ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை
26 ஆம்ஆண்டு இலக்கிய விழா அறிவிப்பு
வருகிற மார்கழி 21, 2046 / 27.12. 2015 ஞாயிறு காலை 09 மணிமுதல் மாலை 06 மணிவரை ஈரோடு தமிழ்ச்சங்கப்பேரவையின் 26ஆம் ஆண்டுவிழா ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி யில் நடைபெறும்.விழாவில் தமிழிசைஅரங்கம், படத்திறப்பு, வாழ்த்தரங்கம், பட்டிமன்றம், சிறந்த நூலுக்குப் பரிசு, விருதுகள், பட்டங்கள், பரிசுகள் வழங்கல் நடைபெறும்.
விருதுகள் :
திருவள்ளுவர் விருது :
திருக்குறள் தொடர்பான நூல்கள் எழுதி, திருக்குறள் பரப்பும் பணியைப் பற்றுடன் செய்துகொண்டுஇருக்கும் ஒருவருக்கு வழங்கப்படும்; பாராட்டப்படும்.
ஔவையார்விருது :
இலக்கிய, சமுதாயப் பணிகளில் ஆர்வமாக ஈடுபட்டு நூல் எழுதி இருக்கும் ஒருவருக்கு வழங்கப்படும்; பாராட்டப்படும்.
ஒட்டக்கூத்தர் விருது :
மரபுக் கவிதைநூல்கள் இரண்டுக்கு மேல் எழுதி இருக்கும் ஒருவருக்கு வழங்கப்படும்; பாராட்டப்படும்.
வாரியார் விருது :
இறைநெறியில் ஈடுபாடும், பேச்சாற்றலில் சிறந்தும்,ஆன்மிக நூல்கள் எழுதி வெளியிட்டிருக்கும் ஒருவருக்கு வழங்கப்படும்; பாராட்டப்படும்.
சாதனைச்செம்மல் விருது :
மொழி, இன, சமுதாய அக்கறையுடன் போற்றத்தக்கச் செயல்கள் செய்திருக்கும் பதின்மருக்கு இவ்விருது வழங்கப்படும்; பாராட்டப்படும்.
பட்டம் :
எத்துறையைச் சார்ந்தவராயினும் அத்துறையில் சிறந்துவிளங்குபவருக்குப் பட்டம் வழங்கப்படும். மொத்தம் 25 பேர்களுக்குப் பட்டம் வழங்கப்படும்.
நூல் வெளியீடு :
நூல்எழுதி அச்சிட்டு வெளியிடாதோர் இவ்விழாவில் வெளியிட்டுக் கொள்ளலாம். நூலின் பெயர், நூலாசாரியர் பெயர், வெளியிடுவோர், பெறுவோர் பெயர்களைக் குறிப்பிட்டு
கார்த்திகை 19, 2046 /5.12.2015க்குள்
விழா நன்கொடை உரூ. 1000/- வழங்கித் தெரியப்படுத்த வேண்டுகிறோம்.விழாவையொட்டி நடத்தப்படும் போட்டிகள் – தலைப்புகள்
கதை:- விரட்டுவது விதியா ? ; 3 பக்கத்திற்குள்.
மரபுக்கவிதை: – கொள்கைக்கோட்டை; 24 வரிகள் மட்டும்
புதுக்கவிதை: – உணர்வுத்தோரணம்; 32 வரிகள் .
கட்டுரை: – எந்நாளும் நன்னாளே! ; 3பக்கத்திற்கு மிகாமல்.
வெண்பா: – நாடு.; 3 வெண்பாஅனுப்பவேண்டும்.
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான
கவிதைப் போட்டி – திறவுகோல்; 32வரிகள்
போட்டி விதிகள்:
போட்டியில் கலந்து கொள்வோர் இரண்டுபடிகள்அனுப்ப வேண்டும். ஒருபடியில் மட்டும் பெயர், முகவரி, அலைபேசி எண் எழுதவும். இன்னொரு படியில் படைப்பு தவிர பிற ஏதும் எழுதக்கூடாது. ஒருபோட்டியில் கலந்து கொள்ள உரூ. 1, 2, 3, 4 என மொத்தம்உரூ10க்கான (ஒரே அஞ்சல் தலை கூடாது) வைத்தனுப்ப வேண்டும். போட்டிகள் அனைத்திற்கும் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் என முறையே உரூ 500, உரூ 400, உரூ. 300 மதிப்புடைய நூல்கள் பரிசாக வழங்கப்படும்.
படைப்புகள் வந்து சேரக்கடைசி நாள் :
கார்த்திகை 19, 2046 / 05.12.2015.
கார்த்திகை 19, 2046 / 05.12.2015.
சிறந்த நூலுக்குப் பரிசு :
2014, 2015 இல் வெளிவந்த சிறந்த நூல் மூன்றுக்குப் பரிசுகள் வழங்கப்படும். முதல், இரண்டாம், மூன்றாம் பரிசென முறையே உரூ.1000 உம் உரூ.1000க்கான நூல்களும், உரூ.750உம் உரூ.750க்கான நூல்களும், உரூ. 500உம் 500க்கான நூல்களும் வழங்கப்படும். இரண்டு நூல்கள் அனுப்ப வேண்டும்.
நூல் வந்து சேரவேண்டிய கடைசி நாள் :
கார்த்திகை 19, 2046 / 05.12.2015.
கார்த்திகை 19, 2046 / 05.12.2015.
அரங்கப்போட்டி :
விழா நாளில் விரைந்துபாடும் விருத்தப்பாப் போட்டி நடத்தப்படும். கவிதைத் தலைப்பும், தாளும், எழுது கோலும் வழங்கப்படும்.மூன்று பரிசுகள். முதல் பரிசு உரூ. 300 க்கும், இரண்டாவது பரிசு உரூ. 250 க்கும், மூன்றாவது பரிசு உரூ. 200க்குமான நூல்கள் பரிசாக வழங்கப்படும்.
உங்களுக்கோ,நீங்கள் அறிந்தவர்களுக்கோ விருது, பட்டம் பெறக்கூடியத் தகுதி இருக்கிறது எனக் கருதினால் ஒளிப்படத்துடன் வாழ்க்கைக் குறிப்பை 05.12.2015க்குள் அனுப்பி வைக்கவும்.
விழாவில், வந்து கொண்டிருக்கும் சிற்றிதழ்கள் கண்காட்சியாக வைக்கப்படும்.
சிற்றிதழாளர்கள் தங்கள் இதழ்களைக் கீழ்க்குறிப்பிடும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
இலக்கிய அன்பர்கள் இந்த அறிவிப்பைத் தங்கள் இலக்கிய நண்பர்களுக்குத் தெரிவிக்க வேண்டுகிறோம்.
நிகழ்ச்சிகள் அனைத்தும் நன்கொடையாலே நடத்தப்படுகின்றன.
ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள்:
நிறுவனர், தலைவர் :கவிமாமணி சேலம்பாலன்.
துணைத்தலைவர்: கவிமாமணி மழைமகன்.
செயலாளர்: சித்திரத்திருமணி கி.சிரீதர்.
துணைச்செயலாளர்: செந்தமிழ்ச்சீர்கவி இராச.கிருட்டினன்.
பொருளாளர்: சி.மா.இராமலிங்கம்.
அனைத்துத்தொடர்புகளுக்கும் முகவரி :
ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை,
12\1சின்னாக்கவுண்டர்நகர் 2 ஆம் வீதி,
ஈரோடு -638004.
பேச : 91500 52927.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக