Heroes Day addresses in diaspora slam ‘US-Sri Lanka’ agenda on Tamils
[TamilNet, Sunday, 29 November 2015, 17:52 GMT]
Thousands of Diaspora Eezham Tamils gathered in several cities across the globe on Friday marking Tamil Eelam Heroes Day and passed a sharp message to the unitary State of Sri Lanka and to the powers that steer the UN discourse to whitewash the genocidal State through perfunctory investigations and biased presentations of past crimes for their geopolitical benefits. Eezham Tamils were already aware of the nexus between New Delhi and Colombo. Now, Tamils have also realised the real nature of the smoke-screen discourses in Geneva and New York, which have actualized the ‘US-Sri Lanka consensus resolution’ upholding the Colombo-centric unitary State of Sri Lanka. Eezham Tamil activists of the first- and second-generation diaspora responded with direct messages to the US-Colombo nexus at Oslo in Norway and at Fribourg in Switzerland.
No one can deceive Tamils with the talk of good governance or freedom of expression as having returned to the island until Colombo repeals the 6th Amendment [Article 157A], Murali Sivanandan, the coordinator of Tamil Coordinating Committee (TCC) in Norway, proclaimed in a special address delivered at the Heroes Day event in Oslo.

“We don't regard the lifting of the
ban on Tamil diaspora organisations as a meaningful measure until the
6th Amendment remains in force as part of the unitary constitution of
Sri Lanka,” Mr Sivanandan said. His address was critical of powers that
have committed historical injustice on the nation of Eezham Tamils. The
Norwegian conduct during the peace process was of a dubious nature, the
activist with EROS background in the homeland from early 1980s said.
Sivanandan was associated with legal diasporic-LTTE activities for more
than two decades as a TCC activist in Norway.
The Tamil diaspora remains united on the long-term goal, he said. Sivanandan's address concluded that time has come for Tamil diaspora activists and organisations to earnestly collaborate and conceive of a practical strategy to carry forward the Tamil struggle without taking a pro-Establishment line.

Likewise, Lathan Suntheralingam, a
post-2009 legal activist of the second-generation who has contributed to
the shaping of Tamil diaspora activism in the recent years, urged the
second-generation diaspora activists to respond to the challenges posed
by the powers by boldly articulating their views against the injustices
that have been committed by the powers. The slips of the powers were
showing, especially after 2009, he said.
The second-generation Eezham Tamil diaspora activists should learn about Latin American revolutionary leader Ernesto Che Guevara who sacrificed his life in 1967 at the age of 39. He had a vision for the independence of entire Latin America. Eezham Tamils should see how the people of Latin America preserved his charismatic leadership in achieving their individuality in modern politics, he said. The Eezham Tamils have to cherish the positive sides of the Tamil struggle and take forward the international dimensions of the struggle for the betterment of humanity, he said. Establishments reinforce the dispossessed and the oppressed to imagine themselves as victims, and this approach would lead the Tamils to become subservient to the Sinhala people, Lathan told the audience.

The second-generation should also learn about the Ibo people who waged a powerful independence struggle for Biafra and how they lost their cause through famine and surrender. Even the Ibo people of Biafra heritage didn't wish to see Eezham Tamil fighters to surrender like the Ibo fighters were forced to do in 1970. The LTTE fighters didn't surrender the sovereignty of Eezham Tamils at Mu'l'ivaaykkaal, Mr Suntharalingam said urging the Tamil diaspora activists to learn the past struggles, build upon the positive sides and compare the conduct of leaders and fighters involved in the struggle.
Both speakers mentioned the shocking sacrifice by the 18-year-old Senthuran Rajeswaran in Jaffna, who committed suicide demanding immediate release of Tamil political prisoners and the way he had expressed his desire for Tamil Eelam.
If Tamils continued to remain as victims and were unable to conceive a positive way of taking forward their struggle, they will likely witness more tragic decisions as the one taken by Senthuran, Mr Suntharalingam warned.
The younger generation in the Tamil diaspora should prepare to boldly articulate their views to persons representing the big-powers such as John Kerry, the US Secretary of State and Samantha Power, the US Ambassador to UN, he added.
Norway was involved in brokering the peace process between the Government of Sri Lanka and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) taking a mediator role as has been the past practice.
Switzerland is currently involved in backing the Singapore principles oriented (2013) secret discourse, which has been steered through South Africa based facilitation.
However, the Tamil activists in these two countries are not bound by the EU ban on the LTTE, which has been used to contain the voices of Tamil activists in the free diaspora.
Eezham Tamils participated in large numbers in the Heroes Day events held across several cities of Europe, North America, New Zealand and Australia on Friday.
Full text of Lathan Suntharalingam's address in Tamil follows:
தமிழீழத் தேசிய மாவீரர் நாளில் இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள்,
இன்றைய புனிதமான நாளில், தமிழீழம் நோக்கிய எமது விடுதலைப் பயணத்தில் உறுதியெடுத்துக்கொள்ளுகின்ற இந்த நாளில், எமது இரண்டாம் தலைமுறையினருக்கு சொல்லப்படவேண்டிய சில செய்திகளை இங்கே முன்வைக்கவிரும்புகிறேன்.
சே என்று அன்போடு உலகெங்கும் நினைவில் இருத்தப்படும் ஆர்ஜன்டீனாவில் பிறந்து, கியூபாவுக்கு விடுதலையைப் பெற்றுத் தந்து, லத்தீன் அமெரிக்க மக்களின் விடுதலையை நேசித்த ஒரு போராளியாக பொலிவியாவில் போராடி 1967 இல் வீரமரணமடைந்தார் ஏர்ணஸ்டோ சேகுவாரா (Ernesto "Che" Guevara). இன்றைக்கு உலகெங்கும் புரட்சியின் சின்னமாக சே விளங்குகிறார். லத்தீன் அமெரிக்க உறவுகள் சே குவாராவின் உண்மையை, அவர் யார் என்பதை, அவரின் உன்னதமான இலட்சியங்கள், கொள்கைகள் எவை என்பதை உலகுக்குத் தெரியவைத்தார்கள். 48 வருடங்கள் ஓடிவிட்டன. ஆனால், இன்றைக்கும் சேகுவாராவுக்கு களங்கம் கற்பிப்பதற்கு அவருக்கு எதிரான சக்திகள் கங்கணம் கட்டி நிற்கின்றன. ஆனால் முடியவில்லை.
கியூபாவுக்கும் பொலிவீயாவுக்கு மட்டுமல்ல, லத்தீன் அமெரிக்கா முழுவதையும் ஆதிக்க சக்திகளின் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கவேண்டும் என்ற அவரது கனவு நனவாக முன்னரே, அவரது 39ம் ஆவது வயதில் பொலீவியாவில் அவர் வீரமரணமடைகிறார்.
இன்று லத்தீன் அமெரிக்க மக்கள் தமது சுயமான நிலையை ஐரோப்பாவில் இருக்கும் பல நாடுகளை விட கணிசமான அளவு தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால், அதுவும் அமெரிக்காவுக்கு அண்மையில் இருந்தவாறு தக்கவைத்திருக்கிறார்கள் என்றால், அதற்கு சேகுவாரா மட்டுமல்ல, சேகுவாராவின் வரலாற்றை அவருக்குப் பின்னர் பேணிப்பாதுகாத்த லத்தீன் அமெரிக்க மக்களும் தான் காரணம். இன்று லத்தீன் அமெரிக்க மக்கள் ஒவ்வொருவருடைய சுவாசக் காற்றிலும் சேகுவாராவின் ஆன்மா கலந்திருக்கிறது.
இதைப் போலவே, தமிழீழ விடுதலைப்போராட்டமும் அமைந்திருக்கிறது. இளையோராகிய நீங்கள் சுயமாகச் சிந்திக்கவேண்டும். சேகுவாராவை எவ்வாறு லத்தீன் அமெரிக்க மக்கள் உலகுக்கு எடுத்தியம்பினார்களோ, அதைப்போலவே எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு இருக்கின்ற தேசிய, பிராந்திய, உலகளாவியா பரிமாணத்தை உலகுக்கு வரலாறாக எடுத்துச்சொல்லவேண்டிய பொறுப்பு உங்களுக்கு உண்டு.
எமது போராட்டத்தின் உன்னதமான பக்கங்களை உலகுக்கு எடுத்துச் செல்லவேண்டும்.
சேகுவாரா தனது உயிரைத் தியாகம் செய்த அந்த காலகட்டத்தில், உலகின் இன்னொரு பக்கத்தில், ஆபிரிக்காவின் நைஜீரியாவில், இபூ இன மக்கள் தமது விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பயாபிரா (Biafra) என்ற தனிநாட்டுக்காகப் போராடினார்கள். அந்தப் போராட்டத்திற்கு பல நாடுகள் ஆதரவுகூட வழங்கின. பயாபிராவின் போராட்டம் பாரிய உயிர்த்தியாகங்களோடு முன்னெடுக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகளைப் போலவே அவர்களும் ஒரு போர்ச்சக்தியாக, தரைப்படை, விமானப்படை என்று 3,000 போராளிகளில் இருந்து 30,000 இராணுவ வீரர்கள் வரை வளர்ச்சிகண்டு 1970ம் ஆண்டு வரை போராடினார்கள். ஆனாலும், மில்லியன் தொகையில் மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும்படிசெய்து அந்தப் போராட்டத்தை நசுக்கினார்கள். 1968ம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச மன்னிப்புச்சபை (ஐ.சி.ஆர்.சி) ஒவ்வொருநாளும் பதின்நான்காயிரம் (14,000) மக்கள் பட்டினியால் மட்டும் இறந்ததாக கணிப்பிடுகிற அளவுக்கு கோரமான நிலைமை இருந்தது.
இளையோர்களே, 2009 மே மாதத்தில் இன அழிப்புப் போர் முடிவுக்கு வருவதற்கு முன்னர், இதே பயாபிராவை நேசித்த ஆபிரிக்க செயற்பாட்டாளர்கள், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை, பயாபிராவில் பலியாகிப்போன பல மில்லியன் கணக்கான மக்களின் விடுதலைக்கும் சேர்த்தே போராடப்படுகின்ற போராட்டமாகத் தாங்கள் பார்ப்பதாக உருகிநின்றார்கள்.
அந்த நேரத்தில் அவர்கள் முன்வைத்த கருத்து என்ன தெரியுமா? ஆயிரக்கணக்காக பயாபிரா போராளிகளும் மக்களும் ஆயுதங்களை எதிரியிடம் ஒப்படைத்துச் சரணடையும் நிலை ஏற்பட்டது. இது கொள்கையைக் கைவிட்டதான சரணாகதியாகவே முடிந்தது என்று சொன்னார்கள். எந்த நிலைவரினும் அந்த நிலைக்குத் தமிழீழப் போராளிகளும் தலைவர்களும் செல்லக்கூடாது என்று தமக்குள்ளேயே பரிதவித்து வேண்டிக்கொண்டார்கள்.
எந்தநிலைவரினும் நாம் வரித்துக்கொண்ட கொள்கையைக் கைவிட்டு சரணாகதி அடையமாட்டோம் என்று, மக்களின் இழப்பைத் தவிர்ப்பதற்காக ஆயுதங்களை மௌனிப்பினும், சராணகதிக்கு இடமில்லை என்று தெளிவாயிருந்த எமது மாவீரர்களின் வரலாறு உலக வரலாற்றிலேயே தனித்துவமானது.
எந்த உலக சக்தியின் ஆதரவும் இன்றி, எந்த உலக சக்தியின் பயன்படுத்தலுக்கும் எமது போராட்டத்தை ஆளாக்காமல், தமிழ் நாகரிகத்துக்கேயுரிய தனிப்பாங்குடன், கட்டுக்கோப்பாக நடாத்தப்பட்ட போராட்டம் இது.
தமிழீழம் என்ற இலட்சியத்தை இறுதி மூச்சுவரை தனது மனதில் இருத்திப் போராடியவர்கள் அனைவரும் மாவீரர்கள்.
மாணவத்தலைவனாக உருவெடுத்த சிவகுமார் தமிழீழத்திற்கான முதலாவது உயிர்த்தியாகம். இதைப் போலவே நேற்று தமிழீழத்தில் சந்திப்போம் என்று எழுதிவைத்துவிட்டு, சிறைகளில் வாடும் தமிழீழப் போர்க்கைதிகளையும் அரசியற் கைதிகளையும் விடுதலை செய்வதற்கான போராட்டத்திற்கு தன்னைத் தானே ஆகுதியாக்கியிருக்கின்ற – தேசியத் தலைவரின் பிறந்த நாளில் தமிழீழம் என்ற சிந்தனையோடு ஒரு அரசியல் செய்தியைச் சொல்வதற்காகவே தன்னை ஆகுதியாக்கிக்கொண்ட – செந்தூரன் ராஜேஸ்வரன் என்ற 18 வயது மாணவனின் தியாகம் நடந்திருக்கிறது.
சிவகுமாரன் தொடக்கம் செந்தூரன் வரை கொடுக்கப்பட்ட உயிர்களின் தொகை எமது தேசிய இனத்தின் எண்ணிக்கையில் மிகவும் பெரிய வீதமாகும்.
இந்த மாவீரர் நாளில், ஈழத்தமிழரின் இளைய தலைமுறையினர், குறிப்பாகப் புலம் பெயர் சமுகத்தின் இளம் தலைமுறையினர், ஒரு விடயத்தில் தெளிவாக இருக்கவேண்டும்.
போராடிய மக்களையும், போராடிய மக்கள் தலைவர்களையும், உலகளாவிய ரீதியில் படித்துக்கொள்ளவேண்டும். ஆராயவேண்டும். எமது போராட்டத்தை அதே நிலையில் உலக மக்களின் பரிணாம வளர்ச்சிக்கான பாடமாக்கவேண்டும்.
பரிதாபத்துக்குரியவர்களாகவும், பிச்சை எடுப்பவர்களாகவும், எம்மை அழித்த சக்திகளிடமே அநுதாபம் தேடி எமது அரசியலை நகர்த்தலாம் என்று நினைப்பவர்களாகவும் இருப்பது சில தமிழ் அரசியல் வாதிகள் – உங்களுக்கு யாரை நான் குறிப்பிடுகிறேன் என்று தெரியும் – அவர்கள் செய்கின்ற துரோகத்தனத்தை விடவும் மோசமான துரோகம் என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.
2009ம் ஆண்டுக்குப் பின்னர், முன்னரை விட மேலும் தெளிவாக, அமெரிக்காவும், பிரித்தானியாவும், இந்தியாவும் மற்ற வல்லரசுகளும் என்ன வகையில் இலங்கை தொடர்பாக கொள்கை வகுத்திருக்கிறார்கள் என்பது துல்லியமாக அம்பலமாகி இருக்கிறது. இதற்கு ஜோன் கெரி தொடக்கம் சமந்தா பவர் வரை என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது ஆதாரபூர்வமாக அம்பலமாகிக்கொண்டிருக்கிறது.
இவர்களுக்கு எடுத்துச் சொன்னால் விளங்கிக்கொள்வார்கள், எங்களுக்கு இரங்கி நியாயமாக நடந்துவிடுவார்கள் என்று நினைப்பது மடைமைத் தனம் மட்டுமல்ல நாம் செய்யும் தேசத் துரோகமாகிவிடும்.
கெஞ்சிச் சொல்வதைவிடவும், இடித்துரைக்கும் இராஜதந்திரமே விடுதலைக்கான வழியைப் பிறப்பிக்கும்.
இதற்காக நீங்கள், சேகுவாராவைப் படிக்கவேண்டும். ஏன் சேகுவாராவுக்கு இன்றும் மாசு கற்பிப்பதற்கு உலக வல்லாதிக்க சக்திகள் முழு முயற்சியாக இருக்கிறார்கள் என்பது புரிந்தால், எவ்வாறு எமது தேசியத் தலைவருக்கு இவர்கள் மாசுகற்பித்துவருகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். எவ்வாறு நாம் லத்தீன் அமெரிக்க மக்கள் போல உன்னதமான பக்கங்களைப் பேணிப் பாதுகாக்கலாம் என்று உணரலாம்.
எமது இளையோர் பயாபிரா போன்ற போராட்டங்களைப் படிக்கவேண்டும். அப்போது தான் ஏன் தமிழீழம் தனது இறைமையைச் சரணாகதிக்கு உள்ளாக்கவில்லை என்பதை உள்ளார்ந்த பூர்வமாகப் புரிந்துகொள்ளமுடியும்.
உலக சமுதயாத்திற்கு நாம் எமது தலைமையை, எமது போராட்டத்தை எப்படி எடுத்துச் செல்கிறோம் என்பது குறித்த செயற்பாடுகளை சரியான முறையில் எமது இளைய சமுதாயம் வழியமைக்கவேண்டும்.
இதை நாங்கள் செய்யத்தவறினால், தொடர்ந்தும் செந்தூரன்கள் போன்ற செல்வங்களை எமது சமுகத்தின் ஆற்றாமையால் இழந்து கொண்டிருக்கும் சமுதாயமாகவே நாம் மாறவேண்டிவரும்.
புலம்பெயர் சூழலில், முதலாவது தலைமுறையினர் தம் உடலை வருத்தியோ, நிதிசேகரிப்பில் ஈடுபட்டோ தொடர்ந்தும் தங்கள் உதவியை வழங்குவார்கள். ஆனால், இளம் தலைமுறையினரே முன்வந்து போராட்டத்தின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை ஆணித்தரமாக முன்னெடுக்கவேண்டும்.
இந்தச் சிந்தனைகளை உங்களுக்கு முன்வைத்து அன்புடன் அமைகிறேன்.
மாவீரரின் கனவு நிச்சயம் பலிக்கும். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
நன்றி வணக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக