நீங்கள், ஈழத்தில் நடைபெற்றது

இனப்படுகொலையே

என்பதை வலியுறுத்த விரும்புகிறீர்களா

ஐ.நா.அவையில் அளிக்க

கருத்துகளைத் தெரிவியுங்கள்.

வணக்கம்!
 தமிழக, தமிழீழச் செயற்பாட்டாளர்களுக்கான வேண்டுகோள்.
பெரும்பாலான தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் மாவீரர் நாளுக்கான  அதிகளவான முதன்மையைக் கொடுத்துச் செயற்படுகிறீர்கள் அதே  முதன்மையையும் மக்கள்  ஆற்றலையும் அந்த மாவீரர்களின் இலட்சியத்தை வென்றெடுப்பதற்காக ஐக்கிய நாடுகள்  அவை சார்ந்த செயற்பாடுகளுக்கும் வழங்கவேண்டுமென எதிர்பார்க்கிறோம்.
  நாம் இந்தத் தருணத்திலே அதற்காக அதிகமாக  அதிகமாக உழைக்கவேண்டியுள்ளது.
 தமிழர்களுடைய  சிக்கல்களை நாம்  அனைத்துநாட்டுமயப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம், தற்போதைய இறுக்கமான இக்கட்டான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு ஐக்கிய நாடுகள்  அவையில்  சார்பாண்மை கொண்டுள்ள  அனைத்து நாடுகளின் ஆதரவை நாம் பெற்றாகவேண்டும் அதனை நோக்கியே எமது இலக்குகள் நகரவேண்டும்.
 தமிழ்நாட்டைப் பொருத்தவரை  இந்தச் சனவரி மாத நிறைவுக்குள் தீவிரமான முன்னெடுப்புக்களை எதிர்பார்க்கிறோம்.
 #தமிழர்கள் சிக்கல் சார்ந்த இன்னொரு தீர்மானத்தை நாடாளுமன்றில், மாநிலச் சட்டசபைகளில் கொண்டுவரவேண்டும். அப்படி ஒரு  சட்டமொழிவு கொண்டுவரப்படுமாயின் அது எங்கள் தீர்வை நோக்கிய பயணத்தில் மிக  முதன்மையான தன்மையாக மாறும் அத்துடன் இதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமை  அவைக்குக் கொண்டுசெல்வதோடு அதில் அங்கத்துவம் கொண்டுள்ள நாடுகளுக்கும் எம்மால் விளக்கமுடியும்..
  #மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழக அரசியல் தலைமைகள், சட்ட மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் மத்திய அரசுக்கு இலங்கை  தொடர்பில் தமிழர்களுக்குச் சார்பான முடிவுகளை எடுக்கும்வகையில் அழுத்தங்களைப் பயன்படுத்த வேண்டும்…
எமக்குத் தேவையான  விவரங்கள்:
  நாம் இவற்றை அரசியல் தலைமைகள், மனித உரிமை அமைப்புகள், குமுக(சமூக) அமைப்புகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறோம்.
1400  சொற்களுக்கு உள்ளடங்கிய எழுத்து மூல அறிக்கைகள்  விரைவாகவும்  கட்டாயமாகவும் தேவைப்படுகின்றன. எதிர்வரும் மார்ச்சில்  செனிவாவில் நடக்கும்  ஐ நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் அஃதாவது பெப்பிரவரி 05 இற்கு முன்பதாக அவற்றை  அளிக்க வேண்டும்.
  எழுத்துமூல அறிக்கையில் இன்றியமையாது உள்ளடக்கவேண்டிய  குறிப்புகள்:
 #அறிக்கைகளை வழங்குவோர் தங்கள் அமைப்பு குறித்த அறிமுகத்துடன், இலங்கையில் நடந்த இன அழிப்பு தொடர்பான தங்கள் பார்வையினையும் பதிவு செய்யவேண்டும் இதில் இலங்கையில் வடமாகண அவை ,மற்றும் தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட “இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்தது இனப்படுகொலைதான்” என்ற சட்டமொழிவு தொடர்பாகவும் குறிப்பிடல் வேண்டும்.
  1.இலங்கையில் நடந்த இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றம், போர்க்குற்றம் ஆகியவற்றினை அனைத்துநாடுகளும் தங்களது நாடளுமன்றங்களில்  சட்டமொழிவாகக் கொண்டு வரவேண்டும்.
  2.வடகிழக்கில் வாழுகின்ற தமிழ்மக்களது  தன்னாட்சி(சுய நிர்ணய) உரிமையை அங்கீகரித்துத் தீர்மானங்கள் கொண்டுவரவேண்டும்.
  3.ஐக்கிய நாடுகள்  அவையில் அங்கீகாரமுள்ள நாடுகள் இலங்கையில் நடந்தது இன அழிப்புதான் என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் பொறிமுறைகளுக்கமைவாகப் பரிந்துரைக்க வேண்டும்.
  1. அனைத்து நாடுகளின் பாராளுமன்றங்களில் இலங்கையில் நடந்த இன அழிப்பு தொடர்பாகக் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும் அது தொடர்பாக நாம் உங்கள் நாடுகளுக்கு வரவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தவேண்டும்.
  2. அனைத்து நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இலங்கையில் நடந்தது போர்க்குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றம்தான் எனவே அனைத்துலக விசாரணைதான் தேவை என்பதை வலியுறுத்தவேண்டும்.
6.இலங்கையில் தமிழருக்கு எதிராக இலங்கை அரசுதான் இனப்படுகொலையைச் செய்தது என்பது குறித்து  அனைத்து நாடுகளின் நாடாளுமன்றங்களில் தீர்மானங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
7.இலங்கைத்தீவில் தமிழர்களுக்குத் தன்னாட்சி(சுய நிர்ணய) உரிமை உள்ளதென்பதை வாக்கெடுப்பு மூலமாகத் தமிழர்களே தீர்மானிக்க வேண்டும்.
  1. குமுக(சமூக) அமைப்புகள், அறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் அந்ததந்த நாடுகளின் நாடாளுமன்றங்களில் எங்களது சிக்கல்களைத் தீர்மானமாகக் கொண்டுவர உதவி செய்யவேண்டும்.
(எழுத்துமூல அறிக்கைகள் ஆங்கிலத்தில் இருக்கவேண்டும்).
   எனவே, தமிழகத்தில் எமக்காகக் குரல் எழுப்பும் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசியற் தலைமைகள் இது குறித்து அக்கறை கொண்டு விரைவுபடுத்துங்கள்.
  இத்தோடு தமிழக மக்கள், அமைப்புக்கள், மனித உரிமை ஆர்வலர்கள் எல்லாரிடமும் கையெழுத்துப் பெறுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வது  பயனுள்ளதாக இருக்கும்..
  உங்களால் வழங்கப்படும் அறிக்கைகளை ஐ நா வில்  அளிப்பதற்கு ஐ நா வின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகள் எம்மிடம் உள்ளன.
  இவை சார்ந்த மேலதிக விவரங்களிற்கு உங்களால்  முடிந்தால் கணிப்பேசி(Skype : boscomm) ஊடான கலந்துரையாடல்களில் கலந்துகொள்ள அழைக்கிறோம்.
பாசுகாம்
boscomm@gmail.com