‘முயற்சி’ குறித்த படைப்புகளைத் தமிழ்த்தேர் வரவேற்கிறது!
தமிழ்த்தேரின் அடுத்தத் தலைப்பு:
உங்கள் படைப்புகள்
கார்த்திகை 23, 2046 / 09.12.2015க்குள்
வரவேற்கப்படுகின்றன.
முழுதாய் எண்ணம் வெற்றிபெறவே
முதலாய் வேண்டும் முயற்சி!
பழுதாய் எண்ணம் மாறிவிடாமல்
பாதுகாப்பதும் இங்கே முயற்சி!
ஒருமுகச் சிந்தனை உள்ளொளியெல்லாம்முதலாய் வேண்டும் முயற்சி!
பழுதாய் எண்ணம் மாறிவிடாமல்
பாதுகாப்பதும் இங்கே முயற்சி!
திருவினையாக்கும் முயற்சி!
அறவழிப் பயணம் ஆக்கத்தை ஈட்டும்
அடிப்படை அங்கே முயற்சி!
வெற்றியின்படிகள் விலாசங்களெல்லாம்
செப்பும் பெயரே முயற்சி!
பூமலர் காய்கனி யாவுமே இங்குகாண்
வேர்களின் இடைவிடா முயற்சி!
தடைகளைத் தகர்த்திடும் நெஞ்சுரம்கொண்டிடின்
வெற்றியை ஈட்டிடும் முயற்சி!
தகத்தகதகவென வாகைசூடியே
தரணியில் வலம்வரும் முயற்சி!
முயற்சியை முதலிட்டு முன்னேற்றம் காண்பதுவே
மூளையின் பணியெனச் சொல்லுவோம்!
முயற்சியின் விளைச்சலாய் வெற்றிகள் குவியட்டும்
கவிதைகள் வாயிலாய்க் காணுவோம்!
அனுப்ப வேண்டிய முகவரி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக