக் கட்டணமும் கிடையாது. பயிலரங்கில் பங்கேற்க, ஆசியவியல் நிறுவனத்தை 9840526834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.